gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

செவ்வாய்க்கிழமை, 13 August 2013 12:50

ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயர்- ராமபக்தன் 
பெருமான்- பிரமச்சாரிய சமய நெறிகளின் தலைவன். 
வேறுபெயர்கள்- மாருதி, பவனகுமாரர், ஹனுமான், கேசரிநந்தன், சங்கட்மோசன், சுந்தரன், மகா தேஜஸ்வி.

விழாநாட்கள்- புராணங்கள் அனுமனை சிவனின் ருத்ர அவதாரம் எனச்சொல்கிறது. வானர ரூபம் பெற்ற அப்சரப்பெண் அஞ்சனை வானர வீரர் கேசரியை மணந்து பிள்ளைவரம் வேண்டி தவம். தசரதன் நடத்திய புத்திரகாமேஷ்டி யாகத்தில் எழுந்த புனிதபாயாசத்தை பருந்து கொத்திக் கொண்டுபோக அது நழுவி கீழேவிழ வாயுபகவான் அதை அஞ்சனையின் விரிந்த கைகளில் விழச்செய்ய அதை உண்டு பிறந்தவர் அனுமன்.

சிறப்பு- எதிரிகளிடையே பயத்தை உண்டு பன்னக்கூடிய சக்தி, நம்பியவர்கள் பயம் விலகும், பிரம்மாஸ்திரம் ஒன்றும் செய்யாது என்று பிரம்மனும், கடலைக்கடக்கும் சக்தியை சிவனும், வஜ்ராயுதத்தைவிட வலிமையான உடல் என இந்திரனும், தண்ணீரில் எந்த ஆபத்துமில்லை என வருணனும், நெருப்பு ஒன்றும் செய்யாது என அக்னியும், நோயற்ற நீண்ட வாழ்வை எமனும், தன்னால் உருவாக்கப்பட்ட எந்த ஆயுதத்தினாலும் சேதமில்லை என விஷ்வகர்மாவும், திருப்தியான மனத்தையும் மகிழ்ச்சியை குபேரனும், தன்னைவிட வேகமாக செல்லும் வரத்தை வாயுவிடமிருந்தும் பெற்றவர் அஞ்சனை மைந்தன். அனைத்தும் கற்ற சூரியனை தமது குருவாகக் கொண்டவர். அவரிடமிருந்து அணிமா, லஹிமா, கரிமா சித்திகளைக் கற்றார். ராமபிரானின்மேல் கொண்ட அன்பை நம்பாதவருக்கு தன் நெஞ்சைப் பிளந்துகாட்டி அதில் ராமரும் சீதையும் கொலுவிருக்க காட்டினார்.

வணங்கும்முறை- இறைவனுக்கு நெய்வேத்தியம் என்பது சர்வ வல்லமை படைத்த இறைவனுக்குச் சொந்தமானதை அவருக்குத்தந்து அதையே நாம் அவரின் அருளாசியுடன் பிரசாதமாக பெற்று புனித உணர்வுடன் உட்கொள்கிறோம் என்பதாகும். பெருமாள் கோவில்களிலோ, தனிக் கோவில்களிலோ எழுந்திருந்து அருளாசி வழங்கும் சஞ்சீவராயருக்கு வெண்ணெய்க்காப்பு அல்லது வடைமாலை சார்த்தி வழிபடலாம். நீங்கள் கொண்டு சென்ற அர்ச்சனைப் பொருள்களை அர்ச்சகரிடம் கொடுத்து விட்டு அர்ச்சனை முடிந்ததும் தீப ஆராதனைக் காண்பிக்கும்போது கண்களை மூடாமல் ஆஞ்சநேயரின் பாதம் பார்த்து முகதரிசனம் செய்யவும். தீப ஆராதனை ஏற்று பிரசாதம் பெற்று வரவும்.

உள்ளே.....

1.“அனுமன் துதி”-துயரங்களிலிருந்து காப்பாற்ற- வியாழக் கிழமை.

2.“அனுமன் துதி”-துயரங்களிலிருந்து காப்பாற்ற- வியாழக் கிழமை. 

3.‘ஸ்ரீஆஞ்சநேயர் கவசம்-சகல காரியசித்தி, மனோபலன், புத்திபலம், உடல்பலம்- தினமும்- நேரம் கிடைக்கும் போதெல்லாம்.

4.“அனுமன் கவசம்”- வேண்டுவன கிடைக்க, சீரும் சிறப்பும் அடைய, நோய், பகை நீங்க - தினமும்/ நேரம் கிடைக்கும் போது. 

5.ஸ்ரீஅனுமத் புஜங்கம் (பாம்பு போல் பின்னி பினைந்து இருக்கும் வார்த்தைகள்)-தடைகள் தகர்க்க, எதிரி பயம் விலக, சர்வமங்களம் கூட- மனம், வாக்கு, உடல் தூய்மையுடன்-தினப் பிரதோஷ காலம். 

6.“ஸ்ரீஅனுமான்”- குறைகள் தீர, சனியின் பகை விலக.                                                                                                                                                                     7.ஸ்ரீமங்களாஷ்டகம்:--மங்களங்கள் பெருக- மனக் குறைவின்றி- பாவங்களிலிருந்து விலகி- நீண்ட ஆயுள்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.

திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்!
மங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா!
பொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே!
சங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!

1.“அனுமன் துதி”-துயரங்களிலிருந்து காப்பாற்ற- வியாழக் கிழமை.

அஞ்சிலே ஒன்று (வாயு) பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் (கடல், நீர்) தாவி
அஞ்சிலே ஒன்றாக (ஆகாயத்தில் பறந்து) ஆருயிர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று (பூமி, மண்) பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை (நெருப்பு) வைத்து அவன் நம்மை 
அளித்துக் காப்பான்

2.“அனுமன் துதி”-துயரங்களிலிருந்து காப்பாற்ற- வியாழக் கிழமை.

என் மனக்கவலை, நோய், என் வீட்டின் மீதான தோஷங்களை நீக்குகிற ஆஞ்சநேயரை வணங்குகிறேன். அசுரர்களை எளிதாக வதம் செய்யும் ராமச்சந்திர மூர்த்தியின் உயிருக்கு உயிரான ஆஞ்சநேயரை வணங்குகிறேன். ராமனுக்குப் பிரியமானவரே, கருணை நிறைந்தவரே, பயத்தைப் போக்குகிறவரே, பகைவர்களை நாசம் செய்பவரே, அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றித் தருபவரே உமக்கு நமஸ்காரம்.

3.“ஸ்ரீஆஞ்சநேயர் கவசம்”-சகல காரியசித்தி, மனோ பலன், புத்திபலம், உடல்பலம்- தினமும்- நேரம் கிடைக்கும் போதெல்லாம்.

oஅனுமன் என்னை கிழக்கு திக்கில் காக்கட்டும்! தெற்கு திசையில் வாயு புத்திரன் ரட்சிக்கட்டும்! மேற்கு திக்கில் ராட்சதர்களை நாசம் செய்யும் அனுமன் ரட்சிக்கட்டும்! சமுத்திரத்தைத் தாண்டிய ஹனுமான் வடக்கு திக்கில் என்னைக் காத்திடட்டும்!

oகேசரியின் மைந்தன் என்னை ஆகாயத்தில் காக்கட்டும்! விஷ்னு பக்தியுள்ள அனுமன் என்னை கீழ்பாகத்தில் ரட்சிக்கட்டும்! இலங்கையை எரித்தவர் சர்வ ஆபத்துகளிலிருந்தும் என்னை எப்போதும் காக்கட்டும்!

oசுக்ரீவனின் மந்திரியானவர் என் தலையை ரட்சிக்கட்டும்! வாயு புத்திரர் எனது நெற்றியினைக் காத்திடட்டும்! மகாவீரர் எனது புருவங்களின் நடுப் பகுதியைக் காக்கட்டும்!

oசாயாக்ரஹி என்னும் அரக்கியைக் கொன்ற அனுமன், எனது கண்களைக் காக்கட்டும்! வானரங்களின் தலைவர் எனது கன்னங்களைக் காக்கட்டும்! ஸ்ரீராமதூதன் எனது காதுகளின் கீழ்ப்பகுதியைக் காக்கட்டும்!

oஸ்ரீஅஞ்சனாகுமாரர் எனது மூக்கைக் காக்கட்டும்! வானராதிபர் எனது மூக்கைக் காக்கட்டும்! அசுரர்களின் பகைவர் எனது கழுத்தைக் ரட்சிக்கட்டும்! தேவர்களால் பூஜிக்கப்படுபவர் எனது தோள்களை ரட்சிக்க வேண்டும்!

oஒலிபொருந்திய தேகத்தை யுடையவர் எனது தோள்களைக் காக்கட்டும்! நகங்களை ஆயுதமாகக் கொண்டவர் எனது நகங்களைக் காக்கட்டும்! வானரர்களுக்குத் தலைவர் எனது வயிறைக் காக்கட்டும்!

oராமனின் கணையாழி மோதிரத்தை எடுத்துச் சென்றவர் எனது மர்பைக் காக்கட்டும்! பெரும் கைகளையுடையவர் எனது இரு பக்கங்களையும் காக்கட்டும்! சீதையின் துயரத்தை அடியோடு போக்கியவர் எனது ஸ்தனங்களை எப்போழுதும் காக்கட்டும்!

oஇலங்கைக்கு பயத்தை அளித்தவர் எனது பின் பாகத்தைக் காக்கட்டும்! ஸ்ரீராமசந்திர தூதன் எனது தொப்புளைக் காக்கட்டும்! வாயுபுத்திரன் எனது இடுப்பைக் காக்கட்டும்!

oமேதாவியான, சகலவேத ஆகமம் யாவும் கற்ற சகல சாஸ்திர பண்டிதனான அனுமன் எனது மர்ம பிரதேசத்தைக் காக்கட்டும்! சிவபக்தரான ஹனுமன் எனது தொடையின் சக்திகளைக் காக்கட்டும்! எனது தொடைகளையும் முழங்கால்களையும் லங்காபுரியின் உப்பரிகைகளை உடைத்தவர் காக்கட்டும்!

oஎனது ஆடுசதையினை வானர உத்தமர் காக்கட்டும்! மிகுந்த பலசாலி எனது கனுக்கால்களைக் காக்கட்டும்! சூரியனுக்கு ஒப்பானவரும், சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கி வந்தவருமான அனுமன் எனது கால்களைக் காக்கட்டும்!

oஅளவில்லாத பலம் மிக்கவர் எனது அங்கங்களையும், கால்விரல்களையும் எப்பொழுதும் காக்கவேண்டும்! மகாசூரர் எனது எல்ல அங்கங்களையும் காக்கட்டும்! மனதை அடக்கியவர் எனது ரோமங்களைக் காக்கட்டும்!

oஎந்த பக்தன் ஹனுமானின் இந்தக் கவசத்தைத் தரிப்பானோ, அவனே மனிதர்களுள் சிறந்தவன்! போகங்களையும் மோட்சத்தையும் அடைவான்! அவன் சிறந்த அறிவாளியாகத் திகழ்வான்!

oமூன்று மாத காலம் தினம் மூன்று முறையோ அல்லது ஒரு முறையோ ஒரு பக்தன் படிப்பனேயாகில், அவன் எல்லா சத்ருக்களையும் ஒரு கணத்தில் ஜெயித்து லட்சுமிகரமாகிறான்! சகல செல்வங்களும் அவனைத் தேடி வருகிறது!

oநள்ளிரவில் நீரில் அசையாமல் நின்று ஏழு தடவை ஜபித்தால் நோய்கள். தீவினைகள். பாவங்கள், தாபத்ரயங்கள் என யாவும் நீங்கும்!

oஞாயிற்றுக்கிழமையன்று அரசமரத்தடியில் நின்று, இத்துதியைச் சொல்பவன் சகல காரியங்களிலும் ஜெயிப்பான்! எதிரிகளை தோற்கடிப்பான்!

oஸ்ரீ ராமரட்சையுடன் கூடிய ரட்சயை இந்த அனுமன் கவசத்தைச் சொல்லி எவரொருவர் தரித்துக் கொள்வாரோ அவருக்கு வியாதிகள் யாவும் நீங்கும்! எல்லா காரியசித்தியும் ஏற்படும்!

oஎல்லா துக்கமும் அழியும்! எங்கும் எதிலும் வெற்றி! தூய்மையான மனதுடன் சுத்தமாக ஒரு நாள் பகல் தொடங்கி மறுநாள் பகல் வரை விடாமல் இந்தக் கவசத்தைப் படித்தால் சிறவாசம் நிச்சயம் நீங்கும்! இதில் சந்தேகமேயில்லை! மகாபாதகங்கள், உப பாதகங்கள் யாவும் நீங்கும் என்பதில் ஐயமில்லை!

oஎந்த அனுமன் மிகுந்த ஆற்றல் கொண்டு பெரும் கடலையே சின்ன குட்டையைத் தாண்டுவது போல் தாண்டி ஸ்ரீசீதாதேவிக்கு மிகுந்த சோகத்தால் ஏற்பட்ட தாபத்தைப் போக்கினாரோ, ஸ்ரீவைகுண்ட நாதரான ஸ்ரீராமனிடத்தில் பக்தி கொண்டாரோ, அக்ஷயகுமாரனை வதம் செய்தாரோ, யுத்தத்தில் ஜயிக்கப்பட்ட ராட்சசனான ராவணனுடைய அபரிமிதமான கர்வத்தை அடக்கினாரோ, அப்படிப்பட்ட வாயு குமாரனும் வானரசிரேஷ்டருமான ஸ்ரீஹனுமான் எப்பொழுதும் நம்மை காக்கட்டும்!

oபாலசூரியன் மற்றும் தாமரை போல சிவந்த முகத்தைக் கொண்டவரும், ஜல பிரவாகத்தால் நிறைந்த அருட் கண்களை பெற்றவரும், சஞ்சீவி மலையைத்தாங்கி வந்து இலங்கை யுத்தத்தில் இறந்த வானரர்களைக் காத்த வீரரும், ராமபக்தர்களுக்கு மென்மையானவரும், புகழ்மிக்கவரும், பாக்கியவதி அஞ்சனையின் புதல்வருமான அனுமனை வணங்குகின்றேன்!

oஅஞ்சனையின் மகனாக அவதரித்தவரும், தெய்வீக புருஷரும், மார்கழி மாத மூலநட்சத்திரத்தில் பிறந்தவரும், அனந்தன் என்னும் ஆதிசேஷனால் போற்றி வணங்கப் படுபவரும், அற்புதங்கள் பல செய்தவருமான ஆஞ்சநேய மூர்த்தியை போற்றி வணங்குகின்றேன்! மகிழ்வு உண்டாகட்டும்!

4.“அனுமன் கவசம்”- வேண்டுவன கிடைக்க, சீரும் சிறப்பும் அடைய, நோய், பகை நீங்க - தினமும்/ நேரம் கிடைக்கும் போது.

அனுமன் கவச அருமந்திரத்தின்
முனைவன் இராமச்சந்திர மூர்த்தியே
ஆசிரியத்துள் அடங்கும் யாப்பே
மந்திரத்து இலக்கு மாருதி ஆகும்
காற்றின் புதல்வனே காத்திடும் வித்து
அஞ்சனைச் செல்வனே மிஞ்சிடும் ஆற்றல்
நெஞ்சின் ஆவல்கள் நிறைவேறிடவே 
பராவும் வேண்டுதல் பற்றுகள் அனைத்தும்
இராம தூதனே இணைப்பின் பினைப்பு!
எண்ணி எண்ணி இராமன் இசைப்பான்


கீழ்பால் இருந்தெனை அனுமன் காக்க!
மேற்பால் கேசரி மைந்தன் காக்க!
கடலைக் கடந்தவன் வடக்கில் காக்க!
காற்றின் களிமகன் தெற்கில் காக்க!
திருமால் பக்தன் திசைதொறும் காக்க!
என்றும் எல்லா இடர்களிலிருந்தும்
பொன்றும் ஐயம் போக்குவோன் காக்க!
சுக்ரீவன் கொளும் தக்க அமைச்சன்
மிக்குயர் வளிமகன் மேல்தலை காக்க!
அரும்பெறல் மறவன் இருபுருவத்தெழும்
வெற்றி மிகுந்த நெற்றியைக் காக்க!
குறைநிழல் அகற்றும் குரக்கினத் தலைவன்
நிறைவிழி இரண்டையும் நேர்வந்து காக்க!
இராமனின் தொண்டன் என்கவுள், இருசெவி
விராய் எப்போழுதும் வேட்புடன் காக்க!
மூக்கை அஞ்சனை புதல்வன் காக்க!

மாக்குரங்கரசன் மணிமுகம் காக்க!
அரக்கரை வென்றோன் எருத்தம் காக்க!
அருக்கனைத் தொழுவோன் அருந்தோள் காக்க!
ஆழியை நீந்தியோன் அகலம் காக்க!
நீள்நெடுங் கையன் பக்கம் காக்க!
சீதையின் துயரைச் சிதைத்தவன் என்றன்
மார்பகம் இரண்டையும் சீருறக் காக்க!
இலங்கை நடுக்கினோன் இடைப்புறம் காக்க!

இலங்கு கொப்பூழ் எம் மாருதி காக்க!
காற்றின் புதல்வன் இடுப்பைக் காக்க!
அறிவின் சிறந்தவன் செறிவிடம் காக்க!
விடையவன் உகந்தோன் தொடையைக் காக்க!
இலங்கை வாயிலை எரித்தவன் முழந்தாள் 
வலங்கொளக் காக்க! குரங்கிற் கீர்த்தியன் 
மேற்கால் காக்க! ஆற்றல் மிகுந்தவன் 
கணுக் கால்களினைக் கண் எனக் காக்க!

மாமலை நிகர்த்தவன் மணிக்கதிர் நிகர்த்தவன்
கால்கள் இரண்டையும் சால்புறக் காக்க!
கடுவலி மிக்கவன் கால்விரல் காக்க!
ஐந்தவித் தோன் என் மைம்முடி காக்க!
உறுப்புகள் அனைத்தையும் உரவோன் காக்க!
திறமையும் கல்வியும் திகழப் பெற்றோர்
உற்வுடன் அனுமன் கவசம் ஓதுவோர்
மாந்தருள் மாந்தராய் மாண்புடன் விளங்குவர்

ஏந்து நற்பேறும் வீடும் எய்துவர், நாள்தொறும் 
ஒருமுறை இறுமுறை மும்முறை நாள் தொண்ணூறு 
வேட்புடன் ஓதுவோர் பகை ஒழிந்திட்டுத் தகைபெற
நிற்பர், சீரும் சிறப்பும் வேருற ஓங்குவர்
அகநோய் புறநோய் மனநோய் அனைத்தும்
புகவே புகாமல் போற்றும் மருந்திது!
அரசடி இருந்திதை நிரல்பட ஓதுவோர்
குறவிலாச் செல்வம் நிறைவுடன் பெறுவர்!

வெற்றி எம்முனையிலும் பற்றிச் சிறப்பர்! இராமன் 
காப்புடன் இனைந்திதை அணிபவர் உறாஅர் 
எந்நோயும் நீடுவாழ்ந்து உயர்வர்! எல்லாத் 
துறையிலும் வெல்வார் வாழ்வார்! உள்ளும் புறமும் 
வெள்ளத் தூய்மையாய் அல்லும் பகலும் அனுமன் 
கவசம் சொல்லுவார் அச்சம் துடைப்பார்! 
வெல்லுவார்! சிறை விடுபடுவர் சிறுபெருங்குற்றக் 
கெடுதலை அழிப்பர்! விடுதலை பெறுவர்!

5.ஸ்ரீஅனுமத் புஜங்கம் (பாம்பு போல் பின்னி பினைந்து இருக்கும் வார்த்தைகள்)-தடைகள் தகர்க்க, எதிரி பயம் விலக, சர்வமங்களம் கூட- மனம், வாக்கு, உடல் தூய்மையுடன்-தினப்பிரதோஷகாலம்.

oபொன் போன்றமேனியனே! கற்றோன். ராஜசிம்மம் போல தைரியம், கம்பீரம், நேர்மை ஆகியவற்றைக் கொண்டு உலகத்தைக் குறையேதுமில்லாமல் காப்பவன். ஆன்ம நேயன். அந்த வாயு புத்திரனாகிய அனுமனே போற்றி!

oபேரொளி கொண்டவனாயினும் அன்பர்க்குத் தென்றலாய் வருடிக் கொடுப்பவன். பாலனாக இருக்கையிலே சந்திரனை பழமென்று எண்ணிப் பாய்ந்தவன். தீமைகளை அடியோடு சங்காரம் செய்வதில் சங்கரனே இவன், அந்த ராம தாசனான அனுமனே போற்றி!

oலஷ்மனனின் உயிரை மீட்டதால் ரகுவம்ச நாசத்தை தவிர்த்தவன். ஞானி, சிவ நேசச் செல்வனாய் புவனம் காத்து ஸ்ரீ ராமனையே நெஞ்சில் சுமந்து நிற்கும் அனுமனே போற்றி.

oசிம்ம கர்ஜனை செய்பவன். அழகான பாதங்களைக் கொண்டவன். வியக்கும் அழகான நடையினை உடையவன். வனப்பான கேசத்தை உடையவன். அவன் தாவல் அழகோ அழகு. அந்த சீதாராம்தாசனே போற்றி!

oஅஞ்சநேயா போற்றி. வஜ்ரம் போன்ற உடல் வலிமையுள்ளவனே போற்றி.சிம்ம நாதா போற்றி. உனது ஒப்பற்ற வாலின் துனை கொண்டு விண்ணில் ஏகி, கருடனைபோல் பறந்தாய். இலங்கையில் அட்டகாசம் செய்தாய். நீயே சத்ய ஞான சொரூபன். மூவுலகும் நடுங்கும் சிங்கநாதா போற்றி.

oபோரிலே நீ ருத்ரனாக் எரிப்பாய். மேகநாதனிடன் நடந்த போரிலே, இலக்குவனாக வந்த ஆதிசேஷன் உயிரற்ற சடலம் போல் வீழ்ந்து கிடக்க, ஆதர்ஷபூமியைத் தாங்கும் அவன் அப்படி கிடந்தபோது நுண்ணறிவின் உதவியாலே விண்ணிலே பாய்ந்துசென்று பல்லாயிர லட்சயோசனைக்கப்பால் இருந்த சஞ்சீவி மலையையே பெயர்த்து வந்து உயிர்காத்த அனுமன் பெருமையை அளவிட்டு கூறமுடியாது. அனுமனே போற்றி.

oபொன்முடி தரித்தவா போற்றி. மாண்புமிக்க செல்வா போற்றி. நீ வானரத் தலைவன். நல்ல மதி யூகி. மந்திரி. நீ ஐம்பூதங்களிலும் நின்றவன். நேர்த்தியாக செயல்படுபவன். உயர்ந்த பொன்னாடை தரித்தவன். சாகா நிலை பெற்றவன். உன்னை வணங்குகின்றேன்.

oராமனுக்கு இனியவனே. ராக சொரூபனே. நோய் தீர்க்கும் சஞ்சீவியே. உலக ரட்சகனே. பத்ம பாதனே. வானர சிரேஷ்டனே. குமுதனே. உன்னை வணங்குகின்றேன்.

oபேரருளும் பெருமையும் கொண்ட கபீந்த்ரா என்ற வானரத் தலைவனே. நீ தானே தேடிவந்து எம்மை ரட்சிக்கும் தெய்வம். நீ பெரும் புகழ் நாயகனின் தூதன். மலைகளையும் குகைகளையும் ஆராய்வதில் வல்லவன். வலிமைமிக்கவனே. உன்னை போற்றி வணங்குகின்றேன்.

oபொன்னாலான இலங்காபுரியை பொடிப்பொடியாக்கியவன் நீ. இலங்கையில் நீ வைத்த தீயிலிருந்து நதி, கடல் என எதுவும் உன் வெஞ்சினத்திற்கு தப்பவில்லை. உன் சினம் கண்டால் மடிவோம் என எண்ணங்கள் வரும்படி நீலமேக ஸ்யாமளனின் கோபத்தை உன்னுடையதாக கொண்ட மாருதியே உன்னை வணங்குகின்றேன்.

oராம நாமத்தையே சதா மனதில் கொண்டவனே. ராம பிரமத்தின் நாதபிரம்மமே. அசோகவனத்தின் சோகத்தை மாற்றிய தீரனே. ராமனின் பிராணனாகிய சீதா பிராட்டியின் அன்பை பெற்ற தவசீலனே. இந்த பெரும் பேற்றை பெற என்ன தவம் செய்தாய். உன்னை வணங்குகின்றேன்.

oகுருவே ஸ்ரீ ஹனுமானே. என இவ்வையகமே மகிழ்வோடு போற்றிடும் பெருமைக்கு உரியவன் நீ. உன்னுடைய பூப் போன்ற மென்மையான உடல் பூமியைப் போன்று வலியது. உன்மேனி ரோமாஞ்சனம் தரக்கூடியது. நீ நாவுக்கரசன். சொல்லின் செல்வன். ராமதாசனே, அனைத்தையும் அவனிடமிருந்து பெற்று அவனுக்கே அளிக்க வல்லவனாகிய உன்னை வணங்குகின்றேன்.

oருத்திரனும், பிரும்மனும் கூடப் போற்றும் மஹா யோகி நீ. தத்துவமும் தர்க்கமும் அறிந்தவன் நீ. இசையில் லயிப்பவன். எங்கெல்லாம் சத்யத்திற்குக் கெடுதல் ஏற்படுகின்றதோ அங்கு சென்று சத்யத்தைக் காப்பவன் நீ. உன்னை வணங்குகின்றேன்.

oசத்யவடிவினனே போற்றி. வஜ்ரதேகனே போற்றி. ஞான சூரியனே போற்றி. சிரஞ்சீவி பதம் பெற்ற வாயு மைந்தனே போற்றி. தீய்க்கும் கனலினை பெற்றவனே போற்றி.

oநித்ய பிரம்மசாரியே போற்றி. வாயு மைந்தனே போற்றி. எப்போதும் ராமநாத சங்கீதத்தில் திளைத்திருக்கும் நீ ராகங்களின் நுட்பத்தை உணர்ந்தவன். என்றும் நிரந்தர ராமதாஸன் நீ. உன்னை வணங்குகின்றேன்.

6.“ஸ்ரீஅனுமான்”- குறைகள் தீர, சனியின் பகை விலக

உள்ளம் உருக, விழிசெருக, உடலம் எங்கும் களிபரவ,
வள்ளல் நாம ஜெபத்தாலே விழியும் கண்ணீர்த் துளிபெருக
மெல்ல இருந்த பெருமாளே! வேண்டித் தினமும் தொழுவேனே!
அள்ளி வழங்கி எனது குறை அனைத்தும் தீராய் அனுமானே!

பொறியும் புலனும் போனபடிப் போகும் விலங்குச் சாதியிலே
தறியா தலையும் காற்றினுக்கே தனயன் ஆனாய் மேருவிலே!
நெறியும் நிலையும் தவறாமல் நின்றாய்! யார்பால் அது கற்றாய்!
அறியேன் உன்போல் ஒருவனையே அருள்வாய் ஐயா அனுமானே!

படிகம் போலும் பால் போலும் பரமா, உனது நிறம் விளங்கும்!
வெடிபோல, கோடை இடிபோல விம்மி உனது குரல் முழங்கும்!
அடிபாதாளம் அதன் கீழே! அணிமா முடியோ விண்மேலே!
வடிவாய்க் காட்சி தருவானே! வணக்கம், வணக்கம் அனுமானே!

ஆயுள் வளரும் உன்னாலே! அழகும் வலிவும் உன்னாலே!
பாயும், நோயும் பல்பகையும் பறந்துபோகும் உன்னாலே!
கோயில் எனது நெஞ்சகமாம்! கூறும்கவிதை மந்திரமாம்!
தேயம் தழுவும் புகழோனே! சித்தம் இரங்காய் அனுமானே!

அன்னை அருளால் அவ்வுலகில் அழியா திருக்கும் பெரியபதம்
மன்னன் அருளால் இவ்வுலகில் மலரோன் நிகராய்ப் பிரம்மபதம்!
தன்னை நம்பும் அடியார்க்குத் தலைமை தருதல் உனது குணம்!
என்னை ஆளும் பகவானே இன்றே அருள்வாய் அனுமானே!

ஜென்மச் சனியால், அட்டத்தில் சீறும் சனியால், கண்டகனாம்
வன்மச் சனியால் நீச்சமுடன் வக்ரச் சனியால் உனையடைந்தோம்
கன்மச் சனியின் பகைவிலக்கு கலங்கும் குடியை நிலைநிறுத்து!
பொன்னைப் பொழியும் கையோனே! போற்றி, போற்றி அனுமானே!

ஸ்ரீ மாருதி துதி- க்ருபை உண்டாக-

ஸர்வ கல்யாண தாதாரம்
ஸர்வ வாபதக நவா ரகம்
அபார கருணா மூர்த்திம் 
ஆஞ்சநேயம் நமாம் யஹம்

ஸ்ரீ அனுமன் துதி- துஷ்ட கிரஹங்கள் விலக-
அஞ்ஜனா கர்ப்ப ஸம்பூதம்
குமாரம் ப்ரும்ஹ சாரிணம்
துஷ்ட க்ரஹ வினாசயா 
ஹனுமந்த முபாஸ் மஹே

ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி- காரியங்களில் வெற்றி பெற-
ஸ்ரீராமதூத மஹாதீர
ருத்ர வீர்ய ஸமுத் பவ
அஞ்சனா கர்ப்ப ஸம்பூத
வாயு புத்ர நமோஸ்துதே
அஸாத் ஸாதக ஸ்வாமிந்!
அஸாத்யம் தவ கிம் வத!
ராமதூத க்ருபா ஸிநதோ!
மத்கார்யம் ஸாதய ப்ரபோ

ஸ்ரீ அனுமன் துதி- தைரியம் உண்டாக-
புத்திர் பலம் யசோ தைர்யம் 
நிர்பயத்வ மரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம்
ச ஹனூமத் ஸம்ரணாத் பவேத்

“ஸ்ரீமங்களாஷ்டகம்”:--

மங்களங்கள் பெருக- மனக் குறைவின்றி- பாவங்களிலிருந்து விலகி- நீண்ட ஆயுள்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.

oபிரம்மனே! மஹாவிஷ்னுவே! பரமேஸ்வரனே! இந்திரனே! அக்னியே! யமனே! நிருதியே! வருணனே! வாயுவே! குபேரனே! முருகனே! கணபதியே! சூரியனே! சந்திரனே! ருத்திரர்களே! விச்வ தேவர்களே! ஆதித்யர்களே! அச்வினி தேவர்களே! சாத்தியர்களே! வஸுக்களே! பித்ருக்களே! சித்தர்களே! வித்யாதரர்களே! யஷர்களே! கந்தர்வர்களே! கின்னரர்களே! மருத்துக்களே! மற்றும் ஆகயத்தில் சஞ்சரிக்கும் அனைத்து தேவர்களே! உங்கள் அனைவரையும் வணங்குகின்றேன். எனக்கு என்றும் மங்களம் அருளுங்கள்.

oசரஸ்வதி, மகாலட்சுமி, பூமிதேவி, பார்வதி, சண்டிகை, பத்ரகாளி, பிராஹ்மி முதலிய மாத்ரு கணங்கள், தட்சனின் மகள்களான அதிதி, திதி, சதி, முதலியோர், சாவித்ரி, கங்கை, யமுனை, அருந்ததி, தேவர்களின் மனைவிகள், இந்திராணி முதலிய தேவலோகப் பெண்களும் விண்ணில் சஞ்சரிக்கும் தேவமாந்தரும் எனக்கு நீங்காத மங்களத்தை அளிக்கட்டும்.

oமத்ஸ்யமூர்த்தி, கூர்மமூர்த்தி, வராஹமூர்த்தி, நரசிம்மப் பெருமாள், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், கபிலர், நரநாராயண மூர்த்தி, தத்தாத்ரேயர், பிருகு மற்றும் நரகாசுரனை வதம் செய்த மகா விஷ்ணுவின் மற்ற எல்ல அவதாரங்களும், சுதர்ஸ்ன சக்கரம் முதலிய ஆயுதங்களும், அவதாரம் செய்த மூர்த்திகளின் மனைவிகளும், அவர்களின் புத்திரர்களும், விஷ்னுவின் எல்ல அம்சா அவதாரங்களும் எனக்கு தீராத மங்களத்தை அளிக்கட்டும்.

oவிஸ்வாமித்திரர், வசிஷ்டர், அகஸ்தியர், உசத்யர், ஆங்கீரஸ், காச்யபர், வியாசர், கண்வர், மரீசு, கிரது, பிருகு, புலஹர், சௌனகர், அத்ரி, புலஸ்தியர் முதலான மஹரிஷிகளும் மற்றும் பல முனிவர்களும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கிரகங்களும், அஸ்வனி முதல் ரேவதி வரியிலான நட்சத்திரங்களும், நம் பிரஜாபதிகளும் நாகராஜன் முதலிய சர்ப்பக் கூட்டங்களும், மனுக்களும் எனக்கு வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.

oமநு புத்ரிகளான ஆகூதி, தேவஹூதி, ப்ரஸீதி ஆகிய மூவரும், எல்லா முனிவர்களின் பத்தினிகளும், மனுக்களின் பத்தினிகளும், சீதை, குந்திதேவி, பாஞ்சாலி, நளன் மனைவி தமயந்தி, ருக்குமணி, சத்யபாமா, தேவகி மற்றுமுள்ள அரசர்களின் மனைவியர், கோபிகைகள், பதி விரதைகள், நற்குலப்பெண்மணிகள் யாவரும் எனக்கு எல்லாவித மங்களத்தையும் கொடுக்கட்டும்.

oகருடன், அனந்தன், ஹனுமான், மஹாபலி, சனகர் முதலான யோகிகளும், சுகர், நாரதர், பிரகலாதன், பாண்டவர்கள், ந்ருகன், நளன், நஹூஷன், அரிச்சந்திரன், ருக்மாங்கதன் முதலிய விஷ்னு பக்தர்களும் மற்றும் சூரிய, சந்திர குலத்தில் உதித்த உத்தமர்களும், அரசர்களும் எனக்கு வளமான மங்கலத்தை உண்டாக்கட்டும்.

oஅந்தணர்கள், பசுக்கள், வேதங்கள், ஸ்ம்ருதிகள், துளசி, கங்கை, முதலி8ய சர்வ தீர்த்தங்கள், சகல வித்யைகள், பலவிதசாஸ்திரங்கள், இதிஹாசங்கள், சகல புராணங்கள், வர்ணங்கள், ஆச்ரமங்கள், சாங்கியம், யோகங்கள், யம நியமங்கள், எல்லா கர்மங்கள், காலங்கள், சத்யம் முதலான அனைத்து தர்மங்களும் எனக்கு போதிய மங்களத்தை அளிக்கட்டும்.

oசகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான நன்மைதரும் எல்லாமரங்கள், எட்டு திக்கு யானைகள், மேகங்கள், சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள், பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள், ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள், செடிகள், கொடிகள் எனக்கு நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.

குருஸ்ரீ பகோராயின் சந்தோஷப்பூக்களின் இதழ்களில் சில......

o‘நீ உலகின் அழகை தரிசிக்கும்போது நலமுடன் திகழ்கிறாய்’

oகடற்கரையில் உலாவும்போது அப்போது வீசும் சுத்தமான காற்றை அனுபவிக்காமல், என்றோ எங்கேயோ நடந்த நிகழ்வை நினைத்து வேதனையுறுவதால், அந்தக்கணம் நீங்கள் அடையவிருந்த காற்றின் சுகம் என்ற நிகழ்கால ஆனந்தத்தை இழந்து விடுகின்றீர்கள். புதிய சூழலில் இருந்தாலும் மனம் பழையதில் கிடந்து தவிக்கின்றது.

oஎல்லா உயிர்க்கும் சந்தோஷத்தை அடைய, அதைத் தேட உரிமை உண்டு. வாழ்வின் இரகசியம் அல்லவா! அது அற்புத இலக்கணம்.

oசந்தோஷம் போதும் இனி எந்த சந்தோஷமும் வேண்டாம் எனக்கூறக்கூடிய நிலையில் எந்த ஒரு உயிரும் இயங்குவதாக இல்லை.

oமனிதனால் முடியாதது அவனது கடந்த இழந்தகாலத்தை மீண்டும் பெறுவது. இன்றைய நிகழ் நாளைய கடந்த காலம்.

oஉனது வாழ்நாள் ஒவ்வொருநாளாக குறைந்து கொண்டிருக்கின்றது. இறந்தவனையும், நடந்தவைகளையும் பற்றி சிந்தித்து என்ன பயன்! இருக்கும் காலத்தில் நீ உன் ஆன்மாவின் மேன்மைக்காக சிந்தி.

o காலங்களே நம் நண்பர்கள். காலங்களே நம் பகைவர்கள். காலங்கள் நமக்கு எல்லாம் தந்தும் பறித்தும் விடுகின்றன. அழவைக்கிற அதுவே சிரிப்பையும் தருகின்றது.
“சந்தோஷப்பூக்களை நுகர்ந்து வாழ்வியல் பயன் பெறுங்கள்”

செவ்வாய்க்கிழமை, 13 August 2013 00:00

மகாலட்சுமி

 

 

லட்சுமி-விஷ்ணுவின்மார்பில் இருப்பவள். தூய உள்ளம் கொண்டவள் மகாலட்சுமி.

வேறுபெயர்கள்- கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜய லட்சுமி, சந்தான லட்சுமி, வித்யா லட்சுமி, தைரிய லட்சுமி, தான்ய லட்சுமி,

உகந்த நாட்கள்- செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, பௌர்ணமிதினங்கள் சிறப்புஎந்நாளும் வழிபடலாம்.

உகந்த மலர்கள்-செந்தாமரை, தாழப்பூ, செண்பகம், முல்லைமல்லி,பவளமல்லி (பாரிஜாதம்) சிறப்பு. தும்பை, அருகம்புல் தவிர மற்ற பூக்களை உபயோகிக்கலாம்.

வணங்கும்முறை- கோவிலுக்கு வெளியில் உள்ள சிறிய திருவடியை-அனுமானை வணங்கவும். பிராதனக் கோவிலின் முன்பகுதியில் உள்ள கொடிமரத்தை சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கவும். ஆழ்வார்கள், ஆச்சாரியர்களை வணங்கவும். எல்லா சன்னதிகளிலும் அனுக்கிரகம் பெற்று தாயார் சன்னதிக்கு வெளியில் உள்ள துவார பாலகிகளைச் சேவித்து அனுமதியுடன் தாயார் சன்னதிக்குச் செல்லவும்., நீங்கள் கொண்டுவந்த பழங்கள்பூக்கள் மற்றும் அர்ச்சனைக்குரிய பொருள்களை அர்ச்சகரிடம் கொடுத்து விட்டு அமைதியாக இறைவியின் துதிகளை, திருநாமங்களைச் சொல்லிக் கொண்டிருங்கள். அர்ச்சகர் மந்திரங்கள் சொல்லி மணி ஒலி எழுப்பும்போது கண்களை மூடாமல் இறைவியைப் பார்த்து மனதாற வணங்குங்கள். ஆராதனை செய்த தீபத்தை ஏற்றுகுங்குமம்பெற்று தாயேசரணம்எனச்சொல்லி நெற்றியில் இட்டுக் கொள்ளவும். மகாலட்சுமி, ஆண்டாள் ஆகியோருக்கு அர்ச்சனை செய்து அல்லது வணங்கி மூலவரான பெருமாளின் எதிரில் உள்ள கருடாழ்வார் துவாரக பாலகர்களை வணங்கி அவர்களின் அனுமதியுடன் மூலவரான பெருமாளைத் தரிசிக்கவும்.

அருள் நிறைந்துள்ள பெருமாள் கோவிலில் ஒரு பகுதியில் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்து துதிகள் அல்லது நாமங்களைச் சொல்லிக் கொண்டிருந்துவிட்டு எழுந்து வரவும்.

 

உள்ளே.....

1.“ஸ்ரீ லட்சுமி”-லஷ்மிகடாட்சம் பெற- தினமும்/ வேண்டும்போது.

2.“லட்சுமி”-புன்நகையும் பொன்நகையும் சேர-முத்துசாமி தீட்சிதர் பாடியது- தினமும்-நேரம் கிடைக்கும் போது

3.“அஷ்டலட்சுமி” கடாட்சம்பெற-தேவேந்திரன் பாடியது-தினமும்- குறைந்தபட்சம் வெள்ளிக்கிழமை 

4.“தியாகராஜர் துதி”-முத்துசாமி தீட்சிதர்-திருமகள் அருள்பெற- வறுமைத்துயர் நீங்க-தினமும்/ வேண்டும்போது. 

5.“லக்ஷ்மி இருதய துதி”-செல்வ வளம்பெற-தினமும் 

6.“லக்ஷ்மி துதி”-விரும்பும் துறையில் வேலை கிடைக்க தினமும் 16 முறை. 

7.“மகாலட்சுமி துதி”-அவதிகள்நீங்க, செல்வம் அடைய- தினமும் / வேண்டும் போது. 

8.“மகாலட்சுமி துதி”-இடர்கள் நீங்க, செல்வம் அடைய- இந்திரன் பாடியது- தினமும் / வேண்டும் போது. 

9.“லட்சுமி”யின் அருள்கிட்ட- சங்கடங்கள் விலக, ஆதிசங்கரர் -செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை 

10.“லக்ஷ்மிதுதி”-சர்வமங்களம், 16பேறுகளும்கிட்ட-வெள்ளிக் கிழமை 

11.“லட்சுமி”-வேண்டுவன எல்லாம்கிட்ட-வெள்ளிக்கிழமை-மற்றும் வரலட்சுமி விரத நாளன்று 

12.“திருமகள்” பாற்கடலில் தோன்றியபோது- அட்சய திருதியையன்று திருமால் கூறியது -வெள்ளி மற்றும் அட்சய திருதியையன்று. 

13.“லட்சுமி”-செல்வவளம் கொழிக்க, பரந்தமனப்பான்மை  பெருக-ஆதிசங்கரர் அருளியது -அட்சயதிருதயை 

14.“மகாலக்ஷ்மி துதி”- தனம், தான்யம், சந்தானம், ஆரோக்யம், கல்வி, செல்வம், கலை எல்லாம்பெற- தினமும் / நவராத்திரி போது. 

15.“மகாலக்ஷ்மி துதி”- ஆதிசங்கரரின் கனகதாரா- குணங்கள் மேன்மையுற,செல்வங்கள் அடைய,அறிவு வளர- தினமும்/ வெள்ளிக்கிழமை. 

16.“அஷ்டலக்ஷ்மி துதி”- தனம், தான்யம், சந்தானம், ஆரோக்யம், கல்வி, செல்வம், கலை எல்லாம்பெற- தினமும் / நவராத்திரி போது.

17.“108 லட்சுமி போற்றி”

“ஸ்ரீமங்களாஷ்டகம்”-நீண்ட ஆயுளுடன்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட-தினமும்.

வேழமுகத்து விநாயகனைத் தொழ
வாழ்வு மிகுந்துவரும்!
வெற்றி முகத்து விநாயகனைத் தொழ
புத்தி மிகுந்துவரும்!
வெள்ளைக்கொம்பன் விநாயகனைத்தொழ
துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே!
அப்பமும் பழம் அமுதும் செய்தருளிய
தொப்பையப்பனை தொழ வினையறுமே!

1.“ஸ்ரீ லட்சுமி”- லஷ்மி கடாட்சம் பெற- தினமும் / வேண்டும் போது.

oபொன்னரசி நாரணனார் தேவி புகழரசி
மின்னு நவரத்தினம்போல் மேனி அழகுடையாள்
அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி
தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே!

2.“லட்சுமி”- புன்நகையும் பொன்நகையும் சேர-முத்துசாமி தீட்சிதர் பாடியது- தினமும்- நேரம் கிடைக்கும் போதெல்லாம்

oசுவர்ணமயமான லட்சுமியை நான் சதா போற்றிப் பாடுகிறேன். ஈனமான அற்ப மனிதர்களைப் போல் கோரிக்கை நிறைவேறவேண்டுமென்ற வேண்டுதலோடு உன்னை நெருங்குவதை விட்டு விடுகிறேன்! உன்னை வணங்குகின்றேன்!

oஅழிவில்லாத நிலையான ஐவர்யத்தைக் கொடுப்பவளே! பாற்கடலின் புதல்வி. மகாவிஷ்னுவின் மார்பையே தன்னிருப்பிடமாகக் கொண்ட மான் விழியாளே! தளிர் போன்ற திருவடிகளைக் கொண்டவளே! மலர்ப்பாதம் கொண்டவளே! கைகளில் நீல மலர்களை ஏந்தியவளே! மரகத பச்சை மணி வளையல்களை அணிந்தவளே! உன்னை வணங்குகின்றேன்!

oஸ்வேத உலகத்தில் வசிப்பவளே! ஸ்ரீகமலாம்பா பரதேவதை எனக் கூறப்படுபவளே! கடந்த காலத்திலும், நிகழ் காலத்திலும், வருங்காலத்திலும் ஒளிர்பவளே! அந்தணர்களால் போற்றப்படும் உத்தமமான தாயே! தாமரை மாலை அணிந்தவளே! மாணிக்க மயமான ஆபரணங்கள் தரித்தவளே! உன்னை வணங்குகின்றேன்!

oகீதம், மற்றும் இசை வாத்தியங்களால் சந்தோஷம் அடைபவளே! பார்வதியின் அம்சமான இந்திராவே! சந்திர முகம் கொண்டவளே! மஞ்சள் நிற ஆடை அணிபவளே! குரு குகனின் மாமனான விஷ்ணுவின் அன்பு மனைவியே! மிகச் சிறந்த அழகியே! அதனால் லலிதா என்றழைக்கப்படுபவளே! உன்னை வணங்குகின்றேன்!

oமங்கள் தேவதையான உன்னால் நான் மிகவும் பெருமைப் படுத்தப்பட்டுள்ளேன். உனக்கு நன்றி. உன்னை வணங்குகின்றேன்!

oமிகச்சிறந்த கமலாலயத்தில் குடியிருப்பவளே! போக பாக்கியங்களை அளிக்கும் சகல பொருள்களுக்கு இருப்பிடமானவளே! சராசர மயமான உலகின் எல்லா உற்பத்தி, காத்தல், அழித்தல் என மூன்றுக்கும் பொறுப்பானவளே! உன்னை வணங்குகின்றேன்!

oமஞ்சள், குங்குமம், அழகிய ஆடை ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட திருமேனி உடையவளே! ஏழ்மை, துக்கம் போன்ற பெரிய அமலங்களைப் போக்குபவளே! ராஜகோபாலனின் இதயக் கமலத்தினை இருப்பிடமாகக் கொண்ட வரலட்சுமியே! பக்தர்களான குருகுகன் முதலியோர்களுக்கு அனுக்கிரகம் செய்பவளே! உன்னை வணங்குகின்றேன்!

oதேவர்களால் சதா வணங்கப்படுபவளே! பாதத் தாமரையை உடையவளே! பாற்கடலில் தோன்றியவளே! தேவர்கள் வணங்கும் பார்வதிக்கு இளையவளே! மயைக்கு வித்தான மகாலட்சுமியே! வரலட்சுமியே! உன்னை வணங்குகின்றேன்!

oசெல்வங்களை அளிப்பவளும், அழகிய பத்ம பாதங்களையுடையவளும் ரசனைக்கு இருப்பிடமானவள் ஆகிய அம்மா வரலட்சுமியே! உனக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!

oமன்மதனின் தந்தையான மகாவிஷ்னுவின் பிராண நாயகியே! பொன் வண்ண மேனியுடையவளே! கோடி சூர்யர்களின் ஒளியை உடையவளே! பக்தர்களை விரைவில் அடைபவளே! உன்னை வணங்குகின்றேன்!

oதன் அடியவர்களை ரக்ஷிப்பவளே! தாமரை மலருடன் கூடியவளே! கேசவனின் இதயத்தில் விளையாடுபவளே! உன்னை வணங்குகின்றேன்!

oஆவணி முதல் மாதத்தில் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை தினத்தில், சாருமதி முதலான பத்தினிகளால் பூஜிக்கப்படுபவளே! தேவர்களாலும் குரு குகனாலும் சமர்பிக்கப்பட்ட ரத்னமாலையை அணிந்தவளே! எளியவர்களை ரட்சிப்பதையே லட்சியமாகக் கொண்ட சாமர்த்தியசாலியே! உன்னை வணங்குகின்றேன்!

oநலிந்தோர்க்கு நிதிக் குவியலை அளிப்பவளே! மாயையைப் போக்குவதில் வல்லவளே! சரஸ்வதியால் வணங்கப் படும் உத்தமியே! கைவல்யத்தை கொடுப்பதில் விருப்பமுடையவளே! வேண்டும் விருப்பங்களை எல்லாம் அள்ளிக்கொடுக்கும் கைகளையுடையவளே! உன்னை மிக மிகப்போற்றி துதிக்கின்றேன்.

oமகிழ்வான புன்னகையும் மங்களமான பொன்நகையும் என் இல்லத்தில் என்றும் சேர்ந்திருக்க அருள்வாயாக! உன்னை வணங்குகின்றேன்!

3.“அஷ்ட லட்சுமி” கடாட்சம் பெற- தேவேந்திரன் பாடியது- தினமும்- குறைந்தபட்சம் வெள்ளிக்கிழமை

தாமரையில் வசிப்பவளும், நாரயணனின் தேவியான நாராயணியும் கிரிஷ்ணனின் அன்புக்குரியவளும் ஆகிய மகாலட்சுமியை எப்போதும் போற்றி வணங்குறேன்!

தாமரை இலையைப் போல் தனித்து நிற்பவளும், மகாவிஷ்ணுவின் பத்தினியும் கமலமலரில் வீற்றிருப்பவளும் பத்மினியுமான வைஷ்ணவியைப் போற்றி வணங்குகிறேன்!

எல்லாச் செல்வங்களின் வடிவமாகயிருப்பவளும், எல்லோராலும் போற்றப்படுபவளும், விஷ்னுவின் மேல் பக்தி செலுத்துவதை ஊக்குவிப்பவளும், சந்தோஷத்தை அளிப்பவளுமான மகாலட்சுமிக்கு நமஸ்காரம்!

oகிருஷ்ணரின் மார்பில் வசிப்பவளும், கிருஷ்ணரை நிழல்போல் தொடர்பவளும், நிலவின் ஒளியையே தன்னுருவாகக் கொண்டவளும், செந்தாமரை போன்று பிரகாசிப்பவளுமான அலைமகளை மனமாரத் துதிக்கிறேன்!

செல்வம் நிலையாக இருக்க வகைசெய்பவளும், மூன்று தேவிகளில் முக்கியமான தேவியும், வளத்தின் மொத்த உருவமும், வளமையுமே ஆனவளுமான தேவியைப் போற்றி வணங்குகிறேன்!

வைகுண்டத்தில் மகாலட்சுமியென்றும், பாற்கடலில் லட்சுமியென்றும், இந்திரனின் இருப்பிடத்தில் சொர்க்க லட்சுமி எனவும், அரண்மனையில் ராஜ்யலட்சுமி என்றும் அழைக்கப்படுபவள் ஆகிய ஸ்ரீதேவியைப் போற்றி வணங்குகிறேன்!

இல்லற வீடுகளில் கிருஹலட்சுமி என்ற கிரஹ தேவதையாகவும், வாரிவழங்கும் காமதேனுவாகவும், சமுத்திரத்தில் தோன்றியவளும் வேள்வியின் பிரிய நாயகியான தட்சிணாவாக இருப்பவளுமான மகா லட்சுமியை நமஸ்கரிக்கின்றேன்!

தாயே! நீயே தேவமாதாவான அதிதிதேவி, கமலாலயத்தில் வசிப்பவளான கமலாவும் நீயே! ஸ்வாஹா எனும் அக்னி தேவதையும், பித்ரு தேவதையான ஸ்வாதாவும் நீயே! உன்னை வணங்குகின்றேன்!

நீயே விஷ்ணு ஸ்வரூபியாக இருக்கிறாய்! வழங்கும் சக்திகளில் பூமித்தாய், நீ! சுத்த சத்வ சொரூபம் நீயே! எப்போதும்நீ நாராயணனைப் போற்றுபவள்! உன்னை வணங்குகின்றேன்!

பொறாமை, துன்புறுத்தல், உயிர்களைக் கொல்லுதல் போன்றவற்றை நீ விரும்புவதில்லை, சாரதையாக ஒளியுடன் திகழ்பவள் நீ! வேண்டிய அனைத்தையும் அளிப்பவள் நீயே! மகாவிஷ்ணுவின் அருளைப் பெற உதவுபவள் நீயே!

எல்லோருக்கும் மேலான தாய் நீ! எல்லோருக்கும் உறவினளாக உருவெடுத்தவள் நீ! தர்மம், அர்த்தம் ஆகிய பொருள், ஆசையாகிய காமம், முக்தியாகிய மோட்சம் ஆகிய நான்கு குணங்களும் வருவதற்கும், அவை ஈடேறவும் காரணமானவள் நீயே!

ஒவ்வொரு உயிரும் தாய்ப்பால் குடிக்கும் தருணம் முதல் கடைசி மூச்சு வரை எல்லாக் காலத்திலும் எல்லோருக்கும் தாயாக இருந்து அரவணைத்துக் காப்பவளான உனக்கு நமஸ்காரம்!

தாயை இழந்த சிசுக்கள், தாய்ப்பால் இல்லா விட்டாலும் தெய்வ அனுக்கிரஹத்தால் வாழ்கிறார்கள். ஆனால் உன்னருள் இல்லாமல் எப்படி வாழ்க்கை நடத்த முடியும்? நிச்சயமாக உன்னருளால்தான் இது முடியும்!

எப்போதும் மகிழ்ச்சியும் புன்முறுவலுடனிருப்பவள் நீ! பவாம்பிகையே நீ காட்சி தந்து மகிழ்விக்க வேண்டும். சகலருக்கும் சமமான அருளைத் தருபவளே! எதிர்ப்பு என்பதேயில்லாத ஒரு நிலையை எனக்குக் கொடு அம்மா!

நான் தங்களுடைய கடாட்சம் இன்மையால் உற்றார் உறவினரின்றி அநாதை போல் எல்ல செல்வத்தையும் இழந்து உன்னையே கதி என்றிருக்கின்றேன். நீயே எனக்கு ஞானத்தைக் கொடு! தர்மத்தை அருள்! சர்வ சௌபாக்யத்தையும், புகழ், கீர்த்தி மற்றும் அனைத்து அதிகாரத்தையும் கொடுத்து அருள்புரி!

வெற்றி, வீரம், எதிரி பயமின்மை, சகல செல்வம் என யாவற்றையும் கொடு தாயே!

கண்களில் நீர்வழிய தலைதாழ்த்தி நின்று மகாலட்சுமியை தேவர்களின் நலனை முன்னிட்டு இந்திரன் வணங்கினான். பிரம்மா, சங்கரன், ஆதிசேஷன், எமதர்மன், கேசவன், ஆகியோரின் (உடனிருந்தனர்) ஆசிகள் எனக்கும் உண்டு.

மனம் இரங்கி காட்சியளித்த கலைமகள் தேவர்களுக்கு வரம் கொடுத்ததோடு அழகிய, மனம் நிரைந்த மலர் மாலையைக் கொடுத்தாள்.

அதோடு அலைமகள், தேவேந்திரா உன்னால் இனிமையாகச் சொல்லப்பட்ட இந்த புண்ணிய துதியை தினமும் மூன்று முறை சொல்கிறவர்கள் குபேரனுக்கு சமமான செல்வம் பெறுவர். ஐந்து லட்சம் முறை சொல்பவர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரனாவார் என்றார்!

புனிதமான இத்துதியை எக்காலத்தும் இடைவிடாது துதிப்பவர், சக்ரவர்த்திக்கு நிகரான செல்வங்களும் அரச வாழ்வும் பெறுவார் என்பது நிச்சயம்! தேவேந்திர போகமும் குபேர சம்பத்தும் நான் பெற நான் ஆசி புறிவாய் அம்மா!

4.“தியாகராஜர் துதி”- முத்துசாமி தீட்சிதர்- திருமகள் அருள் பெற- வறுமைத்துயர் நீங்க-தினமும்/ வேண்டும்போது.

oமங்களமான சௌகந்திக மலர் மாலைகளின் மணத்தாலும் அழகினாலும் ஒளிரும் திருக்கழுத்தை உடையவர். நிலவைத் தலையில் சூடியவர். திரிபுராதி அசுரர்களை கொல்ல முற்பட்டபோது மேரு போன்ற மலையை வில்லாக ஏந்தி நின்றவர். இப்படிப்பட்ட பெருமைகளையுடைய ஸ்ரீ தியாகராஜரைப் போற்றி வணங்குகின்றேன்.

oமுத்து, இந்திரநீலம் போன்ற ஒளிமயமான நவரத்னங்கள் இழைக்கப்பெற்ற நவரத்ன சிம்மாசனத்தில் வீற்றிருப்பவராகிய தியாகராஜ பெருமானை அடியேன் போற்றி வணங்குகின்றேன்.

oவானர முகமுடைய முசுகுந்தச் சக்ரவர்த்தியின் பிரார்த்தனைக்கு
இணங்க விண்ணைவிட்டு இந்த மண்ணுலகுக்கு வந்தவரும், பாதுகாப்பான கவசம் போன்ற பெட்டகத்திலேயிருப்பவரும், முருகனின் தந்தையுமான ஸ்ரீதியாகராஜரே தங்களை நான் பணிவு கொண்டு வணங்குகின்றேன்.

oசகல ஜீவ ராசிகளையும் காப்பாற்றும் பசுபதியும், மிகச் சிறந்த குருவடிவம் எடுத்து அநேக பெரியோர்களின் சுத்த சத்குருவாக விளங்குபவரும், ஸ்ரீபுரம் எனப்படும் கமலாம்பிகையின் நகரத்தில் விளங்குபவரும், தன்னுடைய வடிவத்தை மறைத்துக் கொண்டிருப்பவருமாகிய தியாகராஜரே உமக்கு என் வணக்கங்கள்.

oதன் இனிய மனையாளான ஸ்ரீகமலாம்பிகையின் பேரெழில் நிறைந்த புன்னகையில் ஒளிர்பவரும், அந்த அம்பிகைக்காக தனது ஒரு பாதியைப் பகிர்ந்து கொடுத்தவரும், கணங்களின் தலைவராகிய கணபதியைப் பெற்ற ஸ்ரீதியாகராஜருக்குப் போற்றி. போற்றி.

oவிடாது தொடர்ந்து ஆரதிக்கப்பட்டால் மட்டுமே தனது சூட்சுமமான வடிவத்தின் ரகசியங்களை உணரச் செய்பவரும், சிறப்பான முறையில் அனைவரின் கோரிக்கைகளையும் நிறைவேற்றி இன்பமுறச் செய்பவரும், தடைகளற்றபோக போக்கியங்களையும் உன்னதமான பதத்தையும் அளிக்க வல்லவருமான தியாகராஜப்பெருமானுக்கு என் வணக்கங்கள்.

oபாற்கடலில் சயனித்திருக்கும் பகவான் விஷ்னுவால் முன்னம் மனத்துள் வைத்து பூஜிக்கப்பட்டபோது அவரது உள்சுவாசம் வெளி சுவாசத்திற்கேற்ப பன்னெடுங்காலம் வசித்துக் கொண்டிருந்தவர். அவரது அப்போதைய அசைவே ஆடலாகப் பரிணமித்தது. ஆக பரந்தாமனின் எல்லையற்ற இதயக் கடலில் அன்றலர்ந்த தாமரையின் மேல் அன்னப்பறவையைப் போன்ற அழகிய ஹம்ஸ நடனம்- அஜாபா நடனம் ஆயிற்று. அப்படிப்பட்ட ஆடலின் நாயகனும் மிகவும் போற்றுதலுக்குரிய பெருமைமிக்க பரமகுருவும் எல்லையற்ற மங்கள சொரூபியுமான தியாகராஜரைப் போற்றி வணங்குகின்றேன்.

oசச்சிதானந்த வடிவினராக குருவாகத் தோற்றமளிக்கும் ஸ்ரீதியாகராஜருடைய சீரடிகளில், பரமானந்தத்தை அளிக்கவல்ல இந்த அஷ்டகத் துதி மிகுந்த பக்தியுடன் சமர்பிக்கப்படுகின்றது. அகத்தூய்மையுடன் அர்பணிக்கப்படும் இந்தத் துதியால் மகிழ்ந்து மங்களங்கள் யாவும் அவரால் அளிக்கப்படும் என்பது நிச்சயம் என்ற நம்பிக்கையுடம் மனநிறைவுடன் இத்துதியை படிக்கின்றேன். எனக்கு லட்சுமி கடாட்சம் அருள்வாயாக.

5.“லக்ஷ்மி இருதய துதி”-செல்வ வளம் பெற- தினமும்

ரத்தினங்களால் ஜொலிக்கும் மாளிகையில் வசிக்கும் அழகுமிகு லட்சுமிதேவியே! உன்னை வணங்குகின்றேன். தூயதங்கம் போன்ற தேஜஸ் உள்ள லட்சுமிதேவியே வணக்கம், பொலிவுடன் ஒளிவீசும் லட்சுமி தேவியே வணக்கம், சாந்த சொரூபியான லட்சுமிதேவி எங்களுக்கு அனைத்து அருளும் வழங்குவாயாக. எழில் சிறக்கும் ஸ்ரீ மகாலட்சுமியே எங்கள் இல்லத்தில் விரைவாக எழுந்தருளி நிலைகொள்ள வணங்கி வேண்டுகின்றேன்.

6.“லக்ஷ்மி துதி”-விரும்பும் துறையில் வேலை கிடைக்க- தினமும் 16 முறை.

செல்வங்களுக்கெல்லாம் அதிதேவதையானவளே! அமிர்தம் வேண்டி கடைந்தபோது திருபாற்கடலில் தோன்றியவளே! தாமரை மலரை விரும்பி ஏற்பவளே! சந்திரனுக்கு சகோதரியே! திருமாலின் மனைவியே! வைஷ்ணவியாய் அருள்பவளே! பக்தர்களின் நலவாழ்வில் ஏற்படும் தடைகளை உன் கையில் உள்ள சார்ங்கம் எனும் வில்லால் அழிப்பவளே! ஹரி எனும் திருமாலுக்கு பிரியமானவளே! தேவர்களுக்கெல்லாம் தேவியே! மகாலட்சுமியாய் பேரழகு கோலத்தில் திகழ்பவளே! உன்னை வணங்குகின்றேன்!

7.“மகாலட்சுமி துதி”- அவதிகள் நீங்க, செல்வம் அடைய- தினமும் / வேண்டும் போது.

விளக்கினை ஏற்றிவைத்து வெற்றிலை பாக்கு வைத்து அளக்கரும் 
குங்குமத்தை அமுதமாம் சந்தனத்தை துலக்கமாய் அதனுக்கிட்டு 
தொடர்ந்து நீ அதனை ஏற்றி விளக்கமாய் வருக தாயே! 
என்று நீ விளம்பிவை வருவாள் லட்சுமி!

நூற்றிதழ்த் தாமரையின் மீதே நுணுகியே உறையும் பொன்னே!
ஏற்றிடும் தொழிலுக் கெல்லாம் இறைவியே! எங்கள் செல்வி!
போற்றினோம் உன்னை என்றும் பொன்னடி புனைகின்றோமே!
நாற்றிசை நீயே அம்மா நல்குவை இன்பம்தானே!

மகிடனின் பொருட்டாய் அன்று மாதேவர் மூவர் கூடி
முகிலெனக் கருணை நல்க! மூண்டதோர் கோபத்தாலே
அகிலமும் கொண்ட அன்னாய்! அவரவர் ஒளியினாலே
சிகியெனத் தொன்றினை நீயே! சிறந்தபொன்னாவாய் தாயே!

மணியினைத் தரித்தாய் நீயே! மலரினை உகந்தாய் நீயே!
கனியெனக் கனியும் மாதே! மேலையே உனது ஜோதி
அணியெனக்கு ஆயிற்றம்மா அனைத்துமாம் இன்பம் எல்லாம்
துணிவுடன் நல்க வல்ல தூயவளே! வணங்குகின்றேன்!

கமலத்தில் வசிக்கும் மாதே! கமலினி வணங்குகின்றேன்!
அமைவுறும் தேவதேவி! அன்புடை நாராணியும் நீயே!
இமையினில் வண்ணம் காட்டும் எழிலெனும் கண்ணன் மாட்டு
அமைவுறும் ராதை என்ற அன்னை மகாலட்சுமி போற்றி!

புனிதமே கமல மாதே! புள்ளூர்ந்தான் போற்றும் தேவி!
இனிய பத்மாசனத்தில் இருப்பவள் நீயே அன்றோ!
துணிவுடை வைணவீ உன்றன் திருவடி தொழுவதற்கே
அணுகினோம் நோக்கு தாயே! அவதியை நீக்கு தாயே!

செல்வமென்று சொன்னால் செல்வி நீதான் ஈவாய்!
வெல்வது நீயே என்றும்! வேறென அனைத்தும் நீயே!
பல்குணப் பரந்தாமன்பால் பற்றுடை திருவே உன்னை
பல்கிய மலர்கொண்டேத்திப் பணிந்தனம் காக்க தாயே!

கண்ணன் மார்பில் வாழும் கமலை நீ அன்னை நீயே!
கண்ணனின் சாயல் பெற்ற காரிகை நீயே தாயே!
எண்ணரும் இந்தின் ஜோதி ஏற்றனை கமலச் செல்வி!
எண்ணியே துதிப்போம் உன்னை இன்பமே சேர்க்க அன்னாய்!

எத்தனை செல்வம் உண்டோ! அத்தனை தரவும் வல்லாய்!
பித்தனை மயக்கும் செல்வி! பேணினோம் போற்றி! போற்றி!
எத்தனை விருத்தியுண்டோ அதனதன் வடிவம் நீயே!
அத்துணை விருத்தி நாங்கள் அடைந்திட வழிகாட்டாயோ!

நாரணர் வைகுண்டத்தில் மகாலக்ஷ்மி நீயே தாயே!
காரணம் யாவும் ஆன கனகமே நீரில் வந்த 
பூரணி சுவர்க்க லக்ஷ்மி இந்திரன் பூசை கொள்ளும்
நாரணி கருணைத் தாயே! நீயேதான் ராஜலக்ஷ்மி!

வீட்டினில் விளங்கும் பொன்னே! வீடதைக் கொடுக்கும் செல்வே!
வீட்டினைக் காக்க நீயும் விரும்புவை இலக்குமி நீயே!
கேட்டினைக் களையும் பெண்ணே! கெடுதலே அறியா அன்னை!
தேட்டினால் தொழும் உன் பக்தர் தொண்டினை உணர்ந்து காக்க!

அதிதிகள் போற்றும் தேவி! நிதியென நிற்கும் அன்னை! 
நிதியெனும் கமலச் செல்வி! நிமலையென்றமர்ந்த அன்னை!
தன்னையே உரிமை கொள்ளில் தகவுடன் அமையும் அன்னை!
மின்னுனைத் தொண்டுகொண்டோம்! மெல்லியை அருள்க மாதே!

விட்டுணு வடிவம் கொண்ட விமலையே! கமலை நியே!
எட்டுணைப் பொறுளும் நீயின்றி இல்லையே! இல்லை மண்ணில்
கற்றவர் போற்றும் எல்லா சார்புகள் நீயே தாயே!
அற்புதன் கண்ணன் போற்றும் அமலையே காக்க நீயே!

துட்டரை அடக்கும் காலை! துணிவோடு குரோதம்
திட்டமாய் கொள்ளும் அன்னை! திருவடி கொள்ளும் அன்பர்
கெட்டன எல்லாம் நீக்கும் கேடிலா சாரதை! இன்பம் 
உற்றவள் பறையென்றோதும் உயர்குல விஷ்னுப் பிரியை!

உலகமும் தானே ஆனாள்! உறுபொருள் எல்லாம் ஆனாள்!
இலகிடும் ஒளிகொள் நங்கை உலவிடும் உயிரில் எல்லாம்
ஒளிர்பவள் அகில அம்ச அளிகொளும் அனைத்தாம் சக்தி!
குளிர்பவள் பக்தர்க்கென்றே குரைகழல் வணங்குகின்றோம்!

எல்லாமாய் ஆகி நின்றாள்! இவள்பரை அன்னை என்றே!
எல்லோரும் உரிமை கொள்ளும் இன்பமாம் உருவைப் பெற்றாள்!
கல்லார்க்கும் கற்றவர்க்கும் காமமும் மோட்சம் தானும்
வெல்வகை அழித்துக்காக்கும் விமலையும் படைகள் கொண்டாள்!

எங்கணும் நீயே! அன்னை எங்களின் பொருளும் நீயே!
மங்களம் நல்கவல்ல மகிமையும் நீயே அம்மா!
பொங்கிய கீர்த்தி கொண்டு புவனமே காக்கும் அன்னாய்!
எங்ஙணும் உன்றன் தோற்றம் எங்களைக் காக்க தாயே!

எங்களை வாழ வைக்கும் எங்களின் அன்னை நீயே!
எங்களின் உயிரில் ஆத்மா என்றிடும் இறைவி நீயே!
பொங்கொளி பரப்பும் தாயே! புனிதமே கோபி கொண்ட 
மங்கல அன்னை நீயே! மலரடி பணிகின்றோமே!

உன்றன் உருவம் தன்னை ஒருவரும் உரைக்க ஒண்ணா
கண்ணரும் கொண்டாய் நீயே! கடுமையும் பகைவர்க் கென்றாய்!
எண்ணிலா தோற்றம் காட்டும் எம்மனை நீயே அம்மா!
தண்ணொளி அறத்தைச் சேர்க்கும் தாயுனை வணங்குகின்றோம்!

அகத்தினில் உறையும் அன்னாய்! அகத்தினில் ஒளிசேர்ப்பாயே!
இகத்தினில் உற்றோர் வஞ்சம் இதனையும் போக்கு தாயே!
அகத்தினில் சகலமான அருந்தனம் சேர்க்க அன்னாய்!
அகத்தினில் அரியின் நெஞ்சில் அமர்ந்தனை கமலச் செல்வி!

ஞனமே அருள்க தேவி! ஊனமில் அறத்தை நானும்
ஞானத்தால் அறியச் செய்க ஞானமே! பொருளை ஈவாய்
ஒளியினில் சிறந்த அன்னாய்! உன்னுடைய ஒளியே இந்த 
நிலவிய உலகம் காக்கும்! நீயதன் அரசியாவாய்!

வெற்றியும் வீரம் தானும் வேண்டிடும் அன்பர் எல்லாம் 
கொற்றவைபரையை லட்சுமி கொள்கையில் நிலையாய்க் கொண்டு
உற்ற இப்பாக்கள் தம்மை ஒருதினம் மூன்று வேளை
நற்றவ உணர்வில் கூறின் நாடிடும் இன்பம் தானே!

8.“மகாலட்சுமி துதி”- இடர்கள் நீங்க, செல்வம் அடைய- இந்திரன் பாடியது- தினமும் / வேண்டும் போது.

மனமொழி, மெய்யே கொண்டு மங்கல தேவியுன்னை
தினம்தினம் தொழுதேன் எங்கள் மகேஸ்வரி சிவையே பொற்றி!
வணங்கினோம் உலகமானாய்! வளர்தரு இறையை அன்பால்
வணாங்கினால் போதும் உன்றன் வள்ளன்மை காண்போர் தாயே!

எந்தவோர் தேவி இந்த இகபரம் அனைத்தும் ஆனாள்!
அந்தவோர் விஷ்னு மாயை அவளை நான் வணங்குகின்றேன்!
எந்தஓர் தேவி இந்தப் பஞ்சபூதங்கள் ஆனாள்
அந்தவோர் தேவி தன்னை அடிக்கடி வணங்குகின்றேன்!

அரவணை மீது என்றும் அறிதுயில் கொள்ளும் தேவி!
குரவமும் முல்லை கொஞ்சும் கோதையை வணங்குகின்றேன்!
இயங்குவ நிலைத்த வான எந்த ஓர் பொருளின் உள்ளும்
மயங்கிய தூக்கம் கொண்ட மாயையை வணங்குகின்றேன்!

எந்தஓர் பொருளின் உள்ளும் சூக்குமம் ஆன தேவி
அந்த எம் அன்னை தன்னை அனுதினம் வணங்குகின்றேன்!
எந்தஓர் பொருளும் ஆகி அந்த ஓர் உருவம் ஆன
சுந்தர தேவி தன்னை சூழ்ந்து நான் வணங்குகின்றேன்!

எவ்வகைப் பொருளின் சக்தி என்றனின் சக்தி என்னும்
உய்வகை சொல்லும் தேவி உண்மையை வணங்குகின்றேன்!
எவ்வகைப் பூதத்துள்ளும் காட்சியின் வடிவமான
செவ்விய தேவி தன்னைச் சேர்ந்து நான் தொழுகின்றேன்!

எந்த ஓர் தேவி எல்லாப் பொருள்களின் சாந்தி ரூபம்
அந்தஓர் தேவி தன்னை அனுதினம் தொழுகின்றேன்!
எந்த ஓர் தேவி எல்லாப் பொருள்கலின் இனமாய் ஆனாள்!
அந்த ஓர் தேவி தன்னை அடிக்கடி வணங்குகின்றோம்!

உயிர்க்குலம் அனைத்தினுக்கும் உயர்வருள் நாணம் என்னும்
அயர்விலாக்குணம் கொள்அன்னை ஆதியை வணங்குகின்றேன்!
எந்த ஓர் பொருளின் சாந்தி உருவம்தான் என்று சொல்லும்
அந்த ஒர் சக்தி அன்னை அடியினை பரவுகின்றேன்!

எந்த ஓர் உயிரின் உள்ளும் தலைமை கொள்தேவி தன்னை
விந்தைகள் விளைக்கும் தாயின் வடிவமே தொழுகின்றேனே!
உயிர்க்குலத் தொனியாய் ஆன உன்னதத் தாயை நான்
உயர்வுற வணங்குகின்றேன்! உரிமையாய் காக்க தேவி!

எந்த ஓர் பொருளின் உள்ளும் இலக்குமி வடிவம் கொண்ட 
எங்களின் தேவி தன்னை இனிமையால் வணங்குகின்றேன்!
எவ்வகை பொருள்களேனும் விருத்தியாய் விளங்கவல்ல 
செவ்விய அன்னை தன்னை சேர்ந்து நான் தொழுகின்றேனே!

மன்னிய உயிர்க் கெல்லாம் மறைவடிவான மங்கை
கண்ணியள் அன்னை தன்னைக் கவினுற வணங்குகின்றேன்!
எவ்வகைப் பொருளும் கொண்ட நல்லளியான எங்கள்
செவ்விய தேவி தன்னைச் சேர்ந்து நான் தொழுகின்றேனே!

உயிர்க்குலம் கொண்ட வீர வடிவமும் தானே ஆன
உயர்வுடைய அன்னை தன்னை ஒளிபெறப் பணிகின்றேனே!
உலகுயிர்க் குலங்கட்கெல்லாமுயர்வுடைத் தாயின் தோற்றம்
அலகிலா விளையாட்டென்றே அவளை நான் தொழுகின்றேனே!

உயிர்க்குலம் அனைத்தும்கொண்ட பயமுமாய் ஆனாள் அன்னை!
அயர்வெலாம் அகற்றவேண்டி அவளை நான் வணங்குகின்றேன்!
புலன்களும் நீயே தாயே! பூதமும் ஆனாய் தாயே!
நலந்தரும் அதிர்ஷ்டம் நீயே! எல்லாமும் நிறைந்த அன்னாய்!

கலன்களும் அணிகள் தந்து காப்பவள் என்றும் நீயே!
நலந்தரு மனையில் இன்பம் நல்குக! வணங்குகின்றேன்!
பலன்களின் வடிவமான பரவிய பராபரையே!
நலன்களைத் தருக தாயே! நலம்பெற வணங்குகின்றேன்!

சூர்ப்பகை அழிக்கும் தாயே! சுரர்களைக் காக்கும் அன்னாய்!
சுரார்களின் தலைவன் இந்திரன் சுரரொடும் தொழுகின்றேன்!
நலன்களைத் தருக தாயே! நாடியே வளமும் கொள்வாய்!
பொலங்குழைமனம்கொள்வாயே! போற்றினோம்போற்றி! போற்றி!

9.லட்சுமி”யின் அருள்கிட்ட- சங்கடங்கள் விலக, ஆதிசங்கரர் - செவ்வாய்க்கிழமை, வெள்ளிக் கிழமை

அம்மா புவனேஸ்வரி, உன்னை வணங்குகின்றேன். உன் பீடத்தை தினமும் ஜபிக்கின்றவர்களுக்கு உலகில் எல்லாம் நடக்கும். உன்னிடம் முறையிடமலேயே உன்னை வணங்கும் பக்தர்களின் நியாமான தேவைகளைப் பூர்த்தி செய்யும் அன்னையே, மலர் மாலைகளாலும் கீரீடத்தாலும் அலங்கரிக்கப்பட்ட அழகு அம்பிகையே, மதம் கொள்ளக்கூடிய யாணைகளும் துதிக்கும் அன்னையே, தங்கம், இரத்தினம் போன்ற செல்வங்களுக்கு அதிபதியே, மகாலட்சுமியே, பெருமை மிக்கவளே, உனனை வணங்குகின்றேன். எனக்கு அருள் புரிவாயாக!

10.“லக்ஷ்மிதுதி”- சர்வமங்களம், 16பேறுகளும் கிட்ட- வெள்ளிக் கிழமை

oபரப்பிரம்ம சொரூபிணியான ஆதிலட்சுமியே உனக்கு நமஸ்காரம். புகழைக் கொடு, தனத்தைக் கொடு, அனைத்து அத்யாவசிய விருப்பங்களையும் அளிப்பாயாக.

oசந்ததி சிறந்திட சந்தான பாக்யம் அளித்திடும் சந்தான லட்சுமியே வணக்கம். எனக்கும் அந்தப் பேற்றினைக் கொடு. செல்வத்தைக் கொடு. நியாமான எல்லா தேவைகளையும் நிறைவேற்று.

oபிரம்ம வித்யா தேவியின் வடிவினளான வித்யா லட்சுமியே உனக்கு நமஸ்காரம். வித்தையைக் கொடு. கலைதனைக் கொடு. எல்லா நல்ல இஷ்டங்களையும் நிறைவேற்று.

oஅனைத்து வறுமைகளையும் நசிக்கச் செய்யும் தனலட்சுமியே உனக்கு நமஸ்காரம். நீங்காத செல்வத்தைக் கொடு, அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்.

oஎல்லா விதமான உயர்ந்த ஆபரணங்களையும் அணிந்து பிரகாசத்தோடு விளங்கும் தான்யலட்சுமியே உனக்கு நமஸ்காரம். புத்திக் கூர்மையைக் கொடு. வற்றாத செல்வத்தைக் கொடு. எனது எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்று.

oகலியின் கொடுமைகளை அழிக்கும் மேதாலட்சுமியே உனக்கு நமஸ்காரம். அறிவாற்றலான மேதைத்தனத்தை அளி. நிறைவான செல்வத்தைக் கொடு. சகல கலைஞானங்களையும் என் தேவையறிந்து கொடு.

oஅனைத்து தேவர்களின் அம்சங்களை கொண்ட கஜலட்சுமியே உனக்கு நமஸ்காரம். குதிரைகளும், பசுக்களும் நிரம்பிய கோகுலத்தைக் கொடு. எனது எல்ல நல்ல எண்ணங்களையும் நிறைவேற்று.

oஎல்லாச் செயல்களிலும் வெற்றியைத்தரும் வீரலட்சுமியே உனக்கு வணக்கம். தைரியத்தையும் பலத்தையும் கொடு. எல்லா நல்விருப்பங்களும் ஈடேற அருள்புரி.

oபராசக்தி வடிவினளான ஜயலட்சுமியே உனக்கு நமஸ்காரம். அனைத்திலும் எனக்கு வெற்றியைக் கொடு. சர்வமங்களங்களையும் அளித்திடு. சகல வேண்டுதல்களையும் ஈடேற்றிடு.

oஉனது கருணை மனதால் சௌமாங்கல்யத்தை அளித்திடும் பாக்யலட்சுமியே உனக்கு நமஸ்காரம். நல்பாக்யத்தைக் கொடு. வற்றாத செல்வமும் சகல நலமும் வளமும் அளித்திடு.

oமகாவிஷ்னுவின் மார்பில் உறையும் கீர்த்தி லட்சுமியே உனக்கு நமஸ்காரம். மங்காத புகழினைக் கொடு. நிறைவான செல்வத்தைக் கொடு. உன் விருப்பப்படி எனக்கு எல்லா நன்மைகளையும் அளித்திடு.

oஎல்லாப் பிணிகளையும் தீர்க்கும் ஆரோக்ய லட்சுமியே உனக்கு நமஸ்காரம். நீண்ட ஆயுளைக்கொடு. வற்றாத செல்வத்தைக் கொடு. நான் விரும்பும் வரமாக அனைத்தையும் அனுபவிக்கும்படியான ஆயுளும் ஆரோக்கியமும் எனக்குக் கொடு.

oசர்வ சித்திகளையும் அளிக்கவல்ல சித்திலட்சுமியே உனக்கு நமஸ்காரம். என் எல்லாச் செயல்களிலும் சித்தியினை அளித்திடு. குன்றாத வளமையைக் கொடு, எனக்கு விருப்பமானதும் நன்மை பயப்பதுமான பலன்களைக்கொடு.

oஅழகு மிளிரும் சௌந்தர்யலட்சுமியே. எழிலான ஆபரணங்களை அணிந்து மேலும் ஜொலிக்கும் உனக்கு வணக்கம். அழகான உருவத்தைக் கொடு. வற்றாத செல்வத்தைக்கொடு. என்மனம் போல் யாவற்றையும் குறைவின்றிக் கொடு.

oபுத்தியும் முக்தியும் அளிக்கக்கூடிய சாம்ராஜ்ய லட்சுமியே உனக்கு நமஸ்காரம். முக்தியைக்கொடு. வற்றாத செல்வத்தைக் கொடு. எனக்குத்தேவையான புத்தியையும் சகல விருப்பங்களையும் அளித்திடு.

oமாங்கல்யத்தின் மூலம் மங்களத்தை வழங்கும் மங்களையே மங்களாம்பிகையே எக்காலமும் மங்களத்தை அளிக்கும் மாங்கல்ய வளத்தை எனக்குக்கொடு.

oஅனைத்து மங்களங்களையும், மாங்கல்யத்தையும், ஆரோக்கியம், ஆயுள் உள்ளிட்ட எல்லா நலன்களையும் எல்லா செல்வங்களையும் அளிக்கக்கூடியவளே. த்ரயம்பகியே, நாராயணியே உன்னைச் சரணடைகிறேன்.

o கல்யாணியே சுபம் கிடைக்க அருள்க. ஆயுள், ஆரோக்யம், செல்வமும் அருள்வயாக. என் எதிரிகளையும் பிணிகளையும் நசிக்கச் செய்திடுக. தீபஜோதியான திருவிளக்கே, தீபலட்சுமியே உனக்கு நமஸ்காரம்.

11.“லட்சுமி”-வேண்டுவன எல்லாம் கிட்ட- வெள்ளிக் கிழமை- மற்றும் வரலட்சுமி விரத நாளன்று

எல்லாவகை மங்களங்களையும் அருள்பவளே! மகாலட்சுமியே நமஸ்காரம். வெறும் வார்த்தைகளால் அளந்துவிடமுடியாத எல்லையற்ற கருணை கொண்டவளே! நமஸ்காரம். என்றென்றும் ஆனந்தம் அளிப்பவளே! நமஸ்காரம். வேதங்களை அழகு செய்யும் மந்தாரப் பூமாலை போன்றவளே! நமஸ்காரம். ஸ்ரீமத் நாராயணனின் ஐஸ்வர்யமாக துலங்குபவளே! நமஸ்காரம். உலக மக்களுக்கு காமதேனுவைப் போல் வேண்டிய வரங்களை எல்லாம் தந்தருள்பவளே! மகாலட்சுமியே உனக்கு நமஸ்காரம்.

12.“திருமகள்” பாற்கடலில் தோன்றியபோது- அட்சய திருதியையன்று திருமால் கூறியது -வெள்ளி மற்றும் அட்சய திருதியையன்று.

oசிலந்திப்பூச்சியின் வாயிலிருந்து நுண்ணிய நூல் பெருக்கெடுப்பது போலவும், செந்தீயிலிருந்து நெருப்புப் பொறிகள் மேல் நோக்கி எழுவது போலவும், சகல உலகங்களையும் தன்னிச்சைப்படி தன் அருளால் தடையின்றி தோற்றுவிக்கும் உலகிற்கே தாயான மங்களகரமான அந்த தேவியின் இனையடிகளைப் போற்றுகிறேன்!

oதான் தோற்றுவித்த உலகங்கள் சற்றும் பிறழாத தாள கதியில் சீராக இயங்கிட தன் மாயா சக்தியை அவற்றினூடே செலுத்தி, அந்த அண்டங்களுக்கோர் சக்தியாய் தலைவியாய் விளங்குபவளின் தாள் போற்றி!

oஅஞ்ஞானத்தினால் மீண்டும் மீண்டும் பிறந்து உழன்று வினைப் பயனால் அல்லல் படுவோர்க்கும் பிறவிப்பிணியை அகற்றிடும் பெரும் ஞான ஒளியாக விளங்கும் அன்னையின் பத்ம பாதங்களைப் போற்றுகிறேன்!

o மங்களங்கள் யாவுக்கும் இருப்பிடமான வித்தகத் திரு என்றும்
சர்வ சக்தியென்றும் போற்றப்படும் அந்த தேவியை துன்பங்களிலிருந்து விடுபடவும் உய்வு பெறவும் போற்றுகிறேன்!

oஅன்னையே போற்றி! உலக உயிர்களின் துயரை அழிப்பாய் போற்றி! எங்களை இடர்களிலிருந்து காப்பாற்றும் தாயே போற்றி! இருளகற்றி அன்பை உணர்வுறச் செய்வாய் போற்றி! பாவத்தால் பிறவி எங்களை அழுத்துகிறது. அந்த பாவச் சுமையிலிருந்து எங்களை விடுவிப்பாய் அம்மா! உன்னருள் என்னும் இன்பத்தை நல்லோர்க்கு அளிக்கக் கூடியவளே போற்றி! ஒளி மலர்க் கண்ணாளே போற்றி!

oஆயிரம் தாமரை இதழில் அமர்ந்தவளே! கருஞ்சிவப்புநிற ஆடையை விரும்பி அணிபவளே! தண்ணென்ற சரத்கால நிலவின் ஒளியினாளே! திருமங்கையே, நின் பாதங்கள் போற்றி!

oதன்னிகரில்லாத பிரகாசமான ஒளிபொருந்தியவள்! கடைக்கண் நோக்கினால் சகலருக்கும் அருள் மழை பொழிபவள்! செந்தழல் போல் மாசுமறுவற்ற பொன்னொளி வடிவினள்! அப்படிப்பட்ட தேவியின் திருத்தாள் போற்றி!

oதூய்மையான ரத்ன மாலையினைப் பூண்டவளும், மஞ்சள் பட்டு உடுத்துபவளும், பணிவோடு சிறிது அளித்தாலும், பலகோடி மடங்கு தனத்தினையளிப்பவளும், என்றும் இனிமையாகவும் இளையவளானவளும், மங்களங்களை எல்லாம் வாரி வழங்குபவளாகவும் விளங்கும் செல்வத்திருவே போற்றி! போற்றி!

13.“லட்சுமி”-செல்வவளம் கொழிக்க, பரந்த மனப்பான்மை பெருக-ஆதிசங்கரர் அருளியது-அட்சயதிருதயை அன்று

மழை கொண்ட மேகங்களை காற்றுதான் நகர்த்திக் கொண்டு வந்து பூமியில் தேவையான இடத்தில் மழை பெய்ய உதவுகிறது. திருமகளின் கண்கள், நீருண்ட மேகம், அம்பாளின் கருணை, அனுகூலக்காற்று. இந்த அனுகூலக்காற்று, கருமேகத்தை தேவையான இடத்தில் பொருள்மழை பெய்விக்க அழைத்துச் செல்கிறது. அம்பிகையின் கருணைமிகுந்த தன் கடைக்கண் பார்வை இந்த ஏழையின் மீது விழவேண்டும். என் துன்பத்தை நீக்கி, பொருள்மழை பொழிவித்து அருள வேண்டும்.

14.“மகாலக்ஷ்மி துதி”- தனம், தான்யம், சந்தானம், ஆரோக்யம், கல்வி, செல்வம், கலை எல்லாம் பெற- தினமும் / நவராத்திரி போது.

oமுத்துநகை ரத்தினங்கள் மூக்குத்தி பில்லாக்கு
சத்தமிடும் கங்கணங்கள் சங்கீத மெட்டியுடன்
சித்திரை நிலவு முகம் சிங்காரப் புன்சிரிப்பு
பத்தரைப் பசும்பொன்னே பவனிவரும் இலக்குமியே!

oபாற்கடலில் உதித்தவளே! பவள நிறத்தவளே!
சீர்மேவும் சித்திரமே! சிங்கார நல்முத்தே!
கார்மேகக் கருணைமனம் கைகளோ வள்ளன்மை
பார்வையிலே பலனுண்டு பைங்கிளியே இலக்குமியே!

oசெல்வச் சிறப்புடனே சீர்மை வளத்துடனே
வல்லச் சுவையுடனே வெற்றி தருபவளே!
அள்ளக் குறையாத அறமோடு பொருளீந்து
உள்ளக் களிப்பினிலே ஒன்றிடுவாய் இலக்குமியே!

15.“மகாலக்ஷ்மி துதி”- ஆதிசங்கரரின் கனகதாரா- குணங்கள் மேன்மையுற, செல்வங்கள் அடைய, அறிவு வளர- தினமும்/ வெள்ளிக்கிழமை.
மணம்வீசும் முகுள மலர்களைத் தங்கநிற வண்டுகள்
மொய்ப்பது போல மகாவிஷ்ணுவின் மார்பிலே தங்க 
மங்கையான மகாலட்சுமியின் பார்வை உறைகின்றது. 
அதனால் பரந்தாமன் ஆனந்தத்தில் திளைக்கிறார்.

பொன்மகளே, அத்தனை மகிமை வாய்ந்த உன் 
கடைக்கண் பார்வையை இந்தப் பக்கம் 
திருப்பி, சகல சௌபாக்கியங்களையும் தருவாயாக.
உன்னை வேண்டுபவருக்கு அருள் புரிவாயாக.

தங்கக்கரத்தில் தாமரைப்பூவை வைத்திருப்பவளே போற்றி. 
உலகங்களின் நாயகியான என்தாயே போற்றி.தேவர்கள், 
கலைஞர்களுக்கும் கருணைகாட்டும்தெய்வமே போற்றி. 
திருமாலின் மகிமையால் எல்ல சக்தியையும் பெற்றவளே போற்றி.

கருணை என்னும் காற்று நிறைந்த 
லக்ஷ்மி கடாக்ஷம் என்னும் மேகம், 
ஏழையான இந்த சாதகப் பறவையிடம்
தாபத்தை அகற்றி தனம் எனும் மழையைத் தரட்டும்.

பூஜிக்கத்தக்கவளே உனக்கு செய்யும் நமஸ்காரம்
செல்வத்தை அளிக்கும். மகிழ்ச்சியைத் தரும்.
சாம்ராஜ்யத்தைக் கொடுக்கும். பாவங்களைப் போக்கும்
எனவே எப்போதும் உன்னை நமஸ்கரிக்க அருள் புரிவாயாக.

தாமரையில் அமர்ந்திருப்பவளே, கையில் தாமரை 
வைத்திருப்பவளே, பட்டு ஆடை, சந்தனம், பூக்கள் 
அணிந்தவளே, பகவதியே, ஹரிபத்தினியே, அழகியே, 
எல்லோருக்கும் செல்வத்தைவாரி வழங்கி அருள் புரிவாயாக.

16.“அஷ்டலக்ஷ்மி துதி”- தனம், தான்யம், சந்தானம், ஆரோக்யம், கல்வி, செல்வம், கலை எல்லாம் பெற- தினமும் / நவராத்திரி போது.

“ஆதிலக்ஷ்மி”

o நின்மேலுமாணை!நின்மகன்மேளுமாணை!நின்மாகொழுநன்
தன்மேலுமாணை! தமிழ்மேழும் ஆணை! தலமாவணிகச்
சின்னஞ்சிறுவர் தெரியாத காளையர் என்செயினும்
பின்னும் பொறுத்திருப்பாயே பெரிய இலக்குமியே!

o உன்னைத் தொழுதேன், உயிர்க்குப் புகலுதவும்
பொன்னே! முதல் திருவே! பூவிருக்கும்-அன்னே! 
எனதுள்ளம் என்றும் இனிப்பே அடையக்
கனிவுனது கண்மலராற் காட்டு,

“தான்யலக்ஷ்மி”

o புல்லை விதையாக்கிப் பூமியிலே நட்டாலும்
நெல்லாக மாற்றும் நிறைவுடையாய்! 
கல்லெல்லாம் ஆக்கிப் புசிக்கும் அருமை
உணவாக வாய்க்கத் தருவாய் வரம்!

o இருக்கும் இடமெங்கும் இன்கனியும் பூவும்
பெருக்கி மகிழ்வுதவும் பெண்ணே!
பருக்கரும்பை ஏந்தும் திருமகளே! எங்கள்
கழனியெல்லாம் சேர்ந்து வளங்கொழிக்கச் செய்!

“வீரலக்ஷ்மி”

o பஞ்சான கையால் படைக்கருவி ஏந்தாமல்
எஞ்ஞான்றும் வெல்லும் இயல்புடையாய்!
அஞ்சாமல் நேர்மைப் படையால் நெருங்க
பகைவெல்லும் கூர்மை எமக்குக் கொடு!

o தரமுயர்ந்த வீரம் தருக்கர்களை வாட்டக்
கரமருவும் போர்க்கருவி காட்டி- வரமளிக்க
வாகை புனைத்திலங்கம் வஞ்சிநீ எம்மனையிற் 
சேர்க எனப் பணிந்தோம் சேர்ந்து

“கஜலக்ஷ்மி”

o ஆனை இருபுறமும் அள்ளிச் சொரிபுனல்போல்
தானம் கொடுக்கும் தவப்பயனே! ஈனமெனும்
இந்தப் பிறவி இனிமேலே போயொழியத்
துந்திக்கை தாராய் துணை!

o துலங்கு பொற்கும்பத் துதிக்கையால் ஆனை
நலங்கெழுநீர் ஆட்ட நயந்த -இலங்கிழையே!
கையேந்தி உன்பாற் கசிந்து தொழுகின்றோம்
செய்யவளே சீரெமக்குச் செய்!

“சந்தானலக்ஷ்மி”

o கள்ளூறும் வாயால் கனிமழலை பேசுகிற
பிள்ளை வரமருளும் பேரன்பே! எல்லாரும்
நல்லவரைப் பெற்றிடவும் நாடு சிறந்திடவும்
வல்லவளே! ஈவாய் வரம்!

“வித்யாலக்ஷ்மி”

o நீங்காது நின்மகளும் நீண்டதிருமாலும்
பாங்காக அன்றுவந்த பாற்கடல்போல்-தேங்காமல்
நன்றாக நீயிருந்து நாளும் வளம்பெருக்கி
என்றைக்கும் நீங்காதிரு!

o நினைத்துத் தொழுதெழுந்தோம் நேயத்திருமால்
மனைக்கு விளக்கே! மலரால் உனக்கடிமை
செய் ஆனை போலுயர்த்து சீர்கொண்டு
இலங்கவே தையல் நீ ஈவாய் வரம்!

“தனலக்ஷ்மி”

o காடுவெட்டிப் போட்டு கடியநிலந்திருத்தி
வீடுகட்டிக் கொண்டிருக்கும் வேள்வணிகர் 
வீடுகட்கு அன்றைக்கு வந்த எங்கள் அம்மா!
இலக்குமியே! என்றைக்கும் நீங்காதிரு!

o செய்ய திருமேனி செம்பொன் அணிசெறியக்
கையிருக்கும் தம்பலத்துக் காரிகையே!
வையகத்தில் என்றும்பொன் மாரியினால்
இன்பம்பெருகிவர என்றென்றும் எம்பால் இரு!

17. “108 லட்சுமி போற்றி”

o ஓம் மஹாலட்சுமியே போற்றி
ஓம் தீபலட்சுமியே போற்றி
ஓம் ஆதிலட்சுமியே போற்றி
ஓம் தான்யலட்சுமியே போற்றி
ஓம் தைர்யலட்சுமியே போற்றி
ஓம் சந்தானலட்சுமியே போற்றி

o ஓம் விஜயலட்சுமியே போற்றி
ஓம் வித்யாலட்சுமியே போற்றி
ஓம் தனலட்சுமியே போற்றி
ஓம் கஜலட்சுமியே போற்றி
ஓம் சுபலட்சுமியே போற்றி
ஓம் சுப்புலட்சுமியே போற்றி

o ஓம் இராஜலட்சுமியே போற்றி
ஓம் கிருஹலட்சுமியே போற்றி
ஓம் சீதாலட்சுமியே போற்றி
ஓம் அமிர்தலட்சுமியே போற்றி
ஓம் குணலட்சுமியே போற்றி
ஓம் அன்னலட்சுமியே போற்றி

o ஓம் ஆத்மலட்சுமியே போற்றி
ஓம் பத்மலட்சுமியே போற்றி
ஓம் ஐஸ்வரியலட்சுமியே போற்றி
ஓம் இச்சாலட்சுமியே போற்றி
ஓம் கிரியாலட்சுமியே போற்றி
ஓம் ஞானலட்சுமியே போற்றி

o ஓம் ஜோதிலட்சுமியே போற்றி
ஓம் சௌபாக்யலட்சுமியே போற்றி
ஓம் அலங்காரலட்சுமியே போற்றி
ஓம் ஆனந்தலட்சுமியே போற்றி
ஓம் மோட்சலட்சுமியே போற்றி
ஓம் மோனலட்சுமியே போற்றி

o ஓம் மோகலட்சுமியே போற்றி
ஓம் நாகலட்சுமியே போற்றி
ஓம் அபயலட்சுமியே போற்றி
ஓம் மங்களலட்சுமியே போற்றி
ஓம் பங்கஜலட்சுமியே போற்றி
ஓம் அம்புஜலட்சுமியே போற்றி

o ஓம் லோகலட்சுமியே போற்றி
ஓம் யோகலட்சுமியே போற்றி
ஓம் சுவர்க்கலட்சுமியே போற்றி
ஓம் மதுரலட்சுமியே போற்றி
ஓம் ஜீவலட்சுமியே போற்றி
ஓம் மீனலட்சுமியே போற்றி

o ஓம் மரகதலட்சுமியே போற்றி
ஓம் தீனலட்சுமியே போற்றி
ஓம் திரிபுரலட்சுமியே போற்றி
ஓம் புவனலட்சுமியே போற்றி
ஓம் சுகுனலட்சுமியே போற்றி
ஓம் சுந்தரலட்சுமியே போற்றி

o ஓம் சுகானந்தலட்சுமியே போற்றி
ஓம் கீதாலட்சுமியே போற்றி
ஓம் சண்பகலட்சுமியே போற்றி
ஓம் துளசிலட்சுமியே போற்றி
ஓம் புண்யலட்சுமியே போற்றி
ஓம் திலகலட்சுமியே போற்றி

o ஓம் கனகலட்சுமியே போற்றி
ஓம் சுகந்தலட்சுமியே போற்றி
ஓம் கற்பகலட்சுமியே போற்றி
ஓம் கன்யாலட்சுமியே போற்றி
ஓம் தர்மலட்சுமியே போற்றி
ஓம் சொரூபலட்சுமியே போற்றி

o ஓம் அஷ்டலட்சுமியே போற்றி
ஓம் நித்யலட்சுமியே போற்றி
ஓம் ஜெகலட்சுமியே போற்றி
ஓம் மாயாலட்சுமியே போற்றி
ஓம் மஞ்சுளாலட்சுமியே போற்றி
ஓம் சியாமளாலட்சுமியே போற்றி

o ஓம் பிரியலட்சுமியே போற்றி
ஓம் வேதலட்சுமியே போற்றி
ஓம் அனந்தலட்சுமியே போற்றி
ஓம் மந்த்ரலட்சுமியே போற்றி
ஓம் புஷ்பலட்சுமியே போற்றி
ஓம் புனிதலட்சுமியே போற்றி

o ஓம் கல்யாணிலட்சுமியே போற்றி
ஓம் குங்குமலட்சுமியே போற்றி
ஓம் கோமளலட்சுமியே போற்றி
ஓம் சந்த்ரலட்சுமியே போற்றி
ஓம் சத்யலட்சுமியே போற்றி
ஓம் ரெங்கலட்சுமியே போற்றி

o ஓம் வெங்கடலட்சுமியே போற்றி
ஓம் சங்குலட்சுமியே போற்றி
ஓம் சக்ரலட்சுமியே போற்றி
ஓம் பிரபஞ்சலட்சுமியே போற்றி
ஓம் ரூபலட்சுமியே போற்றி
ஓம் மகரலட்சுமியே போற்றி

o ஓம் ஹம்சலட்சுமியே போற்றி
ஓம் வில்வலட்சுமியே போற்றி
ஓம் கௌரிலட்சுமியே போற்றி
ஓம் சாந்தலட்சுமியே போற்றி
ஓம் அட்சதலட்சுமியே போற்றி
ஓம் கிரிஜாலட்சுமியே போற்றி

o ஓம் பாக்யலட்சுமியே போற்றி
ஓம் சித்தலட்சுமியே போற்றி
ஓம் கிருபாலட்சுமியே போற்றி
ஓம் காமலட்சுமியே போற்றி
ஓம் இஷ்டலட்சுமியே போற்றி
ஓம் வசந்தலட்சுமியே போற்றி

o ஓம் வைராக்யலட்சுமியே போற்றி
ஓம் பூரணாலட்சுமியே போற்றி
ஓம் தூபலட்சுமியே போற்றி
ஓம் அனுக்கிரஹலட்சுமியே போற்றி
ஓம் மயூரலட்சுமியே போற்றி
ஓம் சோபாலட்சுமியே போற்றி

o ஓம் ப்ருத்விலட்சுமியே போற்றி
ஓம் தயாலட்சுமியே போற்றி
ஓம் சௌந்தரலட்சுமியே போற்றி
ஓம் அங்கலட்சுமியே போற்றி
ஓம் சுபலட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீதேவி லட்சுமியே போற்றி

மகாலக்ஷ்மி காயத்திரி செல்வம்நிலைக்க தினமும் 108முறை

ஓம் மஹா லக்ஷ்ம்யை ச வித்மஹே
விஷ்ணு பத்ந்யை ச தீமஹி
தந்நோ லட்சுமி ப்பிரசோயாத்

“ஸ்ரீமங்களாஷ்டகம்”:--

மங்களங்கள் பெருக- மனக் குறைவின்றி- பாவங்களிலிருந்து விலகி- நீண்ட ஆயுள்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.

oபிரம்மனே! மஹாவிஷ்னுவே! பரமேஸ்வரனே! இந்திரனே! அக்னியே! யமனே! நிருதியே! வருணனே! வாயுவே! குபேரனே! முருகனே! கணபதியே! சூரியனே! சந்திரனே! ருத்திரர்களே! விச்வ தேவர்களே! ஆதித்யர்களே! அச்வினி தேவர்களே! சாத்தியர்களே! வஸுக்களே! பித்ருக்களே! சித்தர்களே! வித்யாதரர்களே! யஷர்களே! கந்தர்வர்களே! கின்னரர்களே! மருத்துக்களே! மற்றும் ஆகயத்தில் சஞ்சரிக்கும் அனைத்து தேவர்களே! உங்கள் அனைவரையும் வணங்குகின்றேன். எனக்கு என்றும் மங்களம் அருளுங்கள்.

oசரஸ்வதி, மகாலட்சுமி, பூமிதேவி, பார்வதி, சண்டிகை, பத்ரகாளி, பிராஹ்மி முதலிய மாத்ரு கணங்கள், தட்சனின் மகள்களான அதிதி, திதி, சதி, முதலியோர், சாவித்ரி, கங்கை, யமுனை, அருந்ததி, தேவர்களின் மனைவிகள், இந்திராணி முதலிய தேவலோகப் பெண்களும் விண்ணில் சஞ்சரிக்கும் தேவமாந்தரும் எனக்கு நீங்காத மங்களத்தை அளிக்கட்டும்.

oமத்ஸ்யமூர்த்தி, கூர்மமூர்த்தி, வராஹமூர்த்தி, நரசிம்மப் பெருமாள், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், கபிலர், நரநாராயண மூர்த்தி, தத்தாத்ரேயர், பிருகு மற்றும் நரகாசுரனை வதம் செய்த மகா விஷ்ணுவின் மற்ற எல்ல அவதாரங்களும், சுதர்ஸ்ன சக்கரம் முதலிய ஆயுதங்களும், அவதாரம் செய்த மூர்த்திகளின் மனைவிகளும், அவர்களின் புத்திரர்களும், விஷ்னுவின் எல்ல அம்சா அவதாரங்களும் எனக்கு தீராத மங்களத்தை அளிக்கட்டும்.

oவிஸ்வாமித்திரர், வசிஷ்டர், அகஸ்தியர், உசத்யர், ஆங்கீரஸ், காச்யபர், வியாசர், கண்வர், மரீசு, கிரது, பிருகு, புலஹர், சௌனகர், அத்ரி, புலஸ்தியர் முதலான மஹரிஷிகளும் மற்றும் பல முனிவர்களும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கிரகங்களும், அஸ்வனி முதல் ரேவதி வரியிலான நட்சத்திரங்களும், நம் பிரஜாபதிகளும் நாகராஜன் முதலிய சர்ப்பக் கூட்டங்களும், மனுக்களும் எனக்கு வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.

oமநு புத்ரிகளான ஆகூதி, தேவஹூதி, ப்ரஸீதி ஆகிய மூவரும், எல்லா முனிவர்களின் பத்தினிகளும், மனுக்களின் பத்தினிகளும், சீதை, குந்திதேவி, பாஞ்சாலி, நளன் மனைவி தமயந்தி, ருக்குமணி, சத்யபாமா, தேவகி மற்றுமுள்ள அரசர்களின் மனைவியர், கோபிகைகள், பதி விரதைகள், நற்குலப்பெண்மணிகள் யாவரும் எனக்கு எல்லாவித மங்களத்தையும் கொடுக்கட்டும்.

oகருடன், அனந்தன், ஹனுமான், மஹாபலி, சனகர் முதலான யோகிகளும், சுகர், நாரதர், பிரகலாதன், பாண்டவர்கள், ந்ருகன், நளன், நஹூஷன், அரிச்சந்திரன், ருக்மாங்கதன் முதலிய விஷ்னு பக்தர்களும் மற்றும் சூரிய, சந்திர குலத்தில் உதித்த உத்தமர்களும், அரசர்களும் எனக்கு வளமான மங்கலத்தை உண்டாக்கட்டும்.

oஅந்தணர்கள், பசுக்கள், வேதங்கள், ஸ்ம்ருதிகள், துளசி, கங்கை, முதலி8ய சர்வ தீர்த்தங்கள், சகல வித்யைகள், பலவிதசாஸ்திரங்கள், இதிஹாசங்கள், சகல புராணங்கள், வர்ணங்கள், ஆச்ரமங்கள், சாங்கியம், யோகங்கள், யம நியமங்கள், எல்லா கர்மங்கள், காலங்கள், சத்யம் முதலான அனைத்து தர்மங்களும் எனக்கு போதிய மங்களத்தை அளிக்கட்டும்.

oசகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான நன்மைதரும் எல்லாமரங்கள், எட்டு திக்கு யானைகள், மேகங்கள், சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள், பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள், ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள், செடிகள், கொடிகள் எனக்கு நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.

குருஸ்ரீ பகோராயின் சந்தோஷப்பூக்களின் இதழ்களில் சில......

o நதியில் ஓரிடத்தில் நாம் நின்றால் நம்மை கடந்து நீர் சென்று கொண்டேயிருக்கும். நாம் நிற்க ஆரம்பித்தபோது இருந்த நீர் மீண்டும் கண்களுக்கோ, கைக்கோ வரா! பார்த்த நீரை எடுத்தால் அது அப்போதைய நீர், அவ்வளவுதான்.

oஅதை கீழேவிட்டால் மீண்டும் அதே நீர் கிடைக்காது. நதியின் போக்கில்வேறு நீர் கிடைக்கும். சென்ற நிமிடத்தில் எங்கோ ஓர் இலை உதிர்ந்திருக்கும், ஓர் விதை முளைத்திருக்கும், ஓர் பூ பூத்திருக்கும் அதை இந்த நிமிடத்தில் உணர இயலாது. கடந்தது கடந்ததுதான். இதுவே வாழ்வில் உணரவேண்டியது.

oமுதுமையும் வருவதற்குள் ஒர் உடலில் எத்தனை சாவுகள்! குழந்தைப்பருவம், வாலிபப்பருவம், நடுவயது பருவம், என நம் வாழ்க்கைப்பயணத்தில் நாம் இறந்து கொண்டுதான் இருக்கின்றோம்.

oஅழகாக இருக்கின்ற பொருளை நீங்கள் விரும்புகின்றீர்கள் என்பதல்ல, நீங்கள் விருப்புகின்ற பொருள் உங்களுக்கு அழகாய் இருக்கின்றது-

oஉங்கள் வாழ்வு சிறக்க உங்களுக்கு வேண்டியதை இந்த உலகிலிருந்து நீங்கள்தான் உங்கள் தேவைக்கேற்ப எடுத்து கலந்து கலவையாக்கி உபயோகிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் “உங்கள் எண்ணம், செயல்பாடுகள் அடங்கிய வாழ்க்கைப் பாதையின் வெற்றி இரகசியம்.”

oஉண்மை என்னவென்றால் தவறு செய்தவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும் இடம் இந்த புவிதான்
 “சந்தோஷப்பூக்களை நுகர்ந்து வாழ்வியல் பயன் பெறுங்கள்”

செவ்வாய்க்கிழமை, 13 August 2013 00:00

பெருமாள்

                ஓம்நமோநாராயணாயஓம்

விஷ்ணு- அழிக்கும் கடவுள்
பெருமாள்- வைணவ நெறிகளின் தலைவன்
வேறுபெயர்கள்- மகாவிஷ்ணு, பரமாத்மா, வேணுகோபாலன், ஸ்ரீராமபிரான், ஸ்ரீஅரங்கநாதர், வேங்கடவன், கோவிந்தராஜன், வெங்கடேசப் பெருமாள், சீனிவாசன்

உகந்த நாட்கள்- புதன் மற்றும் சனிக்கிழமை சிறப்பு. எந்நாளும் வழிபடலாம்.

உகந்த மலர்கள்- தாமரை, மருக்கொழுந்து, பவளமல்லி, துளசி சிறப்பு.
விழாநாட்கள்- மாசிமகம் தீர்த்தவாரி- பாற்கடலில் தோன்றிய பார்கவியை பரந்தாமன் மணந்ததால், தன் மாமனார் கடலரசனை கண்டு நீராடும் நாளாகும்.
புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரதன்று வாமன அவதாரம். புரட்டாசி துவிதியை திதியன்று பலராமன் அவதாரம், புரட்டாசி மூல நட்சத்திரத்தில் சரஸ்வதி தேவி அவதாரம். சூரியன் கன்யாராசியில் பிரவேசிப்பதால் இம்மாதம் கன்யா மாதம் எனப்படும். புரட்டாசி சனியன்று சனீஸ்வரன் அவதாரம். புரட்டாசி பௌர்ணமியில் சிவன் திரிபுரம் எரித்தார். திருப்பதியில் புரட்டாசிமாத அம்மாவாசைக்குப்பின் மகா நவராத்திரி பிரமோற்சவத்தை பிரம்ம தேவன் முன்னின்று நடத்தி வழிபடுகிறார் என்கின்றது புராணங்கள்.
வணங்கும்முறை- கோவிலுக்கு வெளியில் உள்ள சிறிய திருவடியை-அனுமானை வணங்கவும். பிராதனக் கோவிலின் முன்பகுதியில் உள்ள கொடிமரத்தை சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கவும். ஆழ்வார்கள், ஆச்சாரியர்களை வணங்கவும். எல்லா சன்னதிகளிலும் அனுக்கிரகம் பெற்று தாயார் சன்னதிக்கு வெளியில் உள்ள துவார பாலகிகளைச் சேவித்து அனுமதியுடன் தாயார், ஆண்டாள் ஆகியோருக்கு அர்ச்சனை செய்து அல்லது வணங்கி மூலவரான பெருமாளின் எதிரில் உள்ள கருடாழ்வார் துவாரக பாலகர்களை வணங்கி அவர்களின் அனுமதியுடன் மூலவரான பெருமாளைத் தரிசிக்கவும். 
இறைவனுக்கு நெய்வேத்தியம் என்பது சர்வ வல்லமை படைத்த இறைவனுக்குச் சொந்தமானதை அவருக்குத் தந்து அதையே நாம் அவரின் அருளாசியுடன் பிரசாதமாக பெற்று புனித உணர்வுடன் உட்கொள்கிறோம் என்பதாகும். நெய்வேத்தியப் பொருட்களை அர்ச்சகரிடம் கொடுக்கவும். நின்ற, இருந்த, கிடந்த ஆகிய எந்த கோலத்தில் இருந்தாலும் பாதத்திலிருந்து சேவித்து முகத் தரிசனம் செய்யவும். அர்ச்சகர் தீப ஆரதனைக் காட்ட கண்களை மூடாமல் இறைவனைப் பார்த்து வணங்கவும். அர்ச்சனை ஆரத்தி முடிந்தபின் துளசி, தீர்த்தம் பெற்று வரவும். அருள் நிறைந்துள்ள பெருமாள் 
கோவிலில் ஒரு பகுதியில் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்து துதிகள் அல்லது நாமங்களைச் சொல்லிக் கொண்டிருந்துவிட்டு எழுந்து வரவும்.

 

உள்ளே.....

1.“ஸ்ரீவெங்கடேச கராவலம்பம்”-திருக்கரங்களால்அருள் புரிய- கஷ்டங்கள் நீங்க-தினமும்-காலை.

2.“அச்சுதன்அஷ்டகம்”-ஆயுள், ஆரோக்கியம், ஆனந்த வாழ்வுக்கு- துக்க மோசக அச்சுத அஷ்டகம்- தினமும்-ஆதிசங்கரர்.

3.“ஸ்ரீரங்கநாத அஷ்டகம்”-எண்ணங்கள் ஈடேறும், புண்ணிய பலன்கள் கிட்டும்- தினமும் / வேண்டும்போது.

4.“ஸ்ரீ பாண்டுரங்க அஷ்டகம்” - சகல மங்களங்கள் பெற- ஆதிசங்கரர் இயற்றியது. பெற்றோரை முதலில் நினைத்து, தினமும் / வேண்டும்போது. 

5.“ஸ்ரீபார்த்தசாரதி ஸ்லோகம்”-புதன், சனி தோஷம் விலகி, வம்சம் சிறந்து வளர- தினமும் வேண்டும்போது.

6.“தன்வந்திரி பகாவான் துதி”- தீராத நோய்கள் தீர- தினமும்/ வேண்டியபோது. 

7.“ராமர் துதி”-ஆபத்துக்களின் பயம் விலகி சந்தோஷம் கிடைக்கப்பெற- தினமும் முடிந்தபோது. 

8.“ஸ்ரீராமபுஜங்காஷ்டகம்”-துன்பங்களை நீக்கி,ஆரோக்கியம், ஆனந்த வாழ்வுக்கு- தினமும்- வேதவியாசர். 

9. “நரசிம்மர் துதி”- கடன், கிரக தோஷங்களிலிருந்து நிவர்த்தி- நரசிம்மர் ஜெயந்தியன்று.

10.“ஸ்ரீ நாராசிம்மர்துதி”-பன்னிரு திருநாமங்கள்-தினமும். 

11.“ஹரிசரணாஷ்டம்”-நீண்டஆயுள் நிறைவாழ்வுக்கு- புரட்டாசி மாதத்தில்-ஆதிசங்கரர் அருளியது.

12.“பஞ்சாயுதத் துதி”- திருமாலின் திருவருளைப் பெற- புரட்டாசி மாதத்தில் -தினமும். 

13.“வெங்கடேச காரவலம்பம்”-கடன்கள் தோஷங்கள்தீர-புரட்டாசி மாதத்தில்-தினமும்/சனிக்கிழமை. 

14.“முகுந்தன் துதி”- கண்ணனின் வருகை-பாலமுகுந்த அஷ்டகம்- கிருஷ்ண ஜெயந்தியன்று. 

15.“கண்ணன் துதி”- மதுராஷ்டகம்- கிருஷ்ண ஜெயந்தி.

16.“கிருஷ்ணன் துதி”- குந்திதேவி சொன்ன துதி-கிருஷ்ண ஜெயந்தியன்று.

17.“நவமி ராமர் துதி”-துக்கங்கள் விலகி சந்தோஷம் கிடைக்கப்பெற- ஆதிசங்கரர்- இராமநவமி -அன்று.

18.“ராமர்-மகாவிஷ்னு துதி”- சீரான வாழ்வுடன் மங்களங்கள் யாவும் கிடைக்கப்பெற-இராமநவமி -அன்று-நாரதமுனி அருளிய- ப்ரஹ்மபாரம்-வராஹ புராணம். 

19.நாராயணீயம்- மகாலட்சுமி அவதாரம்- நாராயணபட்டத்திரி பாடியது- வெள்ளிக் கிழமை, தீபத் திருநாள்.

20.“நாராயணீயம்”- வெப்ப உஷ்ணத்தின் பாதிப்பை நீக்க- நாராயண பட்டத்திரி பாடியது

21.“சுந்தரகாண்ட பாசுரம்”- தடைகள் போக்கி சுகங்கள் சேர்க்கும்- சுந்தரகாண்டம் முழுதும் படித்த பலன். 

22.“இராமாயணப் பாசுரம்”- புண்ணியங்கள் சுகங்கள் சேர்க்கும் இராமாயணம் முழுதும் படித்த பலன். சுவாதி திருநாள் மகாராஜா எழுதியது-பவயாமி ரகுராம் துதி.

23.“பஜகோவிந்தம்” வாழ்க்கையில் தெளிவுஏற்பட அவசியம் ஒருமுறை படிக்க வேண்டியது -மூலம்-ஆதிசங்கரர்.

24.“ஸ்ரீ வெங்கடேஸ்வர கோவிந்தா” 

25.“ஸ்ரீ மகாவிஷ்ணு துதி” - சகல மங்களங்கள் - லட்சுமி கடாட்சம் பெற- ரிக்வேதம்- ஸ்ரீ சூக்தம்- தினமும் / வேண்டும்போது. 

26.ஸ்ரீகிருஷ்ணர்- புத்ர பாக்யம் பெற-108 முறை தினமும்

27.ஸ்ரீ ராமர் - துன்பங்கள் விலக தினமும் 11முறை

28.ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர்- கல்வி ஞானம் - தினமும் 11முறை

29.ஸ்ரீ மகா விஷ்ணு- சௌபாக்யங்கள்பெற தினமும் 11முறை

30.ஸ்ரீ ஆதிசேஷன் - நோய்கள் குணமாக தினமும் 11முறை

“ஸ்ரீமங்களாஷ்டகம்:--மங்களங்கள் பெருக-மனக்குறை- பாவங்களிலிருந்து விலகி-நீண்ட ஆயுளுடன்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.

மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்த எண்ணுகின்ற எறும்பன்றே அவரை
வருத்த எண்ணுகின்ற மலம்!
நாரணன் முன் பணிந்தேத்த நின்று எல்லை நடாவிய அத்
தோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே,
காரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா,
ஆரண நுண்பொருளே, என்பவர்க்கில்லை அல்லல்களே!

1.“ஸ்ரீவெங்கடேச கராவலம்பம்”- திருக்கரங்களால் அருள் புரிய- கஷ்டங்கள் நீங்க- தினமும்-காலையில்.

oசேஷாசலத்தில் எழுந்தருளியிருக்கும் திவ்யமூர்த்தியே, நாராயணா, அச்சுதா, ஹரியே உன்னை வணங்குகின்றேன். அனைத்து உலகத்தையும் விளயாட்டாகவே காத்தருளும் வேங்கடேசனே! எனக்கு உதவிட உன் திருக்கரத்தை அளிப்பாயாக.

oபிரம்மா முதலியவர்களால் வணங்கப்படும் பாதத் தாமரைகளையுடைய சங்கு பாணியே. கையில் அழகான ஒளிவிடும் சுதர்சன் சக்கரத்தை ஏந்தியவரே, கருணைக் கடலென விளங்குபவரே, சரணடைவோரின் புண்ணிய மூர்த்தியே, ஸ்ரீ வேங்கடேசனே, உமது நேசக்கரத்தை எனக்காக நீட்டியருள்வாயாக.

oவேத வேதாந்தங்களாலும் ஆராய்ந்து அறிய முற்படும் லட்சிய முன்னோடியே, தாமரையில் வீற்றிருப்பவளால் பூஜிக்கப்படும் பாதத் தாமரைகளையுடைய பத்மநாபரே, உலகத்தையே காக்கும் பராத்பரரே, பாபஹாரியே, பாவங்களை அழிப்பவரே, ஸ்ரீ வேங்கடேசனே உம்முடைய அபயகரத்தை எனக்காக நீட்டுங்கள்.

oமகாலட்சுமியின் நாயகரே, வேதங்கள் தேடும் பரம் பொருளே, காமம் போன்ற குரோதங்களை விலக்கியருளும் ஞானவடிவானவரே, அசுரகுலத்தைப் பூண்டோடு அழித்த ஜனார்த்தனா, தர்மத்தை காக்க அதர்மத்தை விளையாட்டாகவே அழிப்பவரே, வாசுதேவனே, எங்கும் உறைந்து விளையாட்டாகவே அனைவரையும் காப்பவரே, ஸ்ரீவேங்கடேசனே. உமது உதவும் கரங்களை எனக்காக நீட்டுங்கள்.

oஅத்யாத்மிகம், ஆதிதைவதம், ஆதிமௌத்திகம் என்கிற மூன்று தாபங்களையும், வன்முறைகளையும் அழித்த முராரியே. தாமரைக் கண்ணாளரே. உம் அபார கருணையால் என்னைக் காப்பாற்றும், தரையில் விழுந்த மீன்களைப் போன்ற எம்மைக் காத்திட விஷ்னுவாகிய, எல்லாவற்றிலும் அந்தர்யாமியாக இருப்பவரே, ஸ்ரீவேங்கடேசனே உம்முடைய நேசக்கரத்தை நீட்டுங்கள்.

oநவரத்தினங்கள் அலங்கரிக்கும் ஒளிமயமான முகமுடையவனே, நெற்றிப் பகுதியில் கஸ்தூரி திலகம் தரித்து, பல வண்ணத் தாமரைகள் ஒருங்கிணைந்தாற் போன்ற முகாரவிந்தமுடைய வேங்கடேசனே, உம்முடைய அருட்கரத்தை நீட்டுங்கள்.

oசரணடைந்த உலகத்தார் கோரும் வரங்களை விளையாட்டாகவே நிறைவேற்றுபவரும், கழுத்துப் பிரதேசத்தில் அணிந்திட்ட நவரத்னங்களிழைத்த ஆபரணங்களால் ஒளிர் பவரும், திக்கெல்லாம் ஒளிபரப்பும் ரத்னவங்கிகளை தோள் வளைகளாக அணிந்து உள்ளவருமான வேங்கடேசனே. உமது உதவும் கரங்களை எனக்காக நீட்டுங்கள்.

oசுந்தரமான அங்கங்களுடன் நீண்ட இரு கரங்களுடன் திகழ்பவரே. தோளில் ரத்ன வளைகள் விகசிக்க, பாம்பணி வளையங்கள் கைகளில் ஒளிவீசிட விளங்குபவரே, சரண்டைந்தோரின் ஆசைகளை நிறைவேற்றும் வேங்கடேசனே, உமது நேசக்கரங்களை எனக்காக நீட்டுங்கள்.

oசம்சாரமாகிய ஆழ்கடலில் நடுவில் சிக்கிச் சுழன்று அவதிக்குள்ளாயிருக்கும் உலக உயிர்களை உய்விக்கும் ஜனார்த்தனரே, என்னை உய்விக்க வாருங்கள். தீராத ருணத்தினால் கடன் தொல்லையால் அவதிப்படும் எனக்கு லட்சுமி தேவியை அளியுங்கள். பெரிய யானை கஜேந்திரனைக் காக்க ஓடோடி வந்தவனே, வேங்கடேசனே. உமது உதவிக் கரங்களை நீட்டி எனக்கு உதவுங்கள்.

oதிவ்வியமான பல வண்ணங்களிலான அங்கிகளும், மஞ்சள் பட்டாடைகளும் மற்றும் தங்க மயமான பட்டு மேல் வஸ்திரங்களாலும், சுற்றிச் சுழலும் மேலங்கிகளாலும் கோமள ரங்கனாக, அழகோவியமாக காணப்படும் வேங்கடேசனே. எனக்காக உமது உதவும் கரங்களை நீட்டியருளுங்கள்.

oஇடுப்புப் பிரதேசத்தில் அழகாகக் கட்டப்பட்டுள்ள ரத்னமயமான ஆபரணங்கள், முழங்கால் பகுதியில் மாணிக்கங்களும் கண்ணாடி கற்களுமிழைத்த அங்கிகள், கணுக்காலிலும் முழங்காலிலும் மனதைக்கவரும் அலங்காரம் என எழிலுடன் விளங்கும் வேங்கடேசனே, உம் அபயக்கரத்தை எனக்காக அளியுங்கள்.

oஉலகையே புனிதமாக்கக்கூடிய ஆற்றல் நீயே, தினமும் உன்னைத் தரிசித்து மகா பிரசாதங்களைப் பெற்றுச் செல்லும் பக்தர்களின் இருள் அகல்வதுடன் பூமியெங்கும் அருள்வெள்ளம் பெருக்கெடுக்கும்படியும் செய்யும், உனது மகாபிரசாதங்கள் உலகையே உய்விக்கக் கூடியவை, வேங்கடேசனே, உனது உதவும் கரத்தை நீட்டியருள்வாயாக.

oகாமம் போன்ற ஏராளமான எதிரிகள் எனக்கு முன்னே இருந்தாலும் உன்னுடைய கருணாகடாட்சத்தினால் அவையனைத்தும் ஏழையேனாகிய என்னை பாதிக்காமலிருக்க வேங்கடேசனாகிய நீரே எனக்காக உமது உதவும் கரங்களை நீட்டி அருள்வீராக.

oஸ்ரீமன் நரசிம்ம முனி என்கிற யதிகளால் ஸ்ரீ வேங்கடேசனின் பாதங்களில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த துதிகளை மனம் ஒன்றிப் படிக்கும் ஒவ்வொருவரும், அந்த புருஷோத்தமனின் அருள் பெற்று அனைத்தையும் அடைவர்.

2.“அச்சுதன் அஷ்டகம்”- ஆயுள், ஆரோக்கியம், ஆனந்த வாழ்வுக்கு- துக்க மோசக அச்சுத அஷ்டகம்- தினமும்- ஆதிசங்கரர்.

oபக்தர்களைக் கைவிடாதவன் என்பதால் அச்சுதன் என்ற பெயர் கொண்டவனே! பாவங்களைப் போக்குபவனே! பரமாத்மாவே! ராமனாகவும் கிருஷ்ணனாகவும் அவதாரம் செய்தவனே! புருஷோத்தமனே! எங்கும் நிறந்தவனே! வாசுதேவரின் மைந்தனே! பகவானே! ஒருபொழுதும் எதிரிகளால் வெல்ல முடியாதவனே! நீ இப்படிப்பட்ட பெருமைகளை உடையவன் என்பதால் அல்லவா பாற்கடலை கடைந்தபோது தோன்றிய செல்வ மகள் மற்ற அனைவரையும் ஒதுக்கிவிட்டு உன்னைக் கணவனாக அடைந்தாள். தூயவனான நீயே எனது எல்லா துக்கங்களையும் சற்றும் மிச்சமில்லாமல் போக்கவேண்டும்!

oஉலகத்திற்கு மங்கலங்களைக் கொடுப்பவனே! எங்கும் நிறைந்திருப்பவனே! உலக உயிர்களைக் காப்பவனே! ஜகதீசனே! நந்தகோபன் மகனே! நரசிம்மமாக தோன்றிய நரேந்திரனே! மனிதர்களுள் மேலானவனே! முக்தியைக் கொடுப்பவனே! முகுந்தனே! முராசுரனை வதைத்தவனே! லட்சுமிகாந்தனே! எனது துயரங்களை சிறிதும் பாக்கியில்லாமல் நீரே போக்க வேண்டும்!

oராமச்சந்திரனே! ரகுநாயகனே! ஆதரவற்றோர்க்கு அடைக்கலமாக இருப்பவனே! பாவங்களைப் போக்குகிறவனே! யாதவ குலத்தில் உதித்த உத்தமனே! முனிவர்களெல்லாம் போற்றுபவனே! வேள்வியின் நாயகனே! நீங்களே எனது அனைத்து துயரங்களையும் போக்க வேண்டும்!

oதேவகியின் மைந்தனே! பக்தர்தம் துக்கத்தைப் பொசுக்குபவனே! ராதாமணவாளனே! அழகிய உருவை உடையவனே! துயரங்களைப் போக்குகின்றவனே! கருணைக் கடலாக விளங்கும் நாதனே! ஸ்ரீ எனும் மகாலட்சுமியின் மணாளனே! எனது எல்லா துக்கங்களையும் முழுமையாகப் போக்கவேண்டும்!

oகோபிகைகளின் முகமாகிய சந்திரனுக்கு புலப்படும் சகோரப் பறவை போன்றவனே! நிர்குணனே! கர்ம சம்பந்தமற்றவனே! வெற்றியை மட்டுமே பெறக்கூடியவனே! நிறைவானவனே! மங்கலங்கள் அள்ளித் தருபவனே! பூரணமானவனே! அனைத்திலும் இருப்பவனே! எனது எல்லா துக்கங்களையும் போக்க வேண்டும்.

oகோகுலத்தின் தலைவனே! கோவர்த்னகிரியை அநாயாசமாகச் சுமந்தவனே! தீரனே! யமுனா நதிக்கரையில் விளையாடியவனே! வீரனே! நாரதர் போன்ற முனிவர்களால் வணங்கப்படும் மலந்த தாமரை போன்ற பாதங்களை உடையவனே! மலர்மகள்நாதனே! எனது எல்லாப் பாவங்களையும் போக்கி அருளவேண்டும்!

oதுவாரகையின் அரசனே! அளவற்ற நற்குணங்களுக்கு இருப்பிடமானவனே! உயிர்க்குலத்தின் நாதனே! பரிபூரணனே! பிறப்பு இறப்பு அற்றவனே! ஞானத்தால் மட்டும் அறியக்கூடியவனே! குணக்கடலே! பரபிரம்ம வடிவானவனே! பொன்மகள் கணவனே எனது எல்லா துக்கங்களையும் போக்க வேண்டும்!

oதீயவர்களை அழிப்பவனே! தேவாதி தேவனே! கருணைமிக்கவனே! பத்மநபனே! பூமியைத் தரிப்பவனே! தர்மத்தின் தலைவனே! ராவணனை அழித்தவனே! முராரியே! லட்சுமி நாயகனே! என்னுடைய சகல துக்கங்களையும் போக்கி அருள்வீராக!

oபிறப்பு இறப்புகளால் ஏற்படும் பயத்தை போக்கவும் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில்வரும் எல்லா துன்பங்களிலும் இருந்து விடுபடவும் வேண்டி செய்யப்படும் இந்த அச்சுதாஷ்டகத்தை சிரத்தையுடன் படிக்கும் நான், எல்லா துக்கங்களிலிருந்தும் விடுபட்டு, மரணபயத்தை வென்று நீண்ட ஆயுளையும் சந்தோஷத்தையும் பெற அருள் புரிய வேண்டும்!

3.“ஸ்ரீ ரங்கநாத அஷ்டகம்” - எண்ணங்கள் ஈடேறும், புண்ணிய பலன்கள் கிட்டும்- தினமும் / வேண்டும்போது.

oஆனந்த மந்திரங்களின் வடிவினரும், சத்ய ஞான சொரூபரும், ப்ரபிரம்மமாக உள்ளவரும் வேதங்களின் வடிவானவரும் கையில் சங்கேந்தியிருப்பவரும், அழகிய உருவமுடைய வரும், ஸ்ரீரங்கத்தில் அருளாட்சி செய்பவரும்மான அந்த அரங்கநாதரிடம் என் மனம் லயித்துக் கிடக்கின்றது.

oகாவேரி தீரத்தில் அதீதமான கருணையுடன் அருள் புரிபவரும், மந்தார மரத்தின்மேல் அமர்ந்தபடி செய்யும் அழகான லீலைகளால் மனதைக் கவர்பவரும், அசுரர்களின் அந்திமக் காலத்தை முடிவுக்கு கொண்டுவந்து அகில உலகையும் விளையாட்டாகவே காப்பவருமாகிய ஸ்ரீரங்கனுடைய லீலைகளின்பால் என்மனம் ஈடுபாடு கொண்டு மயங்குகின்றது.

oதிருமாலின் மார்பைவிட்டு என்றும் நீங்காத லஷ்மிதேவியின் இருப்பிடமாக உள்ளவரும், அகில உலகிற்கும் ஆதாரமானவரும் பக்தர்களின் தாமரை போன்ற இதயத்தில் வசிப்பவரும் சூரியமண்டலத்தில் ஒளிர்பவரும், கருணையின் இருப்பிடமாய் இருப்பவரும், காருண்யத்துக்கு ஆதாரமானவரும், ஸ்ரீரங்கத்திலே வசிப்பவருமான அந்த ரங்கநாதரின் பால் என் மனம் வசப்பட்டுள்ளது.

oபிரும்மா முதலிய தேவர்களால் வணங்கப்படுபவரும், உலக உயிர்கள் அனைத்தினாலும் வழிபடத் தகுந்தவரும், முகுந்தனால் துதிக்கப்படுபவரும், தேவேந்திரனால் நமஸ்கரிக்கப்படுபவரும், வியாசர் மற்றும் சனகாதி முனிவர்களால் போற்றப்படுபவரும் ஸ்ரீரங்கத்தில் வசிப்பவருமான ரங்கநாதரை தரிசிக்க என்மனம் விழைகின்றது.

oபிரும்மாவுக்கு அதிபதியும் கருடனுக்கு எஜமானரும், வைகுண்டத்தின் அரசரும், தேவராஜனுக்கு ராஜாவும், மூன்று உலகங்களுக்கும் அரசனும், ஒட்டு மொத்த பிரபஞ்சத்துக்கும் அதிபதியும் ஸ்ரீ ரங்கத்தில் வசிப்பவருமாகிய ரங்கநாதனிடம் என் மனம் லயித்து நாட்டமுடையதாகின்றது.

oஉயர்வான அபய முத்திரையை உடையவரும் முழுமையான நித்திரையை உடையவரும், யோகநித்திரையில் ஆழ்ந்தவரும், பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவரும், அடைக்கல மடைந்தவர்களின் தேடுதலுக்குச் செவிசாய்த்து அருள்பவரும், பிரபஞ்சத்தில் நிலையாக இருக்கும் ஒரே ஒருவருமான ஸ்ரீரங்கவாசனின்பால் என் மனம் எப்போது கவர்ந்து ஈர்க்கப்படுகின்றது.

oஆச்சரியப்படும் வடிவினில் படுத்திருப்பவரும், ஆதிசேஷன்மேல் பள்ளி கொண்டிருப்பவரும், நந்தன் மடியில் படுத்திருப்பவரும், பிராட்டியாரின் மடியில் தலை வைத்திருப்பவரும், ஸ்ரீரங்கத்தில் சயனித்திருப்பவரும் ஆகிய ரங்கநாதரின்மேல் என் மனம் எப்போதும் ஈடுபாட்டுடன் திகழ்கின்றது.

oஇதுவல்லவா ஸ்ரீரங்கம். இத்தலத்தில் மரணிப்பவர்கள் மறுபிறப்பால் அவதிப்படுவதில்லை. அப்படி மறு சரீரம் பெற்றால் கையில் சக்கரம், காலில் கங்கா ஜலம், பயணிக்கும்போது கருடன், சயனத்தில் சர்ப்பம் என்று சாட்சாத் மகாவிஷ்ணுவின் சாருப்பயத்தையே அடைவர். இறைவன் தன்னோடு ஐக்கியப் படுத்திக் கொள்வதால் அவர்கள் பகவானின் வடிவையே பெறுவார்கள்.

4.“ஸ்ரீ பாண்டுரங்க அஷ்டகம்” - சகல மங்களங்கள் பெற- ஆதிசங்கரர் இயற்றியது. பெற்றோரை முதலில் நினைத்து, தினமும் / வேண்டும்போது.

oசிறந்தயோக பீடமான பீமா நதிக்கரையில் புண்டரீகனுக்கு வரம் அளிப்பதற்காக முனிவர்களுடன் கூடி நின்று கொண்டிருப்பவரும், ஆனந்தம் என்ற பயிருக்கு ஆதாரமானவரானவரும், அருவமான பரப்பிரமத்துக்கு அடையாளமான உருவத்துடன் விளங்குபவருமான பாண்டுரங்கனை வணங்குகின்றேன்.

oமின்னல் போன்று பளிச்சிடும் ஒளியுடைய உடையணிந்தவரும், நீலமேகத்தைப் போன்ற நிறமுடையவரும், லக்ஷ்மியின் இருப்பிடமானவரும், அழகானவரும், மிகச் சிறந்தவரும், செங்கல் மீது சமமாகப் பதிந்திருக்கும் பாதத்தை உடையவரும், மகாபலியிடம் மூவடிகேட்டு உலகளந்தவரின் கால்கள் ஒரு செங்கல்மேலும், அருவமான பரப்பிரம்மத்தின் உருவ அடையாளமாக ஒளிரும் பாண்டுரங்கனை வனங்குகின்றேன்.

oஎன்போன்ற சாமான்யர்களுக்காக ஜனன மரணமென்கிற சம்சார சாகரம் என்பது இவ்வளவே என்று கூறுவதுபோல், எவரால் தன் இடைப் பிரதேசம்தன் கைகளால் தாங்கப்படுகிறதோ, பிரம்மாவாசம் செய்வதற்காக தனது தொப்புள்கொடி தாங்கியிருப்பவர் எவரோ அந்த அருவமான பரப்பிரமத்தின் அடையாள உருவமான பாண்டுரங்கனை நான் பூஜிக்கின்றேன். தன்னை நம்பும் பக்தர்களுக்கு சம்சார சாகரம் சிறு குட்டையைப் போன்றதாகிவிடும் என்பதைக் காட்ட இடுப்பளவை சுட்டுவது போன்ற முத்திரை காடும் பாண்டுரங்கனை வணங்குகின்றேன்.

oகழுத்துப் பிரதேசத்தில் கௌஸ்துப மணியால் அலங்கரிக்கப்பட்டவரும், ஸ்ரீதேவியால் அணிவிக்கப்பட்ட தோள்வளையினை உடையவரும், ஸ்ரீதேவிக்கு இருப்பிடமானவரும், சிவஸ்வரூபியும், சாந்த வடிவினரும், புகழத்தக்கவரும், மிகச் சிறந்தவரும், உலக ரட்சகரும், அந்த அருவமான பரப்பிரம்மத்தின் உருவ அடியாளமாக விளங்குபவருமாகிய பாண்டுரங்கனை வணங்குகின்றேன்.

oசரத்கால சந்திரனின் உருவைப்போன்ற ஒளியுடையவர், புன்னகை தவழும் முகத்தினை உடையவர், ஒளிரும் குண்டலங்களால் இடிபடும் கன்னப் பிரதேசத்தை உடையவர், செம்பருத்தியைப் போன்ற சிவந்த இதழ்களையுடையவர், செந்தாமரைக் கண்ணன் என்கிற உருவமற்ற பரம்பொருளின் உருவ அடையாள்மாகத் திகழும் பாண்டுரங்கணை துதிக்கின்றேன்.

oஎல்லாதிசைகளிலும் ஒளிரும் கிரீடத்தை அணிந்தவர், மதிப்பிடமுடியாத சிறந்த ரத்தினங்களைக் கொண்டவர், மூன்று வளைவாக நளின எழிலுடன் உடலை வளைத்து நிற்பவர், மயிலிறகு மாலையை அணிந்தவர், அருவமான பரப்பிரம்மத்தின் உருவ அடையாளமாக விளங்கும் பாண்டுரங்கனை வணங்குகின்றேன்.

oஎங்கும் வியாபித்திருப்பவர், குழலிசைப்பவர், முடிவற்றவர், விளையாட்டாகவே இடையர் வேடம் பூண்டவர், மாடு கன்றுகளை மேய்த்தவர், புன்னகையால் மிளிர்பவர், நீக்கமற பிரபஞ்சவெளியில் வியாபித்தவராக பரபிரமத்தின் உருவ அடையாலமாகத் திகழும் பாண்டுரங்கனைப் வணங்குகின்றேன்.

oபிறப்பற்றவர், ருக்மணியின் உயிரைத் தழைக்கச் செய்பவர், பரமபத நிலையானவர், விழிப்பு, கனவு, உறக்கம் என்ற மூன்றுக்கும் அப்பார்பட்ட ஆத்மாநுபூதியான நான்காவது நிலையில் இருக்கும் ஒரே ஒருவர், அருட்பொலிவானவர், அடியார்களின் துயரை அழிப்பவர், தேவாதி தேவர், அருவமான பரப் பிரம்மத்தின் உருவ அடையாளமாக இருப்பவரான பாண்டுரங்கனை வணங்குகின்றேன்.

oபுண்ணியத்தைக் கொடுக்கும் பாண்டுரங்கன் மீதான இந்த துதியை மனம் ஒன்றி தினமும் படிக்கும் எனக்கு, சகல சௌபாக்யமும் பெற்று, ஆரோக்கியமாய் வாழ்ந்து முடிவில் ஜனன மரணமாகிய இந்து சம்சார கடலைக் கடந்து, ஹரியின் ஆலயமான வைகுண்டத்தை நிலையான இருப்பிடமாக கொள்ள அருள்புரிவாய் பாண்டுரங்கா.

5.“ஸ்ரீபார்த்தசாரதி ஸ்லோகம்”-புதன், சனி தோஷம் விலகி, வம்சம் சிறந்து வளர- தினமும் வேண்டும்போது.

oபீஷ்மர், துரோணர் போன்ற மகான்களின் அம்புகளை அன்புடன் ஏற்றதால் உண்டான வடுக்களோடு கூடிய திருமுகம் கொண்டவரே, சகல சுகபோகங்களை வேண்டுவோர்க்கு மறுக்காமல் அளித்து மகிழ்விப்பவரே, மோட்சம் வேண்டுவோர்க்கு மோட்சத்தையும் அருள்பவரே, பக்தர்களின் துன்பங்களை கனிவான பார்வையால் களையும் புன்னகை மகோன்னதமே, பார்த்தன்மீது கொண்ட அன்பினால் தூது சென்ற பார்த்தசாரதியே, உன்னை வணங்குகின்றேன். எனக்கு அருள்புரிவாய் பெருமாளே!

6.“தன்வந்திரி பகாவான் துதி”- தீராத நோய்கள் தீர- தினமும்/ வேண்டியபோது.

oஉயிர்களைக் காப்பவரே! அமுத கலசத்தினை ஏந்தியவரே, சகல துன்பங்களையும் போக்குபவரே! மூவுலகுக்கும் தலைவரே! தன்வந்திரியாக அவதரித்த மகாவிஷ்னுவே உம்மை வணங்குகிறேன். எனக்கு நோய்களின்றி பாதுகாப்பாய்!

7.“ராமர் ஸ்லோகம்”- ஆபத்துக்கள் பயம் விலகி சந்தோஷம் கிடைக்கப்பெற- தினமும் முடிந்த போது.

o‘ராமா’ என்று சொன்னாலே எல்லா துன்பங்களும் விலகும். இழந்தன எல்லாம் மீட்கப்படும். எல்லாவகையான அனுகூலங்களும் ஏற்படும். இப்படி மனம் மகிழும் படியான நன்மைகளையே வழங்கும், ஸ்ரீராமனை நான் எப்போதும் வணங்குகிறேன்.

oவாழ்வில் ஏற்படும் தாழ்வுகளிலும் மனம் கலங்காத பக்குவத்தைத் தருபவரும், பயத்தை விரட்டும் உறுதியை அளிப்பவரும், நம் எதிரிகளை நமக்கு முன்பாகச் சென்று நாசம் செய்து நம்மைக் காப்பவருமான ஸ்ரீராமசந்திரனை நான் உளமார வணங்குகின்றேன்.

8.“ஸ்ரீராம புஜங்காஷ்டகம்”- துன்பங்களை நீக்கி, ஆரோக்கியம், ஆனந்த வாழ்வுக்கு- தினமும்- வேதவியாசர்.
oஅதீதமான அழகுள்ளவரும், அனைத்துப் பாவங்களையும் போக்குபவரும், தனது பக்தர்களின் மனதை களிக்கச் செய்கிறவருமான ஸ்ரீராமனை பூஜிக்கின்றேன்.

oஅழகான திருமுடியினை உடையவரும், எல்லாப் பாவங்களையும் அழிப்பவரும், தன் பக்தர்களின் பயத்தைப் போக்குகின்றவருமான இணையற்ற ஸ்ரீராமனை துதிக்கின்றேன்.

oஆன்மாவின் வடிவினை உணர்த்தி உபதேசிப்பவரும், கருணைக்கடலும், பிறப்பு இறப்பு என்ற பயத்தைப் போக்குபவரும், எங்கும் எப்போதும் ஒரே சம நிலையிலிருப்பவரும், மங்களத்தைச் செய்கிறவரும், தோஷமற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை வணங்குகின்றேன்.

oஉலகத்தையே காப்பவரும், நாமரூபமற்றவரும், எப்பொழுதும் இருப்பவரும், உருவமற்றவரும், அழிவற்றவரும், இனையற்றவருமான ஸ்ரீராமனை வணங்குகின்றேன்.

oபந்த பாசங்களுக்கு அப்பாற்பட்டவரும், நிர்குணமானவரும், பாபமற்றவரும், அழிவற்றவரும், ஒளிமயமானவரும், இனையற்றவருமான ஸ்ரீராமனை வணங்குகின்றேன்.

oசம்சார சாகரத்தினைக் கடக்க உதவும் தோணி போன்றவரும், எல்லாருடைய ஆன்மாவிலும் வியாபித்துள்ளவரும், குணங்களுக்கு இருப்பிடமானவரும், கருணைக்கடலும், இணையற்றவருமான ஸ்ரீ ராமனை நான் வணங்குகின்றேன்.

oமஹா வாக்கியத்தின் பொருளை வெளிப்படுத்துகின்ற சிறந்த சொற்களால் கூறப்படும் பரப்பிரம்மமாயும், எங்கும் நிறைந்திருப்பவராகவும், இனையற்றவருமாக உள்ள ஸ்ரீராமனை வணங்குகின்றேன்.

oபரமசிவன் தேவி பார்வதியிடம் ராம என்ற மஹாவாக்யத்தை 3முறை சொன்னாலே போதும், அது ஆயிரம் திருநாமங்களால் வழிபட்டதிற்குச் சமம் எனக் கூறியதை நினைவு கொண்டு ராம, ராம, ராம எனவழிபடுகின்றேன்.

oநன்மைகளைக் கொடுப்பவரும், சுகத்தை அளிப்பவரும், ஜனனமரண பயத்தைப் போக்குபவரும், அஞ்ஞானத்தை அழிப்பவரும், ஆசார்யனாய் பிரகாசிக்கிறவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை வணங்குகின்றேன்.

o வியாசரால் சொல்லப்பட்டதும் எளிமையானதும் ஏராளமான புண்ணியத்தை தரக்கூடிய இந்த ராமாஷ்டகத்தை படிப்பதால், எனக்கு கல்வி, செல்வம், கலை, அளவற்ற சுகம், சர்வமங்களம் மற்றும் மங்காத புகழடைந்து முடிவில் மோட்சத்தையும் அளிப்பாய் என்பது நிச்சயம்.

9.“நரசிம்மர் துதி”- கடன், கிரக தோஷங்களிலிருந்து நிவர்த்தி- நரசிம்மர் ஜெயந்தியன்று.

நாராயாண பக்தன் பிரகலாதனுக்கு தரிசனம் தந்து வரம் அருளியவரே! லட்சுமியின் நாயகனே! அசுரன் ஹிரன்யனை வதம் செய்தவரே! மிகப் பெரிய வீரரே! ஸ்ரீநரசிம்ம மூர்த்தியே! உம்மைத் துதிக்கின்றேன். கடன்களிலிருந்தும், சுமைகளிலிருந்தும் என்னை விடுவிப்பீராக! கோள் சஞ்சாரத்தால் துன்பங்களை அனுபவிக்கும் பக்தர்களுக்கு ஆதரவாக இருந்து அவர்கள் வருத்தம் துடைப்பவரே! நரசிம்ம மூர்த்தியே உமக்கு நமஸ்காரம்!

10.“ஸ்ரீநரசிம்மர்துதி”-பன்னிருதிருநாமங்கள்-தினமும்.

oநரஹரியாகத் தோன்றிய நாரணரே, உமது பன்னிரு திருநாமங்களைச் சொல்கிறேன். பிரகாச ஒளிபொருந்தியவர் என்பதால் மகாஜ்வாலன். சினம் மிக்க சிம்மமாதலால் உக்ரசீயம். அச்சமூட்டும் கூரிய பற்களை உடையவர் ஆதலின் வஜ்ர தம்ஷ்ட்ரன். மேதாவியாக விளங்குபவன் என்பதால் அதிசதுரன்.

oமனிதனும் சிம்மமும் சேர்ந்த திருவடிவானதால் நரஹரி (நரன்-மனிதன், அரி-சிம்மம்). கச்யபமுனிவரின் மகனான இரண்யனை அழித்ததால் கஸ்பமர்த்தனர். அண்டியவரைக் காத்திட அசுரனை அழித்ததால் யதுஹந்தாசர். தேவர்தம் குறை தீர்த்ததால் தேவவல்லபர்.

oபாலகபக்தன் பிரகலாதனுக்கு அருளியதால் பிரகலாதவரன். எண்ணற்ற திருக்கரங்களை உடையவராதலால் அனந்தஹஸ்தகர் (அனந்த-கணக்கற்ற, ஹஸ்தம்-கை) பாவங்களைப் போக்குவதில் முதன்மையானவர் என்பதால் மகா ருத்ரர். சரியான தருணத்தில் உதவிபுரிபவர் என்பதால் தாருணீ ஆகிய இந்த பன்னிரு திருநாமங்களை உடையவரே உம்மை மனதாரப் வணங்குகின்றேன்.

oமந்திரங்களில் எல்லாம் மேலானதாகவும், அவற்றின் அரசனாக விளங்கும் மகாமந்திரமாகக் கருதப்படும் இந்தப் பன்னிரண்டு திருநாமங்களைச் சொல்லி நரசிம்மரை பூஜிப்பவர்கள் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்டு சகல வளமும் நலமும் பெற்று வாழ்ந்து நிறைவில் நற்கதி அடைவர்.

oஇந்த துதியைச் சொல்வதால் உடல்மெலிவு நோய், தீராப்பணி, தொற்றுநோய், காய்ச்சல்கள் போன்ற வற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும். அரசாங்க அனுமதி சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெரும் இடர்களில் இருந்தும், நெருப்பு, வெள்ளம், திக்குத் தெரியாத காடு போன்றவற்றிலிருந்தும் மீளமுடியும்.

oவழுக்கலும் சறுக்கலுமான மலைகளிலும், கொடிய விலங்குகள் உலவும் காடுகளிலும் உமது துணையால் புலி, திருடர் பயத்திலிருந்து காப்பாற்றப்படுவர். போரிலிருந்தும் மரணத்திலிருந்தும் மீண்டு மேலான சுபமான வாழ்வைப் பெறுவர்.

o இந்த பன்னிரு நாமாக்களையும் நூறுமுறை சொல்பவர் சகல தடைகளில் இருந்தும் விடுபடுவர். அவர்களது ஆரோக்கியம் சீராகும். நோய்களிலிருந்தும் மீள்வர். ஆயிரம் முறை ஜபிப்பவர்கள் கோரியதெல்லாம் அடைவர்!

11.“ஹரிசரணாஷ்டம்”- நீண்ட ஆயுள் நிறை வாழ்வுக்கு- புரட்டாசி மாதத்தில் சொல்ல வேண்டிய துதி- ஆதிசங்கரர் அருளியது.

oசிலர் சிவனைத்தான் தொழவேண்டும் என்று சொல்கிறார்கள். மற்றும் சில பேர் அம்பிகையைத்தான் வணங்க வேண்டும் என்பர். வேறு சிலர் கனேசனையும், இன்னும் சிலர் பிரத்யக்ஷமான சூரிய தேவனையும் துதிக்கச் சொல்வர். ஆனால் இவர்கள் அனைவரிலும் மாறி மாறி பிரகாசிப்பவன் நீயேதான்! ஆகையால் சங்கு சக்ரபாணியான நாரணனே உன்னையே நான் சரணடைகிறேன்.

oஉடன் பிறந்தவனோ, தந்தையோ, தாயோ, மனைவியோ, புத்திரனோ அல்லது உயர்வான குலத்தில் பிறந்தவன் என்ற பெருமையோ இவை எதுவும் எனக்கு உதவக்கூடியதாகத் தெரியவில்லை. ஆகையால் சங்கு சக்கரதாரியான ஹரியே! உன்னை வணங்குகிறேன்!

o நான் எனது அபிமானத்தையும் ஆசையையும் தவிர்த்து விட்டு, மஹாபுருஷர்களையும் சாதுக்களையும் ஆராதனை செய்ததுமில்லை. சிரத்தையும், ஆஸ்தீக புத்தியையும் கைக்கொண்டு, புண்ணிய தீர்த்தங்களை தரிசித்ததுமில்லை. ஒரு பொழுதும் முறைப்படி இறைவனை பூஜித்ததுமில்லை. இவையேதும் தெரியாவிட்டாலும் சங்கு சக்ரபாணியே எனக்கு உன்னை மட்டும் தெரியும். எனவே நான் உன்னை சரணடைகிறேன்.

oகெட்ட வாசனைகள்- மனதுக்கும் உடலுக்கும் கேடுதரும் தீய பழக்க வழக்கங்கள் என்னை எப்போதும் தம் பக்கமாகவே ஈர்த்துக் கொள்கின்றன. பலவிதமான நோய்கள் என் மனதையும் உடலையும் அரித்தெடுக்கின்றன. வாழ்க்கையையும், பிறரை எதிர்பார்தே நான் நடத்திக் கொண்டிருக்கின்றேன். எனவே வாழ்வின் தீவினைகள் யாவும் நீங்கி, நான் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்திட அருளும்படி வேண்டி சங்கையும், சக்கரத்தையும் ஏந்திக்கொண்டிருக்கும் நாரணனே நீங்கள்தான் எனக்கு கதி என்று சரணடைந்து உம்மை வணங்குகின்றேன்....

oமுன்னர் செய்த பாவங்களெல்லாம் நினைத்து நினைத்து எனது உள்ளம் நடுங்கி கொண்டிருக்கிறது. பாவத்தில் விழுந்து மூழ்கியவர்களை தூக்கி நிறுத்தும் உனது கிருபைதான் உலகமறிந்த விஷயம். அதை உணர்ந்து சங்கு சக்ரதாரியாண உம்மைச் சரணடைகிறேன்...

oஹே பிரபோ! உன்னை மறந்தவர்கள் பிறப்பு, மூப்பு இவற்றால் துக்கமடைந்து, நோய்கள் பற்றி வருந்தி, காக்கை-நாய், நரி போன்ற பிறவிகள் எடுத்து நரகத்தில் வாசம் போன்ற விளைவுகள் ஏற்படு நடுக்கமும் கொள்வர் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். அதனால் சங்கு, சக்ரதாரியாண உன்னை மறக்காமல் உன்னையே சரணடைகிறேன்...

oநீசனாக இருந்தபோதிலும், மகா பாவியாக இருந்தபோதிலும், மிகவும் நிந்திக்கப்பட்டவனாக இருந்த போதிலும் பரவாயில்லை, ஓரு தரம் உன்னையே சரணாகதி என்று எவன் ஒருவன் சொல்கிறானோ, அவனை வைகுண்டத்திற்கு அழைத்து செல்லும் அன்பு மிக்கவன் நீ, அத்தகைய கிருபை உள்ள சங்கு சக்ரதாரியே, உன்னை வணங்குகிறேன்....

oவேதங்களிலும், தர்ம சாஸ்திரங்களிலும், ஆகமங்களிலும். ராமாயணம் மற்றும் பலபுராண தொகுப்புகளிலும் உனது கீர்த்தியே விஸ்தாரமாக கூறப்பட்டுள்ளது. ஆகையால் ஹே பிரபுவே, சங்கு சக்ரபாணியான உம்மையே நான் சரணடைகிறேன். நீங்காத ஆரோக்கியத்துடன் நீண்டநாள் வாழ்ந்திட நீரே அருள்வீராக!

12.“பஞ்சாயுதத் துதி”- திருமாலின் திருவருளைப் பெற- புரட்டாசி மாதத்தில் -தினமும்.

oசுதர்சனம்: தீச்சுடரைப் போல் பலமடங்கு ஒளிவிட்டு பிரகாசிப்பதும், வல்லமை பொருந்தியதும், கோடி சூரியர்களின் கதிர்கள் ஒன்றாகத் திரண்டது போல பிரகாசமானதும், அசுரர்களை நாசப்படுத்துவதுமான ஸ்ரீவிஷ்னு பகவானின் சுதர்சனம் என்னும் சக்கரத்தைப் போற்றி வணங்குகின்றேன்! எனக்கு அருள்க!

oபாஞ்சஜன்யம்: மகாவிஷ்னுவின் பவளச் செவ்வாய் வழியே வெளிவரும் காற்றினால் ஒலி எழுப்பப்படுவதும் தன் கம்பீர ஒசையால் அசுரர்களுக்கு ஒலி அச்சத்தைக் கொடுக்கக் கூடியதும், வெண்மை வண்ணத்தில் ஒரு கோடி நிலவுகளின் ஒளிக்கு ஈடானதுமான பாஞ்சஜன்யம் என்ற சங்கை வணங்குகின்றேன்! எப்போதும் சரணடைகின்றேன்! எனக்கு அருள்க!

oகௌமேதகம்-கதை: பொன்மயமான மேரு மலையைப் போன்ற ஒளியுள்ளதும், அசுரர்களின் குலத்தையே அழிக்கக் கூடியதும், வைகுண்டவாசனின் கைநுனிகளின் ஸ்பரிசபாக்யம் பெற்றதுமாகிய கௌமேதகம் என்ற கதையை சதா சரணடைகிறேன்! எனக்கு அருள்க!

oநந்தகம்- வாள்: கொடிய அரக்கர்களின் கழுத்தைத் துண்டிப்பதால் பிரவாகிக்கும் ரத்தத்தில் மூழ்கி செந்நிற ஒளியுடன் காட்சி தரும் நந்தகம் என்னும் பெயருடைய வீரவாளை என்றும் சரணமடைகிறேன்! எனக்கு அருள்க!

oசார்ங்கம்-வில்: தேவர்களின் மனதிலிருந்து அச்சத்தைப் போக்குவதும், எதிரிகளை அச்சுறுத்துவதுமான நாணோசை உடையதும், மின்னல் ஒளி வேகத்தில் அம்புகளை மாரியாகப் பொழியக் கூடிய வல்லமை மிக்கதுமான சார்ங்கம் என்னும் வில்லை எப்போதும் சரணடைகிறேன்! எனக்கு அருள்க!

oஉயர்வானவையும் பரந்தாமனின் கரங்களில் இருக்கும் பாக்யத்தை பெற்றவையுமான பஞ்ச மகா ஆயுதங்களைப் போற்றும் இந்தத் துதியை தினந்தோறும் படித்து வணங்குபவர்களும் அதைக் கேட்பவர்களும் எல்லா துன்பங்களிருந்தும் விடுபட்டு சகல பாக்யங்களையும் அடைகின்றனர்! எனக்கும் அருள்க!

oவனங்களிலும், யுத்த பூமியில் சத்ருக்களின் மத்தியிலும், எதிர்பாரா விபத்துக்களின் போதும், அதீத பயத்தின் போதும் இந்தத் துதியைச் சொன்னாலும் படித்தாலும் ஆபத்துக்களிலிருந்து விடுபட்டு சகல நன்மைகளையும் அடைவர்! எனக்கும் அருள்க!

13.“வெங்கடேச காரவலம்பம்”- கடன்கள் தோஷங்கள் தீர- புரட்டாசி மாதத்தில்- தினமும்/ சனிக்கிழமை.

அகில உலகத்திற்கும் இறைவனே. வெங்கடாசலபதியே உனக்கு எனது வணக்கங்கள். அனைத்து உலகங்களையும் காப்பவரே உன்னை வணங்குகின்றேன். கருணைக்கடலே, உலகில் மாயையில் மூழ்கித் தவிக்கும் என்னைக் கரைசேர்த்து ஆதரவு கைகொடுத்து அருள்வாய். நான் பட்ட கடன்களைத் தீர்க்க என்மீது இரக்கம் காட்டு, மாகாலட்சுமியின் நாயகனே, எனக்கு எல்லா செல்வங்களையும் அருளி என் தோஷமெல்லாம் நீக்கி என்னைக் காக்கும் இறைவனே வெங்கடாசலபதியே உனக்கு எனது வணக்கங்கள்.

14.“முகுந்தன் துதி”- கண்ணனின் வருகை- பாலமுகுந்த அஷ்டகம்- கிருஷ்ண ஜெயந்தியன்று.

oதாமரை போன்ற கையினால், தனது தாமரை மலரையொத்த பாதத்தைப் பிடித்து தாமரை போன்ற முகத்தில் வைத்துக் கொண்டபடி ஆலிலை மேல் படுத்திருக்கும் அழகனை, பால முகுந்தனை மோக்ஷத்தை தருபவனை மனதால் நினைக்கின்றேன்!

oமகா பிறளயம் மூலமாக பிரபஞ்சத்தையே அழித்து விட்டு வடபத்ரசாயியாக ஆலிலை மேல் துயில்கின்றவரும், முதலும் முடிவுமான ஆதியோ அந்தமோ அற்றவரும், எல்லோருக்கும் ஈஸ்வரனும், சகலருக்கும் நல்லதையே அருள்வதற்காக அவதரித்தவருமான அந்த பாலமுகுந்தனை மனதால் நினைக்கின்றேன்!

oநீலோத்பல புஷ்பத்தின் கருமையிலும் ஓர் அழகு தெரியும். அத்தகைய திவ்யமான மிருதுவான வண்ணமுடையவரும், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் அனைவராலும் வணங்கப்படும் பாதத் தாமரைகளை உடையவரும், பிள்ளைவரம் வேண்டுமென்று கோருபவர்களின் இஷ்டத்தை நிறைவேற்றும் கற்பக விருட்சம் போன்றவருமான பாலமுகுந்தனை மனதால் தியானிக்கிறேன்!

oமுன்புறம் தொங்குகின்ற கேசங்களை- மயிர் கற்றைகளை உடையவரும், தொங்குகின்ற நீண்ட ஹாரத்தை உடையவரும், சிருங்கார ரசத்தை ஊக்குவிப்பது போன்ற அழகிய பல் வரிசைகளை உடையவரும் அழகிய கண்களை உடையவருமான பாலமுகுந்தனை மனதால் நினைக்கிறேன்!

oவிரஜ நாயகியான யசோதை வெளியே செல்லும் பொழுது உறியில் பால். தயிர், வெண்ணெய் ஆகியவற்றை பத்திரமாக வைத்து விட்டுப் போவாள். அவள் சென்றதும் குழந்தை கண்ணன் இஷ்டம்போல் அதையெல்லாம் சாப்பிட்டு விடுவான். அதன் பிறகு தூங்குவது போல பாவனை செய்து படுத்திருப்பான். அந்த அரி துயில் செய்யும் பாலமுகுந்தனை மனதால் துதிக்கின்றேன்!

oகாளிந்தி மடுவில் உள்ள காளியன் என்ற பாம்பின் படமாகிய அரங்க மண்டபத்தில் நடனம் செய்வதில் பிரியமுள்ளவரும். காளியனுடைய வாலின் நுனியைக் கையால் பிடித்துக் கொண்டிருப்பவரும், சரத் காலத்து சந்திரனைப் போன்ற முகமுடையவருமான பால முகுந்தனை மனதால் தியானிக்கிறேன்!

oஉரலில் கட்டப்பட்டவரும், மகாசூரரும், மிகவும் உயர்ந்த இரண்டு மருத மரங்களை விளையாட்டாகவே கீழே தள்ளியவரும், மலர்ந்த செந்தாமரை போன்ற நீண்ட அழகிய கண்களை உடையவரும் ஆகிய பாலமுகுந்தனை மனதால் தியானிக்கின்றேன்!

o செல்லமாக பிரியத்துடன் அன்னை யசோதாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டே ஸ்தன்யபானம் எனப்படும் தாய்ப்பாலை குடித்துக் கொண்டிருப்பவரும், செந்தாமரை போன்ற கண்களை உடையவரும், சத்ரூபியும், சித்ரூபியும் பலவகயான உருவங்களை உடையவரும், தேவாதி தேவருமாகிய பாலமுகுந்தனை மனதால் நினைக்கிறேன்!

o நீ நினைத்தால் எதுவும் நடக்கும்! என் வாழ்வு வளம்பெற உன்னை துதிக்கின்றேன்!

15.“கண்ணன் துதி”-மதுராஷ்டகம்- கிருஷ்ண ஜெயந்தி.

o மதுராவில் அவதரித்த மாயவனே! உனது இதழ்கள் அழகானவை. முகம் வசீகரமானது. கண்கள் வனப்பானவை. உனது புன்முறுவல் அழகு. இதயம் அழகு, தளிர்நடை அழகு, மதுராதிபனே நீ நிறைந்திருப்பதால் அகிலமே அழகானது.

oஉனது பேச்சு இனியது. தன்மை அழகானது. நீ இருக்கும் இடம் அழகு. தவழ்தல் அழகு, நகர்தல் அழகு. சுழற்சி அழகு, மதுரா நாயகனே எதிலும் நீயே நிறைந்திருப்பதால் உலகமே அழகு.

oஉனது குழல் ஓசை இனிமையானது. பாத துளி உயர்வானது. கைகளும் கால்களும் அழகு. உன்திரு நடனம் ஒய்யாரமானது. பழகுதல் அழகு. மதுரா நாயகனே எதிலும் நீ இருப்பதால் அகிலமே அழகு.

oஉனது கீதம் அழகு. நீ பருகுதலும் அழகு. உண்பதும் காண்பதும் அழகு. தூங்குவது கொள்ளை அழகு. உன் உருவம் அழகு. உனது நெற்றிப்பொட்டு அழகு. மதுரா நாயகனே எல்லாமே நீ என்பதால் அகிலமே அழகு.

oஉனது செயல்கள் அழகு. நீ எதையும் கடந்து நிற்பது அழகு. பக்தர்களின் மனதை அபகரிப்பது அழகு. உன்னைப்பற்றி நினைப்பதே இனிமையானது. அணி அழகு, தோற்றம் அழகு, மதுராபுரியரசே, யாவும் நீயாக இருப்பதால் இவ்வுலகமே அழகானது.

oகதம்ப பூக்கள் அழகு. மாலை அழகு. அலைகள் அழகு. நீர் அழகு. கமல மலர் அழகு. மதுராபுரி நாயகனே, அகிலமே உனது என்பதால் அதுவும் பேரழகு.

oகோபிகைகள் அழகு, லீலை அழகு, இனைதல் அழகு, சிஷ்ட பரிபாலனம் அழகு, மதுராதிபனே சகலமும் நீயே என்பதால் அகிலமே அழகு.

oகோபர்கள் அழகு. பசுக்கள் அழகு, பிரிதல் அழகு, பயன் பலிப்பது அழகு, நீயே எதிலும் பரவி நிற்பதால் இந்த உலகமே அழகு.

16.“கிருஷ்ணன் துதி”- குந்திதேவி சொன்ன துதி- கிருஷ்ண ஜெயந்தியன்று.

வாசுதேவர்- தேவகியின் அருமைப் புதல்வனே கிருஷ்ணா, நந்தகோபரின் வளர்ப்பு மகனே கோவிந்தா, பசுக்களைப் பரிபாலித்தவனே கோபாலா, தங்களை வணங்குகின்றேன். நாபியில் கமலமான தாமரையை தரித்திருப்பவரே, தாமரை போன்ற கண்களை உடையவரே, பத்மரேகையைத் தன் கால்களில் கொண்ட மாகவிஷ்ணுவின் அவதாரமே, கிருஷ்ணா, தங்களை மீண்டும் வணங்குகின்றேன்.

17.“ராமநவமி ராமர் ஸ்லோகம்”- துக்கங்கள் விலகி சந்தோஷம் கிடைக்கப்பெற- ஆதிசங்கரர்- இராமநவமி -அன்று.

ராமச்சந்திரனே, ரகு குலத்து நாயகனே, தேவனே, தீனர்களைக் காப்பவனே. பாவங்களைப் போக்குகிறவனே, யாதவர்களில் சிறந்தவனே, யதுக்களுக்கு ஆபரணம் போன்றவனே, யஜ்ஞ வடிவினனே, மகாலட்சுமியாகிய சீதையின் நாயகனே, எனது எல்லா துக்கங்களையும் போக்கி சந்தோஷத்தைத் தரவேண்டும். வணங்குகிறேன்.

18.“ராமநவமி ராமர்-மகாவிஷ்னு ஸ்லோகம்”- சீரான வாழ்வுடன் மங்களங்கள் யாவும் கிடைக்கப்பெற-இராமநவமி -அன்று- நாரதமுனி அருளிய- ப்ரஹ்ம பாரம்- வராஹ புராணம்.

oமேலானவற்றுக்கொல்லாம் மேலானவன், அரியதற்கும் மேலாக அரிதானவன், மிகுந்த சக்தி உள்ளவன், நிரந்தரமானவன், எவராலும் பக்தியால் அடையக் கூடியவன், ஒப்பற்றவன், முன்னைக்கும் முந்தையவன், ஒளிமயமானவன், ஞானிகளுக்கெல்லாம் முதன்மையான பரம ஞானஸ்வரூபனான அந்த விஷ்னுவை நமஸ்கரிக்கின்றேன்.

oபுராதனமானவரும் அன்புருவானவரும், பராபரரும், அதீதமான தேஜசையுடையவரும், கம்பீரத்திற்கும் மேலான கம்பீரமுள்ளவரும், பழமைக்கும் பழைமை யானவரும், சக்தியே வடிவெடுத்தவருமாகிய அந்தப் பரமாத்மாவைத் துதிக்கிறேன்.

oபராத்பரனும் தனக்கு இணையாக எவரும் இல்லாதவரும், சுத்த சொரூபியும், அளவற்றவரும், பராத்பரேசரும், ஆதியானவரும் குற்றமற்ற சுபாவமுள்ளவருமான நாராயணனை நமஸ்கரிக்கிறேன்.

oஅவரே முன்பு சூன்யத்திலிருந்து ‘புரம்’ உலகம் என்பதை உண்டாக்கினார். அவரே பிரகிருதியையும் தோற்று வித்தார். அதில் உறையும் ஆத்மாவான புருஷனையும் அவரே உண்டாக்கினார். வணங்குகிறேன்.

oஅப்பாலுக்கு அப்பாலானவரும், நீதிமான்களில் தலைமையானவரும், அண்டியவரைக் காப்பவரும், அமைதியின் வடிவமானவரும், போற்றுதலுக் குரியவரும், மகானு பாவருமான விஷ்னுவை சதா நமஸ்கரிக்கின்றேன்.

oமுடிவே இல்லாதவரும், ஆயிரக்கணக்கான கை, கால், முகங்களை உடையவரும், எல்லாம் தானாக இருப்பவரும், சூரியனையும் சந்திரனையும் தனது கண்களாகக் கொண்டவருமான அந்த நாராயாணனைத் துதிக்கின்றேன்.

oபடைத்தல் காத்தல், அழித்தல் என்று மூன்று தொழில்களையும் புரிபவனும், மூன்று வேதங்களையும் அடையக்கூடியவனும், இருபத்தெட்டு உருவங்களை உடையவனும், உத்தராயணம், வளர்பிறை, பகல் என்ற மூன்று காலப் பரிமாணங்களில் நிலை கொள்பவனும், தக்ஷிணம், ஆஸ்வனீயம், கார்ஹபத்யம் என்ற மூன்று சத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று தத்துவங்களுக் குரியவனுமான நாராயணனை நமஸ்கரிக்கிறேன்.

oக்ருதயுகத்தில் வெண்மையாகவும், திரேதா யுகத்தில் சிவப்பு நிறத்திலும், த்வாபர யுகத்தில் மஞ்சள் நிறத்தோடும், கலியுகத்தில் கருநிறத்தோடும் விளங்கும் அந்தப் பரந்தாமனை நமஸ்கரிக்கின்றேன்.

oபிரபஞ்ச சரீரத்தில் அந்தணர்களை முகத்திலிருந்தும், க்ஷத்ரியர்களை தோள்களிலிருந்தும், வைசியர்களைத் தொடைகளிலிருந்தும், இதரர்களை பாதங்களிலிருந்தும் உண்டாக்கியவர் அவரே. வணங்குகிறேன்.

oஅளவிடமுடியாதவரும், உயர்ந்தவர்களையெல்லாம் விட உயர்ந்தவரும், புதியவர்கள் யாவரையும்விடப் புதுமைக்கும் புதுமையான புதியவரும், ஸ்ரீகிருஷ்ணன் என்கிற உருவெடுத்தவரும், தனது கரங்களில் கதை, வாள். தன்வந்திரியாக அமிர்தம் ஆகியவற்றை வைத்திருப்பவரும் இனையில்லாதவருமான நாராயணரை நமஸ்கரிக்கிறேன்.

oஇவ்வாறு என்னால் துதிக்கப்பட்டவுடன் பகவான் விஷ்னு நேரில் தோன்றி, தேவையான வரத்தைக் கோரிப் பெறுக என்று ஆசியளித்தார். நாரம் என்ற இசை வெள்ளத்தை அவர் எனக்கு அளித்ததால் நாரதன் என்ற பெயர் பெற்றேன். பெருமையும் பெற்றேன். இத்துதியைப் பாடிப் பணிவோர் எவரும் அவன் அருள் வெள்ளத்தில் நனைவது நிச்சயம். வணங்குகிறேன்.

19.நாராயணீயம் - மகாலட்சுமி அவதாரத்தின்போது- நாராயண பட்டத்திரி பாடியது- வெள்ளிக் கிழமை, தீபத் திருநாள்.

oகடலிருந்து காலகூட விஷம் பயங்கர நெருப்பாக வெளிவந்தது. அதனால் பயந்த தேவர்கள், பரமசிவனை தஞ்சமடைந்து துதித்தார்கள். அதனால் மகிழ்ந்து போன பரமசிவன் உன்னுடைய விருப்பத்தை மதித்து அந்த விஷத்தைக் குடித்து விட்டார்! உன்னை வணங்குகின்றேன்!

oமூன்று மூர்த்திகளின் வடிவானவரே! தேவர்களும் அசுரர்களும் மேலும் புது முயற்சியுடன் உன்னை முன்னிட்டு பாற்கடலைக் கடைந்தார்கள். அப்பொது காமதேனு தோன்றினாள். அவளை நீர் வேள்வி காக்க ரிஷிகளிடம் அளித்தீர். பிறகு மிகச் சிறந்த குதிரை உச்சை சிரவஸ் தோன்றியது. அதன் பின் ஐராவதம் என்ற சிறந்த யாணை, கற்பகமரம், அப்சர ஸ்த்ரீ கணங்கள் தோன்றின. அவற்றை தேவர்களுக்கு அளித்தீர்கள்! உன்னை வணங்குகின்றேன்!

oஜகதீசரே! அதன் பின்னர் மனதைத் தங்களிடமே வைத்தவளும் மனத்திற்கு இனியவளுமான மகாலட்சுமி தோன்றினாள். மாசில்லாத அந்த மகாலட்சுமியைக் கண்ட யாவரும் நெஞ்சம் பரபரக்க அவளை அடையவே விரும்பினார்கள்! உன்னை வணங்குகின்றேன்!

oதங்களுக்கென சமர்பிக்கப்பட்ட மனமுடைய லக்ஷ்மிதேவிக்கு தேவேந்திரன் இரத்தினமயமான பீடத்தை அளித்தான். எல்லோரும் அபிஷேக சாமான்கள், சாதனங்களைக் கொண்டுவர, மகரீஷிகள் வேத கோஷங்களோடு அபிஷேகம் செய்தார்கள்! உன்னை வணங்குகின்றேன்!

oதன்மேல் சொரிந்த அபிஷேக நீரோடு, உங்கள் பாசப் பார்வைகளையும் உள் வாங்கிப் பிரகாசிப்பவளுமான மகாலட்சுமியை, தேவர்கள் ரத்ன குண்டலங்கள், ஹாரம் போன்ற அணிகலன்களாலும் மஞ்சள் பட்டாடையாலும் அலங்கரித்தார்கள்! உன்னை வணங்குகின்றேன்!

oஅழகுப் பதுமையான மகாலக்ஷ்மி, கையில் சுயம்வர மாலையுடன் உங்களை நோக்கி வந்தாள். அந்த மாலையை வண்டுகள் ரீங்காரத்துடன் சுற்றிச் சுற்றி வந்து மொய்த்துக் கொண்டிருந்தன. கும்பங்கள் போன்ற அவளின் தனங்களின் பாரம் அழுத்தியதால் அந்த மகாலட்சுமியின் நடை மென்நடையாக இருந்தது. அப்படி அவள் நடந்து வரும்போது பாதச் சிலம்பு ஜல். ஜல்லென்று ஒலித்தது. அந்த ஒலியோடு, நாணம் போட்டியிட நடந்து உங்களை வந்து அடைந்தாள். உன்னை வணங்குகின்றேன்!

oசிவன், பிரம்மா போன்ற சற்குண சீலர்கள் அங்கே இருந்தார்கள். இருந்தாலும் அவர்கள் ஏதேனும் ஒருவகையில் தோஷம் உள்ளவர்களாக இருந்தார்கள். இதனை அலைமகள் உணர்ந்திருந்ததால் தான் எல்ல நல்ல குணங்களை உடையவரும், மனதை மயக்கும் மாயவனுமாகிய தங்களுக்கே, மகாலட்சுமி மாலை சமர்பித்தாள்! உன்னை வணங்குகின்றேன்!

oலோக மாதாவாகவும் உம்மைத் தவிர வேறு எவரிடதிலும் நாட்டமில்லாதவளாகவும் இருந்த அந்த தேவியை உடனே நீர் உமது மார்பில் தாங்கிப் பெருமைப் படுத்தினீர். உமது மார்பில் பிரகாசித்த அந்த மகாலக்ஷ்மியின் சுபிட்சம் என்ற இன்ப மழையால் உலகமே செழித்தது! உன்னை வணங்குகின்றேன்!

oஅதன் பின்னர் எவரையும் விரைவில் மயங்கச்செய்யும் குணமும், வீண் திமிர், கர்வம், கோபம், சுயநினைவு இன்மை ஆகியவற்றை உண்டாக்கும் வல்லமையும் படைத்தவளான வாருணீதேவி பாற்கடலிருந்து வெளிப்பட்டாள். தமோ குணத்திற்கு இருப்பிடமானவள். அசுரர்கள் பாற்கடலை கடைந்ததற்குத் தங்களுக்கு சிறந்த வெகுமதி அவளே எனக் கருதும் வகையில், மதுவுக்கு அதிதேவதையான வாருணீதேவியை அசுரர்களுக்கு அளித்தீர்கள்! உன்னை வணங்குகின்றேன்!

oபிறகு மேகம்போல திரண்ட அழகுத் திருமேனியோடு இரு கைகளாலும் அமிர்தகலசத்தை ஏந்திக் கொண்டு கடலிருந்து தன்வந்திரியாகத் தாங்களே வெளிப்பட்டீர்கள்! என் வாழ்வில் மங்களங்கள் நிலைத்திட நீரே அருள்வீராக, வறுமைகள் விலகவும், நோய்கள் நீங்கி அரோக்கியமும் ஆயுளும் நீடிக்கவும் அருள் செய்வீராக! உன்னை வணங்குகின்றேன்!

20.“நாராயணீயம்”- வெப்ப உஷ்ணத்தின் பாதிப்பை நீக்க- நாராயண பட்டத்திரி பாடியது

oகுருவாயுரப்ப, உன் தோழர்களான ஆயர்குலச் சிறுவர்கள் காணவேண்டு மென்பதற்காகவே, பிரலம்பாசுரனுடன் நடத்திய போரை நெடுநேரம் நடத்தினாய், உன் நண்பர்களும் கண்டு களித்தார்கள். அவர்கள் தம்மை மறந்து இவ்வாறு களித்துக் கொண்டிருந்த போது, மேய்ந்து கோண்டிருந்த பசுக்கள் தாமாகவே பசும் புற்களைத் தேடிப்போய், ஐஷிகம் என்ற காட்டுப்பகுதியை அடந்தன.

o குருவாயூரப்ப, ஐஷிகம் என்ற அந்தக் காட்டில் வெயில் கடுமையாக இருந்தது. அதனை எதிர்பாராத பசுக்களுக்கு ஏன் கொடுமையான அந்த வெம்மை அனுபவம். பிருந்தாவனத்திலிருந்த வரையில் இத்தகைய வெப்பத்தை அவை உணர்ந்திருக்கவில்லை. அந்தக் காட்டை அடைந்தபோது அவற்றின் தவிப்பு மும்மடங்காகியது. வெயிலின் கொடுமை படிப்படியாக அதிகரித்தது. முதல் வாட்டம் என்றால், புதிய திசை தெரியாத காடு என்பதும், கண்ணனாகிய உன்னை விட்டுப் பிரிந்த வருத்தமும் பரிதாக வாட்டியது, அதோடு அவற்றுக்குத் தாளமுடியா தாகம் வேறு வாட்டி எடுத்தது. அவை செயலற்று நின்றன.

o குருவாயூரப்பா! அப்போது நீர் ஏதும் அறியாதவர் போல் ஆயர் சிறுவர்களுடன் சேர்ந்து பசுக்களைத் தேடினீர். சிறிது நேரம் கழித்து கொடிய வெப்பத்தால் தானே பற்றி எரியும் தன்மை கொண்ட முஞ்சைக் காட்டின் நடுவே பசுக்கள் தவிப்பதைக் கண்டீர்கள். அவற்றை மீட்டுவர நீங்கள் முயன்றபோது திடீரென்று வெப்பத்தால் காட்டுத் தீ பற்றி நான்கு திசைகளிலுமிருந்து எரியத்தெடங்கியது அல்லவா.

o அந்தக் காட்டுத்தீ பெருத்த ஓசையுடன் நாலா புறமும் பரவி பற்றி எரிந்தது. அதனால் திரும்பி வரும் வழி தடைப்பட்டது. ஆயனச் சிறுவர்கள் தீயின் வெம்மையும் வெயிலின் கடுமையும் சேர்ந்து வாட்டியதில் பாதி கருகினவர்கள் போலாகி விட்டனர். மனமும் உடலும் நொந்து ஹே ஜெகன்னாதா எங்களைக் காப்பாற்றும் காப்பாற்றும் என்று கூவினார்கள். எத் துன்பத்திலும் காப்பாற்றும் ஒரே பரம்பொருள் நீர்தானே!

o நீ என்ன செய்தாய் தெரியுமா கிருஷ்ணா. அஞ்சிய ஆயனச் சிறுவர்களுக்கு உடனே அபயம் அளித்தாய்! அஞ்சியது போதும் போதும். நீங்கள் எல்லோரும் கண்களை மூடிக்கொள்ளுங்கள் என்று கட்டளை போல் சொன்னாய். உன் வார்த்தை அயனச் சிறுவர்களுக்கு வேதவாக்கியம் அல்லவா. அப்படியே கண்களை மூடிக் கொண்டார்கள். அவர்கள் கண்களைத் திறந்தபோது என்ன ஆச்சரியம். காட்டுத்தீ எங்கே. முஞ்சைக்காடு எங்கே. அதிசயம். அவர்கள் பாண்டீர மரத்தின் நிழலில் மிகவும் பத்திரமாக இருந்தார்கள்.

o ஜய ஜய மாதவா எப்பேர்பட்ட மாயை. உமது மாயை என்று ஆயர் சிறுவர்கள் உன்னைப் போற்றிப் புகழ்ந்தார்கள். நீரோ புன்முறுவல் பூத்துக் கொண்டு நின்றீர்கள். அந்தக் காட்டில் பூத்திருந்த பாதிரி மலர்களால் மட்டுமே அது கோடைகாலம் என்பது தெரிந்தது. உனது மாயையினால் அந்த வெப்பத்தைப் போக்கி விட்டாய். பின்னர் உன் தோழர்களுடன் அக்காட்டில் சுற்றித் திரிந்தாய்.

o குருவாயுரப்ப. நீ அந்த யமுனை கரையிலிருந்த போது கோடைகாலம் எப்படி இருந்தது. உன்னிடம் பக்தி இல்லாதவர்களின் உள்ளத்தில் உண்டாகும் துன்பத்தின் வெப்பம் போலிருந்தது. மனதில் உள்ள பாவம் என்னும் சேற்றைக் காய வைக்கும் தன்மையுடைய இதமான வெப்பம் உன்னுடைய சத்சங்க பஜனை சேவைபோல பாகவத சேவை போல இருந்தது. உன்னுடைய கைகளிலிருந்து வெளிப்படும் ஒளிபோல் இருந்தது. நமக்கு குருவாயுரப்பன் அருளால் அத்தகைய கோடைகாலம் கிடைக்கட்டும்.

o குருவாயுரப்ப. அந்தக் கோடைகாலத்தைத் தொடர்ந்து உனது கரிய திருமேனி போன்ற கருமேகங்கள் தோன்றின. தங்கள் இடையில் உள்ள பொன்னாபரணங்களைப் போல ஒளி வீசும் மின்னற் கொடிகள் தோன்றின. எல்லோருக்கும் இதமளிக்கும் மழைக்காலத்தை மலைக்குகைகளில் தங்கி உங்கள் விருப்பம் போல கழித்தீர்கள்.

oதேவதேவா. மலையரசனான கோவர்த்தனகிரி தன்னிடத்தில் உள்ள குகைகளில் தங்கியிருந்த உமது மேன்மையை உணர்ந்து தன்னிடமுள்ள மயில்களைக் கொண்டு காரூக போன்ற ஒலிகளை எழுப்பித் துதி செய்தான். மல்லிகை, கதம்ப மலர்களால் உனக்கு மலர் வழிபாடு செய்யும் பாக்கியத்தைப் பெற்றார்.

oஅதன்பின் சரத்காலம் வரைத் தாங்கள் அந்த வனப் பகுதியில், அடர்ந்த காடுகளின் அழகை ரசித்துக் கொண்டு வலம் வந்தீர்கள். அந்த சரத்காலம் எப்படி இருந்தது தெரியுமா. உங்களின் பக்தர்களின் தெளிந்த நிர்மலமான நதி கருணை பெருக்கொடுத்து ஓடுவது போலிருந்தது. தங்களுடன் வந்த பசுக்கள் புற்களை மேய வகை செய்தும், பல லீலைகளைச் செய்து வேனுகானம் இசைத்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய பவனேபுரீசரே எனக்கு உடல் நலனைக்கொடும். பிரச்சனை எனும் வெம்மை எம்மை அனுகாமல் காத்திடுங்கள். மகிழ்ச்சி, குளுமைத் தென்றலாக வீசிட அருளுங்கள்.

21.“சுந்தரகாண்ட பாசுரம்”- தடைகள் போக்கி சுகங்கள் சேர்க்கும்- சுந்தரகாண்டம் முழுதும் படித்த பலன்.

சீராரும் திறல் அநுமன் மாகடலைக் கடந்தேறி
மும்மதிள் நீளிலங்கை புக்குக்கடிகாவலில்
வாராரும் முலை மடவாள் வைதேகிதனைக் கண்டு
நின்னடியேன் விண்ணப்பம் கேட்டருளாய்
அயேத்தி தன்னில் ஒர்
இடவகையில் எல்லியதோது இனிதிருக்க
மல்லிகை மாமாலை கொண்டாய் கார்த்ததுவும்
கலக்கியமா மனத்தினனாய் கைகேயிவரம் வேண்ட
மலக்கியமா மனத்தினனாய்
மன்னவனு மாறாதொழியக்
குலக்குமரா காடுறைப்போ என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னோடு சுங்கு யேகியதும்
கங்கை தன்னில் கூரணிந்த வேல் வலவன் குகனோடு
சீரணிந்த தோழமை கொண்டதுவும்
சித்திர கூடத்திருப்ப பரதநம்பி பணிந்ததுவும்
சிறுகாக்கை முலைதீண்ட அனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமா நின் அபயமென்ன
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும்
பொன்னொத்த மானொன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழிநின்று சிலைபிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்
அயோத்தியர்கோன் உரைத்த அடையாளம்
ஈதுஅவன் கைமோதிரம் என்று
அடையாளம் தெரிந்துரைக்க
மலர்க் குழைவாள் சீதையும்
வில் இறுத்தான் மோதிரம் கண்டு
அநுமான் அடையாளம் ஒக்கும் என்று
உச்சிமேல் வைத்து உகக்க
திறல் விளங்கு மாருதியும்
இலங்கையர் கோன்மாக் கடிக்காவை இறுத்துக்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று
கடி இலங்கை மலங்க எரித்து
அரக்கர்கோன் சினமழித்து, மீண்டும் அன்பினால்
அயோத்தியர் கோன் தளர் புரையும் அடி இனைபணியச் சென்றான்.

22.“இராமாயணப் பாசுரம்”- புண்ணியங்கள் சுகங்கள் சேர்க்கும்- இராமாயணம் முழுதும் படித்த பலன். சுவாதி திருநாள் மகாராஜா எழுதியது-பவயாமி ரகுராம் துதி.

oஒ ராமா வணங்குகின்றேன். ரகு குல திலகா, கருணை சொரூபனே உன்னை துதிக்கின்றேன். கருணைக்கடலில் விளையாட்டாகவே ரமிப்பவனே உன்னையெ பணிகின்றேன். வேள்விகளின் நாயகனான சூரியனின் குலத்தில் உதித்தவனே! ரகு குல திலகனே வணக்கம்.

oவனம் சென்று சுபாஹு என்ற அரக்கனை கொன்றவனே. அகல்யா என்ற கௌதமுனி மனைவிக்கு சாபம் தீர்த்தவனே. சிவதனுசை உடைத்தவனே. அதன் பயனாக ஜனககுமாரியின் பிராணநாயகன் ஆனவனே. கார்த்தவீர்யார்ச்சுனன் இழைத்த அநீதியினால் கோபமடைந்து க்ஷத்ரிய வம்சத்தின் தலைமுறைகளை அழித்ததாக கர்வப்பட்ட பிருகுராமனின் கொட்டத்தை அடக்கியவனே. வணக்கம். சாகேத ராமா வணக்கம்.

oபட்டாபிஷேகத்தை ஒதுக்கி, மனைவி சீதை மற்றும், அடக்கம் தர்மத்தின் இலக்கணமான லட்சுமணனுடன் கானகம் சென்று குகனுடைய இருப்பிடத்தை அடைந்தவனே, அதன்பின் சித்ரகூடபர்வதத்தை அடைந்தவுடன், தம்பி பரதன் உன்னை காண ஒடிவந்தான், மன்மதனும் மயங்கும் சுந்திரனே. அப்போது தானே திவ்ய ரத்னங்களிழைத்த பாதுகையில் வைபோகம் நடந்தேறியது.

oஇருளடர்ந்த தண்டகாரண்யம் சென்றபோது விராடன் என்னும் ராட்சசனைக் கொன்றவரே. மாசில்லா குணக்குன்றான நீங்கள் அகஸ்தியரின் சீடரான சரபங்க முனிவருக்கு மோட்சம் அருளியது வைஷ்ணவாஸ்திரம் போன்றது. பஞ்சவடியில் தவசீலனாய் எளிமையாய் வாழ்ந்த உம்மை கழுகுகளின் அரசான ஜடாயு வணங்கியது. கோர சொருபமான சூர்ப்பணகை தனது இறுதிப் பயணம் தேடி ஓட வகை செய்த ராமா உன்னை வணங்குகின்றேன்.

oமாயமான் உருவெடுத்து வந்த அரக்கன் மாரீசனைக் கொன்றவனே. பத்துத் தலைகளையுடைய ராவணன், ஜனகரின் மகளைத் தேடிவந்து கடத்திச் சென்றான். பாவமற்ற புண்ணிய சீலனான அந்த சூரிய குலத்தோன்றலான ராமபிரான் பம்பாதீரத்தில் ஆஞ்சநேயரை சந்தித்தார். அதன்பின் ராட்சசர்களின் நண்பன் வாலியைக் கொன்றான். உன்னை வணங்குகின்றேன்.

oவானர அரசருடன் கலந்து ஆலோசித்து வாயு குமாரனான அனுமனிடம் நூறு சூரிய ஒளிமயமான கெம்பினால் இழைக்கப்பட்ட கணையாழியைக் கொடுத்தார். அவரும் தாம் திரும்பி வரும் போது கொணர்ந்த சூடாமணியைக் கண்டவுடன் அனைத்து செல்வங்களும் மீளக் கிடைத்தாற்போல் உணர்ந்தார். சமுத்திரக் கரையில் விபீஷணர் சரணடைந்த ராமரை நான் பணிவோடு வணங்குகின்றேன்.

oஎவர் சேது அணையைக் கடலின்மேல் கட்டி அசுர வேந்தனின் சிம்மாசனத்தை உலுக்கினாரோ, எவர் தசகண்ட ராவணனை எளிதில் கொன்ற அதிதீரரோ, எவர் அக்னி பிரவேசம் புரிந்து தூய்மையை அறிவித்த ஜனககுமாரியுடன் சாகேதபுரிக்கு வந்து பட்டாபிஷேகம் செய்து கொண்டாரோ, அந்த லோக நாயகனான பத்மநாபனை புஜிக்கின்றேன்.

23.“பஜகோவிந்தம்” வாழ்க்கையில் தெளிவு ஏற்பட அவசியம்படிக்க வேண்டியது- மூலம்-ஜகத்குரு ஆதிசங்கரர்.
கோவிந்தன் வாழி! நம் கோவிந்தன் வாழி! 
கதிவேறில்லை மதிகெட்ட மனமே. 
மரணம் வந்தெதிரில் நிற்கும்போது 
சரணம் வேறில்லை, மாதவனடியின்றி.

வாவென்று காலன் வந்தழைக்குங்கால் 
ஆவென்று அலறுவாய் கற்றறி மூடனே!
நெட்டுருஞ் சூத்திரங்கள் அப்போது 
சற்றேனும் உதவா மடமதியே!

செல்வம் ஈட்டும் ஆசைஒரு தீராத்தாகம், வெல்லுதல் வேண்டும் 
அந்தப் பொல்லா நோயை. நல்ல முடிவு செய்துகொள் 
உள்ளத்திலே, சொந்தத்தில் பாடுபட்டு வந்ததை வைத்து
அந்த மட்டில் போதுமென்று மகிழ்ந்து அமர்வாய்.

நம்பாதே நரம்பு வேகத்தை
நோக்காதே நாரியர் தேகத்தை
வலுவில் ஏன் வாவெனல் 
விவேகமழிக்கும் வியாமோகத்தை!

மார்பின் அழகும் இடையின் அந்தமும்
வேர்வையும் மலமும் அழகும் தசையுமென்று
தீர்த்த இந்த உண்மையைத் திரும்ப திரும்ப 
ஓர்த்தோர்ந்து உள்ளத்தில் உறுதி அடைவாய்!

மனஸி விசிந்தய வாரம் வாரம்
ஆயுள் முழுவதும் தீராத் துயரம்
நோயும் நொடியும் உடலை வாட்ட
பற்றும் வாட்ட மதிகெட்ட மனதை

சற்றும் ஒழியாது ஆசைமேல் ஆசை
தாமரை இலையின் நீர்த்துளி போல்
சாகும்வரை அலைச்சல், சுகமொன்றில்லை
சஞ்சலமன்றிச் சாந்தமென்பது கொஞ்சமுமில்லா வாழ்க்கை!

பலமுள்ளபோது சம்பாத்திய சக்தி
சம்பாத்தியமுள்ளவரை பந்து பாத்திய பக்தி
வருமானமுள்ள மட்டும் பரிவாரக் கூட்டம்
கிழவனாய்ப் படுத்தபின் விழுந்தோடிக் கலையும்

மூதேறிப் போனால் ஏதென்பாரில்லை.
மூச்சுள்ளபோது மனையாளின் பேச்சு
கட்டியணைத்த தேகம் பட்டுப் போச்சு என்றதும்
பயங்கொண்டகல்வாள் சுயம்வர மனைவியும்.

விளையாட்டில் தீரும் குழந்தைப்பருவம்,
பின்னர் வளையல் கை மகளிரே சிந்தனையெல்லாம்,
மனைவியும் மக்களும் கிழவன் விசாரம்,
கடவுளை நினைப்பனில்லை எந்த சூழலிலும்.

சொந்தமேது பந்தமேது மனிதர்குலமே, விந்தையே 
அனைத்தும் சிந்தித்தாயேல், மனைவியர் மகனார் 
நீயுந்தானார் அனைத்துமே மாயை என்றுணர்வாய்
குலமேது ஊரேது உயிருக்கு!

நல்லது நல்லது நல்லவர் நேசம், அதனால் 
குறையும் பிடித்த பாசம், பாசம் குறையத் தீரும் 
மோகம். மோகம் போயின் சித்தத்தில் அமைதி
அதுவே உயிருடன் வீடெனக் கண்டுகொள்.

முதுமை மேலிட மாயும் காமவிகாரம்
வற்றிய நீர்நிலை இருந்தவிடம் காணாது,
செல்வம் சுருங்கியது சூழ்ந்த சுற்றம் எங்கே!
ஞானம் பெற்றதும் ஓயும் மாயமெல்லாம்.

துறவு மார்க்கமே மார்க்கம், உறவும் 
பணமும் வயதும் நம்பிட வேண்டாம், ஆங்காரம் 
போங்காலம் வந்தால், சடக்கென்று மறையும் 
மகனே நொடிப்பொழுதில் எல்லாம்.

காலையென்றும், நடுப்பகலென்றும், மாலைச் சந்தியென்றும், 
மீன்திகழ் இரவு என்றும், கோடையென்றும் குளிர்பனியென்றும் 
ஆடியாடிக் களிநடனமாடும் காலதேவியவள். இடையறா 
தறுத்தாயுளைக் கழித்தும், மடைமை ஆசை தணியவில்லையே.

புத்திகெட்ட மனமே, உன்னை நடத்துவார் இல்லையோ!
சொத்தும் மனைவியும் இப்பவும் விசாரமோ!
இறக்கும் தறுவாயேனும் நல்லாரின் சேர்க்கை
பிறவிக் கடலைக் கடத்தும் நல்ல நாவாயாமே!

நரம்பெல்லாம் நைந்தன, மயிரெல்லாம் நரைத்தது,
குரங்கு முகமாச்சு, பல்லும் இழந்தாச்சு,
கோலூன்றி நடக்கின்றான் தள்ளாடும் கிழவன்,
மேலும் மேலும் ஆசை இதற்கென்ன செய்வதையோ!

மரத்தடி இருப்பிடம், எடுப்பது பிச்சை,
இரவினில் மோவாய்ச் சேருது முழங்கால் 
இவனையும் ஆட்டுது போராசைப் பேய்
எவனையும் விடாதோ தீரா இந்நோய்!

கங்கையில் குளித்து கடலில் மூழ்கி எங்கேயும் போய் 
எந்த நோன்பு நோற்றும், தானங்கள் பலசெய்து புண்ணியம் 
பல சேர்த்தும், ஞானத்தை அடையாது விடுதலையில்லை.
இமயமுதல் குமரிவரை நிலைத்த சமயங்கள் சொன்னது இதுவே!

போகமும் சொத்தும் நீத்ததே செல்வம், ராக விகாரம்
காத்ததே இன்பம், அன்றொரு கோபுரவாயில்,
இன்றொரு மரத்தின் நிழல், படுப்பது தரை, உடுப்பது தோல்
தடுப்பார் யார் வேண்டாமையின்பம்!

யோகத்திலிருப்பவனும் ஒரு சுகவேகத்திலிருப்பினும்
கூட்டத்திலிருப்பினும், தனியிடத்திலிருப்பினும்
அகிலம் கடந்த மெய்ப்பொருளில் கலந்து
மகிழும் மகிழ்ச்சியே அளவிலா மகிழ்ச்சி.

சிறு அளவேனும் பகவத்கீதை ஓதி, ஒரு துளியேனும் 
கங்கைநீர் அருந்தி, ஒரு கணமேனும் 
எப்போதேனும் திருமாலை வழிபட்டிருந்தாயேல்
ஒருவித பேச்சும் வாதமுமில்லை வரும் எமணுக்கு உன்னிடம்.

பொறுப்பது கஷ்டம்! அருள்வாய் முராரி!
பிறப்பது மிறப்பதும் மறுபடி பிறப்பதும்
கரைகாணேன் பிறவிக் கடலுக்கு,
சரணம் சரணம் காப்பாய்!

புண்ணியம் தேடமாட்டான் பாவமும் செய்யான்
கண்ணனில் கரைந்து போச்சு இந்தபித்தனின் சித்தம்
குப்பைக் கந்தலுடுத்தியதுவே நல்லாடையென்பான்
எப்பவும் ஆனந்தம் மனந்த ஆனந்தமிவன் உள்ளம்.

என்ன ஈதெல்லாம், நான் யார்! நீர் யார்!
அன்னையும் யார்! அப்பனார் யார்! யாதெம் ஊர்!
ஒன்றுமில்லை இங்கே தேடும் பொறுள் எனக் 
கனவின் கவலைகளைத் துறப்பாய்!

என்மேல் ஏன் கோபம் அண்ணே! 
தன்னையே தான் வெறுத்தல் விவேகமோ!
என்னுயிருக்கும் உயிராவான் கோவிந்தன்
உன்னுயிர்க்கும் அவனே உயிரன்றோ!

யாதுமோர் உயிர் ஏதிலுமோருயிர்
ஏதுயிரும் கோவிந்தன் கோயிலே அன்றோ!
யாது பொருளுமில்லை உன் வெறுப்பில் அண்ணே!
பேத எண்ணம் நீத்தெங்கும் ஒருயிரைக் காண்.

பகையென்றும் நட்பென்றும் பாராதே, மகனென்றும் 
உறவென்றும் மயங்காதே, சிவனடி சேரவேண்டின் சீக்கிரமே
எவனின்று அகல்வதும் வேண்டாம், சேர்வதும் வேண்டாம் 
நட்பென்று, யார் மாட்டும் நிற்பாய் ஒன்றுபோல.

சேமம் உனக்கு சொல்வேன், 
காமம் வேண்டாம், கோபம் வேண்டாம் 
ஆபத்தினின்று தப்புவாயேல் அகற்றுவாய் 
லோபத்தை, ஒழிப்பாய் மோகத்தை,

இந்த நான்கையும் ஒழிதமர்ந்தே
சிந்திப்பாய் நான் என்னும் பொருளை
உண்மை ஞானம் அடையப் பேதையர் 
இம்மையிலும் வேகுவார் நரகத்தில்.

பாடுவாய் ஹரிநாமம், ஓதுவாய் கண்ணனின் கீதை, தேடுவாய் 
ஈசனுருவம் இடைவிடா பாவனையால், நல்லோர் மாட்டிலே 
மனத்தை நிறுத்து, செல்வம் உண்டேல் ஏழைக்குதவு
சுருக்கமாய் சொன்னேன்.பெருக்குவதேன்.

மண்ணுலகத்தில் சாவதென்பது உறுதி இதை
கண்ணாரக் கண்டும் ஐயோ பாபத்தை விடாரே!
எளிதென்றே தோன்றும் பொது மகளிர் போகம்
அழியாத் துயரம் அறியாயோ பின்வரும் ரோகம்.

வியர்த்தம் பணம் பணமென்றலைவது, 
அர்த்தம் என்பது அனர்த்தமே காண், 
எள்ளளவும் சுகமில்லை பணம் சேர்ந்த பாவிக்கு,
கள்ளனை மட்டுமல்ல, பெற்ற மகனையும் அஞ்சுவான்,

சந்தேகமில்லை உண்மையிது அறிவாய்
எந்த ஊரிலும், யாரிடத்துமுள்ள பணத்தின் கதியாம்
அகக் கோயிலை காப்பாய்! மகனே மிகக் கவனம் 
வைப்பாய்! மிகக் கவனம் வைப்பாய்!

சுவாசத்தை ஒழுங்காக்கி அமர்ந்து, 
அவாவை அடக்கி ஐவர் மூர்க்கரை 
மெய்யெது, மோகமெது என்றோர்ந்து
செய்யும் ஜபமும் தியானமுங் கொண்டு

பையப் பையப் பயில்வாய் அலையாதிருக்கவே, 
மெய்பொருளின் சித்தத்தை நிலை நிறுத்தவே!
குருவின் பாதகமலத்தில் குறையா பக்தி வைப்பாயேல்
பிறவிச் சிறையினின்று துரிதம் மீள்வாய் உறுதி

புலனும் மனமும் ஒழுங்குபட்டால்
காண்பாய் உன்உள்ளத்தினுள்ளேயே!
உலகத்தையாளும் தேவனின் 
ஒளிமயமான ஒளிஉருவை!

24.ஸ்ரீ வெங்கடேஸ்வர கோவிந்தா”

• ஸ்ரீ ஸ்ரீநிவாசா கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா
பக்த வத்சலா கோவிந்தா
பாகவத ப்ரியா கோவிந்தா

• நித்ய நிர்மலா கோவிந்தா
நீல்மேகஸ்யா கோவிந்தா
புராண புருஷா கோவிந்தா
புண்டரீகாக்ஷா கோவிந்தா

• நந்த நந்தன கோவிந்தா
நவநீத சோர கோவிந்தா
பசு பாலக ஸ்ரீ கோவிந்தா
பாப விமோசன கோவிந்தா

• துஷ்ட சம்ஹார கோவிந்தா
துரித நிவாரண கோவிந்தா
சிஷ்ட பரிபாலக கோவிந்தா
கஷ்ட நிவாரண கோவிந்தா

• வஜ்ர மகுடதர கோவிந்தா
வராக மூர்த்திவி கோவிந்தா
கோபி ஜனலோல கோவிந்தா
கோவர்த்தனோத்தார கோவிந்தா

• தசரத நந்தன கோவிந்தா
தசமுக மர்தன கோவிந்தா
பட்சி வாகன கோவிந்தா
பாண்டவ ப்ரிய கோவிந்தா

• மத்ஸ்ய கூர்ம கோவிந்தா
மதுசூதனஹரி கோவிந்தா
வராக நரசிம்ம கோவிந்தா
வாமன ப்ருகுராம கோவிந்தா

• பலராமாநுஜ கோவிந்தா
பௌத்த கல்கிதர கோவிந்தா
வேணுகான ப்ரிய கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா

• சீதா நாயக கோவிந்தா
ச்ரித பரிபாலக கோவிந்தா
தரித்ர ஜனபோஷக கோவிந்தா
தர்ம ஸம்ஸ்தாபக கோவிந்தா

• அனாத ரட்சக கோவிந்தா
ஆபத் பாந்தவ கோவிந்தா
சரணாகத வத்ஸல கோவிந்தா
கருணா சகார கோவிந்தா

• கமல தாளக்க்ஷ கோவிந்தா
காமித பலதா கோவிந்தா
பாப விநாசக கோவிந்தா
பாஹி முராரே கோவிந்தா

• ஸ்ரீ முத்ராங்கித கோவிந்தா
ஸ்ரீ வத்சாங்கித கோவிந்தா
தரணீ நாயக கோவிந்தா
தினகர தேஜா கோவிந்தா

• பத்மாவதி ப்ரிய கோவிந்தா
ப்ரசன்ன மூர்த்தி கோவிந்தா
அபயஹஸ்தப்ரதர்சன கோவிந்தா
மர்த்யாவதாரா கோவிந்தா

• சங்க சக்ரதர கோவிந்தா
சார்ங்க கதாதர கோவிந்தா
விரஜா தீரஸ்த கோவிந்தா
விரோதி மர்தன கோவிந்தா
• சாளகிராமதர கோவிந்தா
சகஸ்ர நாமா கோவிந்தா
லக்ஷ்மீ வல்லப கோவிந்தா
லக்ஷ்மண ஆக்ரஜ கோவிந்தா

• கஸ்தூரி திலக கோவிந்தா
காஞ்சனாம்பரத கோவிந்தா
கருடவாகன கோவிந்தா
கஜராஜ ரக்ஷ்க கோவிந்தா

• வானர சேவித கோவிந்தா
வாரதி பந்தன கோவிந்தா
ஏழுமலைவாச கோவிந்தா
ஏக ஸ்வரூபா கோவிந்தா

• ஸ்ரீராம கிருஷ்ண கோவிந்தா
ரகுகுல நந்தன கோவிந்தா
பிரத்யக்ஷ் தேவா கோவிந்தா
பரம தயாகர கோவிந்தா

• வஜ்ர கவசதர கோவிந்தா
வைஜெயந்தி மால கோவிந்தா
வட்டிகாசு ப்ரிய கோவிந்தா
வசுதேவ தனயா கோவிந்தா

• வில்வ பத்ரார்ச்சித கோவிந்தா
பிட்சுக சம்ஸ்துத கோவிந்தா
ஸ்திரீபும் ரூபா கோவிந்தா
சிவகேசவ மூர்த்தி கோவிந்தா

• பிரம்மாண்ட ரூபா கோவிந்தா
பக்த ரட்சக கோவிந்தா
நித்ய கல்யாண கோவிந்தா
நீரஜநாப கோவிந்தா

• ஹதீராம் ப்ரியா கோவிந்தா
ஹரி செர்வோத்தம கோவிந்தா
ஜனார்த்தன் மூர்த்தி கோவிந்தா
ஜகத்சாக்ஷீ ரூபா கோவிந்தா

• அபிஷேகப்ரிய கோவிந்தா
ஆபன் நிவாரண கோவிந்தா
ரதன கிரீடா கோவிந்தா
ராமாநுஜநுத கோவிந்தா

• சுயம் ப்ரகாச கோவிந்தா
ஆஸ்ரித பக்ஷா கோவிந்தா
நித்யசுப ப்ரத கோவிந்தா
நிகில லோலேசா கோவிந்தா

• ஆனந்தரூபா கோவிந்தா
ஆத்யந்த ரஹித கோவிந்தா
இகபர தாயக கோவிந்தா
இபராஜ ரக்ஷ்க கோவிந்தா

• பரம தயாளோ கோவிந்தா
பத்மநாப ஹரி கோவிந்தா
திருமல வாசா கோவிந்தா
துளசி வனமால கோவிந்தா

• சேஷாத்ரி நிலய கோவிந்தா
சேஷசாயினி கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா

25.“ஸ்ரீ மகாவிஷ்ணு துதி” - சகல மங்களங்கள் - லட்சுமி கடாட்சம் பெற- ரிக்வேதம்- ஸ்ரீ சூக்தம்- தினமும் / வேண்டும்போது.

oவிஷ்ணு பகவானே! தங்க நிறம் உடையவளும், பாவத்தைப் போக்கிறவளும், வெள்ளி- பொன் ஆபரங்களைத் தரித்தவளும், எல்லா மக்களையும் சந்தோஷமாக வைத்திருப்பவளும், தங்க உருவமாகத் தோற்றமளிப்பவளும், எல்லாரும் ஆசைப்படுகிறவளுமான லக்ஷ்மி தேவியின் அருள் எனக்குக் கிட்டும் படி அருள வேண்டும்.

oஅந்த லக்ஷ்மி கடாட்சம் என்னிடம் இருந்தால் நான் தங்கம் போன்ற உயர்ந்த பொருட்களையும் பசுக்கள், குதிரைகள், யானைகள் போன்றவற்றுடனான உயர்ந்த செல்வங்களையும், நல்ல சத்புத்திரர்களையும் உண்மையான சீடர்களையும் அடைய முடியும். அந்த லக்ஷ்மியின் அருட்கடாட்சம் என்னைவிட்டுப் பிரியாமல் இருக்க அருள் புரியுங்கள்.

oகுதிரைப்படை, தேர்ப்படையின் நடுவே யானைகளின் பிளிறல் ஓசை எந்த அன்னையின் மஹிமையை மற்றவர்களுக்கு அறிவிக்க கஜநாதம் செய்கிறதோ அந்த ஸ்ரீதேவியை என்னிடத்தில் வருமாறு அழைக்கிறேன். அனைவருக்கும் புகலிடமான லட்சுமிதேவி என்னை வந்தடையட்டும்.

oமகிழ்வான தோற்றத்தை உடையவளும், எப்பொழுதும் புன்முறுவலுடன் காட்சி தருபவளும், பொன்மயமான பிரகாரம்போல் ஒளிரும் தேகத்தை உடையவளும், யானைகளின் திருமஞ்சன நீரில் நனைந்த திருமேனியை உடையவளும், திசை எங்கும் தன் ஓலியைப் பரப்புபவளும், குறைவில்லாத நிறவை உடையவளும், தன்னைப் போலவே பக்தர்களும் நிறைவாக இருக்கவேண்டும் என்று நினைப்பவளும், தாமரைப் பூவில் வசிப்பவளும், தாமரை போன்ற நிறம் உடையவளும், ஸ்ரீ என்ற பெயரை உடையவளுமான லட்சுமிதேவியை என் இருப்பிடத்திற்கு அழைக்கிறேன்.

oபக்தர்களை மகிழ்விப்பவளும், ஒளியாய் பிரகாசிப்பவளும், அனைத்து உலகங்களிலும் புகழப்படுபவளும், பக்தர்களைத் தேடி வந்து அருள்பவளூம், தேவர்களால் துதிக்கப்பட்டவளும், உதாரகுணம் நிறைந்தவளும், சக்கரம்போல் வட்டமான தாமரைப் பூவை கையில் தரித்திருப்பவலும், வேத, இதிகாச புராணங்கலில் போற்றப்படுபவளுமான தேவியை நான் சரணடைகிறேன். என்னுடைய வறுமை அழியட்டும். எனக்கு அருள் கிடைக்கட்டும்.

oசூரியனைப்போல் ஒளி நிறைந்தவளே! உன்னுடைய அருளால் பூ இல்லாமல் பழம் உண்டாகும் வில்வமரம் தோன்றியது. அந்த மரத்தின் பழங்கள் உன்னுடைய அருளைப்போலவே மனங்களின் உள்ளேயும் வறுமைகளையும் போக்க வல்லன. உன்னுடைய அருளால் கிடைக்கும் அந்த மரத்தின் பழங்கள் மூலமாக அறியாமையையும், வறுமையையும் போக்கி அருள வேண்டும்.

oநீ என்னை அடைய வரும்போது தேவர்கள் மீது மிகுந்த அன்பு வைத்த மகாவிஷ்ணுவும் உடன் வருவார். இந்த பூமியில் பிறந்திருக்கும் எனக்குக் கீர்த்தியும், ஐஸ்வர்யத்தையும் கொடுத்து அருள் புரியவேண்டும்.

oஉன் அனுகிரகத்தை அடைந்தால் அதன் பலத்தால் பசி, தாகம், பீடை இவற்றை உண்டுபண்ணுகிற மூதேவியை என்னைவிட்டு அகலும் படி செய்வேன். சகலவிதமான வறுமையையும் மேன்மேலும் வரவிடாமல் என்னுடைய வீட்டிலிருந்து நீ அகற்றியருள்வாய்.

oவாசனைமிக்க திரவியங்களை முதலில் அனுப்பி அதன்பிறகு வந்தவளும், தீயவர்களால் அடைய முடியாதவளும், எப்பொழுதும், எப்பொருட்களாலும் நிறைவுற்றவளும், கரீஷிணி என்ற திருநாமத்தைப் பெற்றவளும், அனைவராலும் போற்றப்படுகின்றவளுமான உன்னை இங்கே எங்கள் இல்லத்தில் நித்தியவாசம் செய்து நீங்காதிருக்கும் படி அழைத்து வேண்டுகின்றேன்.

oமனதினுடைய விருப்பத்தையும், சந்தோஷத்தையும், வாக்கினுடைய உண்மையையும் அடைவோம். பசுக்கள், உணவுப் பொருட்களை அடைவோம். பலவிதமான உருவத்தை அடைவோம். என்னிடத்தில் லக்ஷ்மிதேவியானவள் நித்யவாசம் செய்யவேண்டும்.

oகார்த்தம ப்ராஜாபதி எனும் மகரிஷியால் தேவி, புத்ரமதி ஆனாள். கார்த்தமனே என்னிடத்தில் நித்யவாசம் செய்வாயாக. தாமரை மாலையை அணிந்து கொண்டிருக்கிற உனது தாயாராகிய ஸ்ரீதேவியை எனது வீட்டில் வசிக்கச் செய்வாயாக.

oஓ சிக்லீதரே, தண்ணீர், நெய், தயிர், பால் முதலிய பொருட்கள் என்னுடைய வீட்டில் குறைவின்றிப் பெருகவேண்டும். எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிற உம்முடைய தாயை ஸ்ரீதேவியை எனது வீட்டில் வசிக்கச் செய்ய அருள்வாய்.

oகருணையால் நனைந்தவளும், தாமரைப் பூவில் வாசம் செய்கின்றவளும் நிறைவின் உருவானவளும், தாமரைப் பூமாலையைத் தரித்தவளும், எல்லா உயிர்களையும் மகிழ்விப்பவளும், பொன் போன்ற பரிசுத்தமான மேனியை உடையவளுமான மகாலட்சுமி என் இருப்பிடத்திற்கு வருமாறு செய்தருளுங்கள்.

oபகவானாகிய அமுதத்தால் நனைந்த திருமேனியை உடையவளும், செங்கோலுக்கு அடையாளமாக தண்டாயுதத்தை கையில் தரிப்பவளும், மெலிந்த திருமேனியை உடையவளும், கண்களுக்கு ஆனந்தகரமான வடிவினை உடையவளும், தங்கத்தினால் செய்யப்பட்டு பூமாலையை அணிந்தவளும், சூரியனைப் போன்ற பிரகாசமுடையவளும், தங்கமயமான லட்சுமி தேவியை என்னிடம் வரவழைத்து அவள் என்னிடம் நித்யவாசம் செய்ய அருளுங்கள் திருமாலே!

oஓ பகவானே, எந்த லக்ஷ்மி என்னிடம் வசிக்கையில் ஏராளமான பொன் பொருள்களும், பசுக்களும், சேவகர்களூம், குதிரைகளூம், உற்றார் உறவினர்களும், நண்பர்களையும் நான் அடைவேனோ, அப்படிப்பட்ட ஸ்ரீமகாலக்ஷ்மி என்னிடம் நிரந்தரமாக நித்யவாசம் செய்ய அருளவேண்டும்.

o தாமாரையில் பிரியம் உள்ளவளே, தாமரைக்குச் சொந்தக்காரியே, தாமரையைக் கையில் தரித்தவளே, தாமரையில் வசிப்பவளே, தாமரைபோல் நீண்ட கண்களை உடையவளே, உலகத்து மக்களால் விரும்பப் படுகின்றவளே விஷ்ணுவின் மனத்திற்குப் பிரியமானவளே, உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடியை என் தலைமேல் எப்போதும் இருக்கச் செய்வாயாக.

oலட்சுமி தேவியின் விலையாட்டால் செய்யப்பட்ட இந்த உலகம் பிரகாசமானது. உலகில் பிறந்தவர்களுக்கு எல்லா ஐஸ்வர்யத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வல்லது. அவளை உபாசனை செய்பவர்கள் ஜனன மரணமில்லாத பிரம்மானந்தத்தை அடைவார்கள். இன்றும் நாளையும் எப்போதும் சுயமான பிரகாசமான நிலையை அடைவார்கள். இல்லத்தில் சகல போகமும், பரத்தில் மோட்சமும் அடைவார்கள்.

oஎவனொருவன் இந்த ஸ்ரீசூக்தத்தின் பலன்களை அறிகிறானோ அவனுடைய செல்வங்களே மேலும் மேலும் வளர்ந்து ஐஸ்வர்யங்களை உண்டாக்குகின்றன. ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள இந்த ஸ்ரீசூக்தத்தை முன்னிருத்தி ஹோம காரியங்களைச் செய்பவர் புத்திர சந்தானத்தோடும், பசுக்களோடும், ஐஸ்வர்யங்களோடும் அனைத்து வளங்களையும் பெறுவர். எனக்கு அவைகள் கிடைக்கட்டும்.

oஇந்த உலகங்கள் அனைத்தும் ஸ்ரீமகாவிஷ்ணு, லட்சுமிதேவி இருவரையும் சேர்ந்தது. அதனால் பெரிய பிராட்டியான தேவியை உபாசனை செய்கின்றோம். விஷ்ணு பத்தினையை தியானம் செய்கிறோம். இந்த உபாசனை செய்யக்கூடிய அறிவை அந்த லக்ஷ்மிதேவிதான் தூண்டிவிட வேண்டும். லட்சுமி நாராயணரை வழிபடுவதர்கான புத்தியையும், அதை நிறைவேற்ற சக்தியையும் அருளவேண்டும்.

26.ஸ்ரீகிருஷ்ணர்- புத்ர பாக்யம் பெற-108 முறை தினமும்

ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணி வல்லபாய தீமஹி
தந்நோ க்ருஷ்ண ப்பிரசோயாத்

27.ஸ்ரீ ராமர் - துன்பங்கள் விலக- தினமும் 11முறை

ஓம் தசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்பிரசோதயாத்

28.ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் -கல்வி ஞானம் - தினமும் 11முறை
ஓம் வாகீச்வராய வித்மஹே
ஹயக் ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ஸ ப்பிரசோயாத்

29.ஸ்ரீ மகா விஷ்ணு- சௌபாக்யங்கள்பெற தினமும் 11முறை
ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்பிரசோயாத்

30.ஸ்ரீ ஆதிசேஷன் - நோய்கள் குணமாக தினமும் 11முறை 
ஓம் சஹஸ்ர சீர்ஷாய வித்மஹே
விஷ்ணூ தல்பாய தீமஹி
தந்நோ நாக ப்பிரசோயாத்

“ஸ்ரீமங்களாஷ்டகம்”:--

மங்களங்கள் பெருக- மனக் குறைவின்றி- பாவங்களிலிருந்து விலகி- நீண்ட ஆயுள்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.

oபிரம்மனே! மஹாவிஷ்னுவே! பரமேஸ்வரனே! இந்திரனே! அக்னியே! யமனே! நிருதியே! வருணனே! வாயுவே! குபேரனே! முருகனே! கணபதியே! சூரியனே! சந்திரனே! ருத்திரர்களே! விச்வ தேவர்களே! ஆதித்யர்களே! அச்வினி தேவர்களே! சாத்தியர்களே! வஸுக்களே! பித்ருக்களே! சித்தர்களே! வித்யாதரர்களே! யஷர்களே! கந்தர்வர்களே! கின்னரர்களே! மருத்துக்களே! மற்றும் ஆகயத்தில் சஞ்சரிக்கும் அனைத்து தேவர்களே! உங்கள் அனைவரையும் வணங்குகின்றேன். எனக்கு என்றும் மங்களம் அருளுங்கள்.

oசரஸ்வதி, மகாலட்சுமி, பூமிதேவி, பார்வதி, சண்டிகை, பத்ரகாளி, பிராஹ்மி முதலிய மாத்ரு கணங்கள், தட்சனின் மகள்களான அதிதி, திதி, சதி, முதலியோர், சாவித்ரி, கங்கை, யமுனை, அருந்ததி, தேவர்களின் மனைவிகள், இந்திராணி முதலிய தேவலோகப் பெண்களும் விண்ணில் சஞ்சரிக்கும் தேவமாந்தரும் எனக்கு நீங்காத மங்களத்தை அளிக்கட்டும்.

oமத்ஸ்யமூர்த்தி, கூர்மமூர்த்தி, வராஹமூர்த்தி, நரசிம்மப் பெருமாள், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், கபிலர், நரநாராயண மூர்த்தி, தத்தாத்ரேயர், பிருகு மற்றும் நரகாசுரனை வதம் செய்த மகா விஷ்ணுவின் மற்ற எல்ல அவதாரங்களும், சுதர்ஸ்ன சக்கரம் முதலிய ஆயுதங்களும், அவதாரம் செய்த மூர்த்திகளின் மனைவிகளும், அவர்களின் புத்திரர்களும், விஷ்னுவின் எல்ல அம்சா அவதாரங்களும் எனக்கு தீராத மங்களத்தை அளிக்கட்டும்.

oவிஸ்வாமித்திரர், வசிஷ்டர், அகஸ்தியர், உசத்யர், ஆங்கீரஸ், காச்யபர், வியாசர், கண்வர், மரீசு, கிரது, பிருகு, புலஹர், சௌனகர், அத்ரி, புலஸ்தியர் முதலான மஹரிஷிகளும் மற்றும் பல முனிவர்களும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கிரகங்களும், அஸ்வனி முதல் ரேவதி வரியிலான நட்சத்திரங்களும், நம் பிரஜாபதிகளும் நாகராஜன் முதலிய சர்ப்பக் கூட்டங்களும், மனுக்களும் எனக்கு வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.

oமநு புத்ரிகளான ஆகூதி, தேவஹூதி, ப்ரஸீதி ஆகிய மூவரும், எல்லா முனிவர்களின் பத்தினிகளும், மனுக்களின் பத்தினிகளும், சீதை, குந்திதேவி, பாஞ்சாலி, நளன் மனைவி தமயந்தி, ருக்குமணி, சத்யபாமா, தேவகி மற்றுமுள்ள அரசர்களின் மனைவியர், கோபிகைகள், பதி விரதைகள், நற்குலப்பெண்மணிகள் யாவரும் எனக்கு எல்லாவித மங்களத்தையும் கொடுக்கட்டும்.

oகருடன், அனந்தன், ஹனுமான், மஹாபலி, சனகர் முதலான யோகிகளும், சுகர், நாரதர், பிரகலாதன், பாண்டவர்கள், ந்ருகன், நளன், நஹூஷன், அரிச்சந்திரன், ருக்மாங்கதன் முதலிய விஷ்னு பக்தர்களும் மற்றும் சூரிய, சந்திர குலத்தில் உதித்த உத்தமர்களும், அரசர்களும் எனக்கு வளமான மங்கலத்தை உண்டாக்கட்டும்.

oஅந்தணர்கள், பசுக்கள், வேதங்கள், ஸ்ம்ருதிகள், துளசி, கங்கை, முதலி8ய சர்வ தீர்த்தங்கள், சகல வித்யைகள், பலவிதசாஸ்திரங்கள், இதிஹாசங்கள், சகல புராணங்கள், வர்ணங்கள், ஆச்ரமங்கள், சாங்கியம், யோகங்கள், யம நியமங்கள், எல்லா கர்மங்கள், காலங்கள், சத்யம் முதலான அனைத்து தர்மங்களும் எனக்கு போதிய மங்களத்தை அளிக்கட்டும்.

oசகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான நன்மைதரும் எல்லாமரங்கள், எட்டு திக்கு யானைகள், மேகங்கள், சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள், பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள், ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள், செடிகள், கொடிகள் எனக்கு நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.

                            ஓம்நமோநாராயணாயஓம்

குருஸ்ரீ பகோராயின் சந்தோஷப்பூக்களின் இதழ்களில் சில......

oஎந்த மனிதனும் கொள்கைகளுடனும், திறமைகளுடனும் எல்லாம் தெரிந்தும், புரிந்தும் பிறந்ததில்லை. வாழ்வில் போராடி, முயற்சி செய்து வெற்றிகொண்டதே அவர்களை வாழ்வில் பெரிய மனிதனாக்கியதாகும்.
o‘அகில உலக உயிர்களும் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும்’ என்பதே அறத்தின் முத்திரையான வாக்கியம்.
oகாலங்களே நம் நண்பர்கள். காலங்களே நம் பகைவர்கள். காலங்கள் நமக்கு எல்லாம் தந்தும் பறித்தும் விடுகின்றன. அழவைக்கிற அதுவே சிரிப்பையும் தருகின்றது.
oமறைத்த உண்மையும், தெரிந்த உண்மையும் எப்போதும் சுடும். அதை சொல்லியே தீருவேன் எனச் சொல்லி அனைவரையும் காயப்படுத்தக் கூடாது.
oபூனைக்கு பால் பிடித்தமான ஒன்று. அதை வளர்க்கும் நீங்கள் கடமையுடன் பசியடங்க பால் கொடுத்தால் சரி. இல்லையெனில் பூனை பால் இருக்குமிடம் தேடத்தான் செய்யும். அப்படித் தேடி அதன் பசியைப் போக்கிக்கொண்டால் அது திருட்டுப்பூணை என்ற பட்டம் பெற்றுவிடுகிறது. பூனைக்கு பசி எடுப்பது தவறா! இது யார் தவறு!
oசெய்த பிழைகளுக்கு, குற்றங்களுக்காக குற்ற உணர்வுகளுடன் வாழ்ந்து துன்பத்தில் இருப்பதைவிட மன்னிப்பு கேட்பது ஒன்றும் தவறல்ல. குற்றத்தில் இருந்து ஒருவர் விடுதலை பெற்றாலும் குற்ற உணர்விலிருந்து விடுதலை பெறவேண்டும்
oபகைவனை அழிப்பது என்றால், பகைமையை அழிப்பது என்று கருதவேண்டும். பகைவனைக் கொல்வதல்ல! அப்படிச் செய்தால் பகைமை அழியாது. தொடர்ந்து வரும்.
 “சந்தோஷப்பூக்களை நுகர்ந்து வாழ்வியல் பயன் பெறுங்கள்”

செவ்வாய்க்கிழமை, 13 August 2013 12:44

துர்க்கை

சக்தி -- தீய சக்திகளை ஒழிப்பதில் துணை புரிபவள். அழிக்கும் சக்தி- அசைவுடைய செயல் சக்தி. 
வேறுபெயர்கள் -- துர்க்கை, விஷ்ணு துர்க்கை, அம்பாள், மகாலட்சுமி, சரஸ்வதி, மகேஸ்வரி, கௌமாரி, வராஹி, வைஷ்ணவி, இந்திராணி, நரசிம்மி, சாமுண்டீஸ்வரி
செவ்வாய்க்கிழமை -- செவ்வாய் தோஷமுடையவர்கள் செவ்வாய்க்கிழமை பூக்களால் அர்ச்சனை செய்து பூஜை வழிபாடு- நினைத்த நல்லகாரியம் வெற்றி பெரும்.
வெள்ளிக்கிழமை -- எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் விரதம் இருந்து இராகு காலத்தில் பூஜை வழிபாடு சிறப்பு.
ஞாயிற்றுக்கிழமை -- கிரக தோஷங்கள் உள்ளோர் ஞாயிற்றுக் கிழமையன்று சூரியன் மறையும் நேரத்திற்கு முன்பாக ஒன்றரை மணி நேரம் ராகுவின் வால்பாகம். இந்த நேரம் அமிர்தம். அதனால் ஞாயிறு இராகுகாலம் துர்க்கையை பூஜை வழிபாடு செய்வது நன்மை.
ஏற்ற திதி -- அஷ்டமி திதி. ராகு கிரகத்தின் அதி தேவதை. ராகு கிரகம் நிழல்- சாயா கிரகம் ஆகும், அதன் உடலில் விஷம் வாலில் அமுதம் உள்ளது. துதிக்க ஏற்ற நேரம் இராகு காலமாகும். ராகு நேரம் சக்தியை வெளிப்படுத்தும் நேரம். அந்த நேரத்தில் துதிகளைப் படித்து அர்ச்சனை செய்து வந்தால் நல்ல பலன்கள் கிட்டும். நினைத்த நல்ல காரியங்கள் ஜெயம்.
விழாநாட்கள் -- நவராத்திரி- ஆனிமாத அமாவாசைக்குபின் ஆஷாடநவராத்திரி, புரட்டாசிமாத அம்மாவாசைக்குப்பின் மகா நவராத்திரி, தைமாத அமாவாசைக்குபின் மாக நவராத்திரி, பங்குனி மாத அம்மாவாசைக்குப்பின் வசந்த நவராத்திரி என் வருடத்தில் நான்கு. பழமையோடு புதுமையும் கலந்தவிழா. ஒன்பது நாளும் பழங்கள், பிரசாதங்கள் படைத்து, படைத்தல், காத்தல், அழித்தல் சக்தி கொண்ட அன்னையின் அருள் வேண்டி மலர் வழிபாடு செய்தல். பிரதமை முதல் திரிதியை வரை கிரியா சக்தியான துர்க்கா, சதுர்த்தி முதல் சஷ்டி வரை இச்சாசக்தியாகிய மகாலட்சுமி, சப்தமி முதல் நவமிவரை ஞாசசக்தியாகிய சரஸ்வதி என 3வகை மும்மூன்று நாள் விழா. பத்தாம் நாள் தசமியில் சிம்ம வாகனத்தில் சூரனை வதம் செய்த பரிவேட்டை நிகழ்ச்சி. தேவியரின் மந்திரங்களை ஒன்பது நாளும் சொல்லி பூஜை செய்யலாம். புரட்டாசியில் நட்பைப் போற்றி, பக்தியைச் பெருக செய்ய கொலு வைத்தல். 1-ம் படியில் ஓரறிவு உயிர்களை உணர்த்தும் புல், செடி, கொடி தாவர பொம்மைகள், 2-ம் படியில் ஈரறிவு கொண்ட சங்கு நத்தை பொம்மைகள். 3-ம் படியில் மூவறிவு உயிர்களான எறும்பு, கரையான் பொம்மைகள். 4-ம் படியில் நான்கறிவு உயிர்களான நண்டு, வண்டு பொம்மைகள், 5-ம் படியில் ஐந்தறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள் பொம்மைகள், 6-ம் படியில் ஆறறிவு படைத்த மனிதர்கள் பொம்மைகள், 7-ம் படியில் மனிதருக்கு மேற்பட்ட மகான்கள், முனிவர்கள் பொம்மைகள், 8-ம் படியில் தேவர்கள், நவகிரக அதிபர்கள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக் பாலகர்கள், 9-ம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் தேவியருடன் ஆதிபராசக்தியை நடு நாயகமாக வைக்கவும்.
வணங்கும்முறை -- ஐந்து எழுமிச்சை வாங்கி அதை இரண்டாக நறுக்கி ஒன்பது துண்டுகளைத் திருப்பி நல்லெண்ணெய் ஊற்றி தாமரை நூலினால் திரி போட்டு துர்க்கைமுன் விளக்கிடவும். மீதமுள்ள ஒரு துண்டில் விளக்கேற்றி மூல தெய்வத்துக்கு வைக்கவும். 108 ஓம் சொல்லி குங்கும் அர்ச்சனை செய்யலாம். ஒம் ஸ்ரீ துர்க்கா சரணம்
என மனதில் ஒன்பது முறைக் கூறி வழிபடவும். நெய்வேத்தியப் பொருட்களை அர்ச்சகரிடம் கொடுக்கவும். மூலவர் எந்த கோலத்திலிருந்தாலும் பாதத்திலிருந்து சேவித்து முகதரிசனம் செய்யவும். அர்ச்சகர் தீப ஆரதனைக் காட்ட கண்களை மூடாமல் இறைவனைப் பார்த்து வணங்கவும். அர்ச்சனை ஆரத்தி முடிந்தபின் பிரசாதம் பெற்று வரவும். அருள் நிறைந்துள்ள கோவிலில் ஒரு பகுதியில் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்து நாமங்களைச் சொல்லிக் கொண்டிருந்துவிட்டு எழுந்து வரவும்.

உள்ளே.....

1.“காளிகாம்பாள்”-துன்பம் நீங்கி, ஆறுதல்பெற- பாரதியார்- தினமும் / செவ்வாய்க் கிழமை. 

2.“துர்க்கை”- துன்பமில்லா வாழ்வுக்கு- துர்க்காசூக்தம்- தினமும்-செவ்வாய்/ நேரம் கிடைக்கும் போது. 

3.“துர்க்கை”-இயற்கைச்சீற்றம், பகைவர்களால்ஆபத்து நீங்க- சித்தேஸ்வரி தந்திரம்-செவ்வாய் கிழமை. 

4.“துர்க்கை”- துன்பம், கவலைகள் நீங்க -செவ்வாய்க்கிழமை / வேண்டும் போது. 

5.“துர்க்கை வணக்கம்”-கஷ்டங்கள்நீங்கி, ஊக்கம்பெற-செவ்வாய்க்கிழமை / வேண்டும் போது. 

6.“ராகுகால துர்கை அஷ்டகம்”- துன்பம் நீங்கி, ஆறுதல் பெற-ராகு காலத்தில். 

7.துர்க்கை அம்மன் போற்றி” 
8.“சீதளாதேவி துதி”- உஷ்ண பாதிப்புகள் நீங்க-வேண்டும்போது

9.“மங்கள சண்டிகை துதி”- மங்களம் பெற, துயர் தீர - தினமும் / வேண்டும் போது. 

“ஸ்ரீமங்களாஷ்டகம்”

அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!
யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!

1.“காளிகாம்பாள்”-துன்பம் நீங்கி, ஆறுதல்பெற-பாரதியார்- தினமும் / செவ்வாய்க் கிழமை.

o யாதுமாகி நின்றாய் காளி! எங்கும் நிறைந்தாய் காளி!
தீது நன்மை எல்லாம் காளி! தெய்வ நீதி ஆன்றோ!
பூத மைந்தும் ஆனாய் காளி! பொறிகளைந்தும் ஆனாய்! 
போதமாகி நின்றாய் காளி! பொறியை விஞ்சி நின்றாய்!

o இன்பமாகிவிட்டாய் காளி! என்னுள்ளே புகுந்தாய்!
பின்பு நினையல்லால் காளி! பிரிது நானும் உண்டோ!
அன்பளித்து விட்டாய் காளி! ஆண்மை தந்து விட்டாய்!
துன்பம் நீக்கி விட்டாய்! தொல்லை போக்கி விட்டாய்!

o ஆதிசக்தி தாயே! என்மீது அருள்புரிந்து காப்பாய்!
எந்தநாளும் நின்மேல் தாயே! இசைகள் பாடிவாழ்வோம்!
காளிமீது நெஞ்சம் என்றும் கலந்து நிற்க வேண்டும்!
பின்பு நினையல்லால் காளி பிறிது நானும் உண்டோ!

2.“துர்க்கை”- துன்பமில்லா வாழ்வுக்கு- துர்க்கா சூக்தம்- தினமும்-செவ்வாய்/ நேரம் கிடைக்கும் போது.

oஅக்னி வடிவில் விளங்கும் சக்திக்கு சோமரசத்தை பிழிந்து கொடுப்போம். அனைத்துமாக விளங்கும் அந்தஜோதி எதிரிகளைப் பொசுக்கட்டும். அந்தசக்தி எங்களின் எல்லா ஆபத்துக்களையும் போக்கட்டும். கப்பலால் கடலைக் கடப்பது போல், ‘பவ’ சாகரத்திலிருந்து (பிறவி கடலிருந்து) அந்த அக்னி சக்தி எம்மைக் கரை சேர்க்கட்டும்!

oசெந்தீ வண்ண முடையவள். தனது ஒளியால் பகைவர்களை எரிப்பவள். ஞானக்கண்ணால் அறியப்படுபவள், கர்மபலனை கூட்டி வைப்பவள். நம் புண்ணிய பாவங்களுக்கு உரிய பலனை அனுபவிக்கச் செய்பவள், பிறவிக் கடலை எளிதில் கடக்க உதவுபவள். அத்தகைய துர்க்காதேவியே உனக்கு நமஸ்காரம்!

oஅக்னி சக்தியே! நீ எடுக்கும் நல்ல உபாயங்கள் மிகவும் போற்றத் தக்கவை. அவை எங்களை சகல ஆபத்துகளிலிருந்து காப்பாற்றட்டும். எங்களுக்கு வாழும் இடங்களும் வளமான பூமியும் கிடைக்க வகை செய்ய வேண்டும். எங்களுடைய சந்ததியான பிள்ளை குட்டிகளும் பேரன் பேத்திகளும் உன்னருளால் பயன் பெற்று ஒளிர வேண்டும்!

oஆபத்தை போக்கும் அக்னி சக்தியே! நாவாய்- கப்பலால் கடலை கடப்பது போல சம்சார கடலை கடக்க எங்களுக்கு அனுகிரஹிக்க வேண்டும். எங்களை எல்லா பாவங்களிலிருந்தும் விடுவிக்க வேண்டும். ஆதர்ஷ்ன தம்பதி அத்திரி மகரிஷி- அனுசூயா தேவியைப் போன்று அனைவரும் இன்பமுடன் வாழ அருளவேண்டும். அதேசமயம் எங்களுக்கு ஆரோக்கியமும் வேண்டும்!

oஎதிரிகளின் சேனைகளை வெல்லவும், அடக்கவும், பொசுக்கவும் செய்யக்கூடிய அக்கினி சக்தியை பரமபதமான விண்ணிலிருந்து வருமாறு அழைக்கிறோம். அந்த சக்தி எல்லா ஆபத்துக்களையும் போக்கட்டும். அக்னிதேவன், நமது பாவங்களை நீக்கி அருளட்டும்!

oஅக்னியே! வேள்விகளில் போற்றப்படும் ‘ஸ்வாஹா’ வான சக்தியே, நீ இன்பத்தை வளர்க்கிறாய். விணைப்பயனை அளிப்பதும், வேள்வி செய்வதும் துதிக்கப்படுவதும் அனைத்தும் நீயே. அக்னி சக்தியே, உனது உடலை நாங்கள் வேள்வியில் இடப்படும் பொருள்களால் உன் ஜோதி நன்கு எழுந்து இன்புறச் செய்யட்டும். எங்களுக்கு எல்ல சௌபாக்கியங்களையும் நீ அருள்வாயாக!

oஇந்திரனிடம் விளங்கும் சக்தியே! பாவத்தின் தோஷமே இல்லாமல், புனிதத்துடனேயே சதா தொடர்பு கொண்டு அமிர்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு எங்கும் நீக்கமற பரவி நிற்கும் சக்தியே! உன்னை சேவிக்கிறேன். சுவர்க்கத்தின் உச்சியில் வசிக்கும் தேவர்கள், விஷ்னு பக்தனான என்னை, இவ்வுலகில் வாழும்போதே எல்லா பேரின்பங்களிலும் திளைக்கும்படி வைக்க வேண்டும் அதற்கு நீயே அருள்வாயாக!

oகன்னியாகவும் தேவியாகவும் உள்ள தேவியை தியானிக்கின்றேன். பரமேஸ்வரனுக்காகவே தோன்றி அவனையே அடைந்த அந்த அம்பிகையை வழிபடுகிறேன். அந்த துர்க்கா தேவி எங்களை வழிநடத்தி தர்மவழியில் செலுத்தி ஆட்கொள்ளட்டும்.

3.“துர்க்கை”- இயற்கைச்சீற்றம், பகைவர்களால் ஆபத்து நீங்க- சித்தேஸ்வரி தந்திரம்-செவ்வாய்கிழமை.

சுற்றிலும் சூழ நிற்கும் ஆபத்துகளைலிருந்து எமைக் காக்கும் துர்க்கை அன்னையே உனக்கு நமஸ்காரம். இயற்கை சீற்றங்கள் ஆகட்டும், காட்டிலே தனித்துச் செல்லும் பயணங்களாகட்டும், யுத்தத்தில் ஆகட்டும், எரிக்கும் அக்னியிலாகட்டும், ஆழ்கடலிலாகட்டும், எங்கும் எமைக் காத்தருளும் அன்னையே உனக்கு நமஸ்காரம். எந்தவகை ஆபத்திலிருந்தும் காக்கும் தேவியே, எம்மை வாழ்க்கை சாகரத்திலிருந்தும் காக்கும் ஓடமாக விளங்கும் அன்னையே! உனக்கு நமஸ்காரம்!

4.“துர்க்கை”- துன்பம், கவலைகள் நீங்க -செவ்வாய்க் கிழமை / வேண்டும் போது.
 ஞானமே வடிவாய்க் கொண்ட நாயகி நீயே தாயே
ஊனமில் பகவதி நீ உயர்மன மலரில் வாழ்வாய்
ஈனமில் மோகமாதே மகாமாயை நீயே யன்றோ!
ஆணியாய் உலகுக்கான அன்னையே போற்றி போற்றி!

 துர்க்கையைப் போற்றினாலே துயரிலை இன்பம் உண்டு
துர்க்கையாள் மனத்தின்துன்பம் துடைப்பவள் உலகத்தாயே
துர்க்கையாள் பிறையைச் சூடி துயநலம் காப்பாள் என்றும்
துக்கமேன் தரித்திரமேன் தூயவள் இருக்கும் போதே!

 எத்தனை மங்கலங்கள் அத்தனை நல்க வல்லாள்
எத்துணை உற்ற போதும் இடரெலாம் அவளால் தீரும்
எத்தனைமறைகள் உண்டோ மறைபொருள்அவளேயாகும்
பித்தனை மணந்த அந்த பேச்சியின் பாதம் தன்னில்!

 விழுபவர் எழுகின்றார்கள் வினைவலி அவர்க்கு இல்லை
தொழுபவர் தொழுவார் துர்க்கை நாரணி என்றே சொல்லி
அழுபவர்க்கான தெய்வம் அவளன்றி வேறொன்றில்லை
வழிபடில் என்றால் அன்னை வழிவழி காப்பாள்தனே!

 தேவிநாராயணியே! தினமுந்தன் சரணம் தாயே!
தேவைகள் தருவெம்தாயே! தினமுனைப்போற்றி செய்வோம்
தீமைகள் நீக்க வல்லாய்! திகம்பரன் பரவும் தேவி
ஊமைகள் பேச வல்லார் உன்னருள் இருந்தால்தானே!

 எத்தனை வடிவம் உண்டோ அத்தனை உன்னில் ஒன்றும்
அத்தனைபுவனம் ஆள்வாய் அனைத்துமாய்ஆனாய் அம்மா
எத்தனை சக்தியுண்டோ அனைத்துமுன் சக்தியன்றோ!
பித்தனார் கொண்ட மோனம் பெற்றவள் சரணம் தாயே!

 உடலதை ஓம்ப வேண்டின் உயர்நலம் காண வேண்டின்
கெடலரும் செம்மைசேர்ப்பாள் கேடிலாத் தாயை அன்பால்
விடலரும் பக்தியோடே விரும்பிடல் வேண்டும் உண்மை
அடுதலில் பெருமைகொண்ட அன்னையைவணங்கல் நன்றே!

5.“துர்க்கை வணக்கம்”- கஷ்டங்கள் நீங்கி, ஊக்கம் பெற- செவ்வாய்க்கிழமை / வேண்டும் போது.

 அன்னை துர்க்கையே வணக்கம்!
அகிலாண்ட ஈஸ்வரியே வணக்கம்!
மகிஷாசுரமார்த்தினியே வணக்கம்!
மங்கள சண்டிகையே வணக்கம்!

 அன்பின் வடிவே வணக்கம்!
அகந்தையை அழிப்பாய் வணக்கம்!
கண்ணின் மணியே வணக்கம்!
கஷ்டங்கள் தீர்ப்பாய் வணக்கம்!

 வறுமையை ஒழிப்பாய் வணக்கம்!
சிறுமையைக் களைவாய் வணக்கம்!
ஆக்கம் அளிப்பாய் வணக்கம்!
ஊக்கம் அளிப்பாய் வணக்கம்!

 அனையாச் சுடரே வணக்கம்!
ஆதரவளிப்பாய் வணக்கம்!
ஆனந்த வடிவே வணக்கம்!
அடியேன் குறை தீர்ப்பாய் வணக்கம்!

 மங்கள நாயகியே வணக்கம்!
நன்மைகள் அளிப்பாய் வணக்கம்!
சிந்தையில் உறைபவளே வணக்கம்!
சீரான வாழ்வளிப்பாய் வணக்கம்!

 குலம் காக்கும் குணவதியே வணக்கம்!
குறைகளை அகற்றிடுவாய் வணக்கம்!
வரம்வேண்டி நிற்கிறேன் வணக்கம்!
வளமான வாழ்வளிப்பாய் வணக்கம்!

6.“ராகுகால துர்கை அஷ்டகம்”- துன்பம் நீங்கி, ஆறுதல் பெற-ராகு காலத்தில்.

 வாழ்வு ஆனவள் துர்க்கா வாக்கு மானவள்!
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்!
தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள்!
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!

 உலகை ஈன்றவள் துர்க்கா உமையுமானவள்!
உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்!
நிலவில் நின்றவள் துர்க்கா நித்யையானவள்!
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!

 செம்மையனவள் துர்க்கா ஜெயமுமானவள்!
அம்மையானவள் அன்புத் தந்தையானவள்!
இம்மையானவள் துர்க்கா இன்பமானவள்!
மும்மையானவள் என்றும் முழுமை துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!

 துன்பமற்றவள் துர்க்கா துரிய வாழ்வவள்!
துறையு மானவள் இன்பத் தோணியானவள்!
அன்பு உற்றவள் துர்க்கா அபய வீடவள்!
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!

 குருவும் ஆனவள் துர்க்கா குழந்தையானவள்!
குலமும் ஆனவள் எங்கள் குடும்பதீபமே!
திருவுமானவள் துர்க்கா திருசூலி மாயவள்!
திரு நீற்றீல் என்னிடம் திகழும் துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!

 ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்!
ராகு காலத்தில் எந்தன் தாயை வேண்டினேன்!
ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!

 கன்னி துர்க்கையே இதயக் கமல துர்க்கையே!
கருணை துர்க்கையே வீரக் கனக துர்க்கையே!
அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே!
அன்பு துர்க்கையே ஜெய துர்க்கை துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!

7.“துர்க்கை அம்மன் போற்றி” 
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி!
ஓம் ஆதிபராசக்தியே போற்றி!
ஓம் அபிராமியே போற்றி!
ஓம் ஆயிரங்கண்கள் உடையவளே போற்றி!
ஓம் அம்பிகையே போற்றி!
ஓம் ஆசைகளை அறுப்பாய் போற்றி!
ஓம் அன்பின் உருவே போற்றி!
ஓம் ஆபத்தைத் தடுப்பாய் போற்றி!

ஓம் அச்சம் தீர்ப்பாய் போற்றி!
ஓம் ஆனந்தம் அளிப்பாய் போற்றி!
ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி!
ஓம் ஆற்றல் தருவாய் போற்றி!
ஓம் இமயவல்லியே போற்றி!
ஓம் இல்லறம் காப்பாய் போற்றி!
ஓம் இருசுடர் ஒளியே போற்றி!
ஓம் இருளை நீக்குவாய் போற்றி!

ஓம் ஈசனின் பதியே போற்றி!
ஓம் ஈஸ்வரியே போற்றி!
ஓம் உமையவளே போற்றி!
ஓம் உளைமான் கொண்டாய் போற்றி!
ஓம் உள்ளரவம் தீர்ப்பாய் போற்றி!
ஓம் உற்சாகம் அளிப்பாய் போற்றி!
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி!
ஓம் ஊக்கம் அளிப்பாய் போற்றி!

ஓம் என் துணை இருப்பாய் போற்றி!
ஓம் ஏக்கம் தீர்ப்பாய் போற்றி!
ஓம் எம்பிராட்டியே போற்றி!
ஓம் ஏற்றம் அளிப்பாய் போற்றி!
ஓம் ஐமுகன் துணையே போற்றி!
ஓம் ஐயுறவு தீர்ப்பாய் போற்றி!
ஓம் ஒளிர்வு முகத்தவளே போற்றி!
ஓம் ஓச்சம் அளிப்பாய் போற்றி!

ஓம் கங்காணியே போற்றி!
ஓம் காமாட்சியே போற்றி!
ஓம் கடாட்சம் அளிப்பாய் போற்றி!
ஓம் கருணை ஊற்றே போற்றி!
ஓம் கற்பூரநாயகியே போற்றி!
ஓம் கற்பிற்கரசியே போற்றி!
ஓம் காம கலா ரூபியே போற்றி!
ஓம் கிரிசையே போற்றி!
ஓம் கிலியைத் தீர்ப்பாய் போற்றி!
ஓம் கீர்த்தியைத் தருவாய் போற்றி!
ஓம் கூர்மதி தருவாய் போற்றி!
ஓம் குவலயம் ஆள்பவளே போற்றி!
ஓம் குலத்தைக் காப்பாய் போற்றி!
ஓம் குமரனின் தாயே போற்றி!
ஓம் குற்றம் பொருப்பாய் போற்றி!
ஓம் கொற்றவையே போற்றி!
ஓம் கொடுந்துயர் தீர்ப்பாய் போற்றி!
ஓம் கோமதியே போற்றி!
ஓம் கோன்ரிவாகனம் கொண்டாய் போற்றி!
ஓம் சங்கரியே போற்றி!
ஓம் சாமுண்டீஸ்வரியே போற்றி!
ஓம் சந்தோஷம் அளிப்பாய் போற்றி!
ஓம் சாந்த மனம் தருவாய் போற்றி!
ஓம் சக்தி வடிவே போற்றி!
ஓம் சாபம் களைவாய் போற்றி!
ஓம் சிம்ம வாகினியே போற்றி!
ஓம் சீலம் தருவாய் போற்றி!
ஓம் சிறுநகை புரிபவளே போற்றி!
ஓம் சிக்கலைத் தீர்ப்பாய் போற்றி!
ஓம் சுந்தர வடிவழகியே போற்றி!
ஓம் சுபிட்சம் அளிப்பாய் போற்றி!
ஓம் செங்கதிர் ஒளியே போற்றி!
ஓம் சேவடி பணிகிறேன் போற்றி!
ஓம் சோமியே போற்றி!
ஓம் சோதனை தீர்ப்பாய் போற்றி!
ஓம் தண்கதிர் முகத்தவளே போற்றி!
ஓம் தாயே நீயே போற்றி!
ஓம் திருவருள் புரிபவளேபோற்றி!
ஓம் தீங்கினை ஒழிப்பாய் போற்றி!
ஓம் திரிபுர சுந்தரியே போற்றி!
ஓம் திரிசூலம் கொண்டாய் போற்றி!
ஓம் திசையெட்டும் புகழ் கொண்டாய் போற்றி!
ஓம் தீரம் அளிப்பாய் போற்றி!
ஓம் துர்க்கையே அம்மையே போற்றி!
ஓம் துன்பத்தை வெரறுப்பாய் போற்றி!
ஓம் துணிவினைத் தருவாய் போற்றி!
ஓம் தூயமனம் தருவாய் போற்றி!
ஓம் நாராயணீ போற்றி!
ஓம் நலங்கள் அளிப்பாய் போற்றி!
ஓம் நிந்தனை ஒளிப்பாய் போற்றி!
ஓம் பகவதியே போற்றி!
ஓம் பகவானியே போற்றி!
ஓம் பசுபதி நாயகியே போற்றி!
ஓம் பாக்கியம் தருவாய் போற்றி!
ஓம் பிரபஞ்சம் ஆள்பவளே போற்றி!
ஓம் பிழை தீர்ப்பாய் போற்றி!
ஓம் புகழினை அளிப்பாய் போற்றி!
ஓம் பூஜிக்கின்றேன் துர்க்கா போற்றி!
ஓம் பொன் ஒளி முகத்தவளே போற்றி!
ஓம் போர் மடத்தை அளிப்பாய் போற்றி!
ஓம் மகிஷா சூரமர்த்தினியே போற்றி!
ஓம் மாதங்கியே போற்றி!
ஓம் மலை மகளே போற்றி!
ஓம் மகமாயி தாயே போற்றி!
ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி!
ஓம் மாதவன் தங்கையே போற்றி!
ஓம் மனக்குறை தீர்ப்பாய் போற்றி!
ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி!
ஓம் வேதவல்லியே போற்றி!
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி!
ஓம் ஜெய ஜெய தேவியே போற்றி!
ஓம் ஜெயங்கள் அலிப்பாய் போற்றி!
ஓம் துர்க்கா தேவியே போற்றி! ஓம் துர்க்கா தேவியே போற்றி!
ஓம் தேவி துர்க்கையே போற்றி! ஜெய தேவி துர்க்கையே போற்றி!
ஓம் தேவி துர்க்கையே போற்றி! ஜெய தேவி துர்க்கையே போற்றி!
ஓம் தேவி துர்க்கையே போற்றி! ஜெய தேவி துர்க்கையே போற்றி!

8.“சீதளாதேவி துதி”- உஷ்ண பாதிப்புகள் நீங்க-வேண்டும்போது

சீதளாதேவியே வணக்கம். உன்னைச் சரணடைந்தோரின் உடல் உபாதைகளும் சரும நோய்களும், கொப்புளங்களும் அவற்றால் ஏற்படும் பயமும் வேதனையும் தீர்க்கும் தாயே உன்னை வணங்குகின்றேன். எனக்கு எல்லா நோய்த் துயரங்களையும் பயத்தையும் நீக்கி அருள் புரிவாய் தாயே!

9.“மங்கள சண்டிகை துதி”- மங்களம் பெற, துயர் தீர - தினமும் / வேண்டும் போது.

மங்களை உன்றன் பத்ம மலரடி சூடினாலே
மங்களம் வாய்த்தல் உண்மை மற்றுமென் மங்களையே! மங்களம் நாணுன் நாணே! மாதர்கள் போற்றும் தேவி! மங்களம் 
தருக அம்மா! மாந்தர்கள் வணங்குகின்றோம்!

யாவுமாய் ஆகி நின்ற தேவியே சண்டி நீயும்
ஏவுவுல் தரிக்க வல்லாய்! எல்லாமாய் ஆனாய் அன்றோ!
மூவரில் முதன்மையானாய்! முரிந்திடும் புருவ வில்லாய்!
தேவரும் வியப்பில் வீழ தேர்ந்தனை கருணை கொண்டாய்!

நீலமா மலரை உன்றன் நீள்விழி மணந்த தம்மா!
கோலமே கூற்றம் தனனிக் கொளுத்திடும் செம்மைகொண்டாய்
ஆலமே சூழ்ந்த தேனும் அங்கொரு மஞ்சள் கொண்டாய்!
வாழவே உன்னை வேட்டோம் வகையருள் சண்டிகாவே!
வாழ்க்கையாம் கடலில் வீழ்ந்து வருந்தினம் வந்துனது வாசல்
ஆழ்மனத் தன்பினாலே அமைந்தனம் அன்னை அன்றோ!
தாழ்ந்தனம் தேவி உன்றன் தளிரடிப் பாதம் பற்றும்
ஏழைகள் துயரைத் தீர்க்க இக்கணம் எழுக தாயே!

காக்கவே காக்க நீயே! கணிபவள் நீயே தாயே!
நீக்கரும் மங்களங்கள் நிமலைதான் சண்டிகாவே!
போக்குவை விபத்தினின்றும் பொலிய மங்களமே நல்கு!
தேக்கரும் கருணை வெள்ளம் தினமுனை தோத்தரித்தோம்!

மகிழ்வினை நல்கும் தேவி! மங்களம் நல்கும் தேவி!
மகிழ்வதைத் தருவதற்கோ மலைத்திடா அன்னை நீயே!
மகிழ்வினைச் சுபத்தை நல்கு! மகிழ்வெனச்சுபமாய் ஆனாய்
மகிமையும்கொண்டாய்அம்மா! மனதினில்உன்னைக்கொண்டோம்!

மங்களம் நீயே! ஈசை மங்களம் 
எங்கும் ஆனாய்! மங்களம் 
எதிலும் நல்கும் மங்கள சண்டி நீயே!
மங்களம் புவனம் எல்லாம் மல்கிடவைக்கும் தாயே!

தோத்திர மாலை கொள்ள தோன்றிய மங்களமும் நீயே!
தோத்திரம் செய்வோர் தம்முள் தோன்றிடும் மங்களமும் நீயே!
தீத்திறம் அளிக்க வல்ல தேவியே! மனு வம்சத்து
தோத்திரம் கொள்ள வந்தாய்! தூயவளே வணங்குகின்றோம்!

வாழ்வினில் இன்பம் சேர்ப்பாய்! 
மங்களம் அனைத்தும் நல்கி!
தாழ்விலாச் சுவர்க்கம் சேர்க்கும்
சண்டியே போற்றுகின்றேன்!

சார்ந்தனை எங்கும் என்றும் சர்வமங்கள தாரையாய்!
பாரிதில் எல்லாச் செய்கை பரிபவம் இன்றிக் காப்பாய்!
ஆரெவர் வாரந்தோறும் அரிய செவ்வாய்தான் பூஜை 
நேரிடில் அருளைச் செய்யும் நேர்மையே சண்டி போற்றி!

இயங்குவை நிலைத்த தானே எல்லாமும் நீயே தாயே!
மயங்கியபோது வந்தே மதியினை நல்கும் தேவி
தயங்கியே தேவர் மூவர் தகுமறை முனிவர் போற்ற
வயங்கிய தாளைப் பற்றி வணங்கியே வாழ்த்துகின்றோம்!

மங்கள சண்டி தன்றன் மாண்பினை உரைக்கும் இந்த
மங்களங்கள் நல்க வல்ல மாதேவன் சொன்ன தோத்திரம்
எங்கனும் சொன்னோர் கேட்டோர் அவர்தம் புத்ரர் பௌத்ரர்
பொங்கு மங்களமே தங்க புவியினில் வாழ்வர் மாதோ!

“ஸ்ரீமங்களாஷ்டகம்”-

மங்களங்கள் பெருக- மனக் குறைவின்றி- பாவங்களிலிருந்து விலகி- நீண்ட ஆயுள்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.

oபிரம்மனே! மஹாவிஷ்னுவே! பரமேஸ்வரனே! இந்திரனே! அக்னியே! யமனே! நிருதியே! வருணனே! வாயுவே! குபேரனே! முருகனே! கணபதியே! சூரியனே! சந்திரனே! ருத்திரர்களே! விச்வ தேவர்களே! ஆதித்யர்களே! அச்வினி தேவர்களே! சாத்தியர்களே! வஸுக்களே! பித்ருக்களே! சித்தர்களே! வித்யாதரர்களே! யஷர்களே! கந்தர்வர்களே! கின்னரர்களே! மருத்துக்களே! மற்றும் ஆகயத்தில் சஞ்சரிக்கும் அனைத்து தேவர்களே! உங்கள் அனைவரையும் வணங்குகின்றேன். எனக்கு என்றும் மங்களம் அருளுங்கள்.

oசரஸ்வதி, மகாலட்சுமி, பூமிதேவி, பார்வதி, சண்டிகை, பத்ரகாளி, பிராஹ்மி முதலிய மாத்ரு கணங்கள், தட்சனின் மகள்களான அதிதி, திதி, சதி, முதலியோர், சாவித்ரி, கங்கை, யமுனை, அருந்ததி, தேவர்களின் மனைவிகள், இந்திராணி முதலிய தேவலோகப் பெண்களும் விண்ணில் சஞ்சரிக்கும் தேவமாந்தரும் எனக்கு நீங்காத மங்களத்தை அளிக்கட்டும்.

oமத்ஸ்யமூர்த்தி, கூர்மமூர்த்தி, வராஹமூர்த்தி, நரசிம்மப் பெருமாள், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், கபிலர், நரநாராயண மூர்த்தி, தத்தாத்ரேயர், பிருகு மற்றும் நரகாசுரனை வதம் செய்த மகா விஷ்ணுவின் மற்ற எல்ல அவதாரங்களும், சுதர்ஸ்ன சக்கரம் முதலிய ஆயுதங்களும், அவதாரம் செய்த மூர்த்திகளின் மனைவிகளும், அவர்களின் புத்திரர்களும், விஷ்னுவின் எல்ல அம்சா அவதாரங்களும் எனக்கு தீராத மங்களத்தை அளிக்கட்டும்.

oவிஸ்வாமித்திரர், வசிஷ்டர், அகஸ்தியர், உசத்யர், ஆங்கீரஸ், காச்யபர், வியாசர், கண்வர், மரீசு, கிரது, பிருகு, புலஹர், சௌனகர், அத்ரி, புலஸ்தியர் முதலான மஹரிஷிகளும் மற்றும் பல முனிவர்களும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கிரகங்களும், அஸ்வனி முதல் ரேவதி வரையிலான நட்சத்திரங்களும், நம் பிரஜாபதிகளும் நாகராஜன் முதலிய சர்ப்பக் கூட்டங்களும், மனுக்களும் எனக்கு வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.

oமநு புத்ரிகளான ஆகூதி, தேவஹூதி, ப்ரஸீதி ஆகிய மூவரும், எல்லா முனிவர்களின் பத்தினிகளும், மனுக்களின் பத்தினிகளும், சீதை, குந்திதேவி, பாஞ்சாலி, நளன் மனைவி தமயந்தி, ருக்குமணி, சத்யபாமா, தேவகி மற்றுமுள்ள அரசர்களின் மனைவியர், கோபிகைகள், பதி விரதைகள், நற்குலப்பெண்மணிகள் யாவரும் எனக்கு எல்லாவித மங்களத்தையும் கொடுக்கட்டும்.

oகருடன், அனந்தன், ஹனுமான், மஹாபலி, சனகர் முதலான யோகிகளும், சுகர், நாரதர், பிரகலாதன், பாண்டவர்கள், ந்ருகன், நளன், நஹூஷன், அரிச்சந்திரன், ருக்மாங்கதன் முதலிய விஷ்னு பக்தர்களும் மற்றும் சூரிய, சந்திர குலத்தில் உதித்த உத்தமர்களும், அரசர்களும் எனக்கு வளமான மங்கலத்தை உண்டாக்கட்டும்.

oஅந்தணர்கள், பசுக்கள், வேதங்கள், ஸ்ம்ருதிகள், துளசி, கங்கை, முதலி8ய சர்வ தீர்த்தங்கள், சகல வித்யைகள், பலவிதசாஸ்திரங்கள், இதிஹாசங்கள், சகல புராணங்கள், வர்ணங்கள், ஆச்ரமங்கள், சாங்கியம், யோகங்கள், யம நியமங்கள், எல்லா கர்மங்கள், காலங்கள், சத்யம் முதலான அனைத்து தர்மங்களும் எனக்கு போதிய மங்களத்தை அளிக்கட்டும்.

oசகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான நன்மைதரும் எல்லாமரங்கள், எட்டு திக்கு யானைகள், மேகங்கள், சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள், பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள், ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள், செடிகள், கொடிகள் எனக்கு நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.


குருஸ்ரீ பகோராயின் சந்தோஷப்பூக்களின் இதழ்களில் சில......
o‘நீ உலகின் அழகை தரிசிக்கும்போது நலமுடன் திகழ்கிறாய்’

oஎல்லா உயிர்க்கும் சந்தோஷத்தை அடைய, அதைத் தேட உரிமை உண்டு. வாழ்வின் இரகசியம் அல்லவா! அது அற்புத இலக்கணம்.

oசந்தோஷம் போதும் இனி எந்த சந்தோஷமும் வேண்டாம் எனக்கூறக்கூடிய நிலையில் எந்த ஒரு உயிரும் இயங்குவதாக இல்லை.

oமனிதனால் முடியாதது அவனது கடந்த இழந்தகாலத்தை மீண்டும் பெறுவது. இன்றைய நிகழ் நாளைய கடந்த காலம்.

oஉனது வாழ்நாள் ஒவ்வொருநாளாக குறைந்து கொண்டிருக்கின்றது. இறந்தவனையும், நடந்தவைகளையும் பற்றி சிந்தித்து என்ன பயன்! இருக்கும் காலத்தில் நீ உன் ஆன்மாவின் மேன்மைக்காக சிந்தி.

o‘அகில உலக உயிர்களும் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும்’ என்பதே அறத்தின் முத்திரையான வாக்கியம்.

o“மனதின் வினைகளான பிறர்பொருளை அபகரித்தல், பிறருக்கு தீங்கு செய்ய நினைத்தல், பிறர் உயர்வு கண்டு பொறாமை கொள்ளுதல் ஆகியவைகளின்றி புண்ணியமான பிறர் பொருள் வேண்டாம் என எண்ணுதல், அனைவரும் நலமாக வாழ நினைத்தல், அவர்தம் நல் வாழ்வு கண்டு மகிழ்வு அடைதல்” ஆகியவை உங்களின் மேலான வாழ்வுக்கு சிறப்பானதாகும்.

          “சந்தோஷப்பூக்களை நுகர்ந்து வாழ்வியல் பயன் பெறுங்கள்”

செவ்வாய்க்கிழமை, 13 August 2013 00:00

முருகன்

               ஒம்சரவணபவஓம்

முருகன்- அழகன் 
பெருமான்-கௌமார சமய நெறிகளின் தலைவன். 
வேறுபெயர்கள்- ஆறுமுகன், கார்த்திகேயன், சுப்ரமண்யன், பழனிஆண்டவன், குமரன், சிங்கார வேலன், வேலாயுதன், சரவணபவன், ஞானபண்டிதன், ஸ்கந்தன், காங்கேயன், ஷண்முகன், தகப்பன்சாமி, 

உகந்த மலர்கள்- வெட்சி, கடம்பம், மல்லிகை, ரோஜா, முல்லை, செண்பகம் மற்றும் செந்நிற மலர்கள்.
உகந்த நாட்கள்- சஷ்டி, செவ்வாய்க்கிழமை, கார்த்திகை நடசத்திரம் சிறப்பு. எந்நாளும் வழிபடலாம்.

விழாநாட்கள்- தைப்பூசம்- தை பௌர்ணமியன்று பூச நட்சத்திரம் சேர்ந்து வரும் நன்னாள். உலகம் தோன்றிய நாள் என புராணங்கள் சொல்கின்றன. அரக்கன் தரகாசுரனை வதம் செய்த நாள். உமையிடம் வேல்பெற்று சூரபதுமனை அழிக்க புறப்பட்ட நாள். வள்ளலார் ஜோதி விழா இந்நாளில் கொண்டாடப்படுகின்றது. பக்தர்கள் அலகு குத்தியும், பால்காவடி, புஷ்பக்காவடி மற்றும் பால் குடமெடுத்து நடைப்பயணம் மேற்கொண்டு முருகனை வழிபடுகின்றனர். கார்த்திகை, சித்திரை சிறப்பு சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றி ஆறுதாமரைப் பூக்களில் உருவாகி கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர்.
சிறப்பு-முருகன் மலையும் மலிசார்ந்த இடமான குறிஞ்சித் திணைக்குரிய கடவுள். வள்ளி தெய்வானை என இரு மனைவியர். இளமைக்கும் வீரத்திற்கும் எடுத்துகாட்டாகத் திகழ்பவர். தாருகாசுரனையும், சூரபதுமனையும் அழிக்க அவதாரம் எடுத்தவர். சக்திகிரி, சிவகிரி என்ற மலைகளை அகத்தியருக்காக கொண்டுவந்த இடும்பன் களைப்பின் மிகுதியால் ஓர் இடத்தில் வைத்துவிட்டு ஒய்வுக்குப்பின் தூக்கமுடியாமல் திணர அங்குவந்த முருகன் மலை தன்னுடையது என வாதமிட்டு போரில் வென்றார். எல்லா முருகன் கோவில்களிலும் பாதையைக் காவல்காக்கும் பொறுப்பு இடும்பனுக்குத் வரமாகத் தரப்பட்டது. விநாயகர் ஞானப்பழம் பெற்றதனால் கோபம் கொண்டவரை, சிவன் முருகனையே ஞானப்பழம் என உணரவைத்தார்.
வணங்கும்முறை- எல்லா நாட்களிலும் விழா நாட்களிலும் அதிகாலை எழுந்து குளிர்ந்த நன்னீரில் நீராடி திருநீறு உத்திராட்சம் அணிந்து கோவிலுக்குச் செல்லவும். பொதுவாக எல்லா சிவன் கோவில்களிலும் முருகன் இடம் பெற்றமையால் மூலவரை வழிபட்டபின் முருகனை வழிபடுதல் சிறப்பு. தனிக்கோவில்களில் முருகனை  வழிபட்டு வலம் சுற்றி வந்து மூலவருக்கு வலப்பக்கம் ஆண்களும், இடப்பக்கம் பெண்களுமாக இருந்து கொண்டுவந்த அர்ச்சனைப் பொருள்களை அர்ச்சகரிடம் கொடுத்து அர்ச்சனை செய்து தீப ஆராதனையின் போது கண்களை மூடாமல் இறைவனைப் பார்த்து தரிசனம் செய்யவும். கோவிலின் ஒருபகுதியில் அமைதியாக அமர்ந்து கண்களைமூடி இறைவன் திருநாமத்தை அல்லது துதிப்பாடல்களை உதட்டளவில் சொல்லிக் கொண்டிருக்கவும். பின் எழுந்து அமைதியாக கோவிலைவிட்டு வெளியில் செல்லவும்.

 

உள்ளே.....

1.“கந்தர்சஷ்டி கவசம்”-செல்வம், வாரிசு, ஆயுள், ஆரோக்கியம் பெற, கஷ்டங்கள் நீங்க- தினமும். 

2.“ஸ்ரீசுப்ரமண்யர் கராவலம்பம்” - கஷ்டங்கள் நீங்க-தினமும்- காலையில்.

3.“சண்முக கவசம்”- ஆரோக்யமாயிருக்க, நோய் நொடிகள் நீங்க- தினமும்/ வேண்டும் போது

4.“சண்முக நவக்கிரக பாமாலை”- சீரிய வாழ்வுக்கு கிரகங்களின் பாதிப்பு நீங்க-தினமும்/வேண்டும்போது 

5.“ஸ்ரீபழனி ஆண்டவர் தியானம்”- செவ்வாய் தோஷம் விலக-வாழ்வில் சிறப்பு அடைய- தினமும். 

6.“ஸ்ரீமுருகப்பெருமான் துதி”- செவ்வாய் தோஷம் விலக- அறிவுத் திறன் பெருக- செவ்வாய் மற்றும் பங்குனி உத்திரத்தன்று. 

7.“ஸ்ரீசுவாமிநாத துதி”- தீய எண்ணங்கள் நீங்க, நலன்கள் பெருக- செவ்வாய் மற்றும் வியாழன்.

8.“ஸ்ரீ சுப்ரமண்ய கவசம்”- பகைவர்களிடமிருந்து காப்பற்ற-கிரக தோஷங்கள் விலக- வாழ்வில் எல்லா சிறப்புகளும் அடைய- தினமும்.

9.“ஸ்ரீ சுப்ரமண்யபுஜங்கம்”-வேண்டும்போது-வேண்டுவன வற்றிற்கு-

10.“ஸ்ரீ சுப்ரமண்யகத்யம்”-செல்வம், வாரிசு, ஆயுள், ஆரோக்கியம் பெற- மாதசஷ்டி, கிருத்திகை நட்சத்திர தினம் மற்றும் செவ்வாய்க்கிழமை.

11.“சக்தி வேல் துதி”- மனபயம் நீங்கி வெற்றிபெற- செவ்வாய்க்கிழமை மற்றும் பங்குனி உத்திரத்தன்று- ஜகத்குரு ஆதிசங்கரர் அருளியது. 

12.“ஸ்ரீ ஸ்கந்த துதி”- எல்லா நியாயகோரிக்கைகளும் வெற்றிபெற- கார்த்திகை மாதம். 

13.“ஸ்ரீஆறுமுகன் துதி”- ஆனந்த வாழ்வுவாழ- சாஸ்திரம்-ஸ்காந்தம்- மந்திரம்- சரவணபவ- சகல பிராணிகளும் இகத்திலும் பரத்திலும் இன்பமாய்வாழ - தினமும். 

14.“சுப்ரமண்ய புஜங்கம்”-ஆதிசங்கரர்-உடல் உபாதைகள், மனோ வியாதிகள் நீங்க -வேண்டும்போது 

“ஸ்ரீமங்களாஷ்டகம்”:--மங்களங்கள் பெருக-மனக்குறை- பாவங்களிலிருந்து விலகி-நீண்ட ஆயுளுடன்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை. 

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!
மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!

1.“கந்தர் சஷ்டி கவசம்”- செல்வம், வாரிசு, ஆயுள், ஆரோக்கியம் பெற, கஷ்டங்கள் நீங்க- தினமும்.

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணியாட

மைய நடஞ்செயும் மயில் வாகனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து
வரவர வேலாயுதனார் வருக!
வருக வருக மயிலோன் வருக!

இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக! 
வாசவன் மருகா வருக வருக! 
நேசக் குறமகள் நினைவோன் வருக!

ஆறுமுகம் படைத்த ஐயா வருக!
நீறிடும் வேலன் நித்தம் வருக!
சிரகிரி வேலன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக!

சரவண பவச, ரர ரர ரர ர
ரிவண பவச, ரிரி ரிரி ரிரி ரி
விணபவ சரவண, வீரா நமோ நம
நிபவ சரவண நிற நிற நிறென

வசர வணப வருக வருக!
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக!
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாச அங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க 
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக! 
ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொலி சௌவும், உயிரையுங் கிலியும்

கிலியுஞ் சௌவும், கிளரொளியையும்
நிலைபெற்றென் முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் தீயும், தனியொளி யொவ்வும்
குண்டலியாம் சிவ குகன் தினம் வருக!

ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறுடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈரறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத்தழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்தின மாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும்

இருதொடை அழகும் இணைமுழந்தாளும்
திருவடியதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகெனெ
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து

எந்தனையாளும் ஏரகச்செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதனென்று

உன் திருவடியை உறுதியென்றெண்ணும்
என் தலை வைத்துன் இனையடி காக்க
என்னுயிர்க்குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க
விதிசெவியிரண்டும் வேலவர் காக்க

நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்திரு பல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்தின வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவேலிரு தோள் வளம்பெறக் காக்க
பிடரிகளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதினாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க

பிட்டமிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை யிரண்டும் பருவெல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க

ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க
கைகளிரண்டும் கருணைவேல் காக்க
முன்கையிரண்டும் முரண்வேல் காக்க
பின் கையிரண்டும் பின்னவள் இருக்க

நாவில் சரஸ்வதி நற்றுனையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க

அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க

தாக்கத் தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம ராக்கதரும்

அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோடனைவரும்

விட்டாங்காரரும் மிகு பல பேய்களும்
தண்டியக்காராரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட
ஆனை அடியினில் அரும்பாவைகளும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனைதனையும்

ஒட்டிய பாவையும் ஒட்டிய செருக்கும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓது மஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அகன்று புரண்டிட
வாய் விட்டலறி மதி கெட்டோடப்

படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டுக்
கட்டி உருட்டு கால்கை முறியக்
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்குச் செக்கு செதில் செதிலாக
சொக்குச் சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர் வடிவேலால்

பற்றுப் பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலதுவாக
விடுவிடு வேலை வெருண்டதுவோடப்
புலியும் நரிவயப் போத்தோடு நாயும்

எலியும் கரடியும் இனித்தொடாதோடத்
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடுவிட விஷங்கள் கடித்துயரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க

ஒளிப்புஞ் சுளுக்கும் ஒரு தலை நோயும்
வாதஞ்சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலை சயங்குன்மம் சொக்கு சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல் விப்பிரிதி

பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பரு அரையாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்

நில்லாதோட நீ எனக்கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணாளரசரும் மகிழ்ந்துறவாகவும்

உன்னைத் துதிக்க உன் திருநாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொழி பவனே
அரிதிரு மருகா ஆமராவதியைக் 
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர் வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை

இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தணிகாசலனே சங்கரன் புதல்வா
கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமரா

ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா
சமராபுரி வாழ் சண்முகத்தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்

என்நா இருக்க யானுனைப்பாட
எனைத்தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூபதியை

நேசமுடன்யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடன் இரஷி அன்னமுஞ் சொன்னமும்

மெத்த மெத்தாக வேலாயுதனார்
சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவஜம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனையடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பதுன் கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே

பிள்ளையென்றன்பாய்ப் பிரியமளித்து
மைந்தெனென் மீதுன் மனமகிழ்ந்தருளித்
தஞ்சமென்றடியார் தழைத்திட அருள் செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய

பாலன் தேவராயன், பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசாரத்துடன் அங்கந்துலக்கி
நேசமுடனொரு நினைவதுவாகிக்

கந்தர் சஷ்டி கவசமிதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத்தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறணிய

அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் 
திசை மன்னரெண்மர் சேர்ந்தங்கருளுவர்
மாற்றலரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மையளித்திடும்

நவ மதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளு மீரெட்டா வாழ்வர்
கந்தர் கைவேலாம் கவசத்தடியை
வழியாய் காண மெய்யாய் விளங்கும்

விழியாற்காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப் பொடி பொடியாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்ரு சங்காரத்தடி
அறிந்தெனதுள்ளம் அட்டலக்ஷ்மிகளில்
வீரலக்ஷ்மிக்கு விருந்துணவாகச்
சூரபத்மாவைத் துணித்தகையதனால்
இருபத்தேழ்வர்க்கு உவந்தமுதளித்த

குருபரன் பழனிக் குன்றினிலிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத்தாட்கொள என்றெனதுள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி

தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்யா தேகா போற்றி
இடும்பாயுதனே இடும்பா போற்றி

கடம்பா போற்றி கந்த போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோரரசே
மயில் நடமிடுவோய் மலரடி சரணம்

சரணஞ் சரணஞ் சரவண பவஓம்
சரணஞ் சரணஞ் சண்முகா சரணம்

2.“ஸ்ரீசுப்ரமண்யர் கராவலம்பம்” - கந்தன் அருளால் கோடி ஜன்மத்தில் செய்த பாவமும் அந்தக் கணமே அழிந்து, எல்லாமே இன்பமயம் ஆகும். கஷ்டங்கள் யாவும் நீங்கி நிறைவாழ்வு வாழ்ந்து முடிவில் முக்தியை அடைய தினமும்- காலையில்.

சுவாமிநாதப் பெருமானே! கருணை நிறைந்தவரே! எளியோர் நாதனே! திருவான உமையவளின் தாமரை மலர் நிகர்த்த திருமடியில் அமர்ந்திருப்பவரே! மகாவிஷ்னு, மகாலட்சுமி உள்ளிட்ட சகல தேவர்களாலும் போற்றப்படும் உமது திருப்பாதங்களுக்குச் சரணம்! வள்ளி மணவாளரே, உமது திருக்கரத்தினால் எனக்கு உதவி அருளுங்கள்!

தேவர்கள் யாவரையும்விட உயர்வானவனே! தேவ கணங்களின் தலைவனே! தேவேந்திரன் உள்ளிட்டவர்களால் வணங்கப்படும் மென்மையான பாதங்களை உடையவரே! நாரதர் உள்ளிட்ட தேவரிஷிகளினால் போற்றப்படும் புகழையுடையவரே! வள்ளிமணாளரே! எனக்கு அருளிட உமது அபயக்கரத்தினை நீட்டுங்கள்!

உலக உயிர்களின்மீது அன்பு கொண்டு சகல உயிர்களும் பசியாறிட உணவளிப்பவரும், வணங்கிடும் பக்தர்களின் பிறவிப் பிணிகளை நீக்கும் மருத்துவராக அருள்பாலிப்பவரும், பக்தர்களின் ஆசைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்வதையே தன்னுடைய லட்சியமாகக் கொண்டவரும், ஸ்ருதி, ஆகமம், பிரணவம் ஆகியவற்றின் மொத்த உருவமாய்த் திகழ்பவரும், வள்ளி நாயகனுமான சுப்ரமண்யரே! எனக்கு அபயக்கரம் நீட்டி அருளுங்கள்!

இந்திரனையும் வென்று இறுமாப்புடன் திரிந்த க்ரௌஞ்ச மலையின் செருக்கை சக்தி வேலால் தகர்த்தவரே! பாசம் முதலிய திவ்ய பாணங்களை தரித்து பாரினைக் காத்திட பரிதிபோல் உலா வருபவரே! வள்ளி நாயகரே! எனக்கு உதவும் உமது கரத்தினால் ஆறுதல் அளியுங்கள்!

தேவாதி தேவரே! தேவர்களின் நடுவே தேரில் அமர்ந்து பிரகாசிப்பவரே! தேவேந்திர பட்டணத்திணை பகைவர் எவரும் நெருங்காதபடி தீர்க்கமான வேல், வில்லையேந்தி பிரகாசிப்பவரே! கோடானு கோடி அசுரர்களைக் கொன்று தேவர்களால் ஆராதிக்கப்படுபவரே! வள்ளி நாயகரே! அபயக்கரத்தை எனக்கு அளீப்பீராக!

ரத்தினங்கள், முத்துக்கள், மணிகள் போன்றவற்றாலான ஆரங்களும், பொன்னாலான கிரீடமும் அணிந்து ஒளிர்பவரே! கேயூரம், குண்டலம் என பிரகாசமான ஆடை ஆபரணங்களால் மிகுந்த ஓளியுடன் திகழ்பவரே! வீரர்களுள் நிகரற்றவரே! தாரகன் முதலிய அசுரர்களை வென்று தேவர்களைக் காத்தவரே! தேவர்களால் எப்போதும் வணங்கப்படுபவரே! வள்ளி மணாளரே! உம்முடைய அபயகரத்தால் எனக்கு அருளுங்கள்!

ஐந்தெழுத்து மந்திரத்தின் ஆதியான பரமனின் மகனே! கங்கையில் தோன்றியதால் காங்கேயன் என்று அழைக்கப்படுபவரே! பஞ்சாமிர்தத்தில் அதிக விருப்பமுள்ளவரே! தேவேந்திரன் உள்ளிட்ட தேவர்களாலும், முனி சிரேஷ்டர்களாலும் முடி சூட்டப் பட்டவரே! விஷ்னுவுடன் இனைந்தவரே! விஷ்னுவுக்கு பிரியமானவரே! பொய்கையில் மீன்களைத் துன்புறுத்திய மகன்களை மீன்களாக சபித்து, சரவணப் பொய்கையில் இருக்கும் போது முருகன் மூலம் சாப விமோசனம் பெறுவர் என்றும் சாப விமோசனம் கொடுத்த பராசரரால் போற்றப்படுபவரே! வள்ளி நாயகரே! உங்களுடைய அபயக்கரத்தால் என்னைக் காத்து அருளுங்கள்.!

கார்த்திகை பாலனே, கார்த்திகேயனே! உன்னுடைய பரிபூரண அருள் கிட்டுவது என்பது கருணக் கடலில் முழுகுவதற்குச் சமம் அல்லவா? என்னிடமுள்ள காமம், க்ரோதம், கோபம் போன்ற பிறவிப் பிணிகளை உன் பார்வையாலேயே நீங்கச் செய்பவனே! என்னை உய்விக்கும் பிறையணிந்த பரமேஸ்வரன் பரமேஸ்வரியின் பிரியத்துக்குப் பாத்திரமானவனே! வள்ளி நாயகனே! எனக்கு ஆறுதல் அளிக்கும் அபயக்கரத்தை நீட்டுங்கள்!

3.“சண்முக கவசம்”-பாம்பன் சுவாமிகள்-ஆரோக்யமாக இருக்க, நோய்நொடிகள் நீங்க- தினமும்/வேண்டும் போது

அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருளது ஆகித்
ஆதியாம் கயிலைச் செல்வன் அணிநெற்றி தன்னைக் காக்க
தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க
சோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்க
நாதனாம் கார்த்திகேயன் நாசியை நயந்து காக்க

இருசெவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க, வாயை
முருகவேல் காக்க, நாப்பல் முழுதும் நல் குமரன் காக்க
துரிசுஅறு கதுப்பை யானைத்துண்டனார் துணைவன் காக்க
திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ரமணியன் காக்க

ஈசனாம் வாகுலேயன் எனது சுந்தரத்தைக் காக்க
தேசுறு தோள் விலாவும் திருமகள் மருமகன் காக்க
ஆசுஇலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க, எந்தன்
ஏசுஇலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக்கோன் காக்க

உறுதியாய் முன்கை தன்னை உமையிளமதலை காக்க
தறுகண் ஏறிடவே என்கைத் தலத்தை மாமுருகன் காக்க
புறம்கையை அயிலோன் காக்க, பொறிக்கர விரல்கள் பத்தும்
பிறங்கு மால்மருகன் காக்க, பின்முதுகைச் சேய் காக்க

ஊண்நிறை வயிற்விற மஞ்சை ஊர்தியோன் காக்க, வம்புத் 
தோள்நிமிர் சுரேசன் உந்திச் சுழியினைக் காக்க, குய்ய
நாணினை அங்கி கௌரி நந்தனன் காக்க, பீஜ
ஆணியைக் கந்தன் காக்க, அறுமுகன் குதத்தைக் காக்க

எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு இறைவனார் காக்க காக்க
அஞ்சகனம் ஓர் இரண்டும் அரன்மகன் காக்க காக்க
விஞ்சிடு பொருள் காங்கேயன் விளரடித் தொடையைக் காக்க
செஞ்சரன் நேச ஆசான் திமிரு முன் தொடையைக் காக்க

ஓங்கிய சீற்றமே கொண்டு உவணியில் வேல் சூலங்கள்
தாங்கிய தண்டம் எஃகம் தடி பரசு ஈட்டி யதி
பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின் 
தீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க

ஒளவியமுளர் ஊன் உண்போர் அசடர் பேய் அரக்கர் புல்லர்
தெவ்வர்கள் எவர் ஆனாலும் திடமுடன் எனை மல்கட்டத்
தவ்வியே வருவாராயின் சராசரம் எலாம் புரக்கும்
கவ்வுடைச் சூர சண்டன் கை அயில் காக்க காக்க

கடுவிடப் பாந்தள் சிங்கம் கரடி நாய் புலிமா யானை
கொடிய கோணாய் குரங்கு கோல மார்ச்சாலம் சம்பு
நடையுடை எதனாலேனும் நான் இடர்ப் பட்டிடாமல்
சடிதியில் வடிவேல் காக்க சானவி முளைவேல் காக்க

நகரமே போல் தழீஇ ஞானவேல் காக்க, வன்புள்
சிகரிதேள் நண்டுக் காலி செய்யன் ஏறு ஆலப் பல்லி
நகமுடை ஓந்தி பூரான் நளிவண்டு புலியின் பூச்சி
உகமிசை இவையால் எற்குஓர் ஊறுஇலாது ஐவேல் காக்க

சலத்தில்உய் வன்மீன் ஏறு, தண்டுடைத் திருக்கை, மற்றும்
நிலத்திலும் சலத்திலும்தான் நெடுந்துயர் தரற்கே உள்ள
குலத்தினால் நான் வருத்தம் கொண்டிடாது அவ்வவ்வேளை
பலத்துடன் இருந்து காக்க, பாவகி கூர்வேல் காக்க

ஞமலியம் பரியன் கைவேல், நவக்கிரகக் கோள் காக்க
சும விழி நோய்கள், தந்த சூலை, ஆக்கிராண ரோகம்,
திமிர்கழல் வாசம், சோகை, சிரமடி கர்ண ரோகம்
எமை அணுகாமலே பன்னிருபுயன் சயவேல் காக்க

டமருகத்து அடிபோல் நைக்கும் தலையடி, கண்டமாலை
குமுறு விப்புறுதி, குன்மம், குடல்வலி ஈழை காசம்,
நிமிரொணாது இருந்தும்செட்டை நீர்ப்பிரமேகம எல்லாம்
எமை அடையாமலே குன்று எறிந்தவன் கைவேல் காக்க

இணக்கம் இல்லாத பித்த எரிவு, மாசுரங்கள், கைகால்
முணக்கவே குறைக்கும் குஷ்டம், மூலவெண்முளை தீமந்தம்
சணத்திலே கொல்லும் சன்னிசாலம் என்று அறையும் இந்த
பிணிக்குலம் எனை ஆளாமல் பெரும் சக்தி வடிவேல் காக்க

தவனமா ரோகம், வாதம், சயித்தியம், அரோசகம், மெய்
சுவறவே செய்யும் மூலச்சூடு, இளைப்பு, உடற்று விக்கல்
அவதிசெய் பேதி சீழ்நோய், அண்டவாதங்கள், சூலை
எவையும் என்னிடத்து எய்தாமல் எம்பிரான் திணிவேல் காக்க

நமைப்புறு கிரந்தி, வீக்கம் நணுகிடு பாண்டு, சோபம்
அமர்த்திடு கருமை வெண்மை ஆகுபல் தொழுநோய் கக்கல்
இமைக்குமுன் உறு வலிப்போடு எழுபுடைப்ப கந்தராதி
இமைப்பொழுதேனும் என்னை எய்தாமல் அருள்வேல் காக்க

பல்லது கடித்து மீசை படபடென்றே துடிக்க
கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி
எல்லினும் கரிய மேனி எமபடர், வரினும் என்னை
ஒல்லையில் தார காரி ஓம் ஐ ரீம்வேல் காக்க

மண்ணிலும் மரத்தின் மீதும் மலையிலும் நெருப்பின் மீதும்
தண்ணிறை ஜலத்தின் மீதும் சாரிசெய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தின் உள்ளும்வேறு எந்தஇடத்தும் என்னை
நண்ணிவந்து அருள் ஆர் சஷ்டி நாதன் வேல் காக்க காக்க

யகரமேபோல் சூல் ஏந்தும் நறும்புயன் வேல்முன் காக்க
அசுரமே முதலாம் ஈராறு அம்பகன் வேலின் காக்க
சகரமோடு ஆறும் ஆனோன் தன்கைவேல் நடுவில் காக்க
சிகரமின் தேவ மோலி திகழ் ஐவேல் கீழ்மேல் காக்க


ரஞ்சித மொழி தேவானை நாயகன் வள்ளி பங்கன்
செஞ்சய் வேல் கிழக்கில் திறமுடன் காக்க, அங்கி
விஞ்சிடு திசையின் ஞான வீரன் வேல் காக்க, தெற்கில் 
எஞ்சிடாக் கதிர்காமத்தோன் இகலுடைக் கரவேல் காக்க

லகரமே போல் காளிங்கன் நல்லுடல் நெளிய நின்று
தகரமர்த் தனமே செய்த சங்கரி மருகன் கைவேல்
நிகழ்எனை நிருதி திக்கில் நிலைபெறக் காக்க, மேற்கில்
இகல் அயில்காக்க, வாயிவினில் குகன் கதிர்வேல் காக்க

வடதிசை தன்னில் ஈசன் மகன் அருள் திருவேல் காக்க
விடையுடை ஈசன் திக்கில் வேத போதகன் வேல் காக்க
நடக்கையில் இருக்கும் ஞான்றும் நவில்கையில் நிமிர்கையில்,
கீழ்க்கிடக்கையில் தூங்குஞான்றும் கிரிதுளைத்துள வேல்காக்க

இழந்து போகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல்
வழங்கும்நல்ஊண் உண்போதும் மால்விளையாட்டின் போதும்
பழஞ்சுரார் போற்றும் பாதம்பணிந்து நெஞ்சுஅடக்கும் போதும்
செழும் குணத்தோடே காக்க, திடமுடன் மயிலும் காக்க

இளமையில் வாலிபத்தில் ஏறிடு வயோதிகத்தில்
வளர் அறுமுகச் சிவன்தாம் வந்தெனைக் காக்க காக்க
ஒளிஎழு காலை, முன்எல், ஓம்சிவ சாமி காக்க
திளிநாடு பிறபகல்கால் சிவகுரு நாதன் காக்க

இறகுடைக்கோழித் தோகைக்கு இறை முன் இராவில் காக்க
திறலுடைச் சூர்ப்பகைத்தே திகழ் பின் இராவில் காக்க
நறவுசேர் தாள் சிலம்பன் நடிநிசி தன்னில் காக்க
மறைதொழு குகன் எம்கோன் மாறாது காக்க காக்க

இனம் எனத்தொண்டரோடு இணக்கிடும் செட்டி காக்க
தனிமையில் கூட்டந்தன்னில் சரவண பவனார் காக்க
நனி அனுபூதி சொன்ன நாதர்கோன் காக்க இத்தைக்
கனிவொடு சொன்ன தாசன் கடவுள்தான் காக்க வந்தே!
4.“சண்முக நவக்கிரக பாமாலை”- சீரிய வாழ்வுக்கு கிரகங்களின் பாதிப்பு நீங்க- தினமும்/வேண்டும் போது

 ஆறுமுகன் புகழை அன்றாடம் போற்றிடவே
ஏறுமுகம் கிடைக்கும்! சேரும் புகழ் ஏராளம்!
ஒன்பான் கிரமுமே ஓடிவந்து காப்பாற்றும்!
கண்ணான வேழமுகம் காப்பு
செப்பும் சிலம்புரியின் சிங்காரம் தந்த கவி
சுப்பிரமணியனுக்குத் தூதாகும்! அப்புறமாய் 
ஒன்பான் கரிமுகமே ஓங்காரம் கேட்டவுடன்
இன்பமெல்லாம் கூட்டும் இனி!

சூரியதிசை:

 ஆறிரு கரங்கள் கொண்டு
அடியார்க்கு அருள் வழங்கி
சீரிய வாழ்வு நல்கும்
செந்திலே பழநி வேலா!
சூரிய திசையிலே உன்னை
துதிட்டேன் காக்க வாராய்!
காரியம் யாவினுக்கும் 
கை கொடுத்து உதவுவாயே!

சந்திர திசை:

 இந்திரன் முதலானோர்கள்
இளமையாய் விளங்கும் உந்தன்
மந்திரம் சொல்லி நல்ல
மகத்துவம் பெற்றது உண்டு!
சந்திர திசையில் உன்னை
சந்தித்துப் போற்றுகின்றேன்!
வந்திடும் செல்வமெல்லாம்
வரத்தினால் வழங்குவாயே!

செவ்வாய் திசை:

 ஒளவைக்கு நெல்லி தந்தாய்!
அருணகிரி நாதருக்கும்
திவ்வியக் காட்டி தந்தாய்
திருவருள் கொடுப்பதற்கே
செவ்வாயின் திசையில் உன்னை 
சேவித்துப் போற்றுகின்றேன்!
வையகம் புகழும் நல்ல
வாழ்க்கையை வழங்கு வாயே!

புதன் திசை:

 கதம்பமும் முல்லை மல்லி
கனிவுடன் சூடும் கந்தா
சதமென ஆயுள் நல்கி
சகலமும் அருளுவாயே!
புதன் திசை நடக்கும் நேரம்
போற்றி நான் வணங்குகின்றேன்!
இதம் தரும் வாழ்வை நல்கி
இன்பத்தை வழங்குவாயே!

வியாழதிசை:

 ஆறுமுகம் கொண்ட செல்வா!
அழகிய வள்ளி நேசா!
பெருமைகள் வழங்கி நாளும்
பிறர் போற்றும் வாழ்க்கை ஏற்க
குருதிசை நடக்கும் நேரம் 
குமரனை வணங்குகின்றேன்!
திருவருள் தருவதோடு
செல்வாக்கும் அருளுவாயே!

சுக்ரதிசை:

 தக்கதோர் வாகனங்கள்
தனி இல்லம் மனைவி மக்கள்
அக்கறை கொண்டு நாளும்
அசுரகுரு வழங்கு மென்பார்
சுக்கிரதிசையில் நாளும்
சுப்பிரமணியன் உன்னை
சிக்கெனப் பிடித்த தாலே
சிறப்பெலாம் வழங்குவாயே!

சனிதிசை:

 பிணியெலாம் அகலவேண்டிய
பெரும் பொருள் கிடைக்க வேண்டி
அணிதிகழ் வாழ்வு வேண்டி
அல்லல்கள் அகல வேண்டி
சனிசென்னும் திசையில் நாளும்
சண்முகா உனைத் துதித்தேன்!
கனிவுடைத் தெய்வம் நீயே
காட்சி தந்தருளுவாயே!

இராகுதிசை:

 நாகமாய் வடிவில் நின்று
நடந்திடும் தோஷம் நீக்கி
போகத்தை வழங்குதற்கே
பூமியில் அருள் கொடுக்கும்
இராகு எனும் திசையில் உன்னை
இருகரம் கூப்பி வணங்குகிறேன்!
பாகென இனிக்கும் கந்தா
பதினாறு பேறும் தாராய்!

கேதுதிசை:

 ஆதரவு வழங்குதற்கும்
அண்டிய வழக்கு எல்லாம்
தீதின்றி மாறுதற்கும்
திறமைகள் தெரிவதற்கும் 
கேது திசையில் உன்னை
கீர்த்தியாய் வணங்குகின்றேன்
சாதனை செய்த வேலா
சண்முகா அருளுவாயே!

5.“ஸ்ரீபழனி ஆண்டவர் தியானம்”- செவ்வாய் தோஷம் விலக- வாழ்வில் சிறப்பு அடைய- தினமும்.

வணங்குபவர்களுக்கு கற்பக விருட்சம்போல் கேட்பதை தருபவரும், செந்தாமரைப் போன்ற நிறமுடையவரும், இரண்டு கையால் அருள்பவரும், தன் பக்தர்களின் நோய்களைப் போக்குபவரும், ஒரு முகத்தால் உலகையே பரிபாலகனம் செய்பவரும், இடுப்பில் இடது கை பதித்து எழில் தோற்றம் காட்டுபவரும், வலது கையில் தண்டத்தை ஏந்தியவரும், கௌபீனம் தரித்தவருமான பழநி ஆண்டனை வணங்குகின்றேன். என் செவ்வாய் தோஷ பாதிப்புகளை நீக்குபவரும், என் தொழிலிலும் வியாபாரத்திலும் எந்த நஷ்டமும் வராமல் காப்பவருமான பழிநிவாழ் முருகப் பெருமானை நான் உளமாற வணங்குகின்றேன். எனக்கு அவர் அருள்புரிவாராக!

6.“ஸ்ரீமுருகப்பெருமான் துதி”- செவ்வாய் தோஷம் விலக- அறிவுத் திறன் பெருக- செவ்வாய் மற்றும் பங்குனி உத்திரத்தன்று.

யோகீஸ்வரனாகவும், மகாசேனைகளுக்கு தலைவராயும் விளங்குபவரே, கார்த்திகேயன் என்றும் அக்னியிலிருந்து உதித்தவர் என்றும் போற்றப்படுபவரே, கந்தன், குமாரன், தேவசேனாபதி, சுவாமி, சங்கரபுத்திரன், காங்கேயன், பிரம்மச்சாரி, மயில் வாகனமுடையோன், தாரகாசுரனை அழித்தவன், உமாபுத்திரன், கிரௌஞ்சமலையை அடக்கியவன், ஆறுமுகன், ஏழுகடல்களும் தொழுபவன், சரஸ்வதி தேவிக்கு பிரியமான குகன், சனத்குமரன், பகவான் என்றெல்லாம் பக்தர்களால் துதிக்கப்படுபவரே, இம்மையும், மறுமையும் அருள்பவரே, உன்னை வணங்குகின்றேன். எனக்கு அருள் புரிந்து பாதுகாப்பாயாக.

7.“ஸ்ரீசுவாமிநாத துதி”- தீய எண்ணங்கள் நீங்க, நலன்கள் பெருக- செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை.
பற்றற்ற முனிவரைப் போல காஷாய வஸ்திரத்தினால் அலங்கரிக்கப்பட்டவரே, காமம், மோகம் போன்ற தீய எண்ணங்காளை பக்தர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள பிட்சைப் பாத்திரம் ஏந்தியிருப்பவரே, கருணை பொழியும் கண்களையுடையவரே, சக்திவேலைக் கையில் பற்றியவரே, பக்தர்களை பரிசுத்தமாக்குபவரே, ஈசனுக்கே ஞானம் விளக்கிய சுவாமிநாத சுவாமியே, உன்னை வணங்குகின்றேன். என் மனதிலிருந்து தீய எண்ணங்களை நீக்கி, என் நலன்களை பெருக்குமாறு உம்மை வேண்டுகிறேன் நிறைவேற்றுவாய் அப்பனுக்கு பாடம் சொன்ன அப்பனே! சுவாமிநாதனே!

8.“ஸ்ரீசுப்ரமண்ய கவசம்”- பகைவர்களிடமிருந்து காப்பற்ற - கிரக தோஷங்கள் விலக- வாழ்வில் எல்லா சிறப்புகளும் அடைய- படிப்போரும், கேட்போரும் இவ்வுலகின் எல்லா விருப்பங்களையும் அடைந்து முடிவில் கயிலையில் உள்ள ஸ்ரீகந்தபுரத்தை அடைவர்- தினமும்.

சிந்தூரம்போல சிவந்த நிறமுள்ளவரும், சந்திரன் போல் அழகான முகமுள்ளவரும், தோள்வளை, முத்தாரம் முதலிய திவ்யமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட உடலழகு உள்ளவரும், சொர்க்க போகத்தை அளிக்க கூடியவரும், தாமரைப்பூ, சக்திவேல், சேவல் ஆகியவற்றைத் தாங்கி அபயகரம் நீட்டுபவரும், சிவந்த வாசனைப் பொடிகளால் பிராகாசிக்கின்றவரும், அடியார்களின் பயத்தைப் போக்குவதிலேயே கருத்துள்ளவருமான ஸ்ரீசுப்ரமண்யரை வணங்குகின்றேன்!

முன்பக்கம் ஸ்ரீசுப்ரமண்யர் ரட்சிக்கட்டும்! தேவ சேனாபதியானவர் பின்பக்கம் காக்கட்டும். தென்பாகத்தில் குஹன் ரட்சிக்கட்டும். இடது பாகத்தில் அக்னியிலிருந்து தோன்றிய அக்னி பூவாகிய முருகன் என்னைக் காக்க துணை நிற்கவேண்டுகிறேன்!

பெரும் சேனையை உடையவர் தலையைக் காக்க வேண்டும். ஸ்கந்தன் நெற்றியைப் பாதுகாக்க வேண்டும். பன்னிரண்டு கண்களை உடையவர் எனது கண்களை ரட்சிக்கட்டும். உலகத்தை காப்பவர் என் காதுகளை ரட்சிக்க வேண்டும்.

ஆறுமுகன் எனது முகத்தைக் காக்க. மூக்கை சிவமைந்தன் காக்க. உதடுகளை வள்ளி மணாளன் காக்க. நாவை ஆறுமுகங்களையுடையவன் காக்க.

தேவசேனாவின் கணவன் பற்களைக் காக்க. பன்னிரு கையன் முகவாய்க் கட்டையைக் காக்க. தாருகணை ஜெயித்தவர் எனது கழுத்தை ரட்சிக்கட்டும். பன்னிரண்டு கைகளையுடையவர் எனது கைகளையும், வேலாயுதத்தைத் தரித்தவர் எனது உள்ளங்கைகளையும் காக்க. நாணற்காட்டில் உண்டானவர் எனது மார்பைக் காக்க. அக்னியிலிருந்து உண்டானவர் எந்து இருதயத்தைக் காக்க. அம்பிகை பாலன் எனது வயிற்றைக் காக்க.

சம்புகுமாரன் எனது தொப்புளைக் காக்க வேண்டும். சிவபுத்திரன் எனது இடுப்பைக் காக்க வேண்டும். யானையின் மீது அமர்ந்திருப்பவர் எந்து தொடைகளை ரட்சிக்கவேண்டும். கங்காசுதனான காங்கேயன் எனது முழங்கால்களைக் காக்க.

விசாகன் எனது கணுக்கல்களைக் காக்க. மயிலை வாகனமாகக் கொண்டவர் எனதுகால்களைக் காக்க. எல்லா பூதங்களுக்கும் தலைவர் எனது எல்லா அவயவயங்களையும் காக்க. அக்னி குமரன் எனது உடலில்லுள்ள எல்லா தாதுக்களையும் காக்க.

சந்தியாகாலமாகிய பகலும் இரவும் தொடங்கும் நேரங்களிலும், நடுஇரவிலும், பகலிலும், காலையிலும், நீரின் மத்தியிலும், நெருப்பிலும், பயங்கரக் காட்டிலும், அரண்மனை வாயிலிலும், கோரமான போரின் மத்தியிலும், கொடூரமான மிருகங்களின் நடுவிலும், திருடர் நடுவிலும், தடுக்கமுடியாத ஜுரம் முதலிய நோய்களின் பாதிப்பிலும், தீய கிரகங்களின் தோஷங்களினால் பாதிக்கப்படும் போதும், கெட்ட சகுணங்கள் தோன்றிடும் சமயத்திலும், அஸ்திரங்கள், சஸ்திரங்கள் இவை விழும் பொழுதும் கிரௌஞ்ச மலையை தூள் செய்தவரான ஸ்ரீசுப்ரமண்யர் என்னைக் காக்க.

இஷ்ட சித்தியை அளிக்கவல்ல இந்த ஸ்ரீசுப்ரமண்யர் எனக்கு மூன்றுவித தாபங்கள் இல்லாமல் செய்யட்டும். இது சத்தியமான உண்மை. இது சத்யம். சத்யம்.

தர்மத்தை விரும்புபவன் தர்மத்தையும், பொருளை விரும்புபவன் பொறுளையும், நியாயமான பொருளுக்கு ஆசைப்படுபவன் விரும்பும் பொருளையும், மோட்சத்தை விருப்புபவன் மோட்சத்தையும் அடைய அருள்புரிவாய்.

9.“சுப்ரமண்ய புஜங்கம்”-வேண்டும்போது- 
தீராத இடர் நீங்க- முதல் வணக்கம்

என்றும் இளமை எழிலன் எனினும்
இடர் மாமலக்கே இடராவான்
துன்றும் கரிமா முகத்தோன் எனினும்
சிம்ம முகச்சிவன் மகிழ்நேயன்
நன்றே நாடி இந்திரன் பிரமன்
நாடித் தேடும் கணேசனெனும்
ஒன்றே எனக்கு சுபம் திருவும்
உதவும் மங்கள மூர்த்தமதே!

“புலமை ஏற்பட”

சொல்லு மறியேன் கதி அறியேன்
சொற்கள் சுமக்கும் பொருளறியேன்
சொல்லைச் சொல்லும் விதி அறியேன்
தோய்ந்து சொல்ல நானறியேன்
எல்லயிலாதோர் ஞானவொளி
இதயத்தமர்ந்து அறுமுகமாய் 
சொல்லை வெள்ளமெனப் பெருக்கும்
தோற்றம் கண்டேன் சுடர் கண்டேன்.

“திருவடி தரிசனம் கிட்ட”

மயில்மீது ஆர்த்து உயர்வாக்கிற் போதிந்து
மனதைக் கவரும் உடலான்
பயில்வோர்கள் உள்ள குகைக்கோயில் தங்கி
பார்ப்பவர் தெய்வமானான்
உயிராகும் மறையின் பொருளாகி நின்று 
உலகைப் புரக்கும் பெருமான்
கயிலாயமேவும் அரனாரின் செல்வக்
கந்தன் பதம் பணிகுவாம்.

“பிறவிப்பிணி தீர”

என்றன் சந்நிதியடையும் மனிதர்
எப்போதெனினுமப்போதே
இந்தப் பிறவியின் சாகரக் கரையை
எய்திக் களித்தோராகின்றனர்
மந்தரு மறிய மறையை விளக்கிச்
செந்தில் சாகரக் கரையதனில்
சுந்தரன் சக்தி பாலன் அமர்ந்தான்
தூயன் பாதம் துதிக்கின்றேன்.

“போகாத துன்பம் போக”

கடலில் தோன்றும் அலையும் அழிந்து
காட்சி மறைவது போல்
திடமாய்ச் சந்நிதி சேவித்திடுவார்
தீமையழிந்து படும்
படமாய் மனதில் பதியச் செய்ய
பரவைக்கரையில் குகன்
இடமேயமர்ந்தான் இதயமலர் மேல்
ஏற்றித் தியானம் செய்கின்றேன்

“கயிலை தரிசனம் காண”

என்றன் இருக்கை யறிந்தேயெவரும்
இம்மலை ஏறிவரின்
எந்தைக் கயிலை மலை மீதேறும்
இனிய பலன் கொள்வார்
கந்தன் இதனைச் சுட்டிக் காட்டிக்
கந்தமான கிரிமேல்
சிந்தை மகிழ மூவிரு முகமாய்த்
திருக் கொலுவமர்ந்தே யிருக்கட்டும்.

“கரையாத பாவம் கரைய”

கொடிதாம் பாவக் குறை நீக்கிடவே
பெரிதாம் கடற்கரையில்
அடியார் தவமே நிறைவே தருமோர்
கந்தமான கிரிமேல்
குடியாம் குகையில் ஒளிவான் வடிவாய்
குலவி விளங்கு குகன்
அடியார் மிடிமை கெடவே செய்வான்
அவனைச் சரணமடைகின்றேன்.

“மனம் சாந்தி, நிம்மதி பெற”

மண்ணும் இளமையாயிரம் ஆதவர்
மலரும் காந்தியுடன்
நன்மலர்க் கொத்துச் சூழ்ந்து மறைக்கும்
இரத்தின மஞ்சமதில் 
கன்னியரறுவர் போற்றி வளர்த்த
கந்தன் கொலு காணப்
பொன்மயக் குகையில் புகுந்தா மாந்தர்
சித்தம் சாந்தியுறும்.

“புகலிடம் அடைய”

மென்மை மிகுந்த கமலத் திருவடி
மேலும் அசையச் சிவப்பாகும்
மன்னும் அழகு மனதைக் கவர்ந்து
மலரின் மேலே குடி யேற்றும்
சின்னம் சிறிய வண்டாம் மனது
சிக்கல் பலவும் விட்டேகி
பொன்னாம் பாதத் தாமரைச் சார்ந்து
பொலிவு பெற்றே வாழட்டும்.

“அகத்தின் இருள் நீங்க”

பொன்னெனத் திகழும் பூந்துகிலாடை
பொலிவுடன் இடையில் ஒளி துள்ள
மின்னென மணிகள் மெல்லிசை ஒலிக்க
மேகலை இடையைப் பொன்னாக்க
தன்னிகரில்லா இடையதின் காந்தித்
தன்னொளி ஒன்றை ஏறிவிடும்
நின்னெழில் இடையின் அணியா அழகை
நெஞ்சில் தியானம் செய்கின்றேன்.

“ஆபத்து விலக”

வேட வேந்தன் திருமகள் வள்ளி
விரிந்த நகில்கள் மீதயர்ந்த
சேடல் குங்குமச் சேற்றில் தோய்ந்து
திகழும் நின்றன் தடமார்பு
நாடும் அடியர் துன்பம் துடைத்து
நலமே பொங்கச் சிவந்துவிடும்
கோடிய தாரகன் தன்னைக் கடிந்த 
குமரன் மார்பைப் போற்றுகின்றேன்.

“பரம ஞானம் அடைய”

வேதன் தலையில் குட்டிய கை
விண்ணவர் கோளை வாழ்த்தும் கை
வாதனை போக்கும் யமதண்டமதாய்
வையம் தாங்கும் விளையாட்டாய்
சாதனைக் கரியின் கைபற்றி
தன் மதமடக்கும் நின்னுடைய 
காதல் கரங்கள் பன்னிரெண்டும்
கந்த என்னைக் காத்திடுக.

“தாபங்கள் நீங்க”

சந்திரர் அறுவர் வான் வெளியில்
சற்றும் களங்கமில்லாமல்
சுந்தரச் சுடர்தான் வீசியெங்கும்
தோற்றக் குறைவுயேதின்றி
யந்திரமென்னச் சுழன்றாங்கு
என்றும் உதயத் தோற்றமொடு
கந்தா அவைதான் விளங்கினும், நின்
கருனை முகத்திற் கெதிராமோ!

“அமுத லாபம் கிடைக்க”

அன்னம் அசைதல் போல்நின் புன்னகை
அழகின் அதரம் அமுதூர
சின்னஞ் சிறிய கொவ்வைப் பழமாய்ச்
சிவந்த உதடும் அழகூர
பன்னிரு கண்கள் வண்டாய் ஊர்ந்து
பவனி கடைசி ஒளியாக
நின் திருமுகங்கள் ஆறும் தாமரை 
நிகர்த்தே நிற்கக் காண்கின்றேன்.

“கிருபா கடாட்சம் கிட்ட”

விண்ணிலும் விரிந்த கருணையதால்
வியத்தகு தயவை அருளுகின்ற
பன்னிரு விழிகள் செவி வரைக்கும்
படர்ந்த இடையீடேதின்றி
மின்னென அருளைப் பெய்வனவாய்
விளங்கு குகனே மனதிறங்கி
என்மீது கடைக் கண் வைத்தால்
ஏது குறைதான் உனக்கெய்தும்.

“இஷ்ட சித்தி ஏற்பட”

மறைகள் ஆறு முறை ஜோதி
வாழ்க மகனே என மகிழும்
இறைவன் உடலில் இருந்தே பின்
எழுந்த கந்தா, முத்தாடும்
துறையாய் விளங்கும் நின் சிரங்கள்
திகழும் மகுடத் தோடுவகை
நிறைவாயக் காக்கும், சிரங்களையே
நெஞ்சில் தியானம் செய்கின்றேன்.

“சத்ரு, பயம் நீங்க”

இரத்தினத் தோள் வளை ஒளிகதுவ 
நல்முத்து மாலை யசைந்தாட 
வரத்தில் உயர்ந்த நின் குண்டலங்கள்
வளைந்த கன்னத்தே முத்தாட
திரிபுரத்தை எரித்த சிவக்குமரா!
செந்தில் தலைவா, வேல்தாங்கி
மரகதப்பட்டை இடையுடுத்தி
வருக என்றன் கண்முன்னே.

“ஆனந்தம் ஏற்பட”

வருக குமரா! அருகெனவெ
மகிழ்ந்தே இறைவன் கரமேந்த 
பெருகும் சக்தி மடியிருந்தே
பெம்மான் சிவனின் கரம்தாவும்
முருகே! பரமன் மகிழ்ந்தணைக்கும்
முத்தே! இளமைவடிவுடைய
ஒரு சேவகனே! கந்தா! நின் 
உபய மலர்த்தாள் தொழுகின்றேன்

“கர்மவினை தீர”

குமரா! பரமன் மகிழ் பாலா!
குகனே! கந்தா! சேனாதிபதியே!
சமரில் சக்தி வேல் கரத்தில்
தாங்கி மயில் மீதூர்பவனே!
குமரி வள்ளிக் காதல! எம்
குறைகள் தீர்க்கும் வேலவனே!
அமரில் தாரகன் தனையழித்தாய்!
அடியன் என்னைக் காத்திடுக!

“திவ்ய தரிசனம் கிடைக்க”

தயவே காட்டும் தன்மையனே!
தங்கக் குகையில் வாழ்பவனே!
மயங்கி ஐந்து புலன் ஒடுங்கி
வாயில் கபமே கக்கிடவும்
பயந்து நடுங்கிப் பயணமெனப்
பாரைவிட்டுப் புறப்படவே
அயர்ந்து கிடக்கும் போதென் முன்
ஆறுமுக! நீ தோன்றுகவே!

“எமபயம் நீங்க”

காலப் படர்கள் சினம் கொண்டு
கட்டு வெட்டு குத்தென்று
ஓலமிட்டே அதட்டி என்முன்
உயிரைக் கவர வரும்போது
கோலமயில் மேல் புறப்பட்டு
குமரா சக்தி வேலோடு
பாலன் என்முன் நீவந்து
பயமேன் என்னத் தோன்றுகவே

“அபயம் கிடைக்க”

கருணைமிகுமோர் பெருங்கடலே
கந்தா நின்னைத் தொழுகின்றேன் 
அருமைமிகு நின் பொன்னொளி சேர்
அடியில் நானும் விழுகின்றேன்
எருமைக் காலன் வரும் போதென்
எந்தப் புலனும் பேசாது 
அருகே வந்து காத்திட நீ
அசட்டை செய்ய லாகாது

“கவலைகள் தீர”

அண்ட மனைத்தும் வென்றங்கே
ஆண்ட சூரபதுமனையும்
மண்ணுள் மண்ணாய்த் தாரகனை
மாயன் சிம்ம முகத்தனையும்
தண்டித்தவனும் நீ யன்றோ!
தமியேன் மனதில் புகுந்திங்கே
ஒண்டிக் கிடக்கும் கவலையெனும்
ஒருவனைக் கொல்லுதலாகாதோ!

“மனநோய் தீர”

துன்பச் சுமையால் தவிக்கின்றேன்
சொல்ல முடியா தழுகின்றேன்
அன்பை சொரியும் தீனருக்கிங்
கருளும் கருணைப் பெருவாழ்வே
உன்னை நாடித் தொழுவதலால்
ஊமை நானோர் மாற்றறியேன்
நின்னைத் தொழவும் தடி செய்யும்
நெஞ்சின் நோவைப் போக்கிடுவாய்

கொடிய பிணிகள் அபஸ்மாரம்
குஷ்டம் க்ஷயமும் மூலமொடு
விடியா மேகம் சுரம் பைத்யம் 
வியாதி குன்மமென நோய்கள்
கொடிய பிசாசைப் போன்றவைகள்
குமரா உன்றன் திருநீறு
மடித்த இலையைப் பார்த்தவுடன்
மாயம் போலப் பறந்திடுமே!

“சரணாகதி பலனை அடைய”

கண்கள் முருகன்தனைக் காணக்
காதப் புகழைக் கேட்கட்டும்
பண்ணை வாயிங்கார்க் கட்டும்
பாதத்தைக் கரமும் பற்றட்டும்
எண்சான் உடலும் குற்றவேல்
எல்லாம் செய்து வாழட்டும்
கண்ணாம் முருகைப் புலன்களெலாம்
கலந்து மகிழ்ந்து குலவட்டும்

“வரம் தந்திட”

முனிவர் பக்தர் மனிதர்கட்கே
முன்னே வந்து வரமளிக்கும்
தனித் தனி தேவர் பற்பலர்கள்
தாரணியெங்கும் இருக்கின்றனர்
மனிதரில் ஈன மனிதருக்கும்
மனம்போல் வரமே நல்கிடவே
கனிவுடைக் கடவுள் கந்தனன்றி
கருணை வடினைக் காண்கிலனே

“குடும்பம் இன்புற”

மக்கள் மனைவி சுற்றம் பசு 
மற்ற உறவினர் அனைவோரும்
இக்கணத்தென்னுடன் வசித்திடுவோர்
யாவரும் ஒன்றோ லட்சியமாய்
சிக்கெனப் பற்றி நின் திருவடியைச்
சேவிக்கும் தன்மை தருவாய் நீ
குக்குடக் கொடியோய் செந்தில்வாழ்
குமரா எமக்குக் கதி நீயே!

“விஷம், நோய் தீர”

கொடிய மிருகம் கடும் பறவை
கொட்டும் பூச்சி பேலென்றன்
கடிய உடலில் தோன்றிவுடன்
கட்டி வருததும் நோயினையே
நெடிய உன்றான் வேல் கொண்டு
நேராய்ப் பிளந்து தூளாக்கு
முடியாம் க்ளெரஞ்ச கிரி பிளந்த
முருகா வருக! முன் வருக!

“குற்றம் குறை தீர”

பெற்ற குழந்தை பிழை பொறுக்கும் 
பெற்றோர் உலகில் உண்டன்றோ
உற்ற தேவர் தம் தலைவா!
ஒப்பில் சக்தி யுடையானே
நற்ற வதத்தின் தந்தாய் நீ
நாயேன் நாளும் செய்கின்ற
குற்றம்யாவும் பொருத்தென்னைத்
குறையில்லாமல் காத்தருள்க

“ஆனந்தம் அடைய”

இனிமை காட்டும் மயிலுக்கும்
இறைவன் ஊர்ந்த ஆட்டிற்கும்
தனிமெய் ஒளிகொள் வேலுக்கும்
தாங்கும் சேவற் கொடியுடனே
இனிதாம் கடலின் கரையினிலே
இலங்கும் செந்தில் நகருக்கும்
கனியும் நின்றன் அடிகட்கும்
கந்தா வணக்கமதே!

“வெற்றி கூற”

ஆனந்த மூர்த்திக்கு வெற்றி கூறுவோம்
அளவற்ற சோதிக்கு வெற்றி கூறுவோம்
வான்புகழ் மூர்த்திக்கு வெற்றி கூறுவோம்
வையக நாயகர்க்கு வெற்றி கூறுவோம்
தீனரின் காவலர்க்கு வெற்றி கூறுவோம்
திகழ்முக்தி தருபவர்க்கு வெற்றி கூறுவோம்
மேன சிவன் புதல்வர்க்கு வெற்றி கூறுவோம்
முருகனுக்கு என்றென்றும் வெற்றி கூறுவோம்
எந்த மனிதன் பக்தியுடன்
எழிலார் புஜங்க விருத்தமதை
சிந்தை கனிந்து படித்திடிலோ
செல்வம் கீர்த்தி ஆயுளுடன்
சுந்தர மனைவி புத்திரர்கள்
சூழ ஆண்டு பல வாழ்ந்து 
கந்தன் பதத்தை அடைந்திடுவார்
காசனி மீதில் நிச்சயமே!

10.“ஸ்ரீசுப்ரமண்ய கத்யம்”- செல்வம், வாரிசு, ஆயுள், ஆரோக்கியம் பெற- மாதசஷ்டி, கிருத்திகை நட்சத்திர தினம் மற்றும் செவ்வாய்க்கிழமை.

திரிபுரமெரித்த சிவனாரின் மகனே! எதிரிகளின் கூட்டத்தை அழிப்பவரே! கோடி சூர்யப் பிரகாசரே! உலக உயிர்களின் தாபங்களைப் போக்குபவரே! சிறந்த மயிலை வாகனமாகக் கொண்டவரே! தேவேந்திரனைக் காப்பவரே! உன்னை வணங்குகிறேன்.

எல்லா உலகையும் காப்பவரே! அசுரக் கூட்டம் என்ற பஞ்சைப் பறக்கடிக்கச் செய்பவரே! முனிவர்களால் நன்கு ஆராதிக்கப்படுபவரே! பாவங்களால் ஏற்படும் காமக்ரோதங்களால் வெல்லப் படாதவரே! இளமையும் அழகும் நிறந்த மன்மதனைவிட அழகான உருவினை உடையவரே! கருணைக் கடலே! உன்னை வணங்குகிறேன்.

மயில் வாகனரே! மகேந்திர மலையை இருப்பிடமாகக் கொண்டவரே! பக்தியாகிய சாதனத்தால் அடையக் கூடியவரே! அழகிய வேலாயுதத்தினை கரத்தில் ஏந்தியவரே! தேவருலகைக் காத்திட்டவரே! திரிபுரமெரித்த சிவனாரின் மகனே! உன்னை வணங்குகிறேன்.

சர்வலோக நாயகனே! மலையையே பிளக்கும் வலிமைமிக்க பாணத்தை உடையவரே! ஸ்ரீ மகாதேவனின் பெரும் பேறே! சொன்னாலே புண்ணியம் பலதரும் பெயர்களை உடையவரே! தொழுபவரின் சோகங்களைப் போக்குபவரே! உலகங்களின் தோற்றத்திற்கு காரணமானவரே! உன்னை வணங்குகிறேன்.

தேவர்களின் எதிரிகளான அசுரர்களுக்கு யமன் போன்றவரே! சிவபாலனே! சம்சாரக் கடலிருந்து மீட்பவரே! மலர்ந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடையவரே! அமுதரசம் போன்ற கருணையைக் கடல்போல் நிறைத்து வைத்து பக்தர்கள் மேல் பொழிபவரே! சந்திர கலையைத் தலையில் தரித்துக் கொண்டவரே! உன்னை வணங்குகிறேன்.

வள்ளியின் மனதைக் கவரும் வேடத்தைத் தரிப்பவரே! மல்லிகை மாலையைக் கேசத்தில் தரிப்பவரே! தேவர்களைக் காத்தவரே! வணங்கியவர்களின் துன்பங்களைத் தீர்ப்பவரே! நிலவைப் பழிக்கும் முகலாவண்யம் உடையவரே! நற்குணங்களின் இருப்பிடமானவரே! உன்னை வணங்குகிறேன்.

கோடி சூர்யர்களுக்கு ஒப்பான பிரகாசம் உள்ளவரே! பானு கோபனே! அலறக்கூடிய வில்லை உடையவரே! பெற்றோரின் உள்ளங்கவரும் புன்னகை பூப்பவரே! எதிரிகளின் தலைகளைச் சீவும் கத்தியை உடையவரே! காதுகளில் ரத்னகுண்டலங்களைத் தரிப்பவரே! சூர்ய மண்டலத்தைவிட அதீத ஒளி பொருந்தியவரே! உன்னை வணங்குகிறேன்.

தேக்கு மரங்களைவிட உறுதி வாய்ந்த சிறந்த கைகளைக் கொண்டவரே! துதி பாடுபவர்களைக் காப்பவரே! வீரபாகு முதலிய நவ வீரர்களால் சேவிக்கப் படுபவரே! யுத்த வீரர்களால் போற்றப்படுபவரே! மனதைக் கவரும் நடத்தையை உடையவரே! தேவேந்திரனின் விரோதிகளுக்கு மீண்டும் மீண்டும் தாக்கும் கீலாயுதம் போன்றவரே! உன்னை வணங்குகிறேன்.

மலர்ந்த பூப்போன்ற சிரிப்புள்ளவரே! உயர்ந்த மலைகளில் வசிப்பவரே! இந்திரியங்களை வென்ற முனிவர்களால் வணங்கப்படுபவரே! ஜீவன் முக்தர்களால் துதிக்கப் பட்டவரே! கந்த வெற்பில் வசிப்பவரே! தேவருலக நந்தவனத்தில் விளையாடுபவரே! உன்னை வணங்குகிறேன்.

11.“சக்தி வேல் துதி”- மனபயம் நீங்கி வெற்றிபெற- செவ்வாய்க் கிழமை மற்றும் பங்குனி உத்திரத்தன்று- ஜகத்குரு ஆதிசங்கரர் அருளியது.

அசுரர்களை வென்ற சக்தி மிகுந்த வேலே! உலகத்தையே பாதுகாத்து அருளும் வல்லமை பெற்ற வேலே! வணங்குவோரின் மனபயத்தை எளிதில் போக்கும் தீரம் மிக்க வேலே! உன்னை வணங்குகிறேன்! முருகப்பெருமானின் திருக்கரத்தில் அலங்காரமாக வீற்றிருக்கும் சக்தி வடிவமே, உனக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! நீ எப்போதும் என் இதயத்தில் வீற்றிருந்து மன உறுதி தந்து அருள வேண்டும்!

12.“ஸ்ரீஸ்கந்த துதி”- எல்லா நியாய கோரிக்கைகளும் வெற்றிபெற -முடிவில் ஸ்ரீ கந்தனின் பட்டினத்தில் கந்த வெற்பில் அவனுடன் சேர்ந்து வசிக்க! - கார்த்திகை மாதம்.

ஆறுமுகனும் பார்வதியின் குமாரனும் கிரஞ்சமலையைப் பிளந்தவனும், தேவசேனாவின் கணவனும், சிவ குமாரனுமான கந்தனை வணங்குகின்றேன்!

தாராகாசுரனை வதம் செய்தவனும் மயில்மீது அமர்ந்தவனும், ஞானவேலைக் கையில் தரித்தவனும், சிவ மைந்தனுமான ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்!

சர்வலோகேஸ்வரனான பரமசிவனின் அன்புக்கு உரியவனும், தேவாதி தேவனும், ஸ்ரீவிஸ்வேஸ்வரனின் புத்திரனும், வள்ளி தேவசேனாவிடம் மாறாத அன்பு கொண்டவனும், பக்தர்களின் கோரிக்கைகளை உடனே அளிப்பவனும், மனதைக் கவருகின்றவனும், சிவ புத்திரனுமான கந்தனைப் பணிகிறேன்!

குமரக்கடவுளும், சிறந்த முனிவர்களின் மனதில் ஆனந்த வடிவமாய்த் தோன்றுகின்றவனும், வள்ளியின் கணவனும் உலகங்கள் தோன்றக் காரணமானவனும் சிவபாலனுமான கந்தனை துதிக்கின்றேன்!

ஊழிக்காலத்தை உருவாக்குபவனும் பின் உயிர்களைக் காப்பவனும் உலகங்களை உருவாக்குபவனும், யாவருக்கும் தலைவனும், அடியார்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனும், ஆனந்தப் பெருக்கினை உடையவனும், பிறைசூடனின் பிள்ளையுமான கந்தனை நமஸ்கரிக்கின்றேன்!

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவனும், உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமும், கார்த்திகை பாலனும், எப்பொழுதும் குழந்தை வடிவமாய் விளங்குகிறவனும், சிவகுமாரனும், ஜடையைத் தரித்தவனுமான கந்தனை துதிக்கிறேன்!

13.“ஸ்ரீஆறுமுகன் துதி”- ஆனந்த வாழ்வுவாழ- சாஸ்திரம்-ஸ்காந்தம்- மந்திரம்- சரவணபவ- சகல பிராணிகளும் இகத்திலும் பரத்திலும் இன்பமாய்வாழ - தினமும்.

யோகிகளும் தத்துவ ஞானிகளும், வேதாந்த விற்பன்னர்களும், கர்மயோகிகளான ஞானிகளும் குகனை விடாது வழிபடுவதால் உலகில் மேன்மையான வாழ்வினை எளிதில் அமைத்துக் கொள்கின்றனர். குகனே, ஆறுமுகனே உன்னை வணங்குகின்றேன்.

குகனுக்கு மேலான தெய்வம் கிடையாது. முருகனே அனைத்திலும் உள்ளான். பிராணவத்திற்கு மேலான தத்துவம் இல்லை என்பது போல, சுப்ரமணியனுக்கு மேலான தெய்வமில்லை. உன்னை நமஸ்கரிக்கின்றேன்.

குமரனை உபாசிப்பதை அனைத்து தேவர்களும் தங்களுக்கான தேவதா பூஜையாகவேகருதி மிகவும் மகிழ்ச்சியடைகிரார்கள். அதேபோல் எல்லா பித்ரு தேவதைகளும் மிகவும் சந்தோஷமடைகிறார்களென்பது சத்யம். சத்யமான உண்மை.

 மங்களமான சரவணப் பொய்கையில் உதித்தவரே, கார்த்தி கேயனே, சிவயோகத்தின் மகிமையாக அமைந்தவரே, பரமேஸ்வரனுக்கு பிராணவத்தின் பொருள் உறைத்த சுவாமிநாத, பக்தர்களுக்கு ஆனந்தத்தை அளிப்பவனே நவரசங்களை அருளும் உன் பாத கமலங்களைப் பணிகின்றேன். நாதத்துடன் கூடிய ஹ்ரீம் பீஜ வடிவத்தை உடையவரே, நல்ல நினைவாற்றலை அளிப்பவரே கார்திகேயனே வணக்கம்.

எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றி அருளை வாரி வழங்கும் அந்த குகனை இந்தக் கலியுகத்தில் இடைவிடாமல் துதித்தால் பயம் விலகும். அச்சத்தை உதறிவிட்டு மோட்ச லாபத்தை அடையவேண்டும் என்ற எண்ணத்தைச் செயல் படுத்த அந்திமகாலம் வரை காத்திருக்காமல் நன்றாய் இருக்கும்போதே உணர்ந்து ஆறுமுகனை ஆராதனை செய்ய வேண்டும்.ஆறுமுகனே உன்னை வணங்குகின்றேன்.

இந்த உலகில் சாஸ்திரம் என்றால் அது ஸ்காந்தம்தான்- எந்த பொருளுக்கும் விளக்கம் கந்த புராணத்தில் உண்டு. ஒரேதேவன், ஈசனின் மகனான கந்தன். ஒரே மந்திரம்-சரவணபவ. ஒரே மோட்சம்- கந்தனுக்கு அண்மைதான். ஆகையால் சகல பிராணிகளும் இகத்திலும் பரத்திலும் இன்பமாய் வாழ சுப்ரமண்யனை வழிபடவேண்டும். அந்த ஆறுமுகனை நான் மனதார வணங்குகின்றேன்.

14.“சுப்ரமண்ய புஜங்கம்”- ஆதிசங்கரர்- உடல் உபாதைகள், மனோ வியாதிகள் நீங்க -வேண்டும்போது 
 சதாபாலன் ஆனாலும் வினைவெற்பு டைப்பான்
பெருயானை ஆனாலும் சிவச்சிங்கச் செல்வன்
சதாநான் முகன் இந்திரன் தேடுசோதிக்
கதிர்மா கணேசக் கரி என்னுள் வாழி.

 கதைகானம் பாடல்களில் வல்லன் அல்லேன்
உரை காவியம் பாடியம் வல்லன் அல்லேன்
சிதானந்தம் ஆறுமுகம் கொண்ட வீறு
உளம் வாழ்வதால் யான் கவிபாடுகின்றேன்.

 மயில்ஏறு செல்வன் மறைசொல்லு முதல்வன்
மனம் ஈர்க்கும் மேனி மகான்போற்று மானி
அயிற்செங்கை வேலன் அரன்தந்த பாலன்
அரும்வேதசீலன் குகன்பாதம் போற்றி.

 இம்மானுடர் என்றும் எம்முன்னே வந்தால்
இமைப்போதில் மாந்தர் கரையேறி உய்வார்
கைம்மான் பரன் தந்த அம்மான் குகன்தான்
சொல்வான் கடல்மோது கோவில் வளர்ந்தே.

 அலைமோதி மோதி அடங்கும் அதேபோல்
நிலைகெட்டு மாந்தர் தறிகெட்டு ஓட 
அலைபோல ஆட்டும் விதி என்முன் மங்கும்
மலைமங்கை பாலன் இதைச் சொல்வான் போலும்.

 சகம்தந்த வெற்பில் சுகந்தப் பொருப்பில்
உவந்தேறினால் கீர்த்தி சிலம்பேறுவார்கள்
குகன் சொல்லவென்றே அவன் வாழும்வெற்பே
சுகந்தபிராட்டி மகன் கந்த வெற்பே.

 வினைக்காடு மாய்க்கும் இருட்பாடு தேய்க்கும்
தனைத்தான் விளக்கும் தனிப்பேறளிக்கும்
முனிக்கூட்டம் மொய்க்கும் மூதறிவாளர் துய்க்கும்
பனிக்காட்டுப் பௌவத் தனிக் கோயில் வாழ்வான்

 மணிக்கோயில் மாட்டுவரைக் கோயில் பாட்டுத்
தனிக்காட்டு மத்தி விளங்கும்பொற்கட்டில் 
அணிப்பட்டுப் போர்த்தி அரும்பூக்கள் சார்த்தி
அதன்மீதிருப்பான் குகன் கந்த வெற்பான்.

 சலங்கை பொற்றண்டை சரம் முத்து வெண்டை
குலுங்கும் சிலம்போ புலம்பும் புலம்பும்
இலங்கும் நலங்காத் துளங்கும் விளங்கும்
பொலம்பூ மலர்பொற் கழல்போற்றி போற்றி.

 பொன்வண்ணப் பட்டு புரண்டாடு கட்டு
நிறைந்தாடு மேகலை மணிமுத்து விட்டே
அனந்தாடு காஞ்சி அதன்மேல்பொன் கத்தி
திகழ்ந்தாடு கந்தன் இடைபோற்றி போற்றி.

 வேடர் தலைவன் மகள்வள்ளி கும்ப
பாரத் தனங்குங்கு மச்சாந்து தோய்ந்த
ஆடப்பொன் னணியின் னகல் மார்பு கந்தன்
நாடாண்டு நமைகாக்கும் பீடொன்றே போற்றி.

 மறையோனைக் குட்டிவெம் மதயானை முட்டிச்
சிறைமீட்டுத் தேவர் குறைகேட்டு வாட்ட
முறையீட்டை ஈட்டி எதிரிதலை வீட்டி
நிறை உன் ஈராறு கரம் போற்றி.

 சரத்கால சந்திரன் இருப்பானேல் ஆறு 
குறையாது தேயாது நிற்பானேல் வானில் 
பதினாறு கலையோடு பகற்பொழுதுகூட
உரைப்பேன்யான் கந்தா உன் முகங்களுக்குவமை.

 முத்தாடு மூரல் முகிழ்த்தெங்கும் சோதி
முத்தத் திருக்கோவை நித்தம் பழிக்கும்
புத்தம் புதுச்சோதி பூங்குமுதச் செவ்வாய்
நித்தம் நிலா எறிஉன் ஆறுமுகம் போற்றி.

 வித்தாரமாய்ச் செவ்வரியோடி நீண்டு
புத்தம் புதுக்கமல மலர் அழகை வென்று
நித்தம் மரகதநீல மணிச்சோதி வென்று
சித்தம்கவர் கடைவிழியை எனக்கருளில் என்ன?

 சிரன் சீவியாகென்றரன் நித்தம்கூறும்
முறைமுறை முக்கண் முதல்வன் ஒர் ஆறு
முகைகூறி முத்தாடி மோந்துமகிழ் காந்த 
சிறந்தொளி பரந்த உனது ஆறுதலை போற்றி.
 ஆரம் அணி கேயூரம் மரகத முத்தாரம் 
கூறுபடை நீறுபடச் சீறுக் கரவேலும்
ஏறுமயில் வாகனமும் இடையில் இளம்படுச்
சீரை ஒளி சோதிவிட வா முருகா என்முன்.

 ‘இங்கு வருவாய் பாலா’ என்றரனார் கூற
மங்கை சிவகாமி உடைத் தங்க மடி இருந்து
பொங்கொளி சலங்கைமணிக் கங்கணம் குலுங்க
சங்கரன் கரம்தாவும் மங்களனே போற்றி.

 குமரா குழந்தாய் குகாவெற்றி வேலா
மயில் வாகனா மா மனோமோகன வா
மகாமாரி கௌமாரி மைந்தா ஏ கந்தா
வரந்தா வரந்தா வளர் வள்ளி காந்தா.

 புலன்கள் நலம் கெட்டொடுங்கி அடங்கிக்
கபம் தொண்டையில் வந்திறுக்கி முறுக்கிப்
பயம் வந்து கவ்வி உடல் நைந்துடைந்து
யமன் வந்திழுத்தால் குகா வந்து காப்பாய்.

 இவன் நெஞ்சில் பாசக் கயிறு பூட் டிறுக்கு
விடாதே பிடி குத்துடம்பை நொறுக்கு
அவன் ஆவி பற்று என எமன் தூதர் வந்தால்
சிவன் மைந்த நீவந்தெனையாள வேண்டும்.

 மலர்ச் சேவடிக்கென் வணக்கம் வணக்கம்,
உடல் பூமி தோய விழுந்தே எழுந்தேன்
யமன் வந்தபோதில் உரைசெய்ய ஆற்றேன்
அவன் வந்து நின்றால் மயில்மீது தோன்று.

 நூறாயிரம் அண்டம் வீறோடு நின்று
மாராமல் ஆண்டான் மகாவீரனாக
சூராதி சூரன் கொடுங்கோல் ஒழித்தாய்
குமரா என் கோரக் குறை ஏனோ கேளாய்
 தாராசுரன் சேனை தன்னோடும் அண்ணன்
சிங்கன் எனும்பேர் ஈராயிரம் கண்ணன்
வேரோடு நீறாக்கும் சூரா குமரா.
மாராபி ராமா என் மனக்கவலை தீராய்.

 வலிப்போடு பீளை இழுப்போடு காய்ச்சல்
துடிக்கும் தொழுநோய் உருக்கும் வெங்காசம்
உலுக்கும் குலைக்கட்டி சூலோடு குன்மம்
நடுக்கம் எடுத்தோடும் உன்பன்னீர் நீறால்.

 கண்கந்தன் ரூபம் காதுன்றன் கீர்த்தி
வாய்கந்தன் காதை கைகந்தன் தொண்டு
எண்சாண் உடம்புன் திருப்பாத சேவை
என்செய்கையாவும் உன்மயமே ஆக,

 முனிக்குப்பலுக்குக் கணக்கற்ர நன்மை
வரம்பின்றி ஈயும் பலதெய்வம் கோடி
குறவர்க்கும் மறவர்க்கும் பரவர்க்கும் முக்தி
தரும் தனிப்பெருந்தெய்வம் குகன் அன்றி யாரோ.

 மனைமக்கள் நண்பர் உறவினர் மற்றோர்
கனைகால் நடைகிள்ளை பூவை புறாவும் 
மனைவாழ் இருபாலர் ஆண்பெண் அடங்கல்
குகா உன்னையே எண்ண வாழத் துதிக்க.

 பொல்லா விலங்கு புழுப்பூச்சி பொட்டு
நல்லார் நலிகிருமி வண்டுடன் நண்டு
பொல்லாத நோயாவும் இல்லாது போக
வல்லாள உனது வடிவேற் சோதி பட்டு.

 தான் பெற்ற பிள்ளை தவறேதும் செய்தால்
தாமே பொறுப்பர் நற்றந்தையும் தாயும்
வான் வண்ண வேலா, நீயே என் பெற்றோர்
கோன் நீ என் குற்றம் பொறுத்தாள் என்னப்பா.

 வணக்கம் வடிவேல் தனக்கும் உனக்கும்
வணக்கம் வளர்பொன் மயில்சேவலுக்கும்
வணக்கம் கிடாவண் கடற்கும் கரைக்கும்
வணக்கம் வணக்கம் என் கந்தப்பனுக்கே.

 ஜயிப்பாய் ஜயானந்த பூமானே சீமான்
ஜயிப்பாய் ஜயிக்கொணா வில்லாள மல்லா,
ஜயிப்பாய் களிப்புக் கடல் ஏழை பங்கா
ஜயிப்பாய் நடிப்போன் குமாரா மாதீரா

 புஜங்க பிரயாத விருத்தச் சந்தத்தில்
புஜங்கப் பெருமான் புதல்வன் துதியை
நிஜங் கற்பவர் கேட்பவர் பத்தி செய்வோர்
பெரும்பேறு பெற்று குகன்நாடு சேர்வார்.

“ஸ்ரீமங்களாஷ்டகம்”மங்களங்கள் பெருக- மனக் குறைவின்றி- பாவங்களிலிருந்து விலகி- நீண்ட ஆயுள்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.

oபிரம்மனே! மஹாவிஷ்னுவே! பரமேஸ்வரனே! இந்திரனே! அக்னியே! யமனே! நிருதியே! வருணனே! வாயுவே! குபேரனே! முருகனே! கணபதியே! சூரியனே! சந்திரனே! ருத்திரர்களே! விச்வ தேவர்களே! ஆதித்யர்களே! அச்வினி தேவர்களே! சாத்தியர்களே! வஸுக்களே! பித்ருக்களே! சித்தர்களே! வித்யாதரர்களே! யஷர்களே! கந்தர்வர்களே! கின்னரர்களே! மருத்துக்களே! மற்றும் ஆகயத்தில் சஞ்சரிக்கும் அனைத்து தேவர்களே! உங்கள் அனைவரையும் வணங்குகின்றேன். எனக்கு என்றும் மங்களம் அருளுங்கள்.

oசரஸ்வதி, மகாலட்சுமி, பூமிதேவி, பார்வதி, சண்டிகை, பத்ரகாளி, பிராஹ்மி முதலிய மாத்ரு கணங்கள், தட்சனின் மகள்களான அதிதி, திதி, சதி, முதலியோர், சாவித்ரி, கங்கை, யமுனை, அருந்ததி, தேவர்களின் மனைவிகள், இந்திராணி முதலிய தேவலோகப் பெண்களும் விண்ணில் சஞ்சரிக்கும் தேவமாந்தரும் எனக்கு நீங்காத மங்களத்தை அளிக்கட்டும்.

oமத்ஸ்யமூர்த்தி, கூர்மமூர்த்தி, வராஹமூர்த்தி, நரசிம்மப் பெருமாள், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், கபிலர், நரநாராயண மூர்த்தி, தத்தாத்ரேயர், பிருகு மற்றும் நரகாசுரனை வதம் செய்த மகா விஷ்ணுவின் மற்ற எல்ல அவதாரங்களும், சுதர்ஸ்ன சக்கரம் முதலிய ஆயுதங்களும், அவதாரம் செய்த மூர்த்திகளின் மனைவிகளும், அவர்களின் புத்திரர்களும், விஷ்னுவின் எல்ல அம்சா அவதாரங்களும் எனக்கு தீராத மங்களத்தை அளிக்கட்டும்.

oவிஸ்வாமித்திரர், வசிஷ்டர், அகஸ்தியர், உசத்யர், ஆங்கீரஸ், காச்யபர், வியாசர், கண்வர், மரீசு, கிரது, பிருகு, புலஹர், சௌனகர், அத்ரி, புலஸ்தியர் முதலான மஹரிஷிகளும் மற்றும் பல முனிவர்களும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கிரகங்களும், அஸ்வனி முதல் ரேவதி வரையிலான நட்சத்திரங்களும், நம் பிரஜாபதிகளும் நாகராஜன் முதலிய சர்ப்பக் கூட்டங்களும், மனுக்களும் எனக்கு வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.

oமநு புத்ரிகளான ஆகூதி, தேவஹூதி, ப்ரஸீதி ஆகிய மூவரும், எல்லா முனிவர்களின் பத்தினிகளும், மனுக்களின் பத்தினிகளும், சீதை, குந்திதேவி, பாஞ்சாலி, நளன் மனைவி தமயந்தி, ருக்குமணி, சத்யபாமா, தேவகி மற்றுமுள்ள அரசர்களின் மனைவியர், கோபிகைகள், பதி விரதைகள், நற்குலப்பெண்மணிகள் யாவரும் எனக்கு எல்லாவித மங்களத்தையும் கொடுக்கட்டும்.

oகருடன், அனந்தன், ஹனுமான், மஹாபலி, சனகர் முதலான யோகிகளும், சுகர், நாரதர், பிரகலாதன், பாண்டவர்கள், ந்ருகன், நளன், நஹூஷன், அரிச்சந்திரன், ருக்மாங்கதன் முதலிய விஷ்னு பக்தர்களும் மற்றும் சூரிய, சந்திர குலத்தில் உதித்த உத்தமர்களும், அரசர்களும் எனக்கு வளமான மங்கலத்தை உண்டாக்கட்டும்.

oஅந்தணர்கள், பசுக்கள், வேதங்கள், ஸ்ம்ருதிகள், துளசி, கங்கை, முதலி8ய சர்வ தீர்த்தங்கள், சகல வித்யைகள், பலவிதசாஸ்திரங்கள், இதிஹாசங்கள், சகல புராணங்கள், வர்ணங்கள், ஆச்ரமங்கள், சாங்கியம், யோகங்கள், யம நியமங்கள், எல்லா கர்மங்கள், காலங்கள், சத்யம் முதலான அனைத்து தர்மங்களும் எனக்கு போதிய மங்களத்தை அளிக்கட்டும்.

oசகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான நன்மைதரும் எல்லாமரங்கள், எட்டு திக்கு யானைகள், மேகங்கள், சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள், பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள், ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள், செடிகள், கொடிகள் எனக்கு நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.

                               ஒம்சரவணபவஓம்

குருஸ்ரீ பகோராயின் சந்தோஷப்பூக்களின் இதழ்களில் சில......

oகடற்கரையில் உலாவும்போது அப்போது வீசும் சுத்தமான காற்றை அனுபவிக்காமல், என்றோ எங்கேயோ நடந்த நிகழ்வை நினைத்து வேதனையுறுவதால், அந்தக்கணம் நீங்கள் அடையவிருந்த காற்றின் சுகம் என்ற நிகழ்கால ஆனந்தத்தை இழந்து விடுகின்றீர்கள். புதிய சூழலில் இருந்தாலும் மனம் பழையதில் கிடந்து தவிக்கின்றது.

oஎந்த மனிதனும் கொள்கைகளுடனும், திறமைகளுடனும் எல்லாம் தெரிந்தும், புரிந்தும் பிறந்ததில்லை. வாழ்வில் போராடி, முயற்சி செய்து வெற்றிகொண்டதே அவர்களை வாழ்வில் பெரிய மனிதனாக்கியதாகும்.

oகாலங்களே நம் நண்பர்கள். காலங்களே நம் பகைவர்கள். காலங்கள் நமக்கு எல்லாம் தந்தும் பறித்தும் விடுகின்றன. அழவைக்கிற அதுவே சிரிப்பையும் தருகின்றது.

oஎதிரி என்று எவருமில்லை! அனைவரும் இவ்வுலக உயிர்களே! உலகில் வாழ தகுதி உள்ளவர்கள்! உரிமையுள்ளவர்கள்! அவர்கள் வாழ்வதற்காக எடுக்கும் முறைகளை செயல்படுத்துதலால் வேறுபடுகின்றனர். வாழ எடுக்கும் முறைகளை நெறிப்படுத்தினால் அனைவரும் பேரன்பு உள்ளவர்கள் ஆவார். மனிதநேயம் மிக்கவர்களாகி விடுவார்கள்.

oஉண்மை என்னவென்றால் தவறு செய்தவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும் இடம் இந்த புவிதான்

 “சந்தோஷப்பூக்களை நுகர்ந்து வாழ்வியல் பயன் பெறுங்கள்”

செவ்வாய்க்கிழமை, 13 August 2013 00:00

அம்பாள்

                          ஓம்சக்தி ஓம்

அம்பாள்- முழுமுதல் கடவுளின் பாகம், தாயுள்ளம் கொண்டவள்.

வேறுபெயர்கள்- காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, அன்னபூரணி, அபிராமி, சிவகாமி, திரிபுரசுந்தரி, கற்பாம்பிகை, கமாலாம்பிகை என தலத்திற்கு ஏற்றவாறு.

உகந்த நாட்கள்- செவ்வாய், வெள்ளி, பௌர்ணமி தினங்கள் சிறப்பு, எந்நாளும் வழிபடலாம்.

உகந்த மலர்கள்- வெண்தாமரை. சாமந்தி, செண்பகம், செவ்வரளி, செம்பருத்தி, முல்லை, மருது, மல்லி, சிறப்பு. அருகம்புல் மற்றும் தாழம்பூ தவிர மற்ற பூக்களை உபயோகிக்கலாம்.

மாசிமகம்- மாசிமாதபௌர்ணமி மகம் நட்சத்திரத்தில் அமையும். மாசிமாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம். சிம்மராசிக்கு உரிய மகநட்சத்திரத்தில் சந்திரன் இருப்பது விசேடம். அன்றுதான் அம்பிகை அவதரித்த நாளாகும். அன்று இறைவனை கடலில் நீராட்டுவது வழக்கம்.

வணங்கும்முறை-  கோவிலுக்கு அருகில் சென்றதும் கோபுரத்தை தரிசனம் செய்ய வேண்டும். கோபுரதரிசனம் கோடிபுண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. உள்ளே சென்றதும் முதலில் துவஜஸ்தம்பம் எனும் கொடிமரத்தின் முன்பு எட்டு அங்கங்களும் தரையில் படும்படி விழுந்து வணங்கி எழவும். கோவிலின் உள்ளே இருக்கும் விநாயகரை வணங்கி கருவரைக்குச் செல்லவும். வழியில் தீபமேற்றும் இடத்தில் தீபம் ஏற்றி அங்கிருந்தபடியே அதை இறைவிக்கு காட்டி பின் அதற்குரிய இடத்தில் வைக்கவும். ஆண்கள் மேலாடை இல்லாமல் தரிசனம் செய்வது சிறப்பாகும். கருவறையில் இடப்பக்கம் ஆண்களும் வலது புறம் பெண்களும் தரிசனம் செய்தல் வேண்டும்.

நீங்கள் கொண்டுவந்த பழங்கள், பூக்கள் மற்றும் அர்ச்சனைக்குரிய பொருள்களை அர்ச்சகரிடம் கொடுத்து விட்டு அமைதியாக இறைவியின் துதிகளை, திருநாமங்களைச் சொல்லிக் கொண்டிருங்கள். அர்ச்சகர் மந்திரங்கள் சொல்லி மணி ஒலி எழுப்பும்போது கண்களை மூடாமல் இறைவியைப் பார்த்து மனதாற வணங்குங்கள். ஆராதனை செய்த தீபத்தை ஏற்று குங்குமம் பெற்று ஓம் சக்தி எனச்சொல்லி நெற்றியில் இட்டுக் கொள்ளவும். சில கோவில்களில் ஒரே இடத்தில் இருந்து ஐயனோடு அம்மையும் தரிசனம் செய்யும் வண்ணம் இருக்கும். அம்மன் சன்னதியின் சுற்றில் சண்டிகேஸ்வரி இருப்பார். அவரை வணங்கவும். பின் ஸ்ரீசுப்ரமண்ய சுவாமியை வணங்கவும். பின் பரிவார தேவதைகளை வணங்கவும். துர்க்கை சண்டிகேசுவரியை வணங்கி நவகிரகங்களை வல இடமாக ஒன்று அல்லது ஒன்பது சுற்றுகள் சுற்றிவந்து வணங்கவும். பிறகு மற்ற சன்னதிகளை வணங்கி கோவிலை உள்சுற்றாக சுற்றிவந்து கொடிமரத்தின் முன்னால் சாஷ்டாங்கமாக வீழ்ந்து இருகை கூப்பி வணங்கி எழுந்திருந்து மண்டபத்தில் இறை சிந்தனையுடன் சிறிது நேரம் அமர்ந்திருந்து பின் புறப்படுங்கள்.


உள்ளே.....

1.“பராசக்தி”- அன்புகிடைக்க, ஆறுதல்பெற-தினமும்/ வேண்டும் போது. 

2.“அபிராமி தோத்திரம்”-ஆனந்தவாழ்வுக்கு-தினமும்- நேரம் கிடைக்கும் போது.

3.“ஸ்ரீ லலிதா நவரத்ன மாலை”- வறுமை நீங்க, வளம் பெருக- தினமும் / வேண்டும் போது. 

4.“லலிதா ஸ்தவ ரத்ன” தோத்திரம்-ஆனந்த வாழ்வுக்கு- துர்வாசர் அருளியது.தினமும்-நேரம் கிடைக்கும்போது

5.“காமாக்ஷி துக்க நிவாரண அஷ்டகம்”- சங்கடங்கள் நீங்க, வளம் பெருக- தினமும் / வேண்டும் போது.

6.“காமக்ஷி துதி”- துன்பம் நீங்கி, மோட்சம் பெற- தினமும் /வேண்டும்போது. 
7.“காமாக்ஷி துதி”- துதிபாடி வாய்பேசும் திறன்பெற்ற மூகசங்கரேந்திர சுவாமிகள்- இயற்றிய மூகபஞ்சசதி- ஆரோக்கியமாக வாழ, வளம்பெருக-வேண்டும்போது.

8.“காயத்ரிதேவி” ஜபம்- புத்திக்கூர்மை, வெற்றி கொள்ளும் ஆற்றல் பெற- தினமும் 

9.“காயத்ரிதேவி”-மாங்கல்ய பலம் பெற- சத்யவானை எமன் பிடியிலிருந்து சாவித்ரி மீட்ட துதி- காரடையான் நோன்பு அன்று. 

10.“சௌபாக்ய துதி”- தீர்க்க சுமங்கலி வரம் பெற- காரடையான் நோன்பு அன்று-(பெண்களுக்கு) 

11.“நவரத்தினமாலை”-ஆதிசங்கரர்- இனிய வாழ்வு, நீண்ட ஆயுள், நிலைத்த ஆரோக்கியம் பெற தினமும்/ நவராத்திரியன்று.

12.“சக்தி கவசம்”- எதிரி பயம் நீங்க, இன்னல்கள்விலக- தேவர்களை துன்புறுத்திய அசுரனை வதம்செய்து காத்தபோது பாடியது-தினமும்/நேரம் கிடைக்கும்போது. 

13.“அஷ்டாதச சக்தி பீடங்கள்”- 16பாக்கியங்கள்பெற- தினமும்- ஆடி18சிறப்பு. 

14.“ஸ்ரீமுக பஞ்சதுதி”

15.“ஸ்ரீ சௌந்தர்ய லஹரி” 

16.“ஸ்ரீ சௌந்தர்ய லஹரி” ஆதிசங்கரர் அருளியது- விஷக்காய்ச்சல் உபாதை தீர பஞ்சமி திதியன்று முறை உச்சரித்து உளமாற வணங்கவும். 

17.“அகிலாண்டேஸ்வரி” - கல்வி, செல்வம் பெருகும். இந்திரன் துதித்தது- செவ்வாய், வெள்ளி-16முறை. 

18.“அகிலாண்டேஸ்வரி”-செல்வம் பெருகும், பாக்கியங்கள் பெற- ஆதிசங்கர்- செவ்வாய், வெள்ளிக் கிழமை. 
19.“அகிலாண்டேஸ்வரி”- ஆண்டாள்- திருமணத்தடை நீங்க வெள்ளி- மற்றும் ஆடிப்பூரத்தன்று. 

20.“அண்ணபூரணி”- ஆதிசங்கரர்- செல்வம் பெருகும், பாக்கியங்கள் பெற செவ்வாய், வெள்ளிக் கிழமை. 

21.“சிவகாமசுந்தரி துதி”- வியாக்ரபாத மகரிஷி அருளியது- நியாமான கோரிக்கைகள் நிறைவேற-தினமும் 

22.“ஸ்ரீ பவானி துதி”-கிரகதோஷங்கள், பாவங்கள், துன்பங்கள் நீங்க- தினமும். 

23.“மீனாட்சி பஞ்சரத்தினம்”- ஆதிசங்கரர்- சகல சௌபாக்கியங்கள் பெற தினமும். 

24.“திரிபுரசுந்தரி”துதி- ஆதிசங்கரர் அருளியது- வாழ்க்கை சாந்தமுடன் அமைய, சௌக்கியங்கள் பெற-தினமும். 

25.“அம்பாள் நவமணிமாலை”-நன்மைகள் அடைய, தடைகள் அகல- ஆடிமாதத்தில் தினமும்- நேரம் கிடைக்கும் போது.

26.“திருவிளக்கு”- வினைகள் நீங்கி வாழ்வில் ஒளி, சந்தான பாக்யம் பெற- வெள்ளி / திருவிளக்கு பூஜையன்று.

27.“அம்மாபோற்றி”-வினைகள், எதிர்ப்புகள்நீங்க, வளமான வாழ்வு பாக்யம் பெற- தினமும் / வேண்டும்போது. 

28.“காளிகாம்பாள்”-துன்பம் நீங்கி, ஆறுதல்பெற- பாரதியார்- தினமும் / செவ்வாய்க் கிழமை.

29.“சீதளாதேவி துதி”- உஷ்ண பாதிப்புகள் நீங்க-வேண்டும்போது 

30.“மங்கள சண்டிகை துதி”- மங்களம் பெற, துயர் தீர - தினமும் / வேண்டும் போது.

“ஸ்ரீமங்களாஷ்டகம்”:--மங்களங்கள் பெருக-மனக்குறை- பாவங்களிலிருந்து விலகி-நீண்ட ஆயுளுடன்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.

அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!
யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!

1.“பராசக்தி”- அன்பு கிடைக்க, ஆறுதல் பெற- தினமும் / வேண்டும் போது.

அன்பே சிவமாய் அணைப்பாள் நம்மை அன்னை பராசக்தி!
ஆறுதல் சொல்லி அமுதம் பொழிவாள் ஆதி பராசக்தி!
இப்புவி இன்பம் யாவும் அளிப்பாள் அன்னை பராசக்தி!
உயர்வு தாழ்வு ஒன்றும் பாராள் அன்னை பராசக்தி!

எங்கும் நிறைந்த ஜோதியாய் நிற்பாள் அன்னை பராசக்தி!
ஏகட்சரமாய் அவனியிலே வந்தாள் ஆதி பராசக்தி!
ஐங்கார நாதனை ஆதியில் தந்தாள் அன்னை பராசக்தி!
ஓட்டியாண பீடத்தில் அமர்வாள் அன்னை பராசக்தி!

ஓம் என்றாலே ஓடியும் வருவாள் அன்னை பராசக்தி!
ஒளவை எனவே அவனியில் வந்தாள் ஆதி பராசக்தி!
ஓம் என்றாலே தேடியும் வருவாள் அன்னை பராசக்தி!
ஓம் என்றாலே ஆடியும் வருவாள் அன்னை பராசக்தி!

ஓம் என்றாலே பாடியும் வருவாள் ஆதி பராசக்தி!
ஓம் என்றாலே உருவாய் வருவாள் ஆதி பராசக்தி!
ஓம் என்றாலே குருவாய் வருவாள் ஆதி பராசக்தி!
அன்னை பராசக்தி! ஜெய ஜெய ஆதி பராசக்தி!

மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய்!
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே!
ஏதாயினும் வழி நீ சொல்வாய் எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப் பணிந்து வாழ்வோமே!

2.“அபிராமி தோத்திரம்”-ஆனந்த வாழ்வுக்கு- தினமும்- நேரம் கிடைக்கும் போது.

ஸ்ரீ லலிதையே! உனக்கு நமஸ்காரம். தேவி, எழில்மிகு சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவளே! அடியார்கள் கோருவதைத் தருபவளே! ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்! 

மகேஸ்வரி, ஒரு தாடங்கத்தின் மூலம் முழுநிலவை உண்டாக்கக் கூடியவள் நீ. பக்தர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும் ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்! 

அமிர்தகடேஸ்வரனை காந்தனாக அடைந்து சரண் அடைந்தவர்களைக் காப்பாற்றும் வாத்சல்ய சுபாவம் உள்ளவளே! அம்மா, அபிராமியே உனக்கு நமஸ்காரம். எனக்கு நாளும் நல்ல ஆரோக்கியத்தை அருளுவாய்!

கல்யாணி, மங்களத்தைக் கொடுப்பவளே! சர்வ லோகங்களையும் மங்களகரமாக்குபவளே! நிலையான ஐஸ்வர்யம் கிடைக்கும்படி செய்வாயாக! அபிராமித்தாயே உனக்கு நமஸ்காரம்!

சந்திர மண்டலத்தின் நடுவே அமர்ந்த மகாதிரிபுர சுந்தரி நீயே அல்லவா! ஸ்ரீ சக்ர ராஜதானியின் அரசியான அபிராமியே உனக்கு நமஸ்காரம்!

தாமரை போன்ற கண்ணழகியே! முழுமையானவளே, முழு நிலவைக் காட்டுபவளே, எனக்கு எப்பொழுதும் சௌபாக்கியத்தை அருளுவாயாக! ஸ்ரீ அபிராமியே, உனக்கு நமஸ்காரம்!

ஆனைமுகனுக்கும் ஆறுமுகனுக்கும் அன்னையே, வேத சொரூபியே! செல்வத்துக்கு ஈஸ்வரியே. எனக்கு வித்தையில் கீர்த்தியைத் தருபவளே! ஸ்ரீ அபிராமியே! உனக்கு நமஸ்காரம்!
சுவாசினிகளால் போற்றப்படுபளே, பெண்கள் கணவருடன் வாழும் காலத்தை அதிகரித்து சௌமாங்கல்ய பதவியை அதிகரிக்கச் செய்பவளே. எனக்கு நித்ய சௌமாங்கல்யத்தை அருள்வாய் தாயே! ஸ்ரீ அபிராமியே! உனக்கு நமஸ்காரம்!

மார்கண்டேயராலும் மகாபக்தரான சுப்ரமண்யர் என்ற அபிராமி பட்டராலும் நன்கு பூஜை செய்து வழிபடப் பட்டவளே! ஸ்ரீ ராஜராஜேஸ்வரி நீயே அல்லவா. ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்!

கல்யாணியே! மங்களம் அருள்பவளே! என்னுடைய பூஜாகிரகத்தில் உள்ள திவ்யமான உனது பிம்பம், தீபம், புஷ்பம் மற்றும் மஞ்சள் குங்குமத்தை உன்னருளால் சாந்நித்தியமடையச் செய்வாயாக! உனது அருள் நிறைந்ததாக ஆக்குவாயாக!

ஸ்ரீ அபிராமியன்னையின் இந்ததுதியினை அகம் ஒன்றி தினம் சொல்ல எனக்கு ஆயுள், பலம், கீர்த்தி, ஆரோக்கியம் இவற்றோடு சகல சௌபாக்யமும் நிச்சயம் எனக்கும் கிடைக்க அருள் புரிவாய் அபிராமி தாயே!

தனந்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவம்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாந்தரும் அன்பரென்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே!
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளைப் புவியடங்கக்
காத்தாளை அங்கையில் பாசாங்குசமும் கரும்பு வில்லும்
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கொரு தீங்கில்லையே!

3.“ஸ்ரீ லலிதா நவரத்ன மாலை”- வறுமை நீங்க, வளம் பெருக- தினமும் / வேண்டும் போது.
ஞான கணேசா சரணம் சரணம் 
ஞான ஸ்கந்தா சரணம் சரணம்
ஞான ஸத்குரு சரணம் சரணம்
ஞானானந்தா சரணம் சரணம்

ஆக்கும் தொழில் ஐங்கரனாற்ற நலம்
பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே!

“வைரம்”
கற்றும் தெளியார் காடே கதியாய்க்
கண்மூடி நெடுங்கனவான தவம்
பெற்றும் தெளியார் நினையென்னில் 
அவம் பெருகும் பிழையோன் பேசத்தகுமோ!

பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்கெமனாக எடுத்தவளே!
வற்றாத அருட் சுனையே வருவாய்!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!

“நீலம்”
மூலக் கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக் குவையே சரணம்

நீலத் திருமேனியிலே நினைவாய்!
நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்1
வாலக் குமரி வருவாய் வருவாய்!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
“முத்து”

முத் தேவரும் முத்தொழிலாற்றிடவே
முன்னின்றருளும் முதல்வீ சரணம்!
வித்தே விளைவே சரணம் சரணம்!
வேதாந்த நிவாஸினியே சரணம்!

தத்தேறியநான் தனயன் தாய்நீ!
சாகாத வரம் தரவே வருவாய்!
மத்தேறு ததிக்கினை வாழ்வடைவேன்!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!

“பவளம்”
அந்தி மயங்கிய வான விதானம்
அன்னை நடம் செய்யும் ஆனந்தமேடை!
சிந்தை நிரம்பவளம்பொழி யாரோ!
தேம்பொழிலாமிது செய்தவளாரோ!

எந்தையிடத்து மனத்தும் இருப்பாள்!
எண்ணுபவர்க்கருள் எண்ணமிகுந்தாள்!
மந்திர வேதமயப் பொருளானாள்!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!

“மாணிக்கம்”
காணக் கிடையாக் கதியானவளே!
கருதக் கிடையாக் கலையானவளே!
பூணக் கிடையாப் பொலிவானவளே!
புனையக் கிடையாப் புதுமைத்தவளே!

நாணித் திருநாமமும் நின் துதியும்
நவிலாதவரை நாடா தவளே!
மாணிக்க ஒளிக் கதிரே வருவாய்!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!

“மரகதம்”
மரகத வடிவே! சரணம் சரணம்!
மதுரித பதமே சரணம் சரணம்!
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதிஜதி லயமே இசையே சரணம்!

அரஹர சிவ என்றடியவர் குழும்
அவரருள் பெற அருள் அமுதே சரணம்!
வரநவ நிதியே சரணம் சரணம்!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!

“கோமேதகம்”
பூமேவிய நான் புரியும் செயல்கள்
பொன்றாது பயன் முன்றா வரமும்
தீமேல் இடினும் ஜெயசக்தியெனத்
திடமாய் அடியேன் மொழியுந் திறமும்

கோமேதகமே குளிர் வான் நிலவே!
குழல்வாய் மொழியே தருவாய் தருவாய்!
மாமெருவிலே வளர் கோகிலமே!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!

“பதுமராகம்”
ரஞ்சினி நந்தினி அங்கனி பதும!
ராகவி காஸ வியாபினி அம்பா!
சஞ்சல ரோக நிவாராணி வாணி
சாமபவி சந்த்ரகலாதரி ராணி!
அஞ்சன மேனி அலங்க்ருதபூரணி!
அம்ருத சொரூபிணி நித்யகல்யாணி!
மஞ்சுள மேரு ச்ருங்க நிவாஸினி!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!

“வைடூரியம்”
வலையொத்த வினை கலையொத்த மனம்!
மருளப் பறையால் ஒலியொத் தவிதால்
நிலையற் றெளியேன் முடியத் தகுமோ!
நிகளம் துகளாக வரம் தருவாய்!

அலையற் றசைவற்று அநுபூதிபெறும்
அடியார் முடிவாழ் வைடூரியமே!
மலயத்துவசன் மகளே வருவாய்!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!

 எவர் எத்தினமும் இசைவாய் லலிதா நவரத்தினமாலை நவின்றிடுவார்
அவர் அற்புதசக்தியெல்லாம் அடைவார் சிவரத்தினமாய்த் திகழ்வாரே!

4.“லலிதா ஸ்தவ ரத்ன” தோத்திரம்-ஆனந்த வாழ்வுக்கு -துர்வாசர் அருளியது. தினமும்- நேரம் கிடைக்கும் போது

யானை முகமுடைய மகாகணபதியை நமஸ்கரிக்கிறேன். அவர்தம் இடது மடியில் தமது மனைவி வல்லபையை அமர்த்திக்கொண்டு அவளால் ஆலிங்கணம் செய்யப் பட்டிருக்கிறார்.

செங்கழுநீர் புஷ்பத்தை மலரச் செய்யும் சந்திரனை தன்னுடைய சிரசில் தரித்துக் கொண்டிருக்கிறார். குங்குமம் போன்ற சிவந்த நிறத்தை உடையவர். லலிதாதேவி எனது சிரசைக் காக்கட்டும். பூரண நிலவைப்போன்ற அம்பிகை எனது நெற்றியைக் காக்க வேண்டும். அன்னை பவானி எனது புருவங்களைக் காக்கட்டும். மலர்க் கணைகளைக் கொண்ட தேவி எனது இரண்டு கண்களை காக்கட்டும். பாலா எனது நாசியைக் காக்கட்டும். எல்லா வளத்தையும் அருளும் அம்பிகை எனது பற்களைக் காக்கட்டும். சுந்தரி என் நாக்கைக் காக்கட்டும். கீழ் உதட்டை ஆதிசக்தியும், முகவாய்க்கட்டையை சக்ரேஸியும் காக்கட்டும்.  காமேஸ்வரி, காதுகளையும், காமாட்சி கன்னங்களையும், சிருங்கார நாயகி முகத்தையும் சிம்மாஸனேஸ்வரி கழுத்தையும் காப்பாற்றட்டும். ஸ்கந்தமாதா எனது இரண்டு தோள்களையும், பாடலாங்கி கைகளையும், பத்மநிலயா கரதலங்களையும், விஜயா நகங்களின் வரிசையையும் காப்பாற்றட்டும்.

கரும்பை வில்லாக ஏந்திய கோதண்டினி மார்பையும், வயிற்றை மலைமகளும், மையப் பிரதேசத்தை கல்யாணியும், இடுப்பை சந்திரகலாதரியும் காக்கட்டும். உமையானவள் எனது தொடைகளைக் காக்கட்டும். மிருடானி இரண்டு முழங்கால்களையும் ஷோடஸி ஜங்கப்பிரதேசத்தையும், பாசம்ஸ்ருணி இவற்றைத் தரித்த அம்பாள் கால்களைக் காக்கட்டும்.

பராபட்டாரிகை எனும் பிடாரி அம்மன் காலையிலும், மத்யானத்தில் சிந்தாமணி கிருஹநாயகியும், மாலையில் ஸர்வாணியும், இரவில் சாட்க்ஷாத் பைரவியும் காக்கட்டும். கௌரி என் மனைவியைக் காக்கட்டும். பிந்து கிருஹ பீடத்திலிருக்கும் பிந்துவாஸினி எனது புத்திரர்களைக் காக்கட்டும். ஸ்ரீவித்யா எனது கீர்த்தியைக் காக்கட்டும். மஹாரக்ஞை எனது நடத்தையை நேர்படுத்தி ரட்சிக்கட்டும். காற்று, அக்னி, பூமி, ஆகாசம், நீர், சூரியன், சந்திரன், திக்குகள், காலன், பிராணன் என்று எல்லா உருவமாயும் வியாபித்துள்ள சிவையே, நீ என்னைக் காக்க வேண்டும். காளி, கபாலினி, சூலினி, பைரவி, மாதங்கி, பஞ்சமி, த்ரிபுரை, வாக்தேவி, விந்த்யவாஸினி, பாலா, புவனேஸ்வரி என்று பலபெயர்களால் அழைக்கப்படுகின்ற அன்னையே! என்னை எப்போதும் காக்கவேண்டும். புத்தம் புதிய சிவந்த குங்குமத்தைப் போன்ற நிறமுள்ள தங்களை எவர் தங்கள் ஹிருதய பூர்வமாக வழிபடுகிறார்களோ அந்த அடியவர்களின் மீது மகாலட்சுமியின் திருப்பார்வை எப்போழுதும் விழுந்து கொண்டே இருக்கும். அ, க, ச, ட, த, ப, ய, ச என்ற வர்க்காஷ்டங்களோடு அமையப்பட்ட வசினீ முதலிய தேவதைகளால் சூழப்பட்ட வெண்மை நிறமான தங்களை வழிபடுபவர்களின் வாக்கிலிருந்து எப்பொழுதும் இனிமையான சொற்களே வெளிவருகின்றன. அம்பாளின் அம்சமான சரஸ்வதி, மகாலட்சுமியே நமஸ்காரம். தங்க கம்பிபோன்ற நிறமுடையவளும், இரண்டு காதுகளிலும் ஆடுகின்ற அழகிய குண்டலங்களை உடையவளும், புன்முறுவல் பூத்த முகத்தையுடையவளுமான தங்களை வழிபடுபவர்கள், பூமியில் தாங்கள் வசிக்கும் பொழுதே குபேரன் போன்ற பெருமையை அடைவர், குளுமையான அமிர்தத்தை தலையின் நடுவில் இருந்து வர்ஷித்துக் கொண்டிருக்கின்ற அமிர்த வர்ஷினியாகிய தங்களை வழிபடுகின்றவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கிறது. இனிமையான புன்முறுவலை உடையவளும், மதத்தினால் சிவந்த கண்களை உடையவளும், யாணையின் தலையைப் போல கடுமையான ஸ்தனங்களை உடையவளும், சந்திர கலாதாரியும் ஆன தங்களை வழிபடும் பாக்யசாலியான உபாசகர்கள் சிலர், தங்களைக் காணும்பேறு பெறுகின்றனர். ஆர்யாத்விசதி என்ற அழகிய ஸ்தோத்திரம் ஸ்ரீலலிதாதேவியைப் புகழ்ந்து போற்றிப் பாடப்பட்டுள்ளது. அதிலுள்ள சிலமுக்கியமான ஸ்தோத்திரங்கள் கொண்ட இப்பகுதியை நாள்தோறும் படிப்பவர்களுக்கு என்னென்ன பலன் கிட்டும் என்பதை அந்த லலிதா தேவியால் மட்டுமே சொல்ல முடியும்.

5.“காமாக்ஷி துக்க நிவாரண அஷ்டகம்”- சங்கடங்கள் நீங்க, வளம் பெருக- தினமும் / வேண்டும் போது.

மங்கள ரூபிணி மதியிணி சூலினி மன்மத பாணியளே!
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே!
கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல் கற்பகக் காமினியே!
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே!

கானுறு மலரெனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்!
தானுறு தவ ஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள்!
மானுறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்!
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே!

சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே!
பொங்கரிமாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே!
எங்குலந்தழைத்திட எழில்வடிவுடனே எழுந்த நல்துர்க்கையவளே!
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே!

தணதண தந்தண தவிலொளி முழங்கிடத் தண்மணிநீ வருவாய்!
கணகண கங்கண கதிரொளிவீசிடக் கண்மணி நீ வருவாய்!
பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்!
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே!

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல்பாணியாளே! கொஞ்சிடும்
குமரணைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல் குமரியளே!
சங்கடம் தீர்ந்திடச் சமரது செய்தநற் சக்தியெனும் மாயே!
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே!

எண்ணியபடி நீ அருளிட வருவாய் எங்குல தேவியவளே!
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்!
கண்ணொளியதனால் கருணையேகாட்டிக்கவலைகள் தீர்ப்பவளே!
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே!

இடர்தரும் தொல்லை இனிமேல்இல்லையென்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரும் அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்!
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்!
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே!

ஜெயஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி
ஜெயஜெய துர்க்காஸ்ரீ பரமேஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி
ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெயஜெய ஸ்ரீதேவி
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே!

குங்கும அர்ச்சனை செய்தோர்க்கு அம்பாள் 
கோடிக்கோடி பொன் கொடுப்பாள்!
சந்தனத்தால் அபிஷேகம் செய்தோர்க்கு அம்பாள்
சர்வா பீஷ்டங்களும் கொடுப்பாள்!

தேனால் அபிஷேகம் செய்தோர்க்கு அம்பாள்
திவ்ய தரிசனம் கொடுப்பாள்!
பாலால் அபிஷேகம் செய்தோர்க்கு அம்பாள்
பல ஜென்ம பாவங்களை தீர்ப்பாள்!

கனியால் அபிஷேகம் செய்தோர்க்கு அம்பாள்
கண்முன்னே வந்து நிற்பாள்!
தீராத விணைகளைத் தீர்ப்பாள்
தேவி திருவடி சரணம் அம்மா!

நின் திருவடி சரணம் சரணம் அம்மா!
பவ பய ஹாரிணி அம்பா பவானியே!
துக்க நிவாரணி துர்க்கே ஜெயஜெய!
கால விநாசினி காளி ஜெயஜெய!

சக்தி ஸ்வரூபிணி மாதாவே ஜெயஜெய!
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி 
துக்கநிவாரணி காமாக்ஷியே!

6.“காமக்ஷி துதி”- துன்பம் நீங்கி, மோட்சம் பெற- தினமும் /வேண்டும்போது.

 காஞ்சி மாபுரியில் வாழும் காமகோடி வாவா!
வாஞ்சையுடன் எந்தனுக்கு வரம்ருள வாவா!
மாவடியின் கீழமர்ந்த மாமணியே வாவா!
சேவடி தந்திடும் சிவ சக்தியே வாவா!

 பிருதியாகி வந்த பரிபூரணியெ நீ வா வா!
கதிவேறில்லை அம்மா என்னைக் காத்திடவே வா வா!
குஞ்சரனை ஈன்ற அம்ப கோதையே நீ வா வா!
சஞ்சிதமகற்றும் ஞானச் செல்வமே நீ வா வா!

 பஞ்ச தசாட்சரி என்றன் நெஞ்சமதிலே வா வா!
தஞ்சமென்றுன் தாள்பணிந்தேன் தேவியே நீ வா வா!
அஞ்சலென்றுரைத் தென்னை ஆதரிக்க வா வா!
கஞ்சதள லோசனி காமாட்சியே நீ வா வா!

 சர்வ சக்தியாய் விளங்கும் சாம்பவி நீ வா வா!
சங்கரி கிருபாகரி சடாட்சரி நீ வா வா!
கற்பகமளிக்கும் திவ்ய கற்பகமே நீ வா வா!
அற்புத நிலைதரும் அம்மையே நீ வா வா!

 மாதவன் சகோதரி மங்களாம்பிகை நீ வா வா!
பூதலத்தோர் பணிந்து புகழும் பூவையே நீ வா வா!
கந்தனுகந்த அர்த்தநாரியே நீ வா வா!
நர்த்தனமிடும் உமையே நவமணியே வா வா!

 அம்பா சிதம்பரி உன்னை நம்பினேன் வா வா!
அன்பே உருவாகி வந்த அம்பிகையே வா வா!
ராஜராஜேஸ்வரி அம்பா லலிதையே நீ வா வா!
தேஜோ மயமாகிய சௌபாக்யமே நீ வா வா!

 திருமணி ஞானமணி சிந்தாமணியே வா வா!
மௌனமணி மோட்சமணி மும்மணியே நீ வா வா!
ஏகாட்சரி திரியாட்சரி ஷடாட்சரி நீ வா வா!
நவாட்சரி தசாட்சரி சோடாட்சரி நீ வா வா!

மேருவினில் வீற்றிருக்கும் திரிபுர சுந்தரி நீ வா வா!
ஸ்ரீசக்ர ஸ்வரூபி பிந்துவாசியே நீ வா வா!

7.“காமாக்ஷி துதி”- துதிபாடி வாய்பேசும் திறன்பெற்ற மூகசங்கரேந்திர சுவாமிகள்- இயற்றிய மூகபஞ்சசதி- ஆனந்த ஆரோக்கியமாக வாழ, வளம் பெருக- வேண்டும் போது.

oபிறைசூடிய பெருமானுடன் இனைந்த சக்தியும் சிவபெருமானின் பேராளுமையின் வடிவமானவளும், சந்திரகலையை தனது சிரசில் கொண்டவளும் அழகானவளுமான தேவி, காஞ்சியின் நடுவில் அருளாட்சி புரிகிறாள்.

oகம்பாநதிக்கரையில் அமர்ந்துள்ள ஆதிகாமாட்சி பூமி, சூரியன், வாயு, ஆகாயம், அக்னி, வேள்விபுரிபவர், நீர், சந்திரன் ஆகிய உருவங்களில் காட்சி தருகின்றாள். பஞ்ச பூதங்களாலான பிரபஞ்சத்தில் சூரிய சந்திரர்கள் சாட்சியாக வேள்விகள் மூலம் தெய்வத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ள விரும்பும் சான்றோர்கள் நிரைந்த காஞ்சியில் உறைந்துள்ள காமாட்சி, கல்வியில் கரையில்லாதவள்.

oசிவசிவா, இது என்ன இந்த சான்றோர்கள் அன்னை காமாஷியின் அருளுக்குப் பத்திரமானவர்கள் இல்லையா. காட்டையும் வீட்டையும் சமமாகப் பாவிக்கின்றார்கள். கோவைப்பழம் போன்ற உதடுகளையுடைய பெண்ணையும், ஓட்டாஞ்சில்லையும் ஒன்றாக பார்க்கின்றார்களே!

oஉலகைப் படிக்கும் சக்தியான வித்யையே, சரஸ்வதியே, காத்யாயினியே, காளியே, காமகோடிகலையே, பாரதியே, பைரவியே, பத்திரையே, சாகினியே, சாம்பவியே, சிவையே உன்னை துதிக்கின்றேன்.

oகாமாட்சியே, வணங்குபவர்க்கு வேண்டியயாவும் அருளி முக்தியளிப்பவளும், அனைத்து உயிரினங்களையும் படைத்தவளும், சிம்மவாகினியும், சிவனை மகிழ்விப்பவளும், எதிரிக்கூட்டத்தை அழிப்பவளுமான நீயே துர்க்கை யல்லவா.

oதாயே காமாட்சி. நீயே பிரம்மாவின் தாமரை போன்ற முகத்திலும்-நாக்கில் சரஸ்வதியும், விஷ்னுவின் திருமார்பிலும், பரமனின் மடியிலும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி என ஆவிர்பவித்த பதிவிரதையாக இருக்கிறாய்.

oஉன்பார்வையின் தீட்சண்யமே பகல் போன்ற ஒளி. கருநெய்தல் பூவைப்போன்ற இருட்டின் ஒளியை அது தடை செய்கிறது. இது எப்படி உள்ளது என்றால் இருட்டு என்கிற வினையாகிய அயர்வை உனது கடாட்ச தீட்சண்யம் அழித்து எனது இதயத் தாமரையை மலரச் செய்வதாக உள்ளது.

oமலையரசனின் மகளே காமாட்சியே, அன்னக்கரண்டியில் எடுத்த அன்னத்தைக் கொண்டு ஏழைகளின் பசிக் கொடுமையைப் போக்கும் அன்ன பூரணி நீயே!

oகாமாட்சி தூய ஆடை அணிந்து தாமரையில் குடி இருப்பவள். புத்தகமும் ருத்ராட்ச மாலையும் ஏந்திய அழகிய திருக்கரங்களை உடையவள். அடர்த்தியான இமைகளுடன் கூடிய கண்களையும் அழகிய வீணை ஏந்திய கரங்களையும் கொண்டவள். காமாட்சி நீயே பிரம்மாவின் பத்தினியான சரஸ்வதியாகவும் விளங்குகின்றாய்.

oசதிதேவியே, மூவுலகத்தின் தாயே. நீதான் சண்டிகா. நீயே சாமுண்டி. நீயே மாத்ருகாதேவி. நீயே யோகினி வடிவுடையவள். நீயே சாம்பவி. நீ அல்லவா ஐயாவும் விஜயாவும். வேறென்ன சொல்ல முடியும். நீயே எல்லாம்.

oஹே காமாட்ஷி. அண்டினவர்களுக்கு உனது கருணையானது செல்வம், கல்வி அளவற்ற கீர்த்தி, நல்ல புத்திரபாக்யம் மூவுலகிலும் மேலான தன்மை ஆகியவற்றை எளிதில் தருகிறது. திரிபுர தகனம் செய்த பரமேஸ்வரரின் அன்புக்கு அரிய மனைவியே பக்தர்களின் பாவத்தைப் போக்குகின்ற உன்னுடைய பாதகமலங்கள், வணங்குவோர்க்கு எல்லாம் தரும்.

8.“காயத்ரிதேவி” ஜபம்- புத்திக்கூர்மை, வெற்றி கொள்ளும் ஆற்றல் பெற- தினமும்

என்னுடைய அறிவைத் தூண்டி, என் சிந்தனையிலும், செயலிலும் ஆக்கப்பூர்வமான புத்துணர்வைத்தரும் பேரொளியே, உனக்கு நமஸ்காரம். மனதில் உறுதியும், செயலில் நேர்மையும் கொண்டு நானும் உயர்ந்து என்னைச் சார்ந்தோரையும் உயர்த்தும் நற்குணம் என்னை வந்தைடைய உதவுவாயாக.

9.“காயத்ரிதேவி”-மாங்கல்ய பலம்பெற-சத்யவானை எமன் பிடியிலிருந்து சாவித்ரி மீட்ட துதி-காரடையான் நோன்பு அன்று (பெண்களுக்கு)

 பிரணவாமாக விளங்கும் ஓம்காரத்தைத் தனது பெயருக்கு முன் உடையவளே! வீணை, புத்தகத்தை கரங்களில் தாங்கியிருப்பவளே! வேதங்களுக்குத் தாயானவளே! சாவித்ரிதேவி எனும் காயத்ரிதேவியே! உன்னை நான் தாள் பணிந்து வணங்குகின்றேன்! என் கணவரை விட்டுப் பிரியாதிருக்கும் தீர்க்க சௌமங்கல்ய வரத்தை எனக்கு அளிக்க வேண்டும் அம்மா! உன்னை வணங்குகின்றேன்!

 பதிவிரதையே! உயர்ந்த பாக்கியசாலியே! கணவன் மகிழும் வண்ணம் இன்சொல் கொண்டவளே! பக்தர்களைக் காப்பதே பிரதான கடமையாகக் கொண்டிருப்பவளே! சாவித்ரி தேவியே! நான் என்றென்றும் தீர்க்க சுமங்கலியாய் வாழ எனக்கு ஆசியளித்து, அனைத்து சௌபாக்கியங்களையும் அருள்வாய்! அம்மா தேவியே! உன்னை வணங்குகின்றேன்!

10.“சௌபாக்ய துதி”- தீர்க்க சுமங்கலி வரம் பெற- காரடையான் நோன்பு அன்று-(பெண்களுக்கு)

ஓம் எனும் ப்ரணவத்தை தனது பெயருக்கு முன்னால் தரித்துக் கொண்டுள்ளவளும், வேதங்களுக்குத் தாயானவளும், சரஸ்வதி வடிவினளுமான சாவித்ரி தேவியே, உன்னை வணங்குகின்றேன். கணவனைவிட்டுப் பிரியாத தீர்க்க சௌமங்கல்யத்தை தாங்கள் எனக்கு அருளவேண்டும். பதிவிரதையும், மிகுந்த பாக்யசாலியும், கணவனுக்குப் பிரியமான வார்த்தைகள் பேசுகிறவளும், பக்தர்களை காப்பதையே கடமையாகக் கொண்டவளும் ஆன அம்பிகையே, நான் தீர்க்க சுமங்கலியாக வாழ இனிது அருள்புரிவாய் தாயே!

11.“நவரத்தினமாலை”- ஆதிசங்கரர்- இனிய வாழ்வு, நீண்ட ஆயுள், நிலைத்த ஆரோக்கியம் பெற- தினமும்/ நவராத்திரியன்று

oஹாரம், கொலுசு, கிரீடம், குண்டலங்கள் அவயவயங்களை அலங்கரிக்க பிரகாசிப்பவளும், இந்திரன், பிரம்மா முதலிய தேவர்களின் கீரீடங்களால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவளும், மிகக் கருத்த நாகங்கள், பாசம், வில், அங்குசம், சிவந்த ஒட்டியாணம் ஆகியவற்றைத் தரிப்பவளும், திலகம் போன்ற நெற்றிக் கண்ணினை உடையவளுமான பர தேவதையை மனதால் வணங்குகின்றேன்.

oமணமுள்ள வாசனைப் பாக்கு, கற்பூரம் இவற்றுடன் கூடிய அழகானதும், துளிரானதுமான வெற்றிலையை போட்டுக் கொண்டதால் ஏற்படும் வாசனையை உடையவளும், சந்தியா காலம் போன்ற அழகான சிவந்த உதடுகளை உடையவளும் நீண்ட கண்களை உடையவளும். களங்கமில்லாத இளம் பிறை சந்திரனை தலையில் அணிந்து கொண்டவளும். லக்ஷ்மி நாயகனான மஹாவிஷ்னுவின் சகோதரியுமான பரதேவதையை மனதால் தியானிக்கின்றேன்.

oபுன்முறுவல் பூத்த வதனமும், மாசற்ற கன்னப் பிரதேசமும், அணிகலன்களாலும் ஹாரங்களாலும் அணி செய்யப்பட்டதும், மிகப் பருத்தவையுமான தனங்களின் பாரத்தினால் வருத்தப்படும் நூல்போன்ற இடையை உடையவளும், வீரர்களின் கர்வத்தை அடக்குவது போன்ற கொலுசுகளைத் தரித்தவளும், பிரம்மா, விஷ்னு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன், ஆகியோரைத் தனது சிம்மாசனத்தின் கால்களாய்க் கொண்டவளும், மன்மதனுடைய விரோதியான பரமசிவனின் தர்மபத்தியான பரதேவதையை மனதார நமஸ்காரம் செய்கின்றேன்.

oபூமி பாரத்தைச் சுமக்கும் ஆதிசேஷனின் மணிபதித்த உலக உருவான பீடத்தை உடையவளும், கடலில் உண்டாகும் விசேஷ மணிகளாலான ஒட்டியானத்தை தரித்தவளும், அக்னி மண்டலத்தையே சரீரமாக கொண்டவளும், கடலின் சாரமான குண்டலத்தை அணிபவளும், ஆகாயமளாவிய சிரசை உடையவளும், எங்கும் நிறைந்த பரமாத்மா காற்று எனப் போற்றப்படுபவளும், அழகிய சூரிய சந்திரர்களையே தன்னிரு விழிகளாகவுடையவளுமான பரதேவதையை மனதால் நான் துதிக்கின்றேன்.

oஸ்ரீசக்ரத்தில் பிந்துவான முக்கோணம், அதைச் சுற்றியுள்ள ஆறு இதழ்களில் பிரகாசிக்கிறவளும் தாமரையை நாணித்தலை குனிய வைக்கும் முக வசீகரமும் ஒளியும் உடையவளும், சூரியனின் காந்திக்கும் மின்னலுக்கும் ஒப்பானவளும், சந்திர மண்டலத்திலிருந்து பீறிடும் அமிர்தமயமான கிரணங்களை நிகர்த்தவளும், சிவந்த உருவத்தை உடையவளும், வட்டமாய் மறைந்த தீப வரிசைகளைக் கொண்டவளுமான பர தேவதையை நான் மனதில் தியானிக்கின்றேன்,

oயணைமுகன், மயிலவாகனன் ஆகியோரின் தாகத்தைத் தீர்ப்பதற்காக ஞானப்பால் கொடுத்த தனங்களை உடையவளும், தேவமகளிர் பாதத்தில் விழுந்து வணங்கும் போது அவர்களின் திருமுடிகளால் ஸ்பரிசம் செய்யப்பட்ட திருவடிகளை உடையவளும், பிரம்மா, விஷ்னு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் என ஐந்து சிருஷ்டித் தொழில்களைச் செய்வோரை இயக்கி வைப்பவளும், ஆதி மாதாவும் விநாயகரின் முகத்தில் மகிழ்ச்சி தோன்றிடச் செய்பவளுமான பரதேவதையை மனதால் துதிக்கின்றேன்.

oதாமரையைப் போன்ற தளிர்க் கரங்களும், பாதங்களும் உடையவளும், பதுமராக மணியிலான ஒட்டியாணம் அணிந்தவளும், புடவை முடிச்சுடன் கூடிய இடுப்பினை உடையவளும், பிரம்மா முதல் சதாசிவன் வரையான பஞ்சமூர்த்திகள் தாங்கும் சிம்மாசனத்தை உடையவளும், லஷ்மியையும், ஓங்கார வடிவினளுமான பரதேவதையை மனதால் நான் வணங்குகின்றேன்.

oவேகத்தையும் பிரணவத்தையும் தனது பீடமாய் உடையவளும், அகரம் முதலான 51 அட்சர எழுத்துக்களையும் தனது மங்கள உருவாயுடையவளும், ஆகமங்களையே தன்னுடைய அவயவங்களாகக் கொண்டு ஒளியுடன் விளங்குபவளும், எல்லா வேதங்களில் முடிவுப் பொருளாக உருக்கொண்டவளும், மூல மந்திரமெனப்படும் ஸ்ரீவித்யா மந்திரமே தனது முகமண்டலமாயுள்ளவளும், நாதம் பிந்து இரண்டும் இணைந்த நாதபிந்து வடிவமாயுள்ளவளும், தினம் தினம் புதிதாகத் தெரியும் யௌவனத்தையுடையவளும், அட்சரமாயும், திரிபுர சுந்தரி என பெயருள்ளவளாயும் உள்ள பரதேவதையை நான் மனதால் வணங்குகின்றேன்.

oநெற்றிக்கு மேலே கருமேகத்தைப் போன்று வண்டுகளின் வரிசைகளைப் போல் விளங்கும் முன்நெற்றிக் கேசத்தையுடையவளும், மல்லிகை போன்ற மணமுள்ள மலர் மாலைகளை அணிந்தவளும், தாமரை மலர் போன்ற சிவந்த கன்னப் பிரதேசத்தையுடையவளும், சர்வலோக நாயகியான காளி என்ற பெயர் பெற்று விளங்குபவளுமான பரதேவதயை மனதால் வணங்குகின்றேன்.

oஒன்பது துதிகளால் தேவியைப் பணிந்துவிட்டு நாம ரத்தினமாகிய இந்த நவரத்தின மாலிகை என்கிற ஒன்பது சுலோகங்களையும் தினமும் படிக்கும் எனக்கு போகம், மோட்சம் என்ற இரண்டையும் அடைய, ஆசைகள் நிறைவேற அருள் புரிவாய் தாயே.

12.“சக்தி கவசம்”- எதிரி பயம் நீங்க, இன்னல்கள் விலக- தேவர்களை துன்புறுத்திய அசுரனை வதம் செய்து காத்த போது பாடியது- தினமும்/ நேரம் கிடைக்கும்போது.

அங்கையிற் கரகம் தாங்கும் பிரமாணி அருளினோடும் துங்கம் என் சென்னி காக்க! வயிணவி துகளிலாகம் எங்கணுங் காக்க! 
செய்ய வேந்தெழில் உருத்திராணி தங்குமெண்டிசையும் 
அன்பு தழைத்திட இனிது காக்க!

கொன்னுனைச்சூலி சென்னி மயிரினைக் குறித்துக் காக்க!
மன்னு வெண்பிறை தாழ் சென்னி வயங்கொளி நெற்றி காக்க!

பன்மயிற் புருவம் நாளும் பரிவோடு உமையாள் காக்க!

என்னையாள் முக்கண் ஈசன் இறைவி கண்ணிமைகள் காக்க!
வயமிகு இமயவல்லி மூக்கினை மகிழ்ந்து காக்க!
செயையொடு விசயை மேல்கீழ் இதழினைச் சிறந்து காக்க!
வயலிடைச் சுறுதிதூய வஞ்செவி காக்க! கணணென் பயில் 
மலருறையுஞ் செல்வி பல்லினை உவந்து காக்க!

சண்டிமென் கபோலங் காக்க!

தவள நாண்மலரின் வைகும் ஒண்தொடி நன் காக்க!

விசயை மங்கலை மற்றொவ்வாக் கண்கவர் நாடி காக்க!

காத்தியாயினி எஞ்ஞான்றும் முண்டக மலரில் தூய முகத்தினைச் சிறந்து காக்க!

களம் உண்டு இருண்ட நீல கண்டி மென்கழுத்துக் காக்க! 
கோளில் பூதாரசக்தி சுவர்ப் புறங் காக்க! கூர்மி நீளொளி
கந்தி காக்க! ஐந்திரி நெறினோடும் தோளினைக் காக்க!
பத்மை துணை மலர் அங்கை காக்க!

கமலை கைவிரல்கள் காக்க! விரசை கையுகிர்கள் காக்க!
திமிர முண்டொளிரும் வெய்யோன் மண்டலத்து உறையுஞ்
செல்வி எமது இருவாகு மூலங் காக்க! வானவர்களேத்த அழிர்
தலகரி நாணாளு மகள் மணிமார்பங் காக்க!

திரித்திரி இதயங் காக்க! தயிர்த்தியர்ச் செகு போண்மிக்க
கருந்தொடு முலைகள் காக்க! சகத்தினிலிறைமை பூண்டோடு
இருத்தகு வயிறு காக்க! திகழ் தபோகதி தன்னுள்ளந் தருத்தின்
உந்தி காக்க! வசைவளர் முதுகு காக்க!

கருதருவி கடை காக்க! கடிதலம் பாமை வாய்ந்த குருமணிச் சகனங் காக்க!

குகாரணி குய்யங் காக்க! அருடர 
வரும் அபாய கந்தினிய பாணங் காக்க! தெருளுடை 
விபுலை யென்றும் சிறப்புடைக் குறங்கு காக்க!

லலிதை மென் முழந்தாள் காக்க! வியற்சபை
கணைக்கால் காக்க! களிதரு கோரை வாய்ந்த 
பரட்டினைக் காக்க! மிக்க அளிகொள் பாதலத்திற்
செல்வோள் அணிகெழு புறந்தாள் காக்க!

ஒளிர்நகம் விரல்கள் சந்திரி உக்கி உவந்து காக்க! தலத்துறை 
மடந்தை உள்ளங் காலினை காக்க! தண்ணென் மலர்திரு 
மனையைக் காக்க! வயங்கு கேத்திரதை யோங்கி 
உலப்பில் கேத்திரங்கள் காக்க!

பிரியகரை ஒழிவறாது நலத்தகு மக்கள் தம்மை நன்குறக் காக்க 
வன்றே! உயர் சனாதனி எஞ்ஞான்றும் ஒழிவறும் ஆயுள் காக்க!

அயர்வறு கீர்த்தியாவும் மாதேவி காக்க!

மிக்க செயிரறு தருமம் யாவும் தனுத்திரி சிறந்து காக்க!

இயல்புடைக் குலத்தை வாய்ந்த குலதேவி காக்க!

சற்கதி பிரதை நல்லோரியைபினை தயாவிற் காக்க!

விற்கொடும் போரில் நீரில் வெளியினில் வனத்திற்

சூதில் இற்புதம் அதனில் ஓங்கு சர்வாணி காக்க!

வென்னாப் பொற்றரு மலர்கள் தூவிப் புங்கவர் ஏத்தினாரே!

13.“அஷ்டாதச சக்தி பீடங்கள்”- 16பாக்கியங்கள் பெற- தினமும்- ஆடி18சிறப்பு.

இலங்கையில் சங்கரி, காஞ்சியில் தேவி காமாட்சி, ப்ரத்யும்னத்தில் சிருங்கலாதேவி, க்ரௌஞ்ச பட்டணத்தில் சாமுண்டி. ஆலம்புராவில் ஜோகுளாம்பாள், ஸ்ரீசைலத்தில் ப்ரமராம்பிகா, கோலப்பூரில் மகாலட்சுமி, மாஹிரீல் ஏகவீரிகா, உஜ்ஜையினியில் மகாகாளி, பீடிகாவில் புருஹ்ருதிகா, அயோத்தியில் கிரிஜாதேவி, தட்சவாடகத்தில் மாணிக்யா, ஹரிசேத்திரத்தில்-கௌகாத்தியில் காமரூபா, ப்ரயாகையில் மாதேஸ்வரி, கயையில் மங்களகௌரி, வாரணாசியில் விசாலாட்சி, காஷ்மீரத்தில் சரஸ்வதி, என 18 திவ்ய பீடங்களில் வசிப்பவளை மகாயோகிகளும் காண அரிதானவளை மனப்பூர்வமாக வணங்குகிறேன். எதிரிகளின் பலம் குன்றவும், வீண் பயங்கள் அகலவும், அனைத்து ரோகங்களும் குணமாகவும், சகல செல்வங்களும் சேர அருள்புரிவாய் அம்மா!

14.“ஸ்ரீமுக பஞ்சதுதி”-தினமும்.

ஸ்ரீ காமாட்சி தேவியின் கருணை நிறைந்த கடைக்கண்களின் வரிசையானது இணையில்லாத கருப்பு நிறம் கொண்ட சந்திரிகை போலவும், மூவுலகங்களிலும் புண்ணியம் செய்தவர்களின் வாக்கில், அளவில்லாத மழை போன்று நூல் இயற்றும் திறமையைப் பொழியும் மேகக் கூட்டம் போலவும், மன்மதனை எரித்த சிவபெருமானின் மனதை மோகம் கொள்ளச் செய்வதில் இணையில்ல இருள் குவியல் போலவும் இருக்கின்றது, தாயே உன்னை வணங்குகிறேன்.

15.“ஸ்ரீ சௌந்தர்ய லஹரி”-அழகு அலைகள்- கலை, கல்விகளில் சிறப்பிக்க-தினமும்

அம்பிகையே! பரமேஸ்வரன் உன்னை மணந்தது, விநாயகர் மற்றும் முருகன் ஆகியோரைப் புத்திரர்களாக அடைந்தது முதலான சரித்திரங்களை, உனது சந்நிதியில் இருந்தபடி வீணையில் இசைத்துக் கொண்டிருந்தாள் சரஸ்வதி தேவி. அதை, ‘ஸாது- நன்றாக இருக்கின்றது’ என்று பாராட்டுவதற்காக. ‘ஸா’ என்று ஆரம்பித்த உனது குரலின் இனிமையைக் கண்டு தனது வீணையை உறையில் வைத்து கட்டிவிட்டு அமைதியாக இருந்து விட்டாள் சரஸ்வதி தேவி. சரஸ்வதியை உனது குரல் இனிமையால் வெற்றி கொண்ட காமாட்சி தேவியே, எனக்கு கல்வி உள்ளிட்ட அனைத்து கலைகளிலும் தேர்ச்சி தந்தருள்வாய்!

அம்பிகையே பரமேஸ்வரன் பத்தினியே, நமஸ்காரம். அமிர்த வெள்ளம் பொங்கிப் பெருகுவது போன்ற இனிய சொற்களைப் பேசுபவளே, அந்த உன் பேச்சை சரஸ்வதிதேவியும் தன் காதுகளால் பருகிக் களிக்கின்றாள். உன்பேச்சை ஆமோதிக்கும் வகையில் அவள் தலையசைக்கும் போதெல்லாம் காது குண்டலங்களும் அசைந்து சேர்ந்திசைக்கும். அன்னையே உன் வாக்கைக்கேட்டு சரஸ்வதியும் மகிழ்கிறாள் என்றால், சாதாரண பாமரர் எத்தகையபேறு பெற்றவராவர். ஏன் பேச்சுத் திறனற்றவரும் பேச்சாற்றல் பெறுவரே! கல்வியில் சிறப்பும், உயர் தேர்ச்சியும், கலைகளில் உன்னதமும் பெற அருளும் அம்பிகையே உனக்கு எனது வணக்கங்கள்.

அம்பிகையே நான் பேசுவது எதுவாக இருந்தாலும், அது உன்பால் செய்யப்படும் பிரார்த்தனையாக இருக்கட்டும். நான் செய்யும் தொழில்கள், செயல்கள் யாவும் உன் வழிபாட்டுக்குரிய அபிநயமாக இருக்கட்டும். நான் நடப்பது உன்னைச் சுற்றி வரும் பிரதட்சணமாகட்டும். நான் உண்பதும், அருந்துவதும் உனக்குச் செய்யப்படும் நைவேத்யமாகட்டும். நான் படுத்துக் கொள்வது, உனக்காக செய்யப்படும் நமஸ்காரமாகட்டும். என் சுகானுபவங்கள் எல்லாம் நான் என்னையே உனக்குச் சமர்ப்பணம் செய்யும் தோரணையில் அமைந்திருக்கட்டும், சுருக்கமாகச் சொன்னால் நான் செய்யும் எல்லாம் உன் வழிப்பாடாகவே இருக்கட்டும் எனக்கு நீ அருள் புரிவாயாக.

மங்கள மூர்த்தியான மகாதேவன் பராசக்தியான உன்னுடம் கூடியவரக இருந்தால் மட்டுமே எல்லா உலகங்களையும் படைக்கக்கூடிய தகுதியைப் பெறுவார். அவ்வாறு உன்னுடன் சேர்ந்தில்லாவிட்டால் அவரால் நகரக் கூடமுடியாது. மகாவிஷ்ணு, சிவன், பிரம்மா முதலியவர்கள் பூஜிக்கும் உன்னை புண்ணியம் செய்யாதவன் வணங்குவதற்கோ துதிப்பதற்கோ தகுதியுடையவன் ஆகமாட்டான்.

பிரம்மா உன் கால்சுவட்டின் தூசிகளிலிருந்து ஒரு மிகச் சிறிய அணு கிடைக்கப்பெற்று, அதைக் கொண்டு உலகை படைக்கிறார். அப்படிப் படைக்கப்பட்ட உலகங்களை ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளால் தாங்குகிறார். அந்த உன் பாதத்துளியையே பரமசிவன் விபூதியாகத் தன்மேல் பூசிக்கொள்கிறார்.

பரமசிவன் பத்தினியே, மலர்ந்த கறுநெய்தல் காடு போல் பிரகாசிப்பதும், அடர்ந்து, வழவழப்பாகவும், மிருதுவாகவும் உள்ள உன்னுடைய கூந்தல், எங்கள் மனத்தில் இருக்கும் அறியாமை எனும் இருளைப் போக்கட்டும்.

வார்த்தைகளுக்கெல்லாம் பிறப்பிடமான தாயே, நீ எனக்குப் போட்ட பிச்சையான சொற்களால் இயற்றப்பட்ட இந்த பாமாலையால் உன்னை நான் துதிப்பது, கற்பூர ஒளியால் சூரியனை வணங்குவது போலவும், சந்திரகாந்தக் கல்லில்கசியும் நீர்த் துளிகளால் சந்திரனை மரியாதை செய்வது போலவும், கடல் நீரால் கடலரசனைத் துதிப்பது போலவும் இருக்கிறது.
16.ஸ்ரீ சௌந்தர்ய லஹரி: ஆதிசங்கரர் அருளியது- விஷக்காய்ச்சல் உபாதை தீர பஞ்சமி திதியன்று 16 முறை உச்சரித்து உளமாற வணங்கவும். 
அம்பிகையே! வணக்கம். என் ஐம்புலன்களாலும் பக்தி ரசத்தைப் பெருக்கும் வகையில் உன்னை வணங்குகின்றேன். சந்திரகாந்த சிலை வடிவினளாக உன்னை உருவகித்து தியானிக்கின்றேன். எனக்கு பாம்பு போன்ற விஷ ஜந்துகளை அடக்கும் கருடன் போன்ற ஆற்றலினை அருள்வாயாக. அம்மா, உன் பார்வை, விஷ ஜந்துகளால் ஏற்படும் உபாதைகளையும், விஷக் காய்ச்சலையும் அறவே ஒழிக்கின்றது. பாற்கடலை கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷம் தன்னைத் தாக்கக்கூடாது என்பதற்காக மகாவிஷ்னுவே அம்பிகையை தியானித்திருக்கின்றார் என்றால் உன் அருள்தான் எத்தகைய நன்மையை விளைவிக்கக் கூடியது! எனக்கு அருள் புரிவாய் அம்மா!

17.“அகிலாண்டேஸ்வரி” - கல்வி, செல்வம் பெருகும். இந்திரன் துதித்தது- செவ்வாய், வெள்ளி-16முறை.

அகிலமெல்லாம் காக்கும் அகிலாண்டேஸ்வரி! பிரம்மா- சரஸ்வதியாலும், மகாவிஷ்ணு- மகாலட்சுமியாலும் துதிக்கப்பட்டவள். அந்த தேவியை நான் மனதார பூஜிக்கின்றேன்! குடும்பத் துயர் எல்லாவற்றிலிருந்தும் காத்து என்னைக் கரையேற்றுபவள் அவள் என்று பரிபூரணமாக நம்புகிறேன்! துன்பங்களையும், மரண பயத்தையும் என்னிடமிருந்து விரட்டும் அன்னையை ஆராதிக்கிறேன்! பரமசிவனின் பத்தினியான அகிலாண்டேஸ்வரியை தூய உள்ளத்துடன் வழிபடுகிறேன்!

18.“அகிலாண்டேஸ்வரி”- ஆதிசங்கர்- பாக்கியங்கள் பெற- செல்வம் பெருகும்- செவ்வாய், வெள்ளிக் கிழமை.

oமங்கலத்துக் கெல்லாம் மங்களமானவளே! சிவனின் துனைவியே! எல்லாப் பொருளையும் அடைவதற்கு உதவியவளே! எல்லோராலும் சரணடையத் தகுந்தவளே! முக்கண்ணியே! கௌரியே! நாராயணியே! உனக்கு என் வணக்கம்.

oஉலகையே உய்விக்க வந்த அன்னையே! பராசக்தியே! தங்களுக்கு வணக்கம்! தங்களது நாமத்தை இடைவிடாது ஜபித்து வருபவர்களுக்குத் தாங்கள் மனமிரங்கி அருளாசி புரிகின்றீர்கள். அந்த அருளால் பலனடைந்தவர்கள், தம் ஜபத்தையே தங்களுக்கு மாலையாக அணிவிக்கிறார்கள்! அப்படி ஜெபிப்பது, தெய்வப்பசுவான காமதேனு அளித்த நெய்யினை, தங்களை எண்ணி வளர்த்த யாகத்தீயில் இட்டு ஆனந்தம் அடைவதற்குச் சமமானது! அத்தகைய பேரருள் புரியும் பராசக்தியே! நானும் தங்களை என் மூச்சிழையாக தியானிக்கின்றேன்! துதி செய்கின்றேன்! எனக்கு அனைத்து வளங்களையும் அருள்வீராக!
oமூன்று கண்களுடைய ஈஸ்வரியே, வணக்கம். பக்தர்களுக்கு நலன்களை விரும்பி வழங்கும் மங்களாம்பிகையே வணக்கம். தங்க வண்ணமாக பொலியும் தாயே வணக்கம். இம்மையில் சுகத்தையும், மறுமையில் மோட்சத்தையும் அருள்பவளே, வணக்கம். மகாமாயை வடிவாகத் துலங்குபவளே, வணக்கம். உலகம் உண்டாகக் காரணமாய் இருந்தவளே, வணக்கம். அனைத்து உலகங்களையும் போற்றிப் புரந்தருளும் தாயே, ஈஸ்வரியே வணக்கம். உன் பாதம் சரணடைந்தவர்களின் துயரங்கள் அனைத்தையும் போக்குபவளே வணக்கம், எட்டு விதமான செல்வங்களையும் தருபவளே வணக்கம்.

oஅமிர்தம் போன்றவராகிய ஜம்புகேஸ்வரரின் மனைவியே அகிலாண்டேஸ்வரியே உன்னை வணங்குகின்றேன். ரத்னமயமான பாதுகைகளை தரித்தவளே, அணிமாதி குணங்களையும், அஷ்ட சித்திகளையும் பக்தர்களுக்கு அளிப்பவளே. பக்தர்களுக்கு தீங்கு செய்பவர்களை விரட்டுபவளே உனக்கு என் வணக்கம். பகையையும் நட்பாக்கி அருளும் மங்கள ரூபிணியே வணக்கம்.

19.“அகிலாண்டேஸ்வரி”- ஆண்டாள்- திருமணத் தடை நீங்க வெள்ளி- மற்றும் ஆடிப்பூரத்தன்று.

அனைவரையும் காத்தருளும் கருணைமிக்க காத்யாயினி தேவியே, உனக்கு நமஸ்காரம். எல்லாவகை மாயைகளையும் பொருளுணர்த்தி விளங்க வைப்பவளே, உனக்கு நமஸ்காரம். மகத்தான யோக சித்திகளை அடைந்தவளே, உனக்கு நமஸ்காரம். நந்தகோபருடைய புத்திரரான கண்ணனைப் போன்றே எனக்கு கணவர் அமைய வேண்டும். அந்த பாக்யத்தை தேவி நீ எனக்கு அருள்வாயாக.

20.“அண்ணபூரணி”- ஆதிசங்கரர்- செல்வம் பெருகும், பாக்கியங்கள் பெற– செவ்வாய், வெள்ளிக்கிழமை.

பலவகை ரத்தினங்களால் ஜொலிக்கும் ஆபரங்களை அணிந்து பிரகாசிக்கும் அம்பிகையே, வணக்கம். தட்சனின் புதல்வியே! பேரழகு வய்ந்தவளே! பக்தர்கள் விரும்பும் வரங்களைத் தந்து அவர்களுடைய வறுமையை நீக்கி, மங்களங்களைப் பெருகச் செய்யும் கருணைமிக்கவளே! வணக்கம். மகேசுவரனின் மனைவியே, எப்போதும் மங்களமாக விளங்கும் தாயே! வணக்கம். என் வறுமையைப் போக்கி எனக்கு மங்களங்கள் அருள்வாயாக.

21.“சிவகாமசுந்தரி துதி”- வியாக்ரபாத மகரிஷி அருளியது- விரும்பிய நியாமான கோரிக்கைகள் நிறைவேற-தினமும்

oதாமரைகள் அடர்ந்த சிதம்பரம் தலத்தின் மத்தியில் வசிப்பவளும், நட (ன) ராஜனின் துணைவியானவளும், மலையரசன் மகளுமான சிவகாமிசுந்தரியை தினமும் நான் தியானிக்கின்றேன்.

oபிரும்மா, விஷ்னு ஆகியோரை முதன்மையாக முன்னிருத்திக் கொண்டு தேவர்களால் மதிக்கப்படுபவளும், தாமரை போன்ற கரத்தில் கிளியினை ஏந்தி நிற்பவளும் ஈசனின் அம்சம் இணைந்து பிரகாசிப்பவளுமான சிவகாமசுந்தரியை நான் தினமும் பூஜிக்கின்றேன்.

oவேதங்களின் உட்கருவான உபநிஷதங்களால் கொண்டாடப்படும் பெருமை உடையவளும், பக்தர்கள் விரும்பும் பலன்களை அளிப்பதையே லட்சியமாகக் கொண்டவளும், ரிஷி போன்றவர்களால் அர்ச்சிக்கப் பட்டவளுமான சிவகாமசுந்தரியை நான் தினமும் வணங்குகின்றேன்.

oபதினாறு வயதுடைய மங்கையும், தேவதையும், உமா எனப்படுபவளும், சிவனுடைய கண்வீச்சினால் எரிந்த மன்மதனை அம்பாளின் கடாட்சத்தால் மீண்டும் உயிர்பெற்றெழச் செய்த கருணைமிகு பார்வையுடையவளும், பாரிஜாத மரத்தினடியில் அமைக்கப்பட்ட மண்டபத்தில் வசிப்பவளுமான அருள்மிகு சிவகாம சுந்தரியை நான் தினமும் வணங்கி துதிக்கின்றேன்.

oஉலகம் உண்டாகக் காரணமானவளும் மும்மலங்களுக்கு (ஆசை, கோபம், வெறுப்பு) அப்பாற்பட்டவளும், தனக்கு இனையில்லாதவளும், உயர்ந்த வாக்விலாசத்தை அளிப்பவளும், மிகத்திறமையானவளும், மேகத்தைப் போன்ற கூந்தலை உடையவளுமான சிவகாமசுந்தரியை தினமும் வணங்குகின்றேன்.

o நந்தியெம்பெருமானால் வணங்கப்பட்டவளும், தனக்குரிய மந்திரங்களையோ, தன் பெயரையோ சொல்பவர்களுக்கு நன்மைகளை அளிப்பவளும், தன் பக்தர்களின் கீழ்நிலையை நாசம்செய்து உயர்ந்த நிலையை அளிப்பவளும், நடனத்திற்குத் தலைவியுமான சிவகாமசுந்தரியை நான் துதிக்கின்றேன்,
22.“ஸ்ரீ பவானி துதி”- கிரகதோஷங்கள், பாவங்கள், துன்பங்கள் நீங்க- தினமும்.

தேவியே, மகாதேவருடைய மனைவியும், மிகுந்த சக்தி வாய்ந்தவளுமாக விளங்கும் பவானியே, உனக்கு வணக்கங்கள். பரமசிவனிடத்தில் பேரன்பு கொண்டவரே, சம்சார வாழ்க்கையில் ஏற்படும் மனக் கவலையைப் போக்குகிறவளே. உலகமனைத்திற்கும் தாயே. உமக்கு வணக்கம். பக்தர்களிடம் அன்பு கொண்டவளே, பக்தியால் அடையத்தக்கவளே, பக்தர்களுக்கு ஆறுதல் அளித்து அவர்களுடைய கிரக தோஷங்களை விலக்குபவளே, தீய கனவினால் ஏற்படும் அசுப பலன்களை அழிப்பவளே அன்னையே உன்னை வணங்குகின்றேன். எனக்கு அருள்புரிவாய் தாயே!

23.“மீனாட்சி பஞ்சரத்தினம்”- ஆதிசங்கரர்- சகல சௌபாக்கியங்கள் பெற தினமும்.

o உதிக்கும் ஆயிரம் கோடி சூரியன் போன்றவளே.
உன்னதத் தோள்களில் மணிமாலை பூண்டவளே,
பதிக்கும் மாதுளை போன்ற கொவ்வை உதடுடையவளே
சிரிக்கும் வெண்முத்து பல் சிங்கார ஒளியாளே

o உதிக்கும் மின்னல் போன்ற மஞ்சள் பட்டாடை அணிந்தவளே
விதி, விஷ்னு, இந்திரன் வணங்கும் தாயே
துதிக்கும் தத்துவ வடிவான கருணைக் கடலே
மீனாட்சிதேவியே உன் பாதங்களை வணங்குகின்றேன்.

o முத்துமாலை தவழும் நவரத்தன முடியாளே
முழுநிலா ஒளிபோன்ற முகத்தையுடையவளே
சிலம்பு தவழும் பாதமுடையவளே
வெண்மை நிற தாகம் உடையவளே

o வேண்டுபவர்களுக்கு வேண்டியதையளிக்கும் தேவதையே
கலைமகள் அலைமகளால் வணங்கப்படுபவளே
தாயே, கருணைக் கடலே மீனாட்சி 
தேவியே உன் பாதங்களை வணங்குகின்றேன்.

o ஸ்ரீ வித்தையானவளே, சிவனின் பாதியே,
ஹரீங்கார மந்திர ஒளி மிக உடையவளே
ஸ்ரீ சக்ர நடுவில் வசிப்பவளே
ஸ்ரீ சபையின் நாயகியே

o முருகனையும் விநாயகரையும் பெற்ற தாயே
மூவுலக மோகினியே, முழு அழகும் உடையவளே, 
கருனை மிகக் கொண்டவளே மீனாட்சி 
தேவியே நின் பாதங்களை பணிகின்றேன்.

o மிகுந்த அழகுடையவளே, பயத்தை போக்குபவளே,
ஞானம் கொடுப்பவளே, அப்பழுக்கற்றவளே,
நீலநிறத்தவளே, பிரம்மாவால் துதிக்கப்படுபவளே,
மகாவிஷ்ணுவின் அன்புத் தங்கையே,

o வீணை மற்றும் வாத்தியங்களின் ரசிகையே,
எல்லா அணிகலன்களும் அணிந்தவளே,
இகவாழ்வின் கருணை தெய்வமே மீனாட்சி 
தேவியே நின் பாதங்களை பணிகின்றேன்.

o யோகிகள் தேவர்கள் மனத்தில் வசிப்பவளே,
பக்தர்களுக்கு வேண்டும் வரங்களைத் தருபவளே,
பூப்போன்ற பாதங்களை உடையவளே,
பாம்பில் படுத்திருக்கும் பரந்தாமனால் பூஜிக்கப்பட்டவளே,

o நாதமாய், பிரம்மமாய் மிளிர்பவளே
எல்லாவித தத்துவமும் ஆனவளே, மிகுந்த 
புகழுடைய கருணைக் கடலே மீனாட்சி
தேவியே நின் பாதங்களை பணிகின்றேன்.

24.“திரிபுரசுந்தரி”துதி- ஆதிசங்கரர் அருளியது- வாழ்க்கை சாந்தமுடன் அமைய, சகல சௌக்கியங்களும் பெற-தினமும்.

o நீருண்ட கார்காலத்து மேகவரிசைபோல, தியானிக்கும் ஜனங்களது தாபத்தை அகற்றிக் குளிரச் செய்பவளும், கடம்பவனத்தில் உலாவி நிற்பவளும், மலையை நிகர்த்த நிதம்பங்களும் தாமரையை நிகர்த்த கண்களும் அமையப்பெற்றவளும், தேவ மாதர்களால் பணி செய்யப்பட்டவளும், முக்கண்ணது குடும்பத்தை நடத்துபவளும் முப்புரமெரித்த சிவபெருமானது கோபத்தைத் தணித்த சுந்தரியுமான த்ரிபுரசுந்தரிதேவியைச் சரணமடைகின்றேன்.

o கதம்ப வனத்தில் வசிப்பவளும், தங்கமயமான யாழை ஏந்தியவளும், விலையுயர்ந்த ரத்தின மாலை அணிந்தவளும், மாதக திரவியத்தை வாயில் கொண்டு விளங்குகிறவளும், தயைபுரிந்து ஐச்வர்யமளிப்பவளும், மாசற்ற கடாக்ஷத்தால் எங்கும் சஞ்சரிப்பவளும், முக்கண்ணனின் மனைவியுமான த்ரிபுரசுந்தரிதேவியை யான் அடைக்கலமடைகின்றேன்.

o கதம்ப வனத்தை வீடாகக் கொண்டவளும், மலையை ஒத்த கொங்கைகளின் பாரத்தில் மாலை அணிந்தவளும், கருணைக் கடலின் கரையாகி விளங்குபவளும், சிவந்த கன்னங்களால் பிரகாசிப்பவளும், மெய்மறந்து இனியமொழி, பாட்டுகளால் ஆனந்திப்பவளும், மேகம் போன்றவளுமான ஒரு லீலா விபூதியால் நாம் கவசமணிந்தவர்கள் போலக் காப்பாற்றப்பட்டு வருகிறோம்.

o பூமியில் கடம்பக் காட்டின் நடுவில் வசிப்பவளும், ஆகாயத்தில் சூரிய மண்டலத்தில் நடுவில் யோகிகளால் தியானிக்கப்படுபவளும், மூலாதாரம் முதலிய ஆறு தாமரை போன்ற சக்கரங்களில் சரீரத்தில் தோன்றுபவளும், உண்மையில் சுத்த சத்வ ப்ரதானமாய் மின்னல் கொடி போல் நிர்மலமாக இருப்பவளும், ரஜோகுனத்தின் சேர்க்கையால் செம்பருத்தியின் சிவந்த நிறம் பெற்றவளும், சந்திரகலையைச் சேகரமாக அணிந்து உலகங்களைக் களிக்கச் செய்கின்றவளுமான த்ரிபுரசுந்தரிதேவியை வணங்குகின்றேன்.

o சிரசில் சுருண்ட குழல்களால் எழில் பெற்றிருப்பவளும், மார்பில் அணைக்கப்பட்ட வீணையால் விளங்குபவளும், மிருதுவான தாமரையில் அமர்ந்துகொண்டு மிருதுவான இருதய கமலம் படைத்தவர்களிடம் அன்பு காட்டுகிறவளும், மதத்தால் சிவந்த கண்களின் பார்வையால் மதனனை அழித்த ஈசனையும் நன்கு மயக்குகிறவளும், இனிமையாகப் பேசும் இயற்கையுள்ளவளும், மதங்க முனிவரின் புதல்வியுமான த்ரிபுரசுந்தரிதேவியை பணிகின்றேன்.

o அரவிந்த பாணமேந்தி, சிவப்புப்புள்ளி நிரம்பிய கரிய ஆடைதரித்து மதுபாத்திரத்தைக் கையில் கொண்டு, மதுவை அருந்தி, தானும் சுழன்று, உலகங்களையும் சுழற்றுகிறவளும், நெருக்கமான கொங்கை பாரங்களால் நிமிர்ந்தவளும், தொங்கும் வேணீபந்தமுடையவளுமான த்ரிபுரசுந்தரிதேவியை சரணமடைகின்றேன்.

o குங்குமப்பூ கலந்த சந்தனம் பூசிக்கொண்டு, நெற்றியிலும் வகிட்டிலும் கஸ்தூரிப் பொட்டு தரித்து, சதுர்புஜங்களிலும் கணை, வில், கயிறு, அங்குசம் என்ற நான்கு ஆயுதங்களைத் தாங்கி, மாலை, நகை, ஆடைகளில் சிவந்த நிறமுள்ளவளாய், மந்தஹாசத்துடன் அபாங்கத்தால் சற்று நோக்கி, ஜனங்களனைவரையும் மாயா வலையில் சிக்கச் செய்யும் தாயை ஜபகாலத்தில் நினைக்க வேண்டும்.

o கூந்தலைச் சேர்த்து வாரிப் பின்னலாக்கிக் கொண்டும், நல்ல மணம் பொருந்திய பூச்சு பூசிக்கொண்டும், ரத்தின பூஷணங்கள் அணிந்து விளங்கும் உத்தம மாதர்கள், சேடிப்பெண்களால் சூழப்படுவார்கள். அப்படி த்ரிபுரசுந்தரியின் கூந்தலைச் சேர்த்து அழகுபடுத்துவார்கள் இந்திரலோகத்து மாதர்களான அப்சரஸ் பெண்கள். வாசனைப் பூச்சு பூசுபவள் பிரம்மனின் மனைவியான சரஸ்வதிதேவி. ரத்தினாபரணங்களால் அழகுபடுத்துபவள் விஷ்ணுவின் மனைவியான லக்ஷ்மிதேவி. பணிவிடை செய்யக் காத்திருக்கும் சேடிகளாகச் சூழ்ந்து நிற்கிறார்கள் தேவகன்னிகைகள். இவ்விதம் சகல உலகுக்கும் தாயான த்ரிபுரசுந்தரிதேவியை சேவித்து சரணமடைந்து வணங்குகின்றேன்.

25.“அம்பாள் நவமணிமாலை”-நன்மைகள் அடைய, தடைகள் அகல-ஆடிமாதத்தில் தினமும்- நேரம் கிடைக்கும் போது.

oவேதவடிவினளும், தன் இனிய சொற்களினால் கிளியின் பேச்சை வென்றவளும், கருவண்டுக் கூட்டம் போன்ற கூந்தலை உடையவளும், சம்சார சாகரத்தைக் கடக்க உதவும் தோணி போன்றவளும், வீணை, கிளிக்குஞ்சு ஆகியவற்றைக் கைகளில் ஏந்தியவளும், சரஸ்வதியினால் நமஸ்கரிக்கப் பட்டவளும், பரமசிவனுடைய பத்தினியுமான அன்னையை வணங்குகின்றேன்.

oநீலோத்பவ மலரின் வண்ணம்போன்ற சரீரத்தை உடையவளும், பூமண்டலத்தைக் காப்பதையே தனது லட்சியமாகக் கொண்டவளும், கண்களினால் பெண்மான்களை வென்றவளும், மதங்க மகரிஷியின் மகளும், சங்கரனின் மனம் கவர்ந்தவளுமான அம்பாளை வணங்குகிறேன்.

oலட்சுமி, சரஸ்வதி ஆகியோர் ஏந்தியிருக்கும் தாமரை போன்ற மென்மையான கைகளை உடையவளும், இரண்டு கைகளிலும் தாமரையைத் தரித்தவலும், தூய்மையானவளும், சந்திர சூடனான பரமசிவனுடைய சகல வித்யைகளின் உருவமாக இருப்பவளுமான பராசக்தியை வணங்குகிறேன்.

oஅழகிய சந்திரன் போன்ற முகத்தை உடையவளும், முல்லைமலர் போன்ற பற்களை உடையவளும், நவநிதிகளில் ஒன்றான முகுந்தம் என்ற நிதிக்கு இருப்பிடமானவளும், மன்மதனை கருணையினால் உயிர்த்தவளும், தேவர்களின் நலனுக்காக அசுரர்களை அழித்தவளுமான பராசக்தியை துதிக்கிறேன்.

oஉன்னதமான ஸ்தனங்களினால் குடத்தை வென்றவளும், பரமசிவனால் அணைத்துக் கொள்ளப்பட்டவளும், ஸ்கந்தமாதாவும், சும்பன் நிசும்பன் ஆகிய அசுரர்களை வதம் செய்தவளும், தன் முன்னால் ரம்பை என்ற ஓசர மங்கையை நடனம் செய்கின்ற பெருமையை உடையவளும், அகங்காரமில்லாத மற்றவளுமான அன்னையை வணங்குகிறேன்.

oகோவைப்பழத்தை வென்ற சிவந்த கீழுதடை உடையவளும், லோகமாதாவும், நடையினால், அன்னத்தை வென்றவளும், பக்தர்களின் குடும்பத்தைக் காப்பாற்றுபவளும், கணபதியுடன் காட்சி தருபவளுமான அம்பிகையை ஆராதிக்கிறேன்.

oசரணடையும் பக்தர்களை ரஷிப்பவளும், பாத கமலங்களை சேவிக்கின்றவர்களை துன்பத்திலிருந்து விடுவிப்பவளுமான தேவி தங்களைத் தவிர வேறு யாரையும் நான் அறியவில்லை. உனக்கு எனது வணக்கங்கள்.

oநமஸ்கரிக்கும் அடியவரை ரட்சிப்பதையே விரதமாகக் கொண்டவளும், சாமர்த்தியமுள்ளவளும், சூரியன் முதலான தேவதைகளுக்கும் அதிபதியான தேவியாக இருப்பவளும், சிம்மவாஹினியும், சத்ருக்களை அழிப்பவளும், தேவர்களை காத்தருளும் தேவியுமான தங்களைத் தவிர வேறு யாரையும் நான் அறியேன். உனக்கு எனது வணக்கங்கள்.

oபாக்கியமுள்ளவளும், தேவர்களால் வணங்கத்தக்கவளும், இமயகுமாரியும், மூன்று உலகங்களிலும் சிறந்தவளும், மந்தாரம் முதலிய தேவ விருட்சங்கள் அடங்கிய தோட்டத்தில் விளளையாடுபவளான தங்களைத் தவிர வேறு தெய்வத்தை நான் அறியவில்லை. உனக்கு எனது வணக்கங்கள்.

oபராசக்தியின் மேலான இந்த நவமணி மாலையை பக்தியுடன் படித்த என் வாக்கில் சரஸ்வதியும், வீட்டில் மகாலட்சுமியும் பூரிப்புடன் நடமாடட்டும். உனக்கு எனது வணக்கங்கள்.

oபராசக்தியே, தாங்கள் என்னை அதல பாதாலத்தில் தள்ளினாலும் சரி, பெரிய சாம்ராஜ்யத்தின் அதிபதியாக்கினாலும் சரி, தங்களின் இரண்டு பாதங்களையும் பற்றுகிறேன். எனக்கு அஷ்ட லட்சுமி கடாட்சம் அருளி என்னைக் காப்பாய் தாயே!

26.“திருவிளக்கு”- வினைகள் நீங்கி வாழ்வில் ஒளி, சந்தானபாக்யம் பெற- வெள்ளி / திருவிளக்கு பூஜையன்று.

மகாலக்ஷ்மி தாயே, மங்களங்கள்
அனைத்தையும் பெற வேண்டி
நான் செய்கின்ற பூஜையின் பலனை
அளிப்பதற்காக இந்த 
தீபத்தில் தீபலட்சுமியாக 
எழுந்தருளி எனக்கு அருள் 
புரிந்து எம்மைக் காப்பாய்!

o திருவிளக்கே திருவிளக்கே! 
தேவி பராசக்தி திருவிளக்கே!
தேவியின் வடிவே திருவிளக்கே! 
தேவியே உன்னை வணங்குகின்றேன்!

o இருளை அகற்றும் திருவிளக்கே! 
இன்பம் அளிக்கும் திருவிளக்கே!
எங்கும் ஒளிதரும் திருவிளக்கே! 
லட்சுமியே உனக்கு வணக்கம்!

o மங்கள ஜோதியாம் திருவிளக்கே! 
மாலையில் ஒளிதரும் திருவிளக்கே!
காலையில் ஒளிதரும் திருவிளக்கே!
சரஸ்வதி உனக்கு வணக்கம்!

o திருமகள் வடிவே திருவிளக்கே!
தேவரும் பணியும் திருவிளக்கே!
தெள்ளிய ஜோதியே திருவிளக்கே!
சாரதே உனக்கு வணக்கம்!

o அஷ்டலட்சுமி வடிவே திருவிளக்கே!
ஆனந்த நர்த்தினி திருவிளக்கே!
ஆலய பூஷணி திருவிளக்கே!
ஆதிபராசக்தி உனக்கு வணக்கம்!

o பாக்ய லட்சுமியாம் திருவிளக்கே!
பக்தியைஅளித்திடும் திருவிளக்கே!
பதவியைத் தந்திடும் திருவிளக்கே!
பவானி உனக்கு வணக்கம்!

o ஜெகமெல்லாம் விளங்கும் திருவிளக்கே!
ஜெகதீஸ்வரி வடிவே திருவிளக்கே!
அழகை அளிக்கும் திருவிளக்கே!
அம்மா உனக்கு வணக்கம்!

o சௌக்ய ரூபிணி திருவிளக்கே!
சந்தான பலம் தரும் திருவிளக்கே!
சம்பத்தை அளிக்கும் திருவிளக்கே!
சக்தியே உனக்கு வணக்கம்!

o ஊன்ஆனாய் உயிர் ஆனாய்!

உயிரில் ஊறும் உணர்வாணாய்!
வான் ஆகி ஐம்பூத வகை எல்லாம் நீ ஆனாய்!

தேன் ஆரும் மலர்க்கொன்றைச் சிவம் என்னும் பொருள் ஆனாய்! 
நான் ஆனாய் உயிருக்கு உயிரே ஞானப் பேரொளியுமையே!

o சீலத் திருவிளக்கே! ஸ்ரீதேவி லட்சுமியே!
கோலத் திருவிளக்கே! கும்பிட்டேன் நின் அடியே!
தில்லைவனநாதனும் சிவகாமி அம்மையும்
சிந்தையில் குடியிருக்க செய்தவிணை தீர்ந்திடும்!
o தந்தைதாய் தமர்சார்ந்த குருவரசும்
சிந்தைமகிழ் வாழ்வை தேவியே தந்தருள்வாய்!
தொட்டிலுக்குப் பிள்ளையும் தொழுவுக்குப் பால்பசுவும்
பட்டறைக்கு நெல்லும் பதிந்த மரக்காலும்
o உனக்கெரிக்க எண்ணெய்யும் எனக்குண்ண சேறும்
தட்டாமல் தாயே தந்தருள்வாய் தகவுறவே.
இருள்நீக்கும் தேவியே! 
இடர்போக்கும்தேவியே!

o வீட்டை விளக்கும் தேவியே!
தீபலக்ஷ்மி தேவியே! தீப ஒளியே!
தூயலக்ஷ்மி தேவியே! தூய ஒளியே!
வேண்டும் வரம் தருவாய் ஜோதி லக்ஷ்மியே!

o விளக்கே! திருவிளக்கே! வேந்தன் உடன் பிறப்பே!
ஜோதி மணிவிளக்கே! சீதேவி பொன்மணியே!
ஆருயிர் விளக்கே! அனையா ஜோதியே!
அந்தி விளக்கே! அலங்கார நாயகியே!
o காந்தி விளக்கே காமாட்சித் தாயாரே!
பசும்பொன் விளக்கு வைத்துப் பஞ்சுத் திரிபோட்டுக்
குளம்போலே எண்ணேய் விட்டுக்
கோலமுடன் ஏற்றி வைத்தேன்!

o ஏற்றினேன் நெய்விளக்கு எந்தன் குடிவிளங்க
வைத்தேன் திருவிளக்கு மாளிகையில் சோதியுள்ள
மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்
மடிப்பிச்சை தாரும் அம்மா!

o சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாரும் அம்மா!
பெட்டி நிறையப் பூஷணங்கள் தாரும் அம்மா!
பட்டி நிறையப் பால் பசுவைத் தாரும் அம்மா!
கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும் அம்மா!
o புகழுடைம்பைத் தாரும் அம்மா!
பக்கத்தில் நில்லுமம்மா!
அல்லும் பகலும் என்றன்
அண்டையிலே நில்லுமம்மா!

o சேவித் தெழுந்திருந்தேன்! தேவி வடிவங்கண்டேன்!
வச்சிரக் கிரீடங்கண்டேன்! வைடூரிய மேனி கண்டேன்!
முத்துக்கொண்டை கண்டேன்! முழுப்பச்சை மாலை கண்டேன்!
சவுரிமுடி கண்டேன் தாழை மடல் சூடக் கண்டேன்!

o பின்னலழகு கண்டேன் பிறைபோல் நெற்றி கண்டேன்!
சாந்துடன் நெற்றி கண்டேன்! தாயார் வடிவம் கண்டேன்!
கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டு கண்டேன்!
மார்பில் பதக்கம் மின்ன மாலை அசையக் கண்டேன்!

o கைவளையல் கலகலென்னக் கணையாழி மின்னக் கண்டேன்!
தங்க ஒட்டியாணம் தகதகென ஜொலிக்க கண்டேன்!
காலிற் சிலம்பு கண்டேன்! காலாழி பீலி கண்டேன்!
மங்களநாயகியை மனங்குளிரக்கண்டு மகிழ்ந்த அடியாள் நான்

o அன்னையே அருந்துணையே அருகிருந்து காரும்மா! 
வந்த வினையை அகற்றி மகாபாக்கியம் தரும் அம்மா!
உன்றன் தாளடியில் சரணம் என்றேன்!
மாதாவே உன்றன் மலரடியில் நான் பணிந்தேன்!

o ஓம் சிவாயை நம
ஓம் சிவசக்தியே நம
ஓம் இச்சா சக்தியே நம
ஓம் கிரியா சக்தியே நம

o ஓம் சொர்ணசக்தியே நம
ஓம் ஜோதி லட்சுமியே நம
ஓம் தீப லட்சுமியே நம
ஓம் மகா லட்சுமியே நம

o ஓம் தன லட்சுமியே நம
ஓம் தான்ய லட்சுமியே நம
ஓம் தைரிய லட்சுமியே நம
ஓம் வீர லட்சுமியே நம

o ஓம் விஜய லட்சுமியே நம
ஓம் வித்யா லட்சுமியே நம
ஓம் ஜெய லட்சுமியே நம
ஓம் வர லட்சுமியே நம

o ஓம் கஜ லட்சுமியே நம
ஓம் காமவல்லியே நம
ஓம் காமாட்சி சுந்தரியே நம
ஓம் சுப லட்சுமியே நம

o ஓம் ராஜ லட்சுமியே நம
ஓம் கிருக லட்சுமியே நம
ஓம் சித்த லட்சுமியே நம
ஓம் சீதா லட்சுமியே நம
o ஓம் திரிபுர லட்சுமியே நம
ஓம் சர்வமங்கள காரணியே நம
ஓம் சர்வதுக்க நிவாரணியே நம
ஓம் சர்வாங்க சுந்தரியே நம

o ஓம் சௌபாக்கிய லட்சுமியே நம
ஓம் நவகிரக தாயினியே நம
ஓம் அண்டர் நாயகியே நம
ஓம் அலங்கார நாயகியே நம

o ஓம் ஆனந்த சொரூபியே நம
ஓம் அகிலாண்ட நாயகியே நம
ஓம் பிரமாண்ட நாயகியே நம
ஓம் வாகீஸ்வர்யை நம
o ஓம் விசாலாக்ஷியை நம
ஓம் சுமங்கல்யை நம
ஒம் காள்யை நம
ஓம் சண்டிகாயை நம

o ஓம் பைரவ்யை நம
ஓம் புவனேஸ்வர்யை நம
ஓம் நித்யாயை நம
ஓம் சானந்த விபாவாயை நம
o ஓம் தத்துவ திரியாயை நம
ஓம் குணத் திரியாயை நம
ஓம் சத்ய ஞானாயை நம
ஓம் தமோப ஹாயை நம
o ஓம் மஹேஸ்வர்யை நம
ஓம் பிரியங்கனாயை நம
ஓம் திரிபுர சுந்தர்யை நம
ஓம் கௌரியை நம
o ஓம் கல்யாண்யை நம
ஓம் கல்யாணகுண சாலின்யை நம
ஓம் கமநீயாயை நம
ஓம் தேவ்யை நம

o ஓம் சுந்தர்யை நம
ஓம் ஸௌந்தர்யை நம
ஓம் சுந்தர ரூபாயை நம
ஓம் அம்பிகாயை நம
o ஓம் ஏகாட்சர்யை நம
ஓம் திரியட்சர்யை நம
ஓம் ஷடாட்சர்யை நம
ஓம் அஷ்டாட்சர்யை நம

o ஓம் நவாட்சர்யை நம
ஓம் ஷோடாட்சர்யை நம
ஓம் அபர்ணாயை நம
ஓம் பார்வத்யை நம
o ஓம் பத்ம வாஸின்யை நம
ஓம் பங்கஜ தாரிண்யை நம
ஓம் திரிலோசனாயை நம
ஓம் ஏக ரூபாயை நம

o ஓம் மஹா ரூபாயை நம
ஓம் பிந்து ஸ்வரூபிண்யை நம
ஓம் திரிகோணவாஸின்யை நம
ஓம் பாலாயை நம
o ஓம் நித்ய யௌவனாயை நம
ஓம் லலிதாயை நம
ஓம் திரிசூல தாரிண்யை நம
ஓம் கட்க தாரிண்யை நம
o ஓம் கேடக தாரிண்யை நம 
ஓம் சங்க தாரிண்யை நம
ஓம் சக்ர தாரிண்யை நம
ஓம் பாச தாரிண்யை நம
o ஓம் அங்குச தாரிண்யை நம 
ஓம் பத்ம தாரிண்யை நம
ஓம் மாலா தாரிண்யை நம
ஓம் டமருக தாரிண்யை நம
o ஓம் கபால தாரிண்யை நம 
ஓம் நாக தாரிண்யை நம
ஓம் பிராண தாரிண்யை நம
ஓம் சர்வ மங்களாயை நம
o ஓம் சமஸ்த ஐஸ்வர்ய தாயின்யை நம
ஓம் சரஸ்வத்யை நம
ஓம் தீபலக்ஷ்மியை நம
ஓம் தீப துர்க்கா தேவ்யை நம

ஓம் ஜோதிரூபாயை நமோ நம
தீபலட்சுமியே உனக்கு வணக்கம்!
ஜெயஜெய தேவி லட்சுமி 
உனக்கு வணக்கம்!

தீபலட்சுமி அங்க பூஜை- மலர்களால்
o தீபலட்சுமியே உன் பாதங்களை பணிகிறேன்
கமலாசனியே உன் கணுக்கால்களை வணங்குகிறேன்
மலர்மகளே உந்தன் முழங்கால்களை பணிகிறேன்
திருமகளே உன் திருத்தொடையை பூஜிக்கிறேன்

o இலக்குமியே உன் இடையை பூஜிக்கிறேன்
கலைமகளே உன் நாபிக் கமலத்தினை நமஸ்கரிக்கிறேன்
வரலஷ்மியே உன் வயிரை பூஜிக்கிறேன்
இதய கமல வாசினியே உனது இதயத்தினை பூஜிக்கிறேன்

o மாலவன் நாயகியே உன் திருமார்பை வணங்குகிறேன்
திருமகளே உன் கழுத்தினை நமஸ்கரிக்கிறேன்
தீப மகளே உன் தோள்களை பணிகிறேன்
அலைமகளே உன் திரு விரல்களை வணங்குகிறேன்

o திருமகளே உன் திருக்கரங்களை பணிகிறேன்
மகாலக்ஷ்மியே உனது திருமுகத்தினைத் துதுக்கிறேன்
கலைமகளே உனது அருள் நிறைந்த கண்களை பணிகிறேன்
அலைமகளே உந்தன் அதரத்தை துதிக்கிறேன்

o திருமகளே உனது நெற்றியைப் பணிகிறேன்
பூமகளே உனது கூந்தலை பூஜிக்கிறேன்
ஸ்ரீதேவி உந்தன் சிரத்தினைப் பணிகிறேன்
மங்களங்களைத் தரும் மகாலட்சுமியே மனதாரப் பணிகிறேன்

o ஒளிவளர் விளக்கே போற்றி
ஓரைந்து முகத்தாய் போற்றி
திருவருள் விளக்கே போற்றி
திருவிளக்குத் தாயே போற்றி
o நந்தா விளக்கே போற்றி
நல்ல விளக்கே போற்றி
வழிகாட்டும் விளக்கே போற்றி
வாழிக்கும் விளக்கே போற்றி

o பொன்னும் மெய்பொருளும் தருவாய் போற்றி
போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி
முன்னறி வொளியாய் மிளிர்ந்தாய் போற்றி
மூவுலகும் நிறந்திருந்தாய் போற்றி
o வரம்பிலின்பமாக வளர்ந்திருந்தாய் போற்றி
இயற்கை அறிவொளியானாய் போற்றி
ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி
பிறர் வயமாகாப் பெரியோய் போற்றி

o பேரின்பப் பெருக்காய் பொலிந்தோய் போற்றி 
பேரருட் கடலாம் பொருளே போற்றி
முடிவிலாற்றல் உடையதாய் போற்றி
மூவுலகுந் தொழ மூத்தோய் போற்றி

o அளவிலாச் செல்வம் தருவோய் போற்றி
ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி
ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி
இருள் கெடுத்து இன்பமருள் எந்தாய் போற்றி

o மங்களநாயகி மாமணி போற்றி
வளமை நல்கும் வல்லியே போற்றி
அறம் வளர் நாயகி அம்மையே போற்றி
மின் ஒளிப்பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி

o தையல் நாயகித் தாயே போற்றி
தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி
முக்கட்சுடரின் முதல்வி போற்றி
ஒளிக்கும் ஒளியாய் உயர்வாய் போற்றி

o சூடாமணியே சுடர் ஒளி போற்றி
இருள் ஒழித்து இன்பம் ஈவோய் போற்றி
அருள் பொழிந்து எம்மை ஆள்வாய் போற்றி
அறிவினுக்கு அறிவாய் ஆனாய் போற்றி

o இல்லற விளக்காம் இறைவி போற்றி
சுடரே விளக்காம் தூயாப் போற்றி
இடரைக் களையும் இயல்பினாய் போற்றி
எரிசுடராய் நின்ற இறைவி போற்றி

o ஞானச்சுடர் விளக்காய் நின்றாய் போற்றி
அருமறைப் பொருளாம் ஆதி போற்றி
தூண்டு சுடரினைய சோதி போற்றி
ஓதும் ஒளி விளக்கே போற்றி

o சோதியே போற்றி சுடரே போற்றி
இருள் கொடுக்கும் இல்லக விளக்கே போற்றி
சொல்லக விளக்காம் சோதியே போற்றி
பலர்காண் பல்கலை விளக்கே போற்றி

o நல்லக நமச்சிவாய விளக்கே போற்றி
உவப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி
உணர்வு சூழ் கடந்தோர் விளக்கே போற்றி
உடம்பெனும் மனையக விளக்கே போற்றி

o உள்ளத்தகளி விளக்கே போற்றி
மடம்படும் உணர்நெய் விளக்கே போற்றி
உயிரெனும் திரிமயக்கு விளக்கே போற்றி
இடம்படும் ஞானத்தீ விளக்கே போற்றி

o நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி
ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி
அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி
சோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி

o தில்லைப் பொது நட விளக்கே போற்றி
கற்பனை கடந்த சோதியே போற்றி
கருணையே உருவாம் விளக்கே போற்றி
அற்புதக் கோல விளக்கே போற்றி

o அருமறைச் சிரத்து விளக்கே போற்றி
சிற்ப ரவியோம விளக்கே போற்றி
பொற்புடன் நடஞ்செயல் விளக்கே போற்றி
உள்ளத்திரளை ஒழிப்பாய் போற்றி

o கள்ளப் புலனைக் கரைப்பாய் போற்றி
உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி
பெருகு அருள் சுரக்கும் பெரும போற்றி
இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி

o அருவே உருவே அருவுரு போற்றி
நந்தா விளக்கே நாயகியே போற்றி
செந்தாமரைத் தாள் தந்தாய் போற்றி
தீப மங்கள் ஜோதி விளக்கே போற்றி

o மதிப்பவர் மனமணி விளக்கே போற்றி
பாகம் பிரிய பராபரை போற்றி
ஆகம முடிமேல் அமர்ந்தாய் போற்றி
ஏகமும் நடஞ்செய எம்மான் போற்றி

o ஊழிஊழி உள்ளோய் போற்றி
ஆழியான் காணா அடியோய் போற்றி
அந்தமிலா இன்பம் அருள்வோய் போற்றி
முந்தைய வினையை முடிப்போய் போற்றி

o பொங்கும் கீர்த்தி பூரணி போற்றி
தண்ணருள் சுரக்கும் தாயே போற்றி
அருளே உருவாய் அமைந்தோய் போற்றி
இருநிற மக்கள் இறைவி போற்றி

o குருவென ஞானம் கொடுப்பாய் போற்றி
ஆறுதல் எமக்கிங்களிப்பாய் போற்றி
தீதெல்லாம் தீர்க்கும் திருவே போற்றி
பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றி

o எத்திக்குந் துதி ஏயந்தாய் போற்றி
அஞ்சலென்றருளும் ஆன்பே போற்றி
தஞ்சமென்றவரைச் சார்வோய் போற்றி
ஓதுவோர் அகத்துறை ஒளியே போற்றி

o ஓங்காரத்து உள்ளொளி விளக்கே போற்றி
எல்லா உலகமும் ஆனாய் போற்றி
பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி
புகழ்சேவடி என்மேல் வைத்தாய் போற்றி

o செல்வாய் செல்வம் தருவாய் போற்றி
பூங்குழல் விளக்கே போற்றி
உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி
உயிர்களின் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி

o செல்வம் கல்வி சுறப்பருள் போற்றி
நல்லன்பு ஒழுக்கம் நல்குவாய் போற்றி
விளக்கிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி
நலம் எல்லாம் உயிர்க்கும் நல்குவாய் போற்றி

o தாயே நின்னருள் தந்தாய் போற்றி
தூய நின் திருவடி தொழுதனம் போற்றி
போற்றி என்பார் அமரர் விளக்கே போற்றி
போற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றி

o போற்றி என் அன்பொளி விளக்கே போற்றி
போற்றி போற்றி திருவிளக்கே போற்றி
மங்களங்கள் யாவுக்கும் காரணமான
தீபலக்ஷ்மியே, ஆயுள், ஆரோக்யம்
o செல்வம் யாவும் தந்து, எதிரிபயம்
நீக்கி எமைக் காப்பாற்றுக!
அண்டாண்ட புவனங்கள்
கொண்டாடும் ஜோதியே வணக்கம்.

o அந்தரங்களை அழித்தோங்கும் தீபமே வணக்கம்
காஞ்சிமாபுரி வாழ் காமகோடி நித்ய தீபமே வணக்கம்
எல்லையில் வாழ் சிவகாமி தீபமே வணக்கம்
அண்னாமலை வளர் அருணாசல தீபமே வணக்கம்

o உண்ணாமுலையாக ஓங்கும் மெய்தீபமே வணக்கம்
மயிலை நகர் மணக்கும் கற்பகவல்லி தீபமே வணக்கம்
காசி விஸ்வேசர் களிக்கும் மெய்தீபமே வணக்கம்
மதுரையில் விளையாடும் மீனாஷி தீபமே வணக்கம்

o காளஹத்தியில் வாழும் ஞானாம்பாள் தீபமே வணக்கம்
மயிலாபுரியில் வாழ் அபயாம்பாள் தீபமே வணக்கம்
கண்ணப்பன் கண்டு களிக்கும் மெய்தீபமே வணக்கம்
அஞ்ஞானம் பொசுக்கும் ஞானதீபமே வணக்கம்

o வேதனையகற்றும் மெய்தீபமே வணக்கம்
காலனைக் காலால் உதைத்த அபிராமி தீபமே வணக்கம்
மார்க்கண்டனைக் காத்த மெய்ஞான தீபமே வணக்கம்
கோமதி கௌரி கௌமாரி தீபமே வணக்கம்

o திருபுராதியர்கள் துதித்த மெய்தீபமே வணக்கம்
எந்நாளும் அணையாத அகண்ட மெய்தீபமே வணக்கம்
பெண்களுக்கு அணியான பதிவ்ருதா தீபமே வணக்கம்
சகல் சௌந்தர்யங்களும் தந்திடும் தீபமே வணக்கம்

o எந்நாளும் அழியாத செல்வ தீபமே வணக்கம்
எம்வாதை இல்லாமல் காக்கும் மெய்தீபமே வணக்கம்
தஷணம் வந்து காக்கும் தாஷாயணி தீபமே வணக்கம்
பஷமாம் என் கிரஹம் வாழும் தீபமே வணக்கம்

பரபிரம்ம ஸ்வரூபிணியாம் தீபமே வணக்கம்

திருவிளக்கு தீப ஆராதனை:

o அறிந்தும் அறியாமலும் தெரிந்தும்
தெரியாமலும் செய்த சகல
குற்றங்களையும் பொறுத்துக் காத்து
ரட்சித்து அருள் புரியவேணும் தாயே

o ஓம் அரனார் செல்வன்
அம்பிகை தனயன்
யானைமுகனுக்கிளையோன்
ஓம் சரவணபவனே! முருகையா!

27.“அம்மாபோற்றி”- வினைகள், எதிர்ப்புகள் நீங்க, வளமான வாழ்வு பாக்யம் பெற- தினமும் / வேண்டும்போது.

ஓம் நின் னருள் போற்றி! நின் பொது போற்றி!
ஓம் நின் புகழ் போற்றி! நின் உரு போற்றி!
ஓம் நின் இயல் போற்றி! நின் நிலை போற்றி!
ஓம் நின் நெறி போற்றி! நின் சுகம் போற்றி!
ஓம் நின் உளம் போற்றி! நின் மொழி போற்றி!
ஓம் நின் செயல் போற்றி! நின் குணம் போற்றி!
ஓம் நின் முடி போற்றி! நின் நடு போற்றி!
ஓம் நின் னடி போற்றி! போற்றியே!

ஓம் நின் இடம் போற்றி! நின் வலம் போற்றி!
ஓம் நின் நடம் போற்றி! நின் நலம் போற்றி!
ஓம் நின் திறம் போற்றி! நின் தரம் போற்றி!
ஓம் நின் வரம் போற்றி! நின் கதி போற்றி!

ஓம் நின் கலை போற்றி! நின் பொருள் போற்றி!
ஓம் நின் ஒளி போற்றி! நின் வெளி போற்றி!
ஓம் நின் தயை போற்றி! நின் கொடை போற்றி!
ஓம் நின் பதம் போற்றி! போற்றியே!

ஓம் அம்மா போற்றி! அருளே போற்றி!
ஓம் அறிவே போற்றி! பொருளே போற்றி!
ஓம் அழகே போற்றி! இறைவி போற்றி!
ஓம் அன்பே போற்றி! பண்பே போற்றி!

ஓம் அரியே போற்றி! அரியின் சோதரி போற்றி!
ஓம் அரவே போற்றி! அரவின் உருவே போற்றி!
ஓம் அரனே போற்றி! அரனின் நாயகி போற்றி!
ஓம் அரசி போற்றி! மூவர்கரசி போற்றி!
அடியேன் பணிந்தேன் அருள்வாய் போற்றி போற்றியே!
28.“காளிகாம்பாள்”-துன்பம் நீங்கி, ஆறுதல்பெற-பாரதியார்- தினமும் / செவ்வாய்க் கிழமை.

o யாதுமாகி நின்றாய் காளி! எங்கும் நிறைந்தாய் காளி!
தீது நன்மை எல்லாம் காளி! தெய்வ நீதி ஆன்றோ!
பூத மைந்தும் ஆனாய் காளி! பொறிகளைந்தும் ஆனாய்! 
போதமாகி நின்றாய் காளி! பொறியை விஞ்சி நின்றாய்!

o இன்பமாகிவிட்டாய் காளி! என்னுள்ளே புகுந்தாய்!
பின்பு நினையல்லால் காளி! பிரிது நானும் உண்டோ!
அன்பளித்து விட்டாய் காளி! ஆண்மை தந்து விட்டாய்!
துன்பம் நீக்கி விட்டாய்! தொல்லை போக்கி விட்டாய்!

o ஆதிசக்தி தாயே! என்மீது அருள்புரிந்து காப்பாய்!
எந்தநாளும் நின்மேல் தாயே! இசைகள் பாடிவாழ்வோம்!
காளிமீது நெஞ்சம் என்றும் கலந்து நிற்க வேண்டும்!
பின்பு நினையல்லால் காளி பிறிது நானும் உண்டோ!

29.“சீதளாதேவி துதி”- உஷ்ண பாதிப்புகள் நீங்க-வேண்டும்போது

சீதளாதேவியே வணக்கம். உன்னைச் சரணடைந்தோரின் உடல் உபாதைகளும் சரும நோய்களும், கொப்புளங்களும் அவற்றால் ஏற்படும் பயமும் வேதனையும் தீர்க்கும் தாயே உன்னை வணங்குகின்றேன். எனக்கு எல்லா நோய்த் துயரங்களையும் பயத்தையும் நீக்கி அருள் புரிவாய் தாயே!

30.“மங்கள சண்டிகை துதி”- மங்களம் பெற, துயர் தீர - தினமும் / வேண்டும் போது.

மங்களை உன்றன் பத்ம மலரடி சூடினாலே
மங்களம் வாய்த்தல் உண்மை மற்றுமென் மங்களையே!

மங்களம் நாணுன் நாணே! மாதர்கள் போற்றும் தேவி! மங்களம் 
தருக அம்மா! மாந்தர்கள் வணங்குகின்றோம்!

யாவுமாய் ஆகி நின்ற தேவியே சண்டி நீயும்
ஏவுவுல் தரிக்க வல்லாய்! எல்லாமாய் ஆனாய் அன்றோ!
மூவரில் முதன்மையானாய்! முரிந்திடும் புருவ வில்லாய்!
தேவரும் வியப்பில் வீழ தேர்ந்தனை கருணை கொண்டாய்!

நீலமா மலரை உன்றன் நீள்விழி மணந்த தம்மா!
கோலமே கூற்றம் தனனிக் கொளுத்திடும் செம்மைகொண்டாய்
ஆலமே சூழ்ந்த தேனும் அங்கொரு மஞ்சள் கொண்டாய்!
வாழவே உன்னை வேட்டோம் வகையருள் சண்டிகாவே!
வாழ்க்கையாம் கடலில் வீழ்ந்து வருந்தினம் வந்துனது வாசல்
ஆழ்மனத் தன்பினாலே அமைந்தனம் அன்னை அன்றோ!
தாழ்ந்தனம் தேவி உன்றன் தளிரடிப் பாதம் பற்றும்
ஏழைகள் துயரைத் தீர்க்க இக்கணம் எழுக தாயே!

காக்கவே காக்க நீயே! கணிபவள் நீயே தாயே!
நீக்கரும் மங்களங்கள் நிமலைதான் சண்டிகாவே!
போக்குவை விபத்தினின்றும் பொலிய மங்களமே நல்கு!
தேக்கரும் கருணை வெள்ளம் தினமுனை தோத்தரித்தோம்!

மகிழ்வினை நல்கும் தேவி! மங்களம் நல்கும் தேவி!
மகிழ்வதைத் தருவதற்கோ மலைத்திடா அன்னை நீயே!
மகிழ்வினைச் சுபத்தை நல்கு! மகிழ்வெனச்சுபமாய் ஆனாய்
மகிமையும்கொண்டாய்அம்மா! மனதினில்உன்னைக்கொண்டோம்!

மங்களம் நீயே! ஈசை மங்களம் 
எங்கும் ஆனாய்! மங்களம் 
எதிலும் நல்கும் மங்கள சண்டி நீயே!
மங்களம் புவனம் எல்லாம் மல்கிடவைக்கும் தாயே!

தோத்திர மாலை கொள்ள தோன்றிய மங்களமும் நீயே!
தோத்திரம் செய்வோர் தம்முள் தோன்றிடும் மங்களமும் நீயே!
தீத்திறம் அளிக்க வல்ல தேவியே! மனு வம்சத்து
தோத்திரம் கொள்ள வந்தாய்! தூயவளே வணங்குகின்றோம்!

வாழ்வினில் இன்பம் சேர்ப்பாய்! 
மங்களம் அனைத்தும் நல்கி!
தாழ்விலாச் சுவர்க்கம் சேர்க்கும்
சண்டியே போற்றுகின்றேன்!

சார்ந்தனை எங்கும் என்றும் சர்வமங்கள தாரையாய்!
பாரிதில் எல்லாச் செய்கை பரிபவம் இன்றிக் காப்பாய்!
ஆரெவர் வாரந்தோறும் அரிய செவ்வாய்தான் பூஜை 
நேரிடில் அருளைச் செய்யும் நேர்மையே சண்டி போற்றி!

இயங்குவை நிலைத்த தானே எல்லாமும் நீயே தாயே!
மயங்கியபோது வந்தே மதியினை நல்கும் தேவி
தயங்கியே தேவர் மூவர் தகுமறை முனிவர் போற்ற
வயங்கிய தாளைப் பற்றி வணங்கியே வாழ்த்துகின்றோம்!

மங்கள சண்டி தன்றன் மாண்பினை உரைக்கும் இந்த
மங்களங்கள் நல்க வல்ல மாதேவன் சொன்ன தோத்திரம்
எங்கனும் சொன்னோர் கேட்டோர் அவர்தம் புத்ரர் பௌத்ரர்
பொங்கு மங்களமே தங்க புவியினில் வாழ்வர் மாதோ!

காயத்திரி- நன்மைகள் நடைபெற தினமும் முடிந்தவரை

ஓம் பூர் புவஸ் ஸீவக
தத்ச விதுர் வரேண்யம் 
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோநஹ ப்பிரசோதயாத்

நாராயணி- மாங்கல்ய பாக்யம்பெற தினமும் முடிந்தவரை

சர்வமங்கள மாங்கல்யே
சிவே சர்வார்த்தே சாதஹே 
சரண்யே தயஹே கௌரி
நாராயணி நமஸ்துதே!

“ஸ்ரீமங்களாஷ்டகம்”-

மங்களங்கள் பெருக- மனக் குறைவின்றி- பாவங்களிலிருந்து விலகி- நீண்ட ஆயுள்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.

oபிரம்மனே! மஹாவிஷ்னுவே! பரமேஸ்வரனே! இந்திரனே! அக்னியே! யமனே! நிருதியே! வருணனே! வாயுவே! குபேரனே! முருகனே! கணபதியே! சூரியனே! சந்திரனே! ருத்திரர்களே! விச்வ தேவர்களே! ஆதித்யர்களே! அச்வினி தேவர்களே! சாத்தியர்களே! வஸுக்களே! பித்ருக்களே! சித்தர்களே! வித்யாதரர்களே! யஷர்களே! கந்தர்வர்களே! கின்னரர்களே! மருத்துக்களே! மற்றும் ஆகயத்தில் சஞ்சரிக்கும் அனைத்து தேவர்களே! உங்கள் அனைவரையும் வணங்குகின்றேன். எனக்கு என்றும் மங்களம் அருளுங்கள்.

oசரஸ்வதி, மகாலட்சுமி, பூமிதேவி, பார்வதி, சண்டிகை, பத்ரகாளி, பிராஹ்மி முதலிய மாத்ரு கணங்கள், தட்சனின் மகள்களான அதிதி, திதி, சதி, முதலியோர், சாவித்ரி, கங்கை, யமுனை, அருந்ததி, தேவர்களின் மனைவிகள், இந்திராணி முதலிய தேவலோகப் பெண்களும் விண்ணில் சஞ்சரிக்கும் தேவமாந்தரும் எனக்கு நீங்காத மங்களத்தை அளிக்கட்டும்.

oமத்ஸ்யமூர்த்தி, கூர்மமூர்த்தி, வராஹமூர்த்தி, நரசிம்மப் பெருமாள், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், கபிலர், நரநாராயண மூர்த்தி, தத்தாத்ரேயர், பிருகு மற்றும் நரகாசுரனை வதம் செய்த மகா விஷ்ணுவின் மற்ற எல்ல அவதாரங்களும், சுதர்ஸ்ன சக்கரம் முதலிய ஆயுதங்களும், அவதாரம் செய்த மூர்த்திகளின் மனைவிகளும், அவர்களின் புத்திரர்களும், விஷ்னுவின் எல்ல அம்சா அவதாரங்களும் எனக்கு தீராத மங்களத்தை அளிக்கட்டும்.

oவிஸ்வாமித்திரர், வசிஷ்டர், அகஸ்தியர், உசத்யர், ஆங்கீரஸ், காச்யபர், வியாசர், கண்வர், மரீசு, கிரது, பிருகு, புலஹர், சௌனகர், அத்ரி, புலஸ்தியர் முதலான மஹரிஷிகளும் மற்றும் பல முனிவர்களும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கிரகங்களும், அஸ்வனி முதல் ரேவதி வரையிலான நட்சத்திரங்களும், நம் பிரஜாபதிகளும் நாகராஜன் முதலிய சர்ப்பக் கூட்டங்களும், மனுக்களும் எனக்கு வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.

oமநு புத்ரிகளான ஆகூதி, தேவஹூதி, ப்ரஸீதி ஆகிய மூவரும், எல்லா முனிவர்களின் பத்தினிகளும், மனுக்களின் பத்தினிகளும், சீதை, குந்திதேவி, பாஞ்சாலி, நளன் மனைவி தமயந்தி, ருக்குமணி, சத்யபாமா, தேவகி மற்றுமுள்ள அரசர்களின் மனைவியர், கோபிகைகள், பதி விரதைகள், நற்குலப்பெண்மணிகள் யாவரும் எனக்கு எல்லாவித மங்களத்தையும் கொடுக்கட்டும்.

oகருடன், அனந்தன், ஹனுமான், மஹாபலி, சனகர் முதலான யோகிகளும், சுகர், நாரதர், பிரகலாதன், பாண்டவர்கள், ந்ருகன், நளன், நஹூஷன், அரிச்சந்திரன், ருக்மாங்கதன் முதலிய விஷ்னு பக்தர்களும் மற்றும் சூரிய, சந்திர குலத்தில் உதித்த உத்தமர்களும், அரசர்களும் எனக்கு வளமான மங்கலத்தை உண்டாக்கட்டும்.

oஅந்தணர்கள், பசுக்கள், வேதங்கள், ஸ்ம்ருதிகள், துளசி, கங்கை, முதலி8ய சர்வ தீர்த்தங்கள், சகல வித்யைகள், பலவிதசாஸ்திரங்கள், இதிஹாசங்கள், சகல புராணங்கள், வர்ணங்கள், ஆச்ரமங்கள், சாங்கியம், யோகங்கள், யம நியமங்கள், எல்லா கர்மங்கள், காலங்கள், சத்யம் முதலான அனைத்து தர்மங்களும் எனக்கு போதிய மங்களத்தை அளிக்கட்டும்.

o சகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், கங்கை, காவேரி, நர்மதை முதலிய புண்ணிய தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான நன்மைதரும் எல்லாமரங்கள், எட்டு திக்கு யானைகள், மேகங்கள், சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள், பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள், ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள், செடிகள், கொடிகள் எனக்கு நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.                                                      ஓம்சக்தி ஓம்

குருஸ்ரீ பகோராயின் சந்தோஷப்பூக்களின் இதழ்களில் சில......

o‘நீ உலகின் அழகை தரிசிக்கும்போது நலமுடன் திகழ்கிறாய்’

oஎல்லா உயிர்க்கும் சந்தோஷத்தை அடைய, அதைத் தேட உரிமை உண்டு. வாழ்வின் இரகசியம் அல்லவா! அது அற்புத இலக்கணம்.

oசந்தோஷம் போதும் இனி எந்த சந்தோஷமும் வேண்டாம் எனக்கூறக்கூடிய நிலையில் எந்த ஒரு உயிரும் இயங்குவதாக இல்லை.

oமனிதனால் முடியாதது அவனது கடந்த இழந்தகாலத்தை மீண்டும் பெறுவது. இன்றைய நிகழ் நாளைய கடந்த காலம்.

o உனது வாழ்நாள் ஒவ்வொருநாளாக குறைந்து கொண்டிருக்கின்றது. இறந்தவனையும், நடந்தவைகளையும் பற்றி சிந்தித்து என்ன பயன்! இருக்கும் காலத்தில் நீ உன் ஆன்மாவின் மேன்மைக்காக சிந்தி.

o‘அகில உலக உயிர்களும் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும்’ என்பதே அறத்தின் முத்திரையான வாக்கியம்.

o“மனதின் வினைகளான பிறர்பொருளை அபகரித்தல், பிறருக்கு தீங்கு செய்ய நினைத்தல், பிறர் உயர்வு கண்டு பொறாமை கொள்ளுதல் ஆகியவைகளின்றி புண்ணியமான பிறர் பொருள் வேண்டாம் என எண்ணுதல், அனைவரும் நலமாக வாழ நினைத்தல், அவர்தம் நல் வாழ்வு கண்டு மகிழ்வு அடைதல்” ஆகியவை உங்களின் மேலான வாழ்வுக்கு சிறப்பானதாகும்.

       “சந்தோஷப்பூக்களை நுகர்ந்து வாழ்வியல் பயன் பெறுங்கள்”

செவ்வாய்க்கிழமை, 13 August 2013 00:00

சிவன்

                                       ஓம்சிவாயநமக!

சிவன்- முழுமுதல் காக்கும் கடவுள்
பெருமான்- சைவ சமய நெறிகளின் தலைவன். 
வேறுபெயர்கள்- கயிலைநாதன், சிவபெருமான், சதாசிவம், நமச்சிவாயன், ருத்ரன், ஆலாலகாலன், நீலகண்டன்.
கிரகங்களின் சேர்க்கை நிகழும்போது நீர்நிலைகளில் நீராடுவது ஆயுள்மற்றும் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஞானம் சேர்த்து அறிவினை விசாலமாக்கும்.

உகந்த நாட்கள்- சிவராத்திரி, மகாசிவராத்திரி, ஆருத்ர தரிசனம், திங்கட்கிழமை, பௌர்ணமி, பிரதோஷ தினங்கள் சிறப்பு, எந்நாளும் வழிபடலாம்.

உகந்த மலர்கள்- தும்பை, செம்பருத்தி, முல்லை, மருது, மல்லி, வில்வம், சங்கு சிறப்பு. தாழம்பூ தவிர மற்ற பூக்களை உபயோகிக்கலாம்.
மகாகும்பமேளா- பொதுவாக சூரியன் மேஷராசிக்கும், குருபகவான்-பிரஹஸ்பதி கும்பராசியிலும் பிரவேசிக்கும் போது கும்பமேளா நடைபெறும். பிரஹஸ்பதி, சூரியன் இரண்டும் சிம்ம ராசியில் பிரவேசிக்கும் நாள் மாகா கும்பமேளா நாளாகும். பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது வெளிப்பட்ட அமிர்தம் அசுரர்களிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக பெருமாள் எடுத்துக்கொண்டு ஓடினார். 12நாட்கள் (நமக்கு 1நாள் ஒருவருடம்) அசுரர்கள் துரத்தினர். அப்படிச் செல்லும்போது சில துளிகள் கீழே சிந்தின. அவை விழுந்த நான்கு இடம் அலகாபாத்-பிரயாகை (திரிவேணிசங்கமம்), நாசிக் (கோதாவரி), உஜ்ஜயினி (ஷிப்ரா நதி), ஹரித்துவார் (கங்கை). அமுதம் விழுந்த நீர் நிலைகளில் அன்றைய தினம் அமுதம் பொங்குவதாக ஐதீகம். 6 வருடத்திற்கு ஒருமுறை அலஹாபத்தில் நடப்பது அர்த்த கும்பமேளா எனப்படும். 12 வருடங்களுக்கு ஒருமுறை நடப்பது பூர்ண கும்பமேளா. மகா கும்பமேளா என்பது 12 பூர்ண கும்பமேளாக்களுக்கு ஒருமுறை வருவது. இது அலகாபாத்தில் மட்டுமே நடக்கும். அன்றைய தினம் சிவன் குருவாக இருந்து பிரமனுக்கும் தேவர்களுக்கும் உபதேசம் செய்கிறார்.
மகாமகம்- 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசிமாத மகநட்சத்திர நாளில் குருபகவான் சிம்மராசிக்கு வருவார். அன்று புண்ணிய நதிகள் கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி ஆகிய அனைத்தும் தங்களின் பாவங்களைப் போக்க கும்பகோணம் மகாமகக் குளத்தில் வந்து நீராடுவர். அன்று அங்கு நீராடல் சிறப்பு. 144 வருடத்திற்கு ஒரு முறை மாமாங்கமாகும்.
மாசிமகம்- மாசிமாதபௌர்ணமி மகம் நட்சத்திரத்தில் அமையும். மாசிமாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம். சிம்மராசிக்கு உரிய மகநட்சத்திரத்தில் சந்திரன் இருப்பது விசேடம். இறைவனை கடலில் நீராட்டுவது வழக்கம். அடியவர்களும் நீராடி புண்ணியம் சேர்த்தலாகும். அன்றுதான் அம்பிகை அவதரித்த நாளாகும். 
வணங்கும்முறை-  கோவிலுக்கு அருகில் சென்றதும் கோபுரத்தை தரிசனம் செய்ய வேண்டும். கோபுரதரிசனம் கோடிபுண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. உள்ளே சென்றதும் முதலில் துவஜஸ்தம்பம் எனும் கொடிமரத்தின் முன்பு எட்டு அங்கங்களும் தரையில் படும்படி விழுந்து வணங்கி எழவும். நந்தி பகவானின் வாலைப் பக்தியுடன் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ளவும். அங்கிருந்தபடியே நந்தியின் கொம்புகளிடையே மூலத்தானத்தில் உள்ள லிங்கப் பெருமானைப் பார்த்து வணங்கவும். கோவிலின் உள்ளே இடதுபுறம் இருக்கும் விநாயகரை வணங்கி கருவரைக்குச் செல்லவும். வழியில் தீபமேற்றும் இடத்தில் தீபம் ஏற்றி அங்கிருந்தபடியே அதை இறைவனுக்கு காட்டி பின் அதற்குரிய இடத்தில் வைக்கவும். ஆண்கள் மேலாடை இல்லாமல் தரிசனம் செய்வது சிறப்பாகும். கருவறையில் இடப்பக்கம் ஆண்களும் வலது புறம் பெண்களும் தரிசனம் செய்தல் வேண்டும். 
இறைவனுக்கு நெய்வேத்தியம் என்பது சர்வ வல்லமை படைத்த இறைவனுக்குச் சொந்தமானதை அவருக்குத் தந்து அதையே நாம் அவரின் அருளாசியுடன் பிரசாதமாக பெற்று புனித உணர்வுடன் உட்கொள்கிறோம் என்பதாகும். நீங்கள் கொண்டுவந்த பழங்கள், பூக்கள் மற்றும் அர்ச்சனைக்குரிய பொருள்களை அர்ச்சகரிடம் கொடுத்து விட்டு அமைதியாக இறைவனின் திருநாமங்களைச் சொல்லிக் கொண்டிருங்கள். அர்ச்சகர் மந்திரங்கள் சொல்லி மணி ஒலி எழுப்பும்போது கண்களை மூடாமல் இறைவனைப் பார்த்து மனதாற வணங்குங்கள். ஆராதனை செய்த தீபத்தை ஏற்று திருநீறு பெற்று நமசிவாயா எனச்சொல்லி நெற்றியில் மூன்று விரலால் இட்டுக் கொள்ளவும். சில கோவில்களில் ஒரே இடத்தில் இருந்து ஐயனோடு அம்மையும் தரிசனம் செய்யும் வண்ணம் இருக்கும். 
அம்மனை தரிசிக்க செல்லும் வழியில் தீபமேற்றும் இடத்தில் தீபம் ஏற்றி அங்கிருந்தபடியே அதை இறைவிக்கு காட்டி பின் அதற்குரிய இடத்தில் வைக்கவும். அங்கு அப்படியே மனமுருகி அம்மையிடம் வேண்டிக் கொள்ளுங்கள். சில கோவில்களில் அம்மன் சன்னதி தனித்து இருக்கும். அம்மன் சன்னதியின் சுற்றில் சண்டிகேஸ்வரி இருப்பார். அவரை வணங்கவும். பெரிய கோவில்களில் தலமரம் இருக்கும். அங்கு வணங்கியபின் அடுத்து ஸ்ரீசுப்ரமண்ய சுவாமியை வணங்கவும். பின் பரிவார தேவதைகளை வணங்கவும். துர்க்கை சண்டிகேசுவரரை வணங்கி நவகிரகங்களை வல இடமாக ஒன்று அல்லது ஒன்பது சுற்றுகள் சுறிவந்து வணங்கவும். பிறகு நடராசர், சனி பகவான் தனி சன்னதி, காலபைரவர், சந்திரன் சூரியன் சன்னதிகளில் வணங்கி கோவிலை உள்சுற்றாக சுற்றிவந்து கொடிமரத்தின் முன்னால் சாஷ்டாங்கமாக வீழ்ந்து இருகை கூப்பி வணங்கி எழுந்திருந்து மண்டபத்தில் இறை சிந்தனையுடன் சிறிது நேரம் அமர்ந்திருந்து பின் புறப்படுங்கள்.

உள்ளே.....

1.108 சிவன்போற்றி”-தினமும்/நேரம்கிடைக்கும்போது

2.“108 லிங்கம்போற்றி”-தினமும்/நேரம்கிடைக்கும்போது

3.“லிங்கம் போற்றி”-தினமும் 

4.“108 போற்றி”-போதும்என்ற மனம், பொறாமையற்ற குணம் அடைய- தினமும்/ நேரம் கிடைக்கும் போது

5.“போற்றி”- மனத்தின் இருள்நீங்கி நல்லெண்ணங்கள் மலர - தினமும் / நேரம் கிடைக்கும் போது 

6.“துவாதச லிங்கங்கள் துதி” - ஜோதிர்லிங்கங்கள் துதி- ஆதிசங்கரர் -சிவன் அருள் கிடைக்க- தினமும் 

7.“சிவ அகவல்”- வாழ்வில் ஏற்றமடைய, குறை, குற்றங்கள் நீங்க- தினமும்/ நேரம் கிடைக்கும்போது. 

8.“108 சிவஅஷ்டோத்ர நாமா நமக”-இறையருள்பெற, மனத்தின் இருள் நீங்க நல்லெண்ணங்கள் மலர - தினமும் / நேரம் கிடைக்கும் போது 

9.“சிவ கவசம்”- வேண்டுவன கிடைக்க, ஆரோக்கியம் அடைய- தினமும்/ நேரம் கிடைக்கும் போது.

10.“சிவகவசம்”- பஞ்சமா பாதங்கள், பகைகள் ஒலிந்திட- வறுமைநீங்க- விடபமுனி அருளியது-முடிந்த போது. 

11.“நமசிவாய தெய்வம்”- வாழ்வில் ஏற்றமடைய, உயர்வடைய - தினமும்/ நேரம் கிடைக்கும் போது.

12.“சிவ துதி”- வறுமை நீங்க, வளம் பெருக-வசிஷ்டர் அருளியது- தினமும் / வேண்டும் போது. 

13.“சித்தபேச ஸ்தோத்திரம்”- நடராஜப்பெருமானை நினைத்து- மனக்கவலை அகல, நன்மைகள் பெருக

14.“108 நடராஜர் போற்றி” -தினமும்

15.“சிவசடாட்சரதுதி”- சீரான வாழ்விற்கு- மார்கழி திருவாதிரை, மாசிவளர்பிறை சதுர்த்தசி, சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி வளர்பிறை சதுர்த்தசி நாட்களில். 

16. “சிவபஞ்சாக்ஷர துதி” ஆதிசங்கரர்-தினமும் 

17. “நோய் தீர்க்கும் பதிகம்”- திருநீற்றின்மகிமை-ஞான சம்பந்தர் அருளியது- நோய்தீர எப்போதும். 

18.“திரு நீற்றுத் துதி”- திருநீற்றின் மகிமை-ஸ்காந்த புராணம்- திருமகளின் அருள் சேர. 

19."சிவபார்வதி துதி”- -வற்றாதசெல்வம், குன்றாதஆயுள் பெற- ஈசன்-சிவ, ஈஸ்வரி-சிவா-சிவசிவா ஸ்துதி. 

20.“உமாமகேஸ்வரர் துதி” -ஆதிசங்கரர்- குடும்பவாழ்வில் மங்களகரமான பலன்கள் பெற -தினமும் 

21.“ஸ்ரீதட்சிணாமுர்த்தி துதி”- குழந்தைபருவம், வாலிபம், முதுமை, விழிப்பு, சொப்பனம் முதலிய மாறுபாடுகள் ஊடே ‘நான்’ எனஎன்றும் மாறுபடாமல்-சிவன் தன்னை வெளிப்படுத்துதல்- வியாழன் மற்றும் பௌர்ணமி. 

22.“குரு - தட்சிணாமூர்த்தி வணக்கம்”-வியாழன்

23.“ஸ்ரீகும்பேஸ்வரர் துதி”-கிரக தோஷங்கள் நீங்கி வேண்டிய வளம்பெற- மாசி மகத்தன்று. 

24.“காலபைரவ அஷ்டகம்” -மனப்பயங்கள் விலக, ஆரோக்கிய வாழ்வுக்கு- தினமும்-நேரம் கிடைக்கும் போதெல்லாம்-ஆதிசங்கரர் அருளியது. 

25.“பைரவ அஷ்டகம்” -செல்வ சேமிப்பு, தடைகள் தகர்க்க, ஆரோக்கிய வாழ்வுக்கு- தினமும்-நேரம் கிடைக்கும் போதெல்லாம். 

26.ஸ்வர்ணாகர்ஷண பைரவர் அஷ்டகம்- துர்கைச் சித்தர்- தினமும் 

27.“மகாசாஸ்தா துதி”-பகை, பயம்நீங்க, பிணிகள், கவலை விலக, செல்வங்கள் கைகூடும்- சிவ+விஷ்னு- ப்ருஹதீச்வரர்- கார்த்திகை மாதம் காலை/மாலை. 

28.“மகாசாஸ்தா அஷ்டகம்”-அருள், பொருள், ஆரோக்யம் பெற -கார்த்திகை மாதம் காலை/ மாலை.  
29.“சரபாஷ்டகம்” -துக்கங்கள், தோஷங்கள், நோய்நீங்க-ஞாயிற்றுக் கிழமை ராகுகாலத்தில். 

30.சிவபுராணம்-தினமும்/வேண்டும்பொழுது

“ஸ்ரீமங்களாஷ்டகம்”:--மங்களங்கள் பெருக-மனக்குறை- பாவங்களிலிருந்து விலகி-நீண்ட ஆயுளுடன்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!

1.“108 சிவன்போற்றி”-தினமும்/நேரம் கிடைக்கும்போது

ஓம் அப்பா போற்றி!
ஓம் அரனே போற்றி! 
ஓம் அரசே போற்றி!
ஓம் அமுதே போற்றி! 
ஓம் அழகே போற்றி! 
ஓம் அத்தா போற்றி!
ஓம் அற்புதா போற்றி! 
ஓம் அறிவா போற்றி!

ஓம் அம்பலா போற்றி!
ஓம் அரியோய் போற்றி! 
ஓம் அருந்தவா போற்றி! 
ஓம் அனுவே போற்றி!
ஓம் அன்பா போற்றி! 
ஓம் ஆதியே போற்றி! 
ஓம் ஆத்மா போற்றி!
ஓம் ஆரமுதே போற்றி!

ஓம் ஆரணனே போற்றி! 
ஓம் ஆண்டவா போற்றி!
ஓம் ஆலவாயா போற்றி! 
ஓம் ஆரூரா போற்றி! 
ஓம் இறைவா போற்றி!
ஓம் இடபா போற்றி! 
ஓம் இன்பா போற்றி! 
ஓம் ஈசா போற்றி!

ஓம் உடையாய் போற்றி! 
ஓம் உணர்வே போற்றி! 
ஓம் உயிரே போற்றி!
ஓம் ஊழியே போற்றி! 
ஓம் எண்ணே போற்றி! 
ஓம் எழுத்தே போற்றி!
ஓம் எண் குணா போற்றி! 
ஓம் எழிலா போற்றி!

ஓம் எளியா போற்றி!
ஓம் ஏகா போற்றி! 
ஓம் ஏழிசையே போற்றி! 
ஓம் ஏறுர்ந்தாய் போற்றி!
ஓம் ஐயா போற்றி! 
ஓம் ஒருவா போற்றி! 
ஓம் ஒப்பிலானே போற்றி!
ஓம் ஒளியே போற்றி! 
ஓம் ஓங்காரா போற்றி! 
ஓம் கடம்பா போற்றி!
ஓம் கதிரே போற்றி!
ஓம் கதியே போற்றி!
ஓம் கனியே போற்றி!
ஓம் கலையே போற்றி!
ஓம் காருண்யா போற்றி!
ஓம் குறியே போற்றி!

ஓம் குணமே போற்றி!
ஓம் கூத்தா போற்றி!
ஓம் கூன்பிறையாய் போற்றி!
ஓம் சங்கரா போற்றி!
ஓம் சதுரா போற்றி!
ஓம் சதாசிவா போற்றி!
ஓம் சிவையே போற்றி!
ஓம் சிவமே போற்றி!

ஓம் சித்தமே போற்றி!
ஓம் சீரா போற்றி!
ஓம் சுடரே போற்றி!
ஓம் சுந்தரா போற்றி!
ஓம் செல்வா போற்றி!
ஓம் செங்கணா போற்றி!
ஓம் சொல்லே போற்றி!
ஓம் ஞாயிறே போற்றி!

ஓம் ஞானமே போற்றி!
ஓம் தமிழே போற்றி!
ஓம் தத்துவா போற்றி!
ஓம் தலைவா போற்றி!
ஓம் தந்தையே போற்றி!
ஓம் தாயே போற்றி!
ஓம் தாண்டவா போற்றி!
ஓம் திங்களே போற்றி!

ஓம் திசையே போற்றி!
ஓம் திரிசூலா போற்றி!
ஓம் துணையே போற்றி!
ஓம் தெளிவே போற்றி!
ஓம் தேவதேவா போற்றி!
ஓம் தோழா போற்றி!
ஓம் நமசிவாயா போற்றி!
ஓம் நண்பா போற்றி!

ஓம் நஞ்சுண்டாய் போற்றி!
ஓம் நான்மறையாய் போற்றி!
ஓம் நிறைவா போற்றி!
ஓம் நினைவே போற்றி!
ஓம் நீலகண்டா போற்றி!
ஓம் நெறியே போற்றி!
ஓம் பண்ணே போற்றி!
ஓம் பித்தா போற்றி!

ஓம் புனிதா போற்றி!
ஓம் புராணா போற்றி!
ஓம் பெரியோய் போற்றி!
ஓம் பொருளே போற்றி!
ஓம் பொங்கரவா போற்றி!
ஓம் மதிசூடியே போற்றி!
ஓம் மருந்தே போற்றி!
ஓம் மலையே போற்றி!

ஓம் மனமே போற்றி!
ஓம் மணாளா போற்றி!
ஓம் மணியே போற்றி!
ஓம் மெய்யே போற்றி!
ஓம் முகிலே போற்றி!
ஓம் முக்தா போற்றி!
ஓம் முதல்வா போற்றி!
ஓம் வானமே போற்றி!

ஓம் வாழ்வே போற்றி! 
ஓம் வையமே போற்றி!
ஓம் விநயனே போற்றி!
ஓம் விநாயகனே போற்றி! போற்றி!

2.“108 லிங்கம் போற்றி”-தினமும்

ஓம் அங்க லிங்கமே போற்றி! 
ஓம் அருவுரு லிங்கமே போற்றி! 
ஓம் அபய லிங்கமே போற்றி! 
ஓம் அம்ருத லிங்கமே போற்றி!

ஓம் அபிஷேக லிங்கமே போற்றி! 
ஓம் அனாதி லிங்கமே போற்றி! 
ஓம் அகண்ட லிங்கமே போற்றி! 
ஓம் அட்சர லிங்கமே போற்றி!

ஓம் அப்பு லிங்கமே போற்றி! 
ஓம் ஆதி லிங்கமே போற்றி! 
ஓம் ஆதார லிங்கமே போற்றி! 
ஓம் ஆத்ம லிங்கமே போற்றி!

ஓம் ஆனந்த லிங்கமே போற்றி! 
ஓம் ஆகாச லிங்கமே போற்றி! 
ஓம் ஆலாஸ்ய லிங்கமே போற்றி! 
ஓம் ஆத்யந்த லிங்கமே போற்றி!

ஓம் ஆபத்பாந்தவ லிங்கமே போற்றி! 
ஓம் ஆரண்ய லிங்கமே போற்றி! 
ஓம் ஈஸ்வர லிங்கமே போற்றி! 
ஓம் ஈசான்ய லிங்கமே போற்றி!

ஓம் உக்ர லிங்கமே போற்றி! 
ஓம் ஊர்த்துவ லிங்கமே போற்றி! 
ஓம் ஏகாந்த லிங்கமே போற்றி! 
ஓம் ஓம்கார லிங்கமே போற்றி!

ஓம் கனக லிங்கமே போற்றி! 
ஓம் காருண்ய லிங்கமே போற்றி! 
ஓம் காசி லிங்கமே போற்றி! 
ஓம் காஞ்சி லிங்கமே போற்றி!

ஓம் காளத்தி லிங்கமே போற்றி! 
ஓம் கிரி லிங்கமே போற்றி! 
ஓம் குரு லிங்கமே போற்றி! 
ஓம் கேதார லிங்கமே போற்றி!

ஓம் கைலாச லிங்கமே போற்றி! 
ஓம் கோடி லிங்கமே போற்றி! 
ஓம் சக்தி லிங்கமே போற்றி! 
ஓம் சங்கர லிங்கமே போற்றி!

ஓம் சதாசிவ லிங்கமே போற்றி! 
ஓம் சச்சிதானந்த லிங்கமே போற்றி! 
ஓம் சகஸ்வர லிங்கமே போற்றி! 
ஓம் சம்ஹார லிங்கமே போற்றி!

ஓம் சாட்சி லிங்கமே போற்றி! 
ஓம் சாளக்கிராம லிங்கமே போற்றி! 
ஓம் சாந்த லிங்கமே போற்றி! 
ஓம் சிவ லிங்கமே போற்றி!

ஓம் சித்த லிங்கமே போற்றி! 
ஓம் சிதம்பர லிங்கமே போற்றி! 
ஓம் சீதள லிங்கமே போற்றி! 
ஓம் சுத்த லிங்கமே போற்றி!

ஓம் சுயம்பு லிங்கமே போற்றி! 
ஓம் சுவர்ண லிங்கமே போற்றி! 
ஓம் சுந்தர லிங்கமே போற்றி! 
ஓம் ஸ்தூல லிங்கமே போற்றி!

ஓம் சூட்சம லிங்கமே போற்றி! 
ஓம் ஸ்படிக லிங்கமே போற்றி! 
ஓம் ஸ்திர லிங்கமே போற்றி! 
ஓம் சைதன்ய லிங்கமே போற்றி!

ஓம் ஜய லிங்கமே போற்றி! 
ஓம் ஜம்பு லிங்கமே போற்றி! 
ஓம் ஜீவ லிங்கமே போற்றி! 
ஓம் ஜோதி லிங்கமே போற்றி!

ஓம் ஞானலிங்கமே போற்றி! 
ஓம் தர்ம லிங்கமே போற்றி! 
ஓம் தாணு லிங்கமே போற்றி! 
ஓம் தேவ லிங்கமே போற்றி!

ஓம் நடன லிங்கமே போற்றி! 
ஓம் நாக லிங்கமே போற்றி! 
ஓம் நித்ய லிங்கமே போற்றி! 
ஓம் நிர்மல லிங்கமே போற்றி!

ஓம் பரம லிங்கமே போற்றி! 
ஓம் பங்கஜ லிங்கமே போற்றி! 
ஓம் பஞ்ச லிங்கமே போற்றி! 
ஓம் பஞ்சாட்சர லிங்கமே போற்றி!

ஓம் பத்ரி லிங்கமே போற்றி! 
ஓம் பக்த லிங்கமே போற்றி! 
ஓம் பாபாநாச லிங்கமே போற்றி! 
ஓம் பிராண லிங்கமே போற்றி!

ஓம் பிரம்ம லிங்கமே போற்றி! 
ஓம் பிரகாச லிங்கமே போற்றி! 
ஓம் பீஜ லிங்கமே போற்றி! 
ஓம் புவன லிங்கமே போற்றி! 
ஓம் பூத லிங்கமே போற்றி! 
ஓம் பூர்ண லிங்கமே போற்றி! 
ஓம் பூஜ்ய லிங்கமே போற்றி! 
ஓம் மரகத லிங்கமே போற்றி!

ஓம் மஹா லிங்கமே போற்றி! 
ஓம் மகேஸ்வர லிங்கமே போற்றி! 
ஓம் மார்க்கபந்து லிங்கமே போற்றி!
ஓம் மார்க்கண்டேய லிங்கமே போற்றி!

ஓம் மிருத்யுஞ்சய லிங்கமே போற்றி!
ஓம் முக்தி லிங்கமே போற்றி!
ஓம் மூல லிங்கமே போற்றி!
ஓம் மூர்த்தி லிங்கமே போற்றி!

ஓம் மேரு லிங்கமே போற்றி!
ஓம் மேனி லிங்கமே போற்றி!
ஓம் மோட்ச லிங்கமே போற்றி!
ஓம் யக்ஞ லிங்கமே போற்றி!

ஓம் யோக லிங்கமே போற்றி!
ஓம் ராம லிங்கமே போற்றி!
ஓம் ராஜ லிங்கமே போற்றி!
ஓம் ருத்ர லிங்கமே போற்றி!

ஓம் வாயு லிங்கமே போற்றி!
ஓம் விஸ்வ லிங்கமே போற்றி!
ஓம் விசித்திர லிங்கமே போற்றி!
ஓம் வீர்ய லிங்கமே போற்றி!

ஓம் வேத லிங்கமே போற்றி!
ஓம் வைத்ய லிங்கமே போற்றி!
ஓம் ஹ்ருதய லிங்கமே போற்றி!
ஓம் லிங்கோத் பவனே போற்றி! போற்றி! போற்றி!

3.“லிங்கம் போற்றி”-தினமும்

கருனை வடிவே கைலாச லிங்கம்
காசினி காக்கும் விசுவ லிங்கம்
திருப்பரங்குன்றின் பரங்குன்ற லிங்கம்
திருவானைகாலில் ஜம்பு லிங்கம்

ஆடல் புரிந்த கூடல் லிங்கம்
அன்பைப் பொழியும் ஆட்கொண்ட லிங்கம்
பாடலில் சிறந்த மருதீச லிங்கம்
பக்திக் கடலின் திருவீச லிங்கம்

வெற்றி நல்கும் செயங்கொண்ட லிங்கம்
விண்ணவர் போற்றும் வளரொளி லிங்கம்
கற்றவர் ஏற்றும் ஐநூற்று லிங்கம்
கண்ணனின் ஒளியாம் காளத்தி லிங்கம்

சுயம்பாய் வந்த தாந்தோன்றி லிங்கம்
சொர்க்கம் நல்கும் தேசிய லிங்கம்
பயனாம் நயனாம் பசுபதி லிங்கம்
பாலய நாட்டின் சண்டீஸ்வர லிங்கம்

புள்ளூர் வாழும் வைத்திய லிங்கம்
பொங்கும் மங்கள சங்கர லிங்கம்
உள்ளம் உறைந்த பூசலர் லிங்கம்
உயர்ந்த மயிலைக் கபாலி லிங்கம்

மார்க்கண்டன் காத்த அமுதீச லிங்கம்
மாதேவன் வீர சேகர லிங்கம்
ஆர்த்துப் போற்றும் காளீஸ்வர லிங்கம்
ஆவுடைக் கோவிலின் ஜோதி லிங்கம்

4.“108 போற்றி”-போதும் என்ற மனம், பொறாமையற்ற குணம் அடைய- தினமும்.

அகரமே அறிவே போற்றி!
அகஞ்சுடர் விளக்கே போற்றி!
அகந்தை நோய் அழிப்பாய் போற்றி!
அகத்தனே போற்றி! போற்றி!

அடியர்கள் துணையே போற்றி!
அணுவினுள் அணுவே போற்றி!
அண்டங்கள் கடந்தாய் போற்றி!
அம்மையே அப்பா போற்றி!

அருமறை முடிவே போற்றி!
அருந்தவர் நினைவே போற்றி!
அரும்பிறை அணிந்தாய் போற்றி!
அரஹரா போற்றி! போற்றி!

அலைகடல் விரிவே போற்றி!
அவிரொளி சடையாய் போற்றி!
அழகனாம் அமுதே போற்றி!
அறிந்திடு மொழியே போற்றி!

அளப்பிலா அருளே போற்றி!
அன்பெனும் மலையே போற்றி!
ஆடரவு அணியாய் போற்றி!
ஆடிடும் கூத்தா போற்றி!

ஆதாரப் பொருளே போற்றி!
ஆதியே அருளே போற்றி!
ஆலால கண்டா போற்றி!
ஆலமர் குருவே போற்றி!

ஆலவாய் அப்பா போற்றி!
ஆரூரின் தியாகா போற்றி!
ஆற்றலே போற்றி! போற்றி!
இடபவா கனத்தாய் போற்றி!

இதயத்தே கனிவாய் போற்றி!
இமயவள் பங்கா போற்றி!
இமையவர் உளத்தாய் போற்றி!
இரக்கமே வடிவாய் போற்றி!

இருட்கறை மிடற்றாய் போற்றி!
இருவினை தவிர்ப்பாய் போற்றி!
இன்னல்கள் களைவாய் போற்றி!
இனிமையே நிறைப்பாய் போற்றி!

இனியவர் மனத்தாய் போற்றி!
இனிய செந்தமிழே போற்றி!
இலக்கியச் செல்வா போற்றி!
இறைவனே போற்றி! போற்றி!

ஈசனே போற்றி! போற்றி!
ஈசானத் திறையே போற்றி!
ஈடிலா பிரானே போற்றி!
ஈந்தருள் தேவே போற்றி!

ஈமத்தே குமிப்பாய் போற்றி!
உடுக்கையின் ஒலியே போற்றி!
உடைகரித் தோலாய் போற்றி!
உடையனே போற்றி! போற்றி!

உணவொடு நீரே போற்றி!
உரைகடந் தொளிர்வாய் போற்றி!
உருவொடும் அருவே போற்றி!
உமையொரு பாகா போற்றி!

உலகின் முதலே போற்றி! 
உள்ளொளிர் சுடரே போற்றி!
ஊக்கமே உணர்வே போற்றி!
ஊங்கார ஒலியே போற்றி!

ஊரெல்லாம் உவப்பாய் போற்றி!
ஊழினை விதிப்பாய் போற்றி!
எண்குண வடிவே போற்றி!
எம்பிரான் போற்றி! போற்றி!

எரிதவழ் விழியாய் போற்றி!
எருதேறும் ஈசா போற்றி!
எல்லையில் எழிலே போற்றி!
ஏக நாயகனே போற்றி! போற்றி!

ஏகம்பா இறைவா போற்றி!
ஏக்கமே களைவாய் போற்றி!
ஏந்துகூர் மழுவாய் போற்றி!
ஏந்தலே போற்றி! போற்றி!

ஏத்துவார் ஏத்தே போற்றி!
ஏதிலார் புகழே போற்றி!
ஏர்முனைச் செல்வா போற்றி!
ஏற்றமே தருவாய் போற்றி!

ஐம்பூத வடிவே போற்றி!
ஐம்புலன் அவிப்பாய் போற்றி!
ஐயங்கள் களைவாய் போற்றி!
ஐயனே அரனே போற்றி!

ஓண்குழைக் காதா போற்றி!
ஒப்பிலா மணியே போற்றி!
ஒளியெறி நுதலாய் போற்றி!
ஒள்ளிழை பாகா போற்றி!

ஒப்பிலாய் போற்றி! போற்றி!
கண்கள் மூன்றுடையாய் போற்றி!
கண்ணப்பர் முதலே போற்றி!
கருணைமா கடலே போற்றி!

கறைதிகழ் கண்டா போற்றி!
காமனை எரித்தாய் போற்றி!
காலனை கடிந்தாய் போற்றி!
கடவுளே போற்றி! போற்றி!

சிவமெனும் பொருளே போற்றி!
செவ்வொளி வடிவே போற்றி!
தவநிலை முடிவே போற்றி!
தண்பதம் தருவாய் போற்றி!

பவலமெலாம் தவிர்ப்பாய் போற்றி!
பரமெனும் பொருளே போற்றி!
புலியூரான் உளத்தாய் போற்றி!
புரந்து அருள்வாய் போற்றி!

புண்ணியா போற்றி! போற்றி!
புனர் ஜன்மம் தந்தோனே போற்றி!
புகழ் தருவோனே போற்றி!
பூமி நாயகனே இறைவா போற்றி!

மலையான் மருமானே போற்றி!
மலைவாழ் நாயகனே போற்றி!
மாதா வானவனே இறைவா போற்றி!
மகத்தா னாவனே போற்றி! போற்றி!

வண்ண நீல வடிவானவனே போற்றி!
வடிவம் பல கொண்டவனே போற்றி!
வாழ வழி காட்டுபவனே போற்றி!
வாழும் இறைவா போற்றி! போற்றி!

5.“போற்றி”- மனத்தின் இருள் நீங்கி நல்லெண்ணங்கள் மலர - தினமும் / நேரம் கிடைக்கும் போது

கைதார வல்ல கடவுள் போற்றி!
ஆடக மதுரை யரசே போற்றி!
கூடல் இலங்கு குருமணி போற்றி!
தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி!

இன்றெனக் காரமுதானாய் போற்றி!
மூவா நான்மறை முதல்வா போற்றி!
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி!
மின்னா ருருவ விகிர்தா போற்றி!

கல்நார் உரித்த கனியே போற்றி!
காவாய் கனகக் குன்றே போற்றி!
ஆவா என் தனக்கு அருளாய் போற்றி!
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி!

இடரைக் களையும் எந்தாய் போற்றி!
ஈச போற்றி! இறைவ போற்றி!
தேசப் பளிங்கின் திரளே போற்றி!
அரசே போற்றி! அமுதே போற்றி!
விரைசேர் சரண விகிர்தா போற்றி!

வேதி போற்றி! விமலா போற்றி!
ஆதி போற்றி! அறிவே போற்றி!
கதியே போற்றி! கனியே போற்றி!
நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி!
உடையாய் போற்றி! உணர்வே போற்றி!

கடையேன் அடைமை கண்டாய் போற்றி!
ஐயா போற்றி! அணுவே போற்றி!
சைவா போற்றி! தலைவா போற்றி!
குறியே போற்றி! குணமே போற்றி!
நெறியே போற்றி! நினைவே போற்றி!

வானோர்க்கு அரிய மருந்தே போற்றி!
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி!
மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை
ஆழாமே அருள் அரசே போற்றி!
தோழா போற்றி துணைவா போற்றி!

வாழ்வே போற்றி! என் வைப்பே போற்றி!
முத்தா போற்றி! முதல்வா போற்றி!
அத்தா போற்றி! அரனே போற்றி!
உரையுணர்வு இறந்த ஒருவ போற்றி!
விரிகடல் உலகின் விளைவே போற்றி!

அருமையிலெளிய அழகே போற்றி!
கருமுகிலாகிய கண்ணே போற்றி!
மன்னிய திருவருள் மலையே போற்றி!
என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைத்தசேவக போற்றி!

தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி!
அழிவிலா ஆனந்த வாரி போற்றி!
அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி!
முழுவதும் இறந்த முதல்வா போற்றி!
மனோர் நோக்கி மணாளா போற்றி!

வானகத்து அமரர் தாயே போற்றி!
பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி!
நீரிடை நான்காய் திகழ்ந்தாய் போற்றி!
தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி!
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி!

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி!
அளிபவர் உள்ளத்து அமுதே போற்றி!
கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி!
நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி!
இடைமருது உறையும் எந்தாய் போற்றி!

சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி!
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி!
சீரார் திருவையாறா போற்றி!
அண்ணா மலைஎம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி!

ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி!
பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி!
பராய்த்துறை மேவிய பரனே போற்றி!
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி!
மற்றோர் பற்றிங்கு அறியேன் போற்றி!

குற்றாலத்தெம் கூத்தா போற்றி!
கோகழிமேவிய கோவே போற்றி!
ஈங்கோய் மலைஎம் எந்தாய் போற்றி!
பாங்கார் பழனத் தழகா போற்றி!
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி!

அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி!
இத்தி தன்னின் கீழிரு மூவர்க்கு 
அத்திக்கு அருளிய அரசே போற்றி!
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கு இறைவா போற்றி!

ஏனக் குருளைக்கு அருளினை போற்றி!
மானக் கயிலை மலையாய் போற்றி!
அருளிட வேண்டும் அம்மான் போற்றி!
இருள்கெட அருளும் இறைவா போற்றி!
தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி!

களங்கொளக் கருத அருளாய் போற்றி!
அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி!
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி!
அத்தா போற்றி! ஐயா போற்றி!
நித்தா போற்றி! நிமலா போற்றி!

பக்தா போற்றி! பவனே போற்றி!
பெரியாய் போற்றி! பிரானே போற்றி!
அரியாய் போற்றி! அமலா போற்றி!
மறையோர் கோல நெறியே போற்றி!
முறையோ தரியேன் முதல்வா போற்றி!

உறவே போற்றி! உயிரே போற்றி!
சிறவே போற்றி! சிவமே போற்றி!
மஞ்சா போற்றி! மணாளா போற்றி!
பஞ்சு ஏர் அடியாள் பங்கா போற்றி! 
அலைந்தேன் நாயேன் அடியேன் போற்றி!

இலங்கு சுடர் எம் ஈசா போற்றி!
கவைத்தலை மேவிய கண்ணே போற்றி!
குவைப்பதி மலிந்த கோவே போற்றி!
மலைநாடுடைய மன்னே போற்றி!
கலையாரரிகே சரியாய் போற்றி!

திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி!
பெருப்பமர் பூவணத் தரனே போற்றி!
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி!
மருவிய கருணை மலையே போற்றி!
துரியமும் இறந்த சுடரே போற்றி!

தெரிவு அரிதாகிய தெளிவே போற்றி!
தோளா முத்தச் சுடரே போற்றி!
ஆளானவர்கட்கு அன்பா போற்றி!
ஆரா அமுதே அருளே போற்றி!
பேராயிரம் உடைய பெம்மான் போற்றி!

தாளி அறுகின் தாராய் போற்றி!
நீளொளியாகிய நிருத்தா போற்றி!
சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி!
சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி!
மந்திர மாமலை மேயாய் போற்றி!

எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி!
புலிமுலை புல்வாய்க்கு அருளினை போற்றி!
அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி!
கருங் குருவிக்கன்று அருளினை போற்றி!
இரும்புலன் புலர இசைந்தனை போற்றி!

படியுறப் பயின்ற பாவக போற்றி!
அடியொடு நடுவீறு ஆனாய் போற்றி!
நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல்
பரகதி பாண்டியர்கு அருளினை போற்றி!
ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி!

செழுமலர்ச் சிவபுரத்து அரசே போற்றி!
கழுநீர் மாலைக் கடவுள் போற்றி!
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி!
பிழைப்பு வாய்ப்பு ஒன்றறியா நாயேன்
குழைத்தசொல் மாலை கொண்டருள் போற்றி!

புரம்பல எரித்த புராண போற்றி!
பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி!
போற்றி! போற்றி! புயங்கப் பெருமான்
போற்றி! போற்றி! புராண காரண
போற்றி! போற்றி! சயசய போற்றி!

6.“துவாதச லிங்கங்கள் துதி” - ஜோதிர்லிங்கங்கள் துதி- ஆதிசங்கரர் -சிவன் அருள் கிடைக்க- தினமும்

பரிசுத்தமானதும், மிக்க அழகானதுமான சௌராஷ்டிர தேசத்தில் பக்தியை அளிப்பதற்காக கருணையாய் அவதாரம் செய்தவரும், சந்திரகலையை சிரோபூஷணமாக கொண்டவரும் ஜோதிர்மயமாக இருக்கிறவருமான சோமநாதர் என்ற லிங்கத்தை சரணமாக அடைகிறேன்.

நிகராகக் கூறப்படும் மலைகளுள் பெரியதானதும் தேன்கள் எப்போதும் சான்னித்தமாக இருக்கப்படுகிறதுமான ஸ்ரீசைலம் எனும் இடத்தில் சந்தோஷமாக வசிக்கிறவரும், சம்சார சாகரத்திற்கு அணைபோல் உள்ளவருமான மல்லிகார்ஜுனர் என்ற லிங்கத்தை வணங்குகிறேன்.

அவந்திகா நகரத்தில் சாது ஜனங்களுக்கு முக்தி அளிப்பதற்காக அவதாரம் செய்தவரும், தேவர்களுக்கு ஈசனுமான மஹாகாலேஷ்வரன் என்ற லிங்கத்தை, அகால மரணம் ஏற்படாமல் இருக்க வேண்டி நமஸ்கரிக்கின்றேன்.

காவேரி, நர்மதை இவ்விரண்டின் பரிசுத்தம்மான சங்கமத்தின் சமீபத்தில், மாந்தாத்ருபுரத்தில் ஸஜ்ஜனங்களை கரை ஏற்ற வேண்டி வசிக்கிறவரும், ஓம்காரேஸ்வர லிங்கம் என்று பிரசித்தி பெற்றதும் அத்விதீயருமான ஸ்ரீ பரமேஸ்வரனைத் துதிக்கின்றேன்.

ஈசான-வடகிழக்கு திக்கில் ப்ராஜ்வலிகா நிதானத்தில்- ருத்ரபூமியில் வசிக்கிறவரும், பார்வதி தேவியுடன் கூடியவரும், தேவர்கள், அசுரர்கள் இவர்களால் பூஜிக்கப்பட்ட பாத பத்மங்களை உடையவருமான ஸ்ரீவைத்யநாதர் என்ற லிங்கத்தை நான் வணங்குகின்றேன்.

தென்திசையில் மிக்க அழகான சதங்கம் எனும் நகரத்தில் பலவிதமான சமபத்துக்களுடன் அலங்கரித்த அங்கங்களுடன் கூடியவரும், சிறந்த பக்தியையும் மோக்ஷத்தையும் அளிக்கிறவருமான ஸ்ரீநாகேஷ்வரர் என்ற லிங்கத்தை சரண் அடைகின்றேன்.

இமயமலையில் தாழ்வான பிரதேசத்தில் கேதாரம் என்ற சிகரத்தில் ரமிக்கிறவரும், முனிசிரேஷ்டர்களாலும் தேவர்கள், அசுரர்கள், யஷர்கள், நாகர்கள் முதலியவர்களாலும் எப்போதும் பூஜிக்கப்படுகிறவரும் அத்விதீயருமான கேதாரேஸ்வரர் என்றலிங்கத்தை துதிக்கின்றேன்.

பரிசுத்தமான சஹயமலையின் சிகரத்தில் கோதாவரி நதிக்கரையில் சுத்தமான இடத்தில் வசிப்பவரான எவரை தரிசனம் செய்வதால் பாவங்கள் விலகுகின்றனவோ அந்த த்ரியம்பகேஸ்வரர் என்ற லிங்கத்தை துதிக்கின்றேன்.

தாமிரபரணி நதி சேரும் சமுத்திரக்கரையில் கணக்கற்ற பாணங்களைக் கொண்டு அணைகட்டி ஸ்ரீராமனால் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்ட அந்த ராமேஸ்வரர் எனும் லிங்கத்தை நான் நியதியாய் வணங்குகின்றேன்.

டாகினீ, சாகினீ முதலிய புதகணங்களால் பூஜிக்கப்படுகிறவரும் பக்தர்களுக்கு ஹிதத்தை அளிக்கிறவரும், பீமேஸ்வரலிங்கம் என்று பிரசித்தி பெற்றவருமான அந்த பரமேஸ்வர லிங்கத்தை வணங்குகின்றேன்.

காசியில் ஆனந்தவனத்தில் ஆனந்தத்துடன் வசிப்பவரும், சந்தோஷக் குவியலாய் விளங்குகிறவரும், பாபக் குவியல் அற்றவரும், அனாதரர்களுக்கு நாதனும், வாராணாசி சேத்ர நாயகனும் ஆன ஸ்ரீவிஸ்வநாதர் என்ற லிங்கத்தை சரணமாக அடைகின்றேன்.

அழகாயும் விசாலமாயும் உள்ள இலாபுரம் என்ற இடத்தில் விளங்குகிறவரும், உலகத்தில் மிகச் சிறந்தவரும் பெரிய உதாரஸ்வரூபத்தை உடையவரும் க்ருஷ்ணேச்வர லிங்கம் என்று பெயர் பெற்றவரும் ஆகிய பரமேஸ்வரனை சரணம் அடைகின்றேன்.

7.“சிவ அகவல்”- வாழ்வில் ஏற்றமடைய, குறை, குற்றங்கள் நீங்க- தினமும்/ நேரம் கிடைக்கும் போது.

அகர முதல்வனென்று இருப்போய் போற்றி!
ஆல நீழல் அமர்ந்தோய் போற்றி!
இளமான் இடக்கரம் ஏற்றோய் போற்றி!
ஈசானமெனும் முகத்தோய் போற்றி!
உருத்திர மந்திரம் உவப்போய் போற்றி!
ஊழி முற்றினும் நிலைப்போய் போற்றி!
எருக்க மலரினையணிந்தாய் போற்றி!
ஏறுமீதேறி வருவோய் போற்றி!

ஐம்பெரும் பூதம் படைத்தோய் போற்றி! 
ஒப்பார் மிக்கார் இல்லோய் போற்றி!
ஓங்காரமெனத் திகழ்வோய் போற்றி!
ஒளவிய மற்றோர்க் கணித்தோய் போற்றி!
அஃகாப் பேரருள் பொழிவோய் போற்றி!
கண்ணுக்கு இனிய வடிவோய் போற்றி!
காமனைக் காய்த்த விழியோய் போற்றி!
கிரிதனை வில்லென ஏற்றோய் போற்றி!

கீதம் ஓர்க்கும் செவியோய் போற்றி!
குறையேதில்லாப் பெரியோய் போற்றி!
கூத்தம் பலந்தனில் ஆடுவோய் போற்றி!
கெடுமதி அரக்கனைச் செற்றோய் போற்றி!
கேழில்மா பரஞ்சோதியாய் போற்றி!
கைத்தலம் மழுவொன் றேந்தியோய் போற்றி!
கொன்றை வேய்ந்த சடையோய் போற்றி!
கோதில் நஃல்லறம் ஓதுவோய் போற்றி!

கௌரீ தன்னை மணந்தோய் போற்றி!
ஙப்போல் குழைவார்க் கருள்வோய் போற்றி!
சக்தியோஜாத முகத்தோய் போற்றி!
சான்றோர் தொழுதிடும் சுழலோய் போற்றி!
சிற்றம்பலத்தே ஆடுவாய் போற்றி!
சீர்மிகு வாசகம் உவந்தோய் போற்றி!
சுத்த நிர்க்குணச் சோதியோய் போற்றி!
சூதிலார்க்குச் சேயோய் போற்றி!

செந்தழல் அன்ன மேனியாய் போற்றி!
சேண்திகழ் கயிலை உறைவோய் போற்றி!
சைவப் பேரொளி பொழிவோய் போற்றி!
சொற்பதம் கடந்த இறையோய் போற்றி!
சோதித் தூணென நீண்டோய் போற்றி!
சௌபாக்கியமெலாம் நல்குவாய் போற்றி!
ஞயம்பட மொழிவார்க்கினியோய் போற்றி!
ஞானநுதல் விழி பெற்றோய் போற்றி!

ஞிமுறு மிழற்றும் தாரோய் போற்றி!
தத்புருஷமெனும் முகத்தோய் போற்றி!
தாயினும் சாலப் பரிவோய் போற்றி!
திலகவதிக்கருள் புரிந்தோய் போற்றி!
தீயினை ஏற்ற கரத்தோய் போற்றி!
துடிகொண்டெழுத்தெலாம் ஒலித்தோய் போற்றி!
தூநீர்க் கங்கை மிலைந்தோய் போற்றி!
தென்பால் நோக்கி அமர்ந்தோய் போற்றி!

தேவ தேவனென்றிருப்போய் போற்றி!
தைப்பூசந்தனை உவப்போய் போற்றி!
தொழுவார்க்கிரங்கி அருள்வோய் போற்றி!
தோன்றாத்துணையென நிற்போய் போற்றி!
நந்தன் பத்தியை மெச்சியோய் போற்றி!
நாவரசர்க்கருள் பூத்தோய் போற்றி!
நிதிபதியொடு நட்புடையோய் போற்றி!
நீக்கமற்றெங்கும் நிறைந்தோய் போற்றி!

நுணக்கரு நுட்பென இருப்போய் போற்றி!
நூறாயிரம்பெயர் கொண்டோய் போற்றி!
நெய்தயிர் ஆன்பால் ஆடுவோய் போற்றி!
நேரிய அறந்தனை உரைத்தாய் போற்றி!
நைவளப் பண்கேட்டுவப்போய் போற்றி!
நொடிக்குள் முப்புரம் செற்றோய் போற்றி!
நோக்கரு நோக்கென இருப்போய் போற்றி!
பரிமேல் பரிவுடன் வந்தொய் போற்றி!

பார்பதம் அண்டம் கடந்தோய் போற்றி!
பிட்டுண்டடி யுண்டிருந்தோய் போற்றி!
பீடார் மதுரை உறைவோய் போற்றி!
புனித வதியினை ஆண்டோய் போற்றி!
பூவுள் நாற்றம் போன்றோய் போற்றி!
பொய்மழை எனவருள் பொழிவோய் போற்றி!
பேரானந்தம் விளைப்போய் போற்றி! 
பையரவம் இடை அசைத்தோய் போற்றி!

பொன்னென மின்னும் மேனியாய் போற்றி!
போக்கும் வரவும் இல்லோய் போற்றி!
பௌவம் சூழ்பார் காப்போய் போற்றி!
மலரவன் காணா முடியோய் போற்றி!
மாலவன் காணாக் கழலோய் போற்றி!
மின்னிடுஞ் சூலம் ஏற்றோய் போற்றி!
மீளா வுலகு தருவோய் போற்றி!
முத்தமிழ் போற்றும் புலவோய் போற்றி!

மூவா மேனி அழகோய் போற்றி!
மெய்யெலாம் வெண்ணீறு அணிந்தோய் போற்றி!
மேதகு காஞ்சி உறைந்தோய் போற்றி!
மைவளர் நஞ்சமிடற்றோய் போற்றி!
மொய்வலி முயலகன் அழுத்தினோய் போற்றி!
மோனத் திருந்தறம் உரைத்தோய் போற்றி!
மௌவல் மாலை பூண்டோய் போற்றி!
மணிவண்ணா போற்றி!

யாணை முகத்தினைப் படைத்தோய் போற்றி!
வந்திப் பார்க்கருள் நல்குவோய் போற்றி!
வாமதேவ முகத்தோய் போற்றி!
விசயற் கம்பு தந்தோய் போற்றி!
வீரி தன்னை பயந்தோய் போற்றி!
வெற்றி வேலனைப் பயந்தோய் போற்றி!
வேடன் விழிதர ஆண்டோய் போற்றி! 
வையை வெள்ளம் மிகுத்தோய் போற்றி!

அஃகா இன்பம் அளிப்போய் போற்றி!
ஒளடதம் நோய்க்கெனத் திகழ்வோய் போற்றி!
ஓருரு ஒருபெயர் இல்லோய் போற்றி!
ஒருவனென்ன ஒளிர்வோய் போற்றி!
ஐந்திணை நிலமெலாம் உரியோய் போற்றி!
ஏழிசை மடுக்கும் செவியோய் போற்றி!
என்பு மாலை பூண்டோய் போற்றி!
ஊனினை உருக்கெழில் உருவோய் போற்றி!

உலக உயிர்க்கெலாம் விழியோய் போற்றி!
ஈறு நடுமுதல் ஆனோய் போற்றி!
இசைவல் காழியன் ஆண்டோய் போற்றி!
ஆரூரன் தனை ஆண்டோய் போற்றி!
அகோர முகந்தனை யுடையோய் போற்றி!
போற்றி! போற்றி! பரமா போற்றி!

சரணம் சரணம் சிவனே சரணம்!
அரணாம் அரணம் நீயே அரணம்!
என் பிழையாவும் பொறுத்திடு ஐயா!
என் கல் மனத்தைக் குழைத்திடு ஐயா!
என்னை இன்னே ஆட்கொள் ஐயா!
சரணம் சரணம் சரணம் சிவனே!

8.“108 சிவ அஷ்டோத்ர நாமா நமக”- இறையருள் பெற, மனத்தின் இருள் நீங்க நல்லெண்ணங்கள் மலர - தினமும் / நேரம் கிடைக்கும் போது

ஓம் சிவாய நமக!
ஓம் மஹேச்வராய நமக!
ஓம் சம்பவே நமக!
ஓம் பினாகிநே நமக!
ஓம் சசிசேகராய நமக!

ஓம் வாமதேவாய நமக!
ஓம் விருபாக்ஷாய நமக!
ஓம் கபர்தினே நமக!
ஓம் நீலலோஹிதாய நமக!
ஓம் சங்கராய நமக!

ஓம் சூலபாணயெ நமக!
ஓம் கட்வாங்கிநே நமக!
ஓம் விஷ்னுவல்லாபாய நமக!
ஓம் சிபி விஷ்டாய நமக!
ஓம் அம்பிகா நாதாய நமக!
ஓம் ஸ்ரீகண்டாய நமக!
ஓம் பக்தவத்ஸலாய நமக!
ஓம் பவாய நமக!
ஓம் சர்வாய நமக!
ஓம் திரிலோககேசாய நமக!

ஓம் சதிகண்டாய நமக!
ஓம் சிவாப்ரியாய நமக!
ஓம் உக்ராய நமக!
ஓம் கபாலிநே நமக!
ஓம் காமாரயே நமக!

ஓம் அந்தகாஸுர ஸூதநாய நமக!
ஓம் கங்காதராய நமக!
ஓம் லலாடாக்ஷாய நமக!
ஓம் காலகாலாய நமக!
ஓம் க்ருபாநிதயே நமக!

ஓம் பீமாய நமக!
ஓம் பரசுஹஸ்தாய நமக!
ஓம் ம்ருகபாணயே நமக!
ஓம் ஜடாதராய நமக!
ஓம் கைலாஸவாஸிநெ நமக!

ஓம் கவசிநே நமக!
ஓம் கடோராய நமக!
ஓம் திரிபுராந்தகாய நமக!
ஓம் வ்ருஷாங்காய நமக!
ஓம் வ்ருஷபாரூடாய நமக!

ஓம் பஸ்மோத்தூவித விக்ரஹாய நமக!
ஓம் ஸாமப்ரியாய நமக!
ஓம் ஸ்வரமயாய நமக!
ஓம் த்ரயீமூர்த்தயே நமக!
ஓம் அநீச்வராய நமக!

ஓம் ஸர்வஜ்ஞாய நமக!
ஓம் பரமாத்மநே நமக!
ஓம் ஸேரமஸூர்யாக்நி லோசனாய நமக!
ஓம் ஹவிஷே நமக!
ஓம் யக்ஞ மாயாய நமக!

ஓம் ஸோமாய நமக!
ஓம் பஞ்சவக்த்ராய நமக!
ஓம் ஸதாசிவாய நமக!
ஓம் விச்வேச்வராய நமக!
ஓம் வீரபத்ராய நமக!

ஓம் கணநாதாய நமக!
ஓம் ப்ரஜாபதயே நமக!
ஓம் ஹிரண்ய ரேதஸே நமக!
ஓம் துர்தர்ஷாய நமக!
ஓம் கிரீசாய நமக!

ஓம் கிரிசாய நமக!
ஓம் அநகாய நமக!
ஓம் புஜங்க பூஷனாய நமக!
ஓம் பர்க்காய நமக!
ஓம் கிரிதன்வநே நமக!

ஓம் கிரிப்ரியா நமக!
ஓம் க்ருத்தி வாஸஸே நமக!
ஓம் புராராதயே நமக!
ஓம் பகவதே நமக!
ஓம் ப்ரமதாதியாய நமக!

ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நமக!
ஓம் ஸூக்ஷ்மதனவே நமக!
ஓம் ஜகத்வ்யாபினே நமக!
ஓம் ஜகத் குரவே நமக!
ஓம் வ்யோமகேசாய நமக!

ஓம் மஹா ஸேந ஐநகாய நமக!
ஓம் சாருவி க்ரமாய நமக!
ஓம் ருத்ராய நமக!
ஓம் பூதபூதயே நமக!
ஓம் ஸ்தாணவே நமக!

ஓம் அஹிர்புத்ன்யாய நமக!
ஓம் திகம்பராய நமக!
ஓம் அஷ்டமூர்த்தயே நமக!
ஓம் அநேகாத்மநே நமக!
ஓம் ஸாத்விகாய நமக!

ஓம் சுத்த விக்ரஹாய நமக!
ஓம் சாத்வதாய நமக!
ஓம் கண்டபரசவே நமக!
ஓம் அஜாய நமக!
ஓம் பாசவிமோசகாய நமக!

ஓம் ம்ருடாய நமக!
ஓம் பசுபதேயே நமக!
ஓம் தேவாய நமக!
ஓம் மஹாதேவாய நமக!
ஓம் அவ்யயாயே நமக!

ஓம் ஹரயே நமக!
ஓம் பஷதந்தபிதே நமக!
ஓம் அவ்யக்ராய நமக!
ஓம் பகதேத்ரபிதே நமக!
ஓம் தக்ஷாத்வரஹராய நமக!

ஓம் ஹராயே நமக!
ஓம் அவ்யக்தாய நமக!
ஓம் ஸஹஸ்ராக்ஷாய நமக!
ஓம் ஸஹஸ்ரபதே நமக!
ஓம் அபவர்க்கப்ரதாய நமக!

ஓம் அனந்தாய நமக!
ஓம் தாரகாய நமக!
ஓம் பரமேச்வராய நமக!

9.“சிவ கவசம்”- வேண்டுவன கிடைக்க, ஆரோக்கியம் அடைய- தினமும்/ நேரம் கிடைக்கும் போது.

அமுதமொழியாள் உமையவள் கணவ! 
அரிதரி தரிதனும் மனித்தப் பிறவி
அவனியில் எடுத்துழல் அடியேன் என்னை
அஞ்சலென்றருளிக் காத்திட வருக!
அக்கு வடந்தனை அணிந்தோய் வருக!
அங்கி அங்கை ஏற்றோய் வருக!
அச்சுறு புரந்தனை எரித்தோய் வருக!
அஞ்சலி புரிவோர்க்கு அருள்வோய் வருக!

அட்டமா குணங்கள் செறிந்தோய் வருக! 
அண்ணா மலைதனில் உறையோய் வருக!
அத்தி உரிதனை உடுத்தோய் வருக!
அந்தி வண்ணம் கொண்டோய் வருக!
அப்பும் ஆரும் மிலைந்தோய் வருக!
அம்மை அப்பனாம் வடிவோய் வருக!
அய்ந்தினை நிலமெலாம் உரியோய் வருக!
அர்ச்சனை ஆற்றுவார்க் கருள்வோய் வருக!

அல்லற் பிறவி அறுப்போய் வருக!
அவ்வியத் தக்கனை ஒறுத்தோய் வருக!
அள்ளிப் பருகும் அமுதோய் வருக!
அற்பொழுதெரி கொண்டாடுவோய் வருக!
மத்தம் மதியம் கூவிளம் அறுகு
தும்பை எருக்கு எழில்நீர் கங்கை
பொன்னெனப் பூத்துக் குலுங்கும் கொன்றை
யாவும் மிலைந்த முடியோய் வருக!

அன்னமென் நடையாள் வேட்டோய் வருக!
கண்டு தண்டாக் கவின் மிகு பொலிவு
மிளிரும் ஒளிமிகு முகத்தோய் வருக!
செங்கதிர் பரப்பும் ஞாயிறு வலப்பால்
தன்கதிர் பரப்பும் மதியம் இடப்பால்
தழலென ஞானம் பொழிவிழி நுதலில்
கொண்டு பொலியும் கண்ணா வருக!
விழுந்து பரந்த சடையோய் வருக!

நீறு பொலியும் நுதலோய் வருக!
குழைவளர் இசைநுகர் செவியோய் வருக!
கடல் நஞ்சேற்ற கழுத்தோய் வருக!
கல்லினும் வலிய தோளோய் வருக!
கொன்றை தவழும் மார்போய் வருக!
செறுநர் ஒறுக்கும் கரத்தோய் வருக!
அரவம் அசைத்த இடையோய் வருக!
உறுநர்த் தாங்கும் அடியோய் வருக!

குவளைக் கண்ணி கூறோய் வருக!
அடல்விடை மீதினிது அமர்ந்தோய் வருக!
அடியேன் என்னைக் காத்தற் பொருட்டுச் 
சூலம் சுழற்றி இன்னே வருக!
உயர்தனிச் சூலமென் உச்சி காக்க!
பிழையாச் சூலமென் பின்தலை காக்க!
முனைமலி சூலமென் முந்தலை காக்க! 
கூர்மலி சூலமென் குழல் காக்க!

நுண்ணிய சூலமென் நுதலினைக் காக்க!
புகழ்மலி சூலமென் புருவம் காக்க!
இலைமலி சூலமென் இடவிழி காக்க!
வலமலி சூலமென் வலவிழி காக்க!
இனையில் சூலமென் இமைகள் காக்க!
இகல்மலி சூலமென் இடச்செவி காக்க!
வலிமலி சூலமென் வலச்செவி காக்க!
கதிர்மலி சூலமென் கன்னம் காக்க!

நலிமலி சூலமென் நாசி காக்க!
வாட்டும் சூலமென் வாயினைக் காக்க!
நீண்ட சூலமென் நாவைக் காக்க!
பரமன் சூலமென் பற்களைக் காக்க!
ஊறுசெய் சூலமென் உதடுகள் காக்க!
மின்னுஞ் சூலமென் மிடறு காக்க!
பீடுடைச் சூலமென் பிடரி காக்க!
தோலாச் சூலமென் தோளினைக் காக்க!

மாறில் சூலமென் மார்பினைக் காக்க!
வச்சிரச் சூலமென் வயிற்றினைக் காக்க!
முக்கணன் சூலமென் முதுகினைக் காக்க!
வீறுடைச் சூலமென் விலாவினைக் காக்க!
அழுந்துஞ் சூலமென் அரைதனைக் காக்க!
பிளந்திடுஞ் சூலமென் பிருட்டம் காக்க!
கருத்திடுஞ் சூலமென் கழிகுறி காக்க!
கடுக்கும் சூலமென் கொப்பூழ் காக்க!

முத்தலைச் சூலமென் முழங்கை காக்க!
முனைமலி சூலமென் முன்கரம் காக்க!
அழித்திடுஞ் சூலமென் அங்கை காக்க!
புண்விளை சூலமென் புறங்கை காக்க!
பெம்மான் சூலமென் பெருவிரல் காக்க!
கூத்தன் சூலமென் குறிவிரல் காக்க!
நடுக்குஞ் சூலமென் நடுவிரல் காக்க!
அம்பலன் சூலமென் அணிவிரல் காக்க!

சிவன் திருச் சூலமென் சிறுவிரல் காக்க!
தொளைக்குஞ் சூலமென் தொடைதனைக் காக்க!
முந்துறுஞ் சூலமென் முழந்தாள் காக்க!
கனன்றெழுஞ் சூலமென் கணுக்கால் காக்க!
குலைக்குஞ் சூலமென் குதிகால் காக்க!
பாய்ந்திடுஞ் சூலமென் பாதம் காக்க!
நச்சுச் சூலமென் நரம்பெலாம் காக்க!
குத்திடும்ஞ் சூலமென் குருதி காக்க!

இடர்தரு சூலமென் இரைப்பை காக்க!
வதைக்குஞ் சூலமென் வளிப்பை காக்க!
குதறுஞ் சூலமென் குடரினைக் காக்க!
எத்துஞ் சூலமென் என்பெலாம் காக்க!
மூளெரிச் சூலமென் மூட்டெலாம் காக்க!
நாதன் சூலமென் நாடி காக்க!
மூவிலைச் சூலமென் மூளை காக்க!
மாய்க்குஞ் சூலமென் மேனி காக்க!

வருந்துஞ் சூலமென் வாதம் காக்க!
பிழையாச் சூலமென் பித்தம் காக்க!
சினந்திடுஞ் சூலமென் சிலேத்துமம் காக்க!
உலவாச் சூலமென் உயிரைக் காக்க!
உடலுரு பிணியும் உள்ளம் பிணியும் 
உன்னற்கரியா நீயெனைக் காக்க!
வான்மின் பொழுதும் வானிடி பொழுதும்
வான்மதிச் சடையா நீயெனைக் காக்க!

பெய்மழைப் பொழுதும் பொய்மழைப் பொழுதும் 
பெரும்புனற் சடையா நீயெனைக் காக்க!
இளவெயிற் பொழுதும் கடுவெயிற் பொழுதும் 
இளமான் கரத்த நீயெனைக் காக்க!
முன்பனிப் பொழுதும் பின்பனிப் பொழுதும் 
முறுவல் முகத்தா நீயெனைக் காக்க!
நிலவழி ஏகினும் நீர்வழி ஏகினும் 
நிகரில் பண்பா நீயெனைக் காக்க!

வனவழு ஏகினும் வான்வழி ஏகினும்
வரிப்புலியதளா நீயெனைக் காக்க!
மலைப்புறு மலைவழி ஏகுங் காலை
மலையாள் கணவா நீயெனைக் காக்க!
சென்றிடும் பொழுதும் நின்றிடும் பொழுதும்
செவ்வனல் வண்ணா நீயெனைக் காக்க! 
ஆடும் பொழுதும் ஓடும் பொழுதும் 
ஆடல் மன்னா நீயெனைக் காக்க!

அறிதுயிற் பொழுதும் நெடுந்துயிற் பொழுதும்
அறிதற்கரியா நீயெனைக் காக்க!
விழித்திடும் பொழுதும் எழுந்திடும் பொழுதும்
விரிமலர்ப் பாதா நீயெனைக் காக்க!
வடபால் ஏகினும் தென்பால் ஏகினும்
வயித்திய நாதா நீயெனைக் காக்க!
மேற்பால் ஏகினும் கீழ்ப்பால் ஏகினும்
மேதகு நீற்றா நீயெனைக் காக்க!

கோணத் திக்கெலாம் ஏகுங் காலை 
கொடுமழுப் படையா நீயெனைக் காக்க!
மேலே எழும்பினும் கீழே ஆழினும் 
மெய்யுரை நாவா நீயெனைக் காக்க!
புனல்மிகு பாயினும் அனல்மிகு பற்றினும் 
புரம் எரி விழியா நீயெனைக் காக்க!
விண்துலங்கிடினும் மண்துலங்கிடினும் 
விரிபட அரவா நீயெனைக் காக்க!

கேடு விளைவிக்கும் புயல்நனி வீசில் 
கேடிலியப்பா நீயெனைக் காக்க!
காலைப் பொழுதும் மாலை பொழுதும்
கால காலா நீயெனைக் காக்க!
வைகறைப் பொழுதும் மையிருட் பொழுதும்
வைந்நுதிப் படையா நீயெனைக் காக்க! 
ஏற்படு பொழுதும் உச்சிப் பொழுதும்
எண் வடிவீசா நீயெனைக் காக்க!

நாண்மீன் பிறழினும் கோண்மீன் பிறழினும் 
நாரி யண்ணா நீயெனைக் காக்க!
உண்ணும் பொழுதும் பருகும் பொழுதும்
உலக நாதா நீயெனைக் காக்க! 
கனமழை பொழியக் களிமண் செறிந்த
வழுக்கு நிலத்தில் உழலும் பொழுது
வழுவா வண்ணம் கோல் பெற்றாற்போல் 
வயிறு காய் பசிக் காற்றாராகி
யாண்டு நாடினும் உணவில்லை யாகப்
பொல்லா விதிக்கும் போகா வுயிர்க்கும்
நொந்து நொந்து நலியும் பொழுது 
கொளக் கொளக் குறையா அளஅள அஃகா
அமுது தரவல கலன் பெற்றாற்போல் 
நளியிரு முந்நீர் நாவாய் செல்ல
வளிமிகு வீச நாவாய் கவிழ
உய்வழியின்றி நையும் பொழுதில்
உய்வழி காட்டி உளமுவப் பூட்டும் உறுவலி
மாபெரும் புணை பெற்றாற்போல்
அதிர் கடல் தன்னில் அருங்கலந் தானும் 
செல்வழிச் செவ்வனே செல்லுழிச் செல்வழி
அந்தோ வழுவ அந்தி நேர 
மாதிரம் எங்கும் காரிருள் சூழக்
கரையெங்குளதென அறியா நிலையில் 
கரையிங் குளதென நலங்கரை துணையெனப்
பேரொளி பாய்ச்சும் கலங்கரை விளக்கம்
கண்ணுற்றாற்போல் எண்ணரு பிறவியில்
பலப்பல தாயரும் தந்தையாரும் 
பெற்றுப் பெற்றுப் பேதை யானும்
உழைக்க லாகாத் துயருள் உழல 
ஊன்று கோலென உறுபெரும் புணையெனக்
கலங்கரை விளக்கெனப் பெரும்பிணி மருந்தென 
நின் திருப்பாதம் காணப் பெற்றேன்!

நின்னருளாலே நின்தாள் பற்றினேன்!
நீயலால் இங்கு மெய்த் தாதை யுண்டோ!
உமையெலால் இங்கு மெய் அன்னை யுண்டோ!
திருவடி யல்லால் துணையும் உண்டோ!
திருநீறல்லால் காப்பும் உண்டோ!
திருமந்திரமலால் படையும் உண்டோ!
திருவருள் அல்லால் நிழலும் உண்டோ!
இந்நாள் காறும் பாவியான் இழைத்த
மாபெரும் பிழையும் சாலப் பொருத்துத்
தோள்திகழ் நீற்றனாய் என்முன் தோன்றிச்
சுந்தர நீற்றை எனக்கணிவித்து 
நாயோன் என்னைத் தூயோன் ஆக்கி
எனை ஆட் கொள்க! எனை ஆட் கொள்க! 
எனை ஆட் கொள்க எம்மான் நீயே!

10.“சிவகவசம்”- பஞ்சமா பாதங்கள், பகைகள், வறுமை நீங்க- விடபமுனி அருளியது-தினமும் /முடிந்தபோது.

பங்கயத் தவிசின் மேவி இருந்துடல் பற்று நீங்கி அங்கு நற்பூத சுத்தி அடைவுடன் செய்த பின்னர் கங்கையைத் தரித்த சென்னிக் கற்பகத் தருவைச் செம்பொற் கொங்கை வெற்பனை பச்சைக் கொடியொடும் உளத்தில் வைத்தே

அகில நாயகனாய் ஞான ஆனந்த ரூபியாகித் துகள் தரும் அனுவாய் வெற்பின் தோற்றமாம் உயிரை எல்லாம் தகவுடன் அவனியாகித் தரிப்பவன் எம்மை இந்த மகிதலம் அதனில் தீமை மருவிடாது அருளிக் காக்க!

குரைபுனல் உருவம் கொண்டு கூழ்தொறும் பயன்கள் நல்கித் தரையிடை உயிர்கள் யாவும் தளர்ந்திடா வண்ணம் காப்போன் நிரைநிரை முகில்கள் ஈண்டி நெடுவரை முகட்டில் பெய்யும் விரைபுனல் அதனுள் வீழ்ந்து விளிந்திடாது எம்மைக் காக்க!

கடையுகம் தன்னில் எல்லா உலகமும் கடவுட் தீயால் நடலை செய்து அமலைதாளம் அறைதர நடிக்கும் ஈசன் இடைநெறி வளை தாபத்தில் எறிதரு சூறைக் காற்றில் தடைபடாது எம்மை இந்தத் தடங்கடல் உலகில் காக்க!

தூய கண் மூன்றினோடு சுடரும்பொன் வதனம் நான்கும் பாயும் மான் மழுவினோடு பகர் வரத அபயங்கள் மேயதிண் புயங்கள் நான்கும் மிளிரும் மின் அனைய தேசும் ஆயதற் புருடன் எம்மைக் குணதிசை அதனில் காக்க!

மான்மழு சூலம்தோட்டி வனைதரும் அக்க மாலை கூன்மலி அங்குசம் தீ தம்ருகம் கொண்ட செங்கை நான்முகம் முக்கண் நீல நள்ளிருள் வண்ணங் கொண்டே ஆன்வரும் அகோர மூர்த்தி தந்திசை அதனில் காக்க!

திவண்மறி அக்கமாலை செங்கையோர் இரண்டும் தாங்க அவிர்தரும் இரண்டு செங்கை வரதத்தோடு அபயம் தாங்கக் கவினிறை வதனம் நான்கும் கண்ணொரு மூன்றும் காட்டும் தவளாமாமேனிச் சத்தியோசாதம் மேல் திசையில் காக்க!

கறைகெழு மழுவும் மானும் அபயமும் கண்ணின் நாமம் அறை தரு தொடையும் செய்ய அங்கைகள் நான்கும் ஏந்திப் பொறைகொள் நான்முகத்தி முக்கட் பொன்னிற மேனியோடு மறைபுகழ் வாமதேவன் வடதிசை அதனில் காக்க!

அங்குசம் கபாலம் சூலம் அணிவரத அபயங்கள் சங்கு மான் பாசம் அக்கம் தமருகம் கரங்கள் ஏந்தித் திங்களில் தவள மேனி திருமுகம் ஐந்தும் பெற்ற எங்கள் ஈசான தேவன் இரு விசிம்பெங்கும் காக்க!

சந்திரமௌலி சென்னி தனிநுதல் கண்ணன் நெற்றி மைந்து உறுபகன் கண் தொட்டோன் வரி விழிகில நாதன் கொந்துணர் நாசி வேதம் கூறுவோன் செவி கபாலி அந்தில் செங்கபோலந் தூய ஐம்முகன் வதனம் முற்றும்

வளமறை பயிலும் நாவன் நாமணி நீலகண்டன் களமடு பினாகபாணி கையினை தருமவாகு கிளர்புயம் தக்கன் யாகம் கெடுத்தவன் மார்பு தூய ஒளி தரு மேரு வில்லி உதர மன்மதனைக் காய்ந்தோன்

இடை இபமுகத்தோன் தாதை உந்தி நம் ஈசன் மன்னும் புடைவளர் அரை குபேர மித்திரன் பொருவில் வாமம் படர் சகதீசன் மன்னும் பாய்தரும் இடபகேது மிடைதரு கணைக்கால் எந்தை விமலன் செம்பாதம் காக்க!

வருபகல் முதல் யாமத்து மகேசன் பின் இரண்டாம் யாமம் பொறுவறு வாமதேவன் புகன்றிடு மூன்றாம் யாமம் செருமலி மழுவாள் அங்கை திரியம்பகன் நாலாம் யாமம் பெருவலி இடப ஊர்தி பிணியாற இனிது காக்க!

கங்குலின் முதல் யாமத்துக்துக் கலைமதி முடிந்தோன் காக்க! தங்கிய இரண்டாம் யாமம் சானவி தரித்தோன் காக்க! பொங்கிய மூன்றாம் யாமம் புரிசடை அண்ணல் காக்க! பங்கமில் நாலாம் யாமம் கௌரிதன் பதியே காக்க!

அனைத்துள காலம் எல்லாம் அந்தற் கடிந்தோனுள்ளும் தனிப்பெரு முதலாய் நின்ற சங்கரன் புறமும் தானு வனப்புறு நடுவும் தூய பசுபதி மற்றும் எங்கும் நினைத்திடற்கரிய நோன்மைச் சதாசிவ நிமலன் காக்க!

நிற்புழிப் புவன நாதன் ஏகுழி நிமல மேனிப் பொற்பிரமன் ஆதி நாதன் இருப்புழிப் பொருவிலாத அற்புத வேத வேத்தியன் அருந்துயில் கொள்ளும் ஆங்கண் தற்பல சிவன் வழிக்கு சாமள ருத்திரன் காக்க!

மலைமுதல் துருக்கம் தம்மில் புராரி காத்திடுக மன்னும் சிலைவலி வேடரூபன் செறிந்த கானகத்தில் காக்க! கொலையமர் கற்பத் தண்ட கோடிகள் குலுங்க நக்குப் பலபடி நடிக்கும் வீரபத்திரன் முழுதும் காக்க!

பல்லுளைப் புரவித் திண்தேர் படுமதக்களிறு பாய்மா வில்லுடைப் பதாதி தொக்கு மிடைந்திடும் எண்ணில் கோடி கொல்லியன் மாலை வைவேல் குறுகலர் குறுங்காலை வல்லியோர் பங்கன் செங்கை மழுப்படை துணித்துக் காக்க!

தத்துநீர்ப் புணரி ஆடைத் தரணியைச் சுமந்து மானப் பைந்தலை நெடிய பாந்தள் பஃறலை அனைத்துந் தேய்ந்து முத்தலை படைத்த தொக்கும் மூரிவெங்கனல் கொள்சூலம் பொய்த்தொழில் கள்வர் தம்மைப் பொருதழித்து இனிது காக்க!

முடங்களை முதலாய் உள்ள முழுவலிக் கொடிய மாக்கள் அடங்கலம் பினாகம் கொல்க என்றிவை அனைத்தும் உள்ளம் தடம்பட நினைந்து பாவம் செயும் சிவகசம் தன்னை உடன்பட தரிப்பையானால் உலம் பெருகுவுவ தோளாய்

பஞ்ச பாதங்கள் போம் பகைகள் மாய்ந்திடும் அஞ்சலில் மறலியும் அஞ்சி ஆட்செயும் வஞ்சநோய் ஒழிந்திடும் வறுமை தீர்ந்திடும் தஞ்சமென்றிதனை நீ தரித்தல் வேண்டுமால் சிதம்பரம் தனிலாடும் சுந்தரத் தெய்வம்!

11.“நமசிவாய தெய்வம்”- வாழ்வில் ஏற்றமடைய, உயர்வடைய - தினமும்/ நேரம் கிடைக்கும் போது.

நமசிவாயத் தெய்வம் நானறிந்த தெய்வம்!
சமயத்தில் துணைவரும் சதாசிவத் தெய்வம்!
இமையோர்கள் ஏத்தும் எழுல்மிகு தெய்வம்!
உமைதேவி ஓர்பாகமான அன்புத் தெய்வம்!

பிறவிப் பிணிதீர்க்கும் பெருந்துறைத் தெய்வம்!
புலியூரில் வாழும் பொற்சபைத் தெய்வம்!
அறிவாற்சிவனான ஆளுடை அடிகளை
அருகினில் கொண்ட அம்பலத் தெய்வம்!

சிதம்பரம் தனிலாடும் சுந்தரத் தெய்வம்!
பதஞ்சலி புலிப்பாணி போற்றும் தெய்வம்!
நிதம் சுகம் வாழ்வில் வளர்க்கும் தெய்வம்!
பதம் சொல் யாவையும் கடந்திடும் தெய்வம்!

நால்வர் நெஞ்சில் நிலைத்திட்ட தெய்வம்!
பால்போல் மனங்களில் பதிந்திடும் தெய்வம்!
வேல்விழி உமையாள் வணங்கும் தெய்வம்!
கால்தூக்கி ஆடும் கனகசபைத் தெய்வம்!

மறையீறும் அறியா முழுமுதல் தெய்வம்!
மூவருடன் தேவாசுரர் தொழுதிடும் தெய்வம்!
பிறைமதி உயிர்வாழ அருள்தந்த தெய்வம்!
பிறப்பும் இறப்பும் அற்றதோர் தெய்வம்!

ஆதியும் அந்தமும் இல்லாத தெய்வம்!
வேதம் நால்வர்க்கு ஓதிய தெய்வம்!
காதில் குழையுடன் தோடுடைத் தெய்வம்!
ஜோதி வடிவமாய் நின்றிடும் தெய்வம்!

பாண்டியனாய் மதுரையை ஆண்ட நல் தெய்வம்!
மீண்டும் வாரா வழியருள் தெய்வம்!
வேண்டுவோர் வேண்டுபவை வழங்கிடும் தெய்வம்!
தாண்டவ மூர்த்தியாய் திகழ்ந்திடும் தெய்வம்!

ஆலமுண்டு அமரர்க்கு அமுதீந்த தெய்வம்!
மாலுக்கு ஆழியை மகிழ்ந்தளித்த தெய்வம்!
பாலனுக்குப் பாற்கடல் பரிந்தளித்த தெய்வம்!
காலமெல்லாம் நம்மைக் காத்திடும் தெய்வம்!

பரிமேல் அழகனாய் விளங்கிய தெய்வம்!
கரியின் உரியைப் போர்த்திடும் தெய்வம்!
அரிவை பாதியாய் அமைந்திடும் தெய்வம்!
புரியாத பொருளாய் இருந்திடும் தெய்வம்!

கற்றார்க்கும் கல்லார்க்கும் உற்றதோர் தெய்வம்!
பெற்றவனாய் உயிர்களைக் காத்திடும் தெய்வம்!
போற்றினும் தூற்றினும் பொறுத்திடும் தெய்வம்!
ஐம்பெறும் பூதமாய் விளங்கிடும் தெய்வம்!

நம்பினோர்க்கு என்றும் நலமருளும் தெய்வம்!
இம்மைக்கும் மறுமைக்கும் துனைவரும் தெய்வம்!
மும்மை மலமறுத்து முக்திதரும் தெய்வம்!
வாயற்ற உயிர்களையும் வாழ்விக்கும் தெய்வம்!
பேய் என்ற போதினிலும் பொறுத்தருளும் தெய்வம்!
மாயப் பிறப்பறுக்கும் மகாதேவ தெய்வம்!
தாயாக மாறிவரும் தந்தையந்த தெய்வம்!
சிலந்திக்கும் குருவிக்கும் சிறப்பளித்த தெய்வம்!

வலம்தந்த குரங்கிறகு வாழ்வளித்த தெய்வம்!
எலியொன்று திரி தீண்ட உலகாளும் புலியாக
நில உலகில் புகழ்வீச வரம் தந்த தெய்வம்!
கல்லினுள் தேரைக்கும் கதியான தெய்வம்!

கருவான உயிருக்குப் பொருளான தெய்வம்!
சொல்லுக்குள் அடங்காத சிவமெனும் தெய்வம்!
சொல்லிவிடும் போதில் சிறப்பீயும் தெய்வம்!
அடியாரைக் காக்கும் அன்புமிகு தெய்வம்!

நெடியோனும் மலரவனும் காணாத தெய்வம்!
முடிவும் முதலுமாய் இருந்திடும் தெய்வம்!
வடிவென்று ஒன்றும் இல்லாத தெய்வம்!
எண்ணும் எழுத்துமாய் இருந்திடும் தெய்வம்!

இசையும் பொருளுமாய் இருந்திடும் தெய்வம்!
கண்ணின் மணியாய்க் காக்கும் தெய்வம்!
கயிலை என்னும் மலையில் வாழும் தெய்வம்!
உரைகள் கடந்து உயர்ந்திடும் தெய்வம்!

வரையின்றிக் கருணை பொழிந்திடும் தெய்வம்!
விரிசடையில் நதியேற்று உயிர்காத்த தெய்வம்!
இருசுடரைக் கண்களாய் கொண்டிடும் தெய்வம்!
அன்பர்கள் குறைதீர்க்க அவனிவந்த தெய்வம்!

துன்பங்கள் யாவும் இன்பமாக்கும் தெய்வம்!
புன்னகை ஒன்றால் புரமெரித்த தெய்வம்!
இன்னருள் காட்டியே ஏற்றம் தந்த தெய்வம்!
மன்மதன் பிழை பொறுத்து உயிர் அளித்த தெய்வம்!

என்பினை மாலையாய் ஏற்றிடும் தெய்வம்!
இன்னிசைப் பாடலில் இசைந்திடும் தெய்வம்!
பெண்ணாகி ஆணாகி அலியாகும் தெய்வம்!
ஓம்சிவம் சிவமென ஒலிக்கும் சிலம்பில்

நாம்துணை துணையென நவின்றிடும் தெய்வம்!
இராமனும் கண்ணனும் வணங்கிடும் தெய்வம்!
காமரூபம் அந்த சோமநாத தெய்வம்!
வித்தேதும் இன்றியே விளைத்திடும் தெய்வம்!

பக்தரின் சித்தமெல்லாம் பரவிடும் தெய்வம்!
நித்தம் ஒரு கோலம் கொண்டிடும் தெய்வம்!
தத்துவத்தின் பொருளாய்த் திகழ்ந்திடும் தெய்வம்!
பார்மீதில் பலபொருளாய் திகழ்ந்திடும் தெய்வம்!

யாரான போதும் அருள்தரும் தெய்வம்!
பேராயிரம் கொண்ட பெரியதோர் தெய்வம்!
வராத நெறிகாட்டிச் சேர்த்திடும் தெய்வம்!
முன்னைப் பழம்பொருட்கும் முற்பட்ட தெய்வம்!

மூவரையும் யவரையும் படைத்திடும் தெய்வம்!
ஐந்தொழில் புரிந்திடும் ஆதிமுதல் தெய்வம்!
அறிவுக்கு எட்டாத அம்மையப்ப தெய்வம்!
கணபதி என்னும் குழந்தையான தெய்வம்!

மணக்கோலம் கொண்ட சுந்தரேச தெய்வம்!
சின்மய ரூபம் கொண்ட யோகியான தெய்வம்!
பெண்ணொரு பாகம் கொண்ட போகி அந்தத் தெய்வம்!
ஓங்காரப் பொருளாய் ஒளிர்ந்திடும் தெய்வம்!

ஆங்காரம் தவிர்த்திடும் ஏகாந்த தெய்வம்!
நினைக்காத போதும் நலமருள் தெய்வம்!
அனைத்துலகும் ஈன்ற அன்புமயத் தெய்வம்!
நல்லவர் நாடிநிற்கும் நமசிவாய தெய்வம்!

நாளும் என் நெஞ்சில் வளர்ந்திடும் தெய்வம்!
பாலில் நெய்போல பரந்துள்ள தெய்வம்!
வேலனாகி வந்து நின்று விளையாடும் தெய்வம்!
எங்கும் எப்போதும் உடன்வரும் தெய்வம்!

எதிலும் சிவகாமி நிறைந்திடும் தெய்வம்!
ஒருமுறை சொன்னாலும் உயர்வருளும் தெய்வம்!
உள்ளத் தூய்மையைத் தந்திடும் தெய்வம்!
உலகெல்லாம் தானாய் ஓங்கிடும் தெய்வம்!

தென்பால் ஆடும் தெய்வமே பொற்றி போற்றி!
அன்பால் உன்னைத் துதித்தேன் போற்றி போற்றி!
உன்பால் நான் என்றும் போற்றி போற்றி!
எனை ஆட்கொள் ஈசனே போற்றி போற்றி!

12.“சிவ துதி”- வறுமை நீங்க, வளம் பெருக-வசிஷ்டர் அருளியது- தினமும் / வேண்டும் போது.

அனைத்து ஜீவன்களும் முக்தியடைய கைதூக்கி விடும் ஈசனே உன்னை வணங்குகின்றேன்! கர்ம பலன்களைச் சரியாக கொடுப்பவரே, பூத கணங்களின் அதிபதியே, உன்னை வணங்குகின்றேன்! இசையில் மிகுந்த இச்சை கொண்டுள்ளவரே, நந்தியை வாகனமாக கொண்டவரே, யாணைத் தோலை போர்த்தியவரே, மலை போன்ற வறுமை கொண்டோரையும் அந்த வருமைக் கடலிருந்து மீட்டு சந்தோஷம் என்ற வாழ்வை அருள்பவரே, மகேசனே உன்னை வணங்குகின்றேன்!

13.“சித்தபேச ஸ்தோத்திரம்”- நடராஜப்பெருமானை நினைத்து- மனக்கவலை அகல, நன்மைகள் பெருக

திருவாதிரை அபிஷேக காலத்தில் அழகு கோலம் காட்டும் ஈசனே, உமக்கு நமஸ்காரம். சந்தன அபிஷேகத்தால் சந்தோஷத்தை அடைகிறவரே, உலகத்தோர் அனைவரது மனக்கவலையையும் போக்கும் மஹாப் பிரதோஷ புண்ணிய காலத்து நாயகனே, உமக்கு நமஸ்காரம். பிரம்மா, நாராயணன், நந்திகேசர், நாரதமுனி இவர்களுடன் சேர்ந்து நர்த்தனம் செய்யும் நடராஜரே, சித்தபேசனே உம்மை வணங்குகின்றோம்.

14.“108 நடராஜர் போற்றி”-தினமும்

ஓம் நடராஜனே போற்றி! 
ஓம் நடன காந்தனே போற்றி!
ஓம் அழகனே போற்றி!
ஓம் அபய கரனே போற்றி!

ஓம் அகத்தாடுபவனே போற்றி!
ஓம் அஜாபா நடனனே போற்றி!
ஓம் அம்பலவானனே போற்றி!
ஓம் அம்சபாத நடனனே போற்றி!

ஓம் அபிஷேகப் பிரியனே போற்றி!
ஓம் அரவு அணிநாதனே போற்றி!
ஓம் அருள் தாண்டவனே போற்றி!
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி!

ஓம் ஆடலரசனே போற்றி!
ஓம் ஆனந்த தாண்டவனே போற்றி!
ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி!
ஓம் ஆடியடக்குபவனே போற்றி!

ஓம் ஆபத்பாந்தவனே போற்றி!
ஓம் ஆதிஷேசனுக்கு அருளியவனே போற்றி!
ஓம் இசையரசனே போற்றி!
ஓம் இன்னிசைப் பிரியனே போற்றி!

ஓம் ஈரெண்கரனே போற்றி!
ஓம் ஈர்க்கும் நடனனே போற்றி!
ஓம் உடுக்கை கையனே போற்றி!
ஓம் உன்மத்த நடனனே போற்றி!

ஓம் உண்மைப் பொருளே போற்றி!
ஓம் உமா தாண்டவனே போற்றி!
ஓம் ஊழித் தாண்டவனே போற்றி!
ஓம் கங்கணபாணியே போற்றி!

ஓம் கங்காதரனே போற்றி!
ஓம் கமல நடனனே போற்றி!
ஓம் கனக சபயனே போற்றி!
ஓம் கருணா மூர்த்தியே போற்றி!

ஓம் கங்காவதாரண நடனனே போற்றி!
ஓம் கால்மாறி ஆடியவனே போற்றி!
ஓம் காளிகா தாண்டவனே போற்றி!
ஓம் கிங்கிணி பாதனே போற்றி!

ஓம் குக்குட நடனனே போற்றி!
ஓம் கூத்தனே போற்றி!
ஓம் கூழ் ஏற்றவனே போற்றி!
ஓம் கௌரி தாண்டவனே போற்றி!

ஓம் கௌமாரப் பிரியனே போற்றி!
ஓம் சடை முடியனே போற்றி!
ஓம் சத்ரு நாசகனே போற்றி!
ஓம் சந்திர சேகரனே போற்றி!

ஓம் சதுர தாண்டவனே போற்றி!
ஓம் சந்தியா தாண்டவனே போற்றி!
ஓம் சம்ஹார தாண்டவனே போற்றி!
ஓம் சித் சபையனே போற்றி!
ஓம் சிவ சக்தி ரூபனே போற்றி!
ஓம் சுயம்பு மூர்த்தியே போற்றி!
ஓம் சுந்தர தாண்டவனே போற்றி!
ஓம் சூலதாரியே போற்றி!

ஓம் சூழ் ஒளியனே போற்றி!
ஓம் ஞானசுந்தர தாண்டவனே போற்றி!
ஓம் திரிபுராந்தகனே போற்றி!
ஓம் திரிபுர தாண்டவனே போற்றி!

ஓம் திருக் கூத்தனே போற்றி!
ஓம் திருவாதிரை நாயகனே போற்றி!
ஓம் திருநீற்றுப் பிரியனே போற்றி!
ஓம் தில்லை வாணனே போற்றி!

ஓம் துதிப்போர் பிரியனே போற்றி!
ஓம் துயர் துடைப்பவனே போற்றி!
ஓம் தேவ சபையோனே போற்றி!
ஓம் தேவாதி தேவனே போற்றி!

ஓம் நாத ரூபனே போற்றி!
ஓம் நாகராஜனே போற்றி!
ஓம் நாகாபரணனே போற்றி!
ஓம் நாதாந்த நடனனே போற்றி!

ஓம் நிருத்த சபையானே போற்றி!
ஓம் நிலவு அணிவோனே போற்றி!
ஓம் நீறணிந்தவனே போற்றி!
ஓம் நூற்றெட்டு தாண்டவனே போற்றி!

ஓம் பக்தர்க் கெளியவனே போற்றி!
ஓம் பரமதாண்டவனே போற்றி!
ஓம் பஞ்ச சபையானே போற்றி!
ஓம் பதஞ்சலிக்கு அருளியவனே போற்றி!
ஓம் பஞ்சாட்சார ரூபனே போற்றி!
ஓம் பாண்டியனுக்கு இரங்கியவனே போற்றி!
ஓம் பிழை பொறுப்பவனே போற்றி!
ஓம் பிருங்கி நடனனே போற்றி!

ஓம் பிரம்படி பட்டவனே போற்றி!
ஓம் பிறையணி நாதனே போற்றி!
ஓம் பிழம்பேந்தியவனே போற்றி!
ஓம் புலித்தோலணிவானே போற்றி!

ஓம் புஜங்க லலித தாண்டவனே போற்றி!
ஓம் பிரச்னரூபனே போற்றி!
ஓம் பிரதோஷ தாண்டவனே போற்றி!
ஓம் மண் சுமந்தவனே போற்றி!

ஓம் மழுவேந்தியவனே போற்றி!
ஓம் மான்கரனே போற்றி!
ஓம் முக்கண்ணனே போற்றி!
ஓம் முனி தாண்டவனே போற்றி!

ஓம் மும்மலமறுப்பவனே போற்றி!
ஓம் முயலக சம்காரனே போற்றி!
ஓம் முக்தி அருள்பவனே போற்றி!
ஓம் முகமண்டல தாண்டவனே போற்றி!

ஓம் ரஜத சபையனே போற்றி!
ஓம் ரட்சக தாண்டவனே போற்றி!
ஓம் ருத்ர தாண்டவனே போற்றி!
ஓம் ருத்ரட்சதாரியே போற்றி!

ஓம் ருண விமோசனனே போற்றி!
ஓம் லயிப்பவனே போற்றி!
ஓம் லலிதா நாயகனே போற்றி!
ஓம் வலிய ஆட்கொள்வோனே போற்றி!
ஓம் விரிசடையோனே போற்றி!
ஓம் விஞ்ஞகனே போற்றி!
ஓம் வினைதீர்க்கும் எம்மானே போற்றி! 
ஓம் போற்றி! ஓம்போற்றி! ஓம்போற்றி!

15.“சிவசடாட்சரதுதி”- சீரான வாழ்விற்கு- மார்கழி திருவாதிரை, மாசி வளர்பிறை சதுர்த்தசி, சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி வளர்பிறை சதுர்த்தசி நாட்களில்.

ஓங்காரமே பரப்பிரம்மம் அனைத்தும் ஓங்காரத்திலிருந்து தோன்றியவை. ‘அ’ கார ‘உ’ கார ‘ம’ கார சங்கமத்தினால் தோன்றிய ஓங்காரனுக்கு என் நமஸ்காரம்.
தேவதேவரே உமக்கு நமஸ்காரம், பரமேஸ்வரரே உமக்கு நமஸ்காரம். வெள்ளேற்று அண்ணலே நமஸ்காரம். ‘ந’ கார சொரூபரே உமக்கு நமஸ்காரம்
மகாதேவரும் மகாத்மாவும் மகாபாதங்களை அழிப்பவரும், நடராஜனுமாகிய ‘ம’ கார சொரூபனுக்கு நமஸ்காரம்.
க்ஷேமங்களை அளிப்பவரும் சாந்த ரூபரும், ஜகந்நாதனும், எல்லா உலகையும் காப்பவரும், க்ஷேமம் என்ற பதத்திற்கு இறைவனும் ‘சி’ கார சொரூபனும் ஆகியவருக்கு நமஸ்காரம்.
எவருக்கு காளை வாகனமோ, வாசுகி கழுத்தில் அணியாக உள்ளதோ, எவரின் இடப்பக்கம் அன்னை பராசக்தி இருக்கிறாளோ, அந்த ‘வ’ கார சொரூபருக்கு என் நமஸ்காரம்.
எந்த இடத்தில் எல்லாம் சர்வ வியாபியான மகேஸ்வரன் லிங்க உருவில் நாளும் பூஜிக்கப்படுகிறாரோ அங்கெல்லாம் அருளும் அந்த ‘ய’ கார சொரூபருக்கு நமஸ்காரம்.
சக்தியிடம் கூடிய ஓங்காரத்தை யோகிகள் நாளும் தியானித்து, அபீஷ்டங்களையும் மோஷத்தையும் பெறுகிறார்கள். அந்த ஓங்கார சொரூபருக்கு நமஸ்காரம்.
மகாதேவரே பரம மந்திரம், மகாதேவரே மேலான தவம். மகாதேவரே மேன்மையான வித்யை. மகாதேவரே அனைவருக்கும் போக்கிடம். அவருக்கு என் நமஸ்காரம்.
ஓம் நமசிவாய என்றுகூறி லிங்கத்தை வழிபடுவோர்க்கு ஆசைகளைத் தீர்த்து மோஷத்தை அளிக்கவல்ல விச்வ ரூபருக்கு நமஸ்காரம்.
சோமன், நட்சத்திரங்கள், போலன்றி ஸ்வயம் பிரகாசமாயும் எந்தவிதமான தளையோ தடையோ அல்லாதவரும் ஆனவருக்கு நமஸ்காரம்.
மகாதேவரும் பெரும் ஜோதி சொரூபரும், எல்லையற்ற தேஜசை உடையவரும், சாந்த மூர்த்தியும், பிரம்மமும், லிங்கமூர்த்தியுமான சிவனுக்கே நமஸ்காரம்.
ஓங்காரமானவரும், விஷேசமானவரும், துந்துபி வாத்தியத்துக்குரியவரும், ருத்ரரும், பிரதான தெய்வமுமான நம சிவாயத்தை வணங்குகிறேன்.
சர்வ லோகங்களுக்கும் குருவானவரும், எல்லா பாவ நோய்களையும் தீர்க்கும் மருந்தீஸ்வரரும், எல்லா வித்யைகளுக்கும் ஆதார நிதியாக இருப்பவருமான தட்சிணா மூர்த்தியை வணங்குகிறேன்.
ஞானநந்தரும், ஞானரூபரும் அனைத்து ஞானங்களுக்கும் ஆணிவேராய் இருப்பவரும் தவத்தின் பலனைக் கொடுப்பவரும், எல்லாச் செல்வங்களையும் அளிப்பவருமான சநாதனரை- ஆதி முதல்வனை வணங்குகின்றேன்.
சத்யமானவரும், பரபிரம்ம புருஷரும், அர்த்தநாரீஸ்வரரான சிவனின் இடப்பாகமர்ந்த அன்னை கருமை நிறம், அண்ணலின் வடபாகம் சிவப்பு. பவளம் போன்ற மேனியான கிருஷ்ண பிங்களரும், அப்பாலுக்கு அப்பாலானவரும் விசேஷமான கண்களையுடையவரும், விஸ்வ ரூபியுமானவரை நமஸ்கரிக்கின்றேன்.
எல்லா இஷ்டங்களையும் சித்திக்கச் செய்பவரும், இரவானவரும், பகலுமானவரும், உமாபதியும், எல்லா வித்யைகளுக்கும் அதிபதியானவரும், எல்லா ஈஸ்வரர்களுக்கும் மேலான சர்வேஸ்வரராக தாமேயானவருமாகியவரை நமஸ்கரிக்கின்றேன்.
பசுக்கூட்டங்கள், தனம், தீர்க்காயுள், பலம், மக்கள், மற்றும் அனைத்து வளங்களும் மகாவிஷ்ணு போன்ற வளமும் சிவ சங்கல்பத்தால் நிச்சயம் கிடைக்கும். உன்னை நமஸ்கரிக்கின்றேன்.
சத்யம்-அன்னை, ஞானம்-தந்தை, தர்மம்-தமையன், கருணை-நண்பன், சாந்தி-பத்தினி, பொறுமை-சகிப்புத்தன்மை-பிள்ளைகள், என்ற ஆறு வகையான பந்தங்கள் அனைத்தும் எனக்கு நீயே. யாவுமாக நீயே இருந்து காப்பவன் நீயே. உன்னைப் பணிகிறேன். உனக்கு நமஸ்காரம்.
சிவசிவ சிவாய நமக! நமசிவாய சிவசிவ சிவாய நமக! சிவசிவ சிவாய நமக!

16.“சிவபஞ்சாக்ஷர துதி”ஆதிசங்கரர்-தினமும்

நாகபதி மலையானே! நயனங்கள் மூன்றானே!
ஆகமணி நீற்றானே! அருந்தேவா பேரீசா!
ஆகுநித்யா! தூயவனே! ஆர்திசையின் ஆடையனே!
நாகமுறை நகாரனே! நமசிவாயனே! போற்றி!

மன்மங்கை நீர்ச்சாந்தம் மணங்கமிழ்ப் பூசிட்டோய்!
தொல்நந்தி ப்ரமதபதி தூத்தலைவா! மகேசனே!
நல்மண மந்தாரமுதல் நறைமலராற் பூசை கொள்வோய்!
நல்லுறவே மகாரனே! நமசிவாயனே போற்றி!

சிவமூர்த்தி! கவுரிமுக சீர்க்கமல வனமலர்த்தும்
நவக்கதிரே! தட்சமகம் நசித்திட்டோய்! நீலகண்டா!
துவண்டாடும் விடைக்கொடியைத் தூக்கியவா! தொல்பொருளே!
நவநவத்தோய்! சிகாரனே! நமசிவாயனே போற்றி!

வசிட்டமுனி கலசமுனி கௌதம மா முனிவோர்கள்
இசைவானோர் அருச்சிக்கும் எந்தை! அரசேகரனே!
மிசைக்கதிரோன் திங்கள், தீ விழிமூன்றாய் ஆனவனே!
நசிவில்லாய்! வகாரனே நமசிவாயனே! போற்றி!

யட்ச உரு எடுத்தோனே! எழிலாரும் சடைதரித்தோய்!
இச்சையுடன் பினானமதை எந்ந்து திருக்கையானே!
அட்சரனே! சிறந்தோனே! அருந்தெவா! திகம்பரனே!
நட்புல யகாரனே! நமசிவா யனே! போற்றி!

சிவனுடைய பஞ்சாட்சரத்தால் சேர்த்திட்ட இதை
சிவ சந்நிதிமுன் செப்பிடுவர் யாவரவர்
சிவனுலகை அடைந்து, பின் சிவனோடு ஒன்றி
சிவனுடைப் பேரானந்தம் சார்ந்ததனில் ஆழ்குவர்.

17.“நோய் தீர்க்கும் பதிகம்”- திருநீற்றின் மகிமை- ஞான சம்பந்தர் அருளியது- நோய்தீர எப்போதும்.

மந்திரம் ஆவது நீறு. வானவர் மேலது நீறு. சுந்தரம் ஆவது நீறு. துதிக்கப்படுவது நீறு. தந்திரம் ஆவது நீறு. சமயத்தில் உள்ளது நீறு. செந்துவர் வாய் உமைபங்கன் திரு ஆலவாய் திருநீறே!

வேதத்தில் உள்ளது நீறு. வெந்துயர் தீர்ப்பது நீறு. போதம் தருவது நீறு. புன்மை தவிர்ப்பது நீறு. சீதப் புனல்வயல் சூழ்ந்த திரு ஆலவாயாம் திரு நீறே!

முக்தி தருவது நீறு. முனிவரணிவது நீறு. சத்யம் ஆவது நீறு. தக்கோர் புகழ்வது நீறு, பக்தி தருவது நீறு. பரவ இனியது நீறு. சித்தி தருவது நீறு, திரு ஆலவாயான் திருநீறே!

காண இனியது நீறு. கவினைத் தருவது நீறு. பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு. மரணம் தகைவது நீறு. மதியைத் தருவது நீறு. சேணம் தருவது நீறு. திரு ஆலவாயான் திருநீறே!

பூச இனியது நீறு. புண்ணியமாவது நீறு. பேச இனியது நீறு. பெருந்தவத்தோர்களுக்கு எல்லாம் ஆசை கொடுப்பது நீறு. அந்தமாவது நீறு. தேசம்புகழ்வது நீறு. திரு ஆலவாயான் நீறே!

அருத்தமாவது நீறு. அவல மறுப்பது நீறு, வருத்தம் தணிப்பது நீறு, வானம் அளிப்பது நீறு. பொருத்தம் ஆவது நீறு. புண்ணியர் பூசும் வெண்ணீறு. திருத்தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே!

எயிலது அட்டது நீறு. இருமைக்கும் உள்ளது நீறு. பயிலப்படுவது நீறு. பாக்கியாமாவது நீறு. துயிலை தடுப்பது நீறு. சுத்தமாவது நீறு. அயிலைப் பொலிதரு சூலத் திரு ஆலவாயான் திருநீறே!

இராவணன் மேலது நீறு. எண்ணத் தகுவதுநீறு. பராவணம் ஆவது நீறு. பாவம் அறுப்பது நீறு. தராவணம் ஆவது நீறு. தத்துவம் ஆவது நீறு. அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே!

குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூடக் கண் திகைப்பிப்பது நீறு. கருத இனியது நீறு. எண்திசைப் பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு. அண்டத்து அவர் பணிந்து ஏத்தும் ஆலவாயன் திருநீறே!

ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன் தேற்றித் தென்னனுடலுற்ற தீப்பிணி ஆயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே!

அபிராமி பட்டர் அருளியது

மணியே! மணியின் ஓளியே! ஒளிரும் மணிபுனைந்த அணியே! அணியும் அணிக்கழகே! அணுகாதவர்க்குப் பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே! பணியேன் ஒருவரை நின் பதம பாதம் பணிந்த பின்னே!

18.“திருநீற்றுத்துதி”-திருநீற்றின்மகிமை-ஸ்காந்தபுராணம்-திருமகளின் அருள் சேர.

தரித்துக் கொண்ட உடனே எல்லா பாவங்களையும் போக்கவல்லது விபூதி. அதை ஜபிப்பதாலும், சிறிதளவு உட்கொள்வதாலும், பூசிக்கொள்வதாலும் எல்லா சுகங்களையும் அளிப்பது. எல்லாவற்றையும் தரக்கூடியது என்பதாலேயே அதற்கு பஸ்மம் என்ற பெயர் ஏற்பட்டது.

உரிய மந்திரங்களைச் சொல்லி சரியான முறையில் தயாரிக்கப்பட்ட விபூதியை எவனொருவன் தரிக்கிறானோ, அவனுடைய எல்லா பாவங்களும் விலகுவதோடு அவனுடைய எல்லா விருப்பங்களும் கைகூடலாகும்.

பார்வதியின் பதியான பரமேஸ்வரனுடைய மகிமையை எப்படி எவராலும் அறிய முடியாதோ, அவ்வாறே திருநீறின் உயர்வையும் எவராலும் அறிய முடியாது என்பது வேத வேதாந்தங்களில் கரை கண்ட பெரியோர்களின் வாக்கு.

முனிவர்களுக்கு விபூதியின் மகிமையை உபதேசிக்கும் விதமாக இந்தத்துதி அமைந்திருப்பதால், முனிவர்களே என்றழைத்து கூறப்பட்டுள்ளது. இதையே நமக்கான உபதேசமாகவும் கொள்ளவேண்டும்.

மனித ஆன்மாக்களே, திருநீறை நீரில் குழைத்து நெற்றி, கழுத்து, மார்பு, வயிறின் இருபக்கங்கள், தோள்கள், கைகளின் மேல்பாகம், கைகளின் நடுபாகம், மணிக்கட்டுகள், முதுகு, பிடரி ஆகிய பதினைந்து இடங்களிலும் மூன்று கோடுகளாக தரிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மும்மூர்த்திகள் உள்ளிட்ட எல்லோராலும் வணங்குவதற்குரிய பெருமையைப் பெற்றவர்களாவார்கள். சகல செல்வங்களும் அவர்களைத் தேடிவந்து சேரும். திருமகள் அருள் பரி பூரணமாகக் கிட்டும்.

19.“சிவபார்வதி துதி"-வற்றாதசெல்வம், குன்றாத ஆயுள் பெற- ஈசன்-சிவ, ஈஸ்வரி-சிவா -சிவசிவா ஸ்துதி சிறப்பு

கயிலை நாதரான கிரீசரைப் போற்றுகிறேன். மலையரசன் மகளான கிரிஜாவை வணங்குகிறேன். ரிஷபக் கொடியுடையவருக்கு நமஸ்காரம். நமஸ்காரம். சிம்மக் கொடியைக் கொண்ட சிவைக்கு வணக்கம்.

மகிமை மிக்க விபூதியை தரிப்பவருக்கு வணக்கம். சந்தனாபிஷேகப்பிரியரைப் போற்றுகிறேன். வணக்கம். கொம்பின் நுனி போன்ற கூர்விழியாள் ஈஸ்வரிக்கு வணக்கம். தாமரை கண்ணாளைப் போற்றித் துதிக்கிறேன்.

திரிசூலமேந்தியவரே, உமக்கு நமஸ்காரம். ஒளிரும் தாமரையைக் கையில் ஏந்தியவளுக்கு வணக்கம். திசைகளையே ஆடைகளாகக் கொண்ட திகம்பரருக்கு நமஸ்காரம். பல வண்ண ஆடைகள் உடுத்தும் சிவைக்கு போற்றி வணக்கம்.

சந்திரனை அணியாகக் கொண்டவருக்கு வணக்கம். ஒளிரும் பல ஆபரணங்களை அணிந்து திகழும் சிவைக்கு நமஸ்காரம். பொன்னாலான தோடுகளை அணிந்தவர்க்கு வணக்கம். ரத்னங்கள் பதித்த காது வளையங்களணிந்த சிவைக்கு நமஸ்காரம்.

த்ரிபுராகரனை அழித்தவனே போற்றி. மது என்னும் அரக்கனை அழித்தவரே போற்றி. அந்தகனை அழித்தவரே போற்றி. கைடபரை அழித்தவரே போற்றி. வணக்கம்.

பரம ஞான வடிவானவர்க்கு நமஸ்காரம். வானமழைபோல் அருளை அள்ளிப் பொழியும் சிவைக்கு வணக்கம். பனித்த சடையுடைய ஜடாதரனைப் போற்றுகிறேன். வணக்கம். கருநாகம் போன்ற கருங் குழலை உடையவளுக்கு வணக்கம்.

கற்பூர வாசனையில் மகிழ்பவரே போற்றி. குங்குமம் தரிப்பதில் ஆனந்திக்கும் சுந்தரியாளே போற்றி. வில்வம், மாம்பழம் ஆகியவற்றை பிரசாதமாக விரும்பி ஏற்றுக் கொள்பவரே நமஸ்காரம். மல்லிகை மணத்தால் கவரப்பட்டவளே! வணக்கம்.

பூமண்டலம் அனைத்தையும் அலங்கரிப்பவரே வணக்கம். அழகான அபூர்வமான மணிகளாலான ஆபரணங்களால் ஜொலிப்பவளே வணக்கம். வேத வேதாந்தங்களால் போற்றப்படுபவருக்கு வணக்கம். அந்த விஸ்வேஸ்வரராலேயே நாளும் போற்றப் படுபவளுக்கு நமஸ்காரம்.

அனைத்து தேவர்களாலும் பூஜிக்கப்படுபவருக்கு வணக்கம். பத்மா/ மகாலட்சுமியால் சமர்ப்பிக்கப்பட்ட பாதுகையை உடையவனுக்கு வணக்கம். சிவையால் ஆலிங்கனம் செய்யப்பட்ட சிவனுக்கு நமஸ்காரம். சிவனால் ஆலிங்கனம் செய்யப்பட்ட சிவைக்கு வணக்கம்.

உலகின் ஆதியான பிதாவைப் போற்றுகிறேன். வணக்கம். மலைமகளாகிய மகேஸ்வரிக்கு வணக்கம். மன்மதனை அழித்தவரே போற்றி. பக்தர்கள் வேண்டியவற்றை நிறைவேற்றும் காமாட்சியே போற்றி.

பிரபஞ்சத்தை ஆலகால விஷத்திலிருந்து காப்பாற்ற தானே அதை உண்டவரே. வணக்கம். அமுதத்தையே தானாக வரித்து அமுத மயமானவளே வணக்கம். உலக ரட்சகரான மகேஸ்வரனுக்கு வணக்கம். மணம் கமழும் சந்தன மயமான தேவிக்கு வணக்கம். உலகத்துக்கே தாயும் தந்தையுமாக விளங்கும் உமாமகேஸ்வரனுக்கு வணக்கம். உமது ஆசியால் சகல வளமும் பெருகிட அருள்வீராக,

20.“உமா மகேஸ்வரர் துதி” - ஆதிசங்கரர்- குடும்ப வாழ்க்கையில் மங்களகரமான பலன்கள் பெற -தினமும்
என்றைக்கும் இளமையானவர்களும், உலகங்களுக்கு சர்வ மங்களத்தை அளிப்பவர்களும், பார்வதியை மணக்க வேண்டும் என்று பரமசிவன் தவம் செய்ய, பரமசிவனை மணக்க வேண்டும் என பார்வதி தவம் செய்ய, அதனால் ஒரே சரீரத்தில் இணைபிரியாது இருப்பவர்களும், மலையரசனின் மகளான உமாவுக்கும், காளைக் கொடியுடைய மகேஸ்வரனுக்கும் எனது வணக்கங்கள்.

ஆனந்தத்தைத் தரும் திருவிழாக்களை உடையவர்களும், காதலர்கள்போல எப்போதும் ஒன்றாயிருப்பவர்களும், தம்மை வணங்கும் பக்தர்களுக்கு, விரும்பியதையெல்லாம் அளிப்பவர்களும், மகாவிஷ்ணுவால் பூஜிக்கப்பட்டு, அர்ச்சனை செய்யப்பட்ட பாதுகையை உடையவர்களுமான உமா மகேஸ்வரர்களான சங்கரர், பார்வதி ஆகிய இருவருக்கும் வணக்கம்.

காளையை வாகனமாகக் கொண்டவர்களும், தர்மத்தை தாங்கி நிற்பவர்களும், படைக்கும் கடவுளான பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணு, மூவுலகிற்கும் அதிபதியான தேவராஜன் ஆகியோரால் பூஜிக்கப்படுபவர்களும், விபூதி வாசனை சந்தனம் ஆகியவற்றைப் பூசிக்கொண்ட அர்த்தநாரீஸ்வரரான சங்கரர், பார்வதி ஆகிய இருவருக்கும் வணக்கம்.

உலகத்தை காக்கின்றவர்களும், உலகின் தலைவன் தலைவியும், வெற்றிதரும் மங்களமான் உருவத்தைக் கொண்டவர்களும், ஜம்பாகரனைக் கொன்ற தேவேந்திரன் போன்றவர்களால் கால்களில் விழுந்து வணங்கப் படுபவர்களுமான சங்கரர், பார்வதி ஆகிய இருவருக்கும் வணக்கம்.

கஷ்டங்களுக்கும் குடும்ப பந்தத்திற்கும் மருந்தாக இருப்பவர்களும், நமசிவாய என்ற மந்திரத்தில் ஆனந்தமாக வசிப்பவர்களும், உலகம் அனைத்தையும் படைத்து, காத்து, தீயதை அழித்து ஆகிய மூன்று தொழில்களையும் புரிபவர்களான சிவ தம்பதிகள் சங்கரர், பார்வதி ஆகிய இருவருக்கும் வணக்கம்.

மிகச் சிறந்த அழகுடையவர்களும், இணைபிரியாத மனம் உடையவர்களும், எல்லா உலகங்களுக்கும் நிகரற்ற நன்மை செய்கிறவர்களும், ஆகிய சங்கரர், பார்வதி ஆகிய இருவருக்கும் வணக்கம்.

கலிதோஷத்தை நாசம் செய்து காப்பாற்றுகிறவர்களும், உடலில் ஒரு பதியில் அஸ்தியான சாம்பல் ஆபரணமும், மறு பாதியில் மங்கள ஆபரணங்களும் அணிந்தவர்களும், கயிலாயம் என்னும் மலையில் வீற்றிருக்கும் கண்கண்ட தெய்வங்களான சங்கரர், பார்வதி ஆகிய இருவருக்கும் வணக்கம்.

தீய விஷயங்களையும் பாவத்தையும் முற்றிலும் அழிப்பவர்களும், எல்லா உலகங்களிலும் ஒப்புயர்வில்லாமல் சிறப்பானவர்களும், எங்கும் தடைபடாதவர்களும், நினைத்தபோதெல்லாம் பக்தர்களைக் காக்கின்றவர்களுமான சங்கரர், பார்வதி ஆகிய இருவருக்கும் வணக்கம்.
தம்பதிகளாக ரதத்தில் செல்பவர்களும், சூரியன், சாந்திரன், அக்னி ஆகிய மூவரையும் முக்கண்களாகப் பெற்றவர்களும், பதினாறு கலைகளுடன் பரிபூரணமாகப் பிரகாசிக்கும் சந்திரன் போல ஒளிவீசும் தாமரைக்கு ஒப்பான முகமுடையவர்களும் ஆகிய உமா மகேஸ்வரரான சங்கரர், பார்வதி ஆகிய இருவருக்கும் வணக்கம்.

கூந்தலையும் ஜடாமுடியும் தாங்கியவர்களௌம், பிறப்பு, இறப்பு இல்லாதவர்களும், மகாவிஷ்ணு, தாமரையில் உதித்த பிரம்மா ஆகிய இருவரால் பூஜிக்கப்படுகின்ற சங்கரர், பார்வதி ஆகிய இருவருக்கும் வணக்கம்.

மூன்று கண்களையுடையவர்களும் வில்வ மாலையையும், மல்லிகை மாலையையும் தரிப்பவர்களும், அழகிய சுந்தரிகளில் சிறந்தவளான தலைவியும், அடக்கமுள்ளவர்களில் சிறந்தவரான தலைவனும் ஆகிய உமா மகேஸ்வரர் ஆகிய இருவருக்கும் வணக்கம்.

குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள பசுக்களான மனிதர்களை காப்பாற்றுகிறவர்களும், பக்தர்களுக்கு ஞானம் அளித்து, முக்தியையும் அளிப்பவர்களும், மூவுலகத்தையும் காப்பதென்று முடிவெடுத்து, அது பற்றியே எப்போதும் யோசிப்பவர்களும், தேவர்களாலும் அசுரர்களாலும் பூஜிக்கப்படுபவர்களுமான சங்கரர், பார்வதி ஆகிய இருவருக்கும் வணக்கம்.

21.“ஸ்ரீதட்சிணாமுர்த்தி துதி”- குழந்தைபருவம், வாலிபம், முதுமை, விழிப்பு, சொப்பனம் முதலிய மாறுபாடுகள் ஊடே ‘நான்’ என என்றும் மாறுபடாமல்-சிவன் தன்னை வெளிப்படுத்துதல்- வியாழன் மற்றும் பௌர்ணமி.

தன் இடது மடியில் இருத்தி பர்வத ரஜகுமாரியாகிய பார்வதிதேவியை அனைத்துக் கொண்டிருக்கும் ஈசனே, வணக்கம். கையில் நீலோத்பல மலரை ஏந்தி இளமைமிக்கவளாய் சந்திர ஒளிபோன்ற முகத்தையுடைய அம்பிகையை காதலுடன் பார்க்கின்றவரே, வணக்கம். அம்பாளை அனைத்த தன் திருக்கரத்தினால் புத்தகத்தையும் கீழ்க்கரத்தில் அமிர்தம் நிரம்பிய கும்பத்தையும் இன்னொரு கரத்தில் ஞானமுத்திரையையும், வேறொரு கரத்தில் முத்துமயமான ஜபமாலையையும் தரித்திருக்கிறவரே, தட்சிணாமூர்த்தியே, உமக்கு எனது வணக்கங்கள்.

மௌனமான விளக்கத்தாலேயே பரப்பிரம்ம தத்துவத்தைப் பிரகடனம் செய்பவரும், யுவவடிவினரும் மிகவும் கிழவர்களான பிரம்ம நிஷ்டர்களான ரிஷிகளாகிய சிஷ்யர்களால் சூழ்ப்பட்டவரும், ஆனந்தரூபியும், தன் ஆன்மாவிலேயே ரசிப்பவரும், நகைமுகத்தினருமான தக்ஷிணாமூர்த்தியே உமக்கு எனது வணக்கங்கள்.

கண்ணாடியில் காணும் நகரம் போன்றதும், தனக்குள்ளேயே இருப்பதுமான இவ்வுலகை, தூக்கத்தில் தன்னொருவனிடமிருந்தே பலவற்றை உண்டாக்கிக் கனவு காண்பதுபோல் மாயையினால் வெளியில் உண்டானதைப்போல் பார்த்துக் கொண்டு எந்த ஜீவன் தூங்கி விழித்த சமயம்- ஞானம் வந்த சமயத்தில், இரண்டில்லாத யாவற்றிற்கும் காரணமாகிய தன் ஆத்மாவையே நேரில் நான்தான் அந்த ஆத்மா என்று உணருகிறானோ, அந்த சச்சிதானந்த சம்பத்து பொருந்திய குருவின் உருவமுடைய தெற்கு நோக்கிய தெய்வமான ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு இந்த எனது வணக்கங்கள் உரித்தாகுக.

விதையின் உள்ளே முளையிருப்பது போல் சிருஷ்டிக்கு முன்பு வேற்றுமையில்லாததும் சிருஷ்டிக்குப் பிறகு ஈசனின் சக்தியாகிய மாயையினால் கற்பித்த தேசம் காலம் அவற்றின் சேர்க்கை ஆகிய வேற்றுமையினால் பற்பல விதமாயிருக்கின்றதுமான இந்த உலகை, எவர் இந்திரஜாலம் செய்பவனைப் போலவும் தன் இஷ்டத்தினாலேயே சிருஷ்டிக்கிறாரோ அந்த சச்சிதானந்த சம்பத்து பொருந்திய குருவின் உருவமுடைய தெற்கு நோக்கிய தெய்வமான ஸ்ரீதக்ஷிணாமூர்த்திக்கு எனது வணக்கங்கள்.

எந்த பரமாத்மாவினுடைய சத்ரூபமானது, எக்காலத்திலும் எந்த தேசத்திலும் இருக்கிறது என்ற அறிவிற்கு அப்பாற்பட்ட விஷயமான, வெளிப்பாடே இல்லாமலிருக்கும் பொருளுக்கு ஒப்பான வெளி வஸ்துகளை அடைந்து விளங்குகிறதோ, அதாவது புறபிரபஞ்சம் போல விளங்குகின்றதோ, சரணம் அடைந்தவர்களை நியே பரமாத்மாவாக இருக்கிறாய், தத்துவம் அஸி என்ற வேத வாக்யத்தினால் நேருக்கு நேராகவே எவர் தத்வஸ்வரூபமான ஆத்மாவை அறிவிக்கிறாரோ, எவரை நேராக அனுபவிப்பதால் பிறவியென்னும் கடலில் மறுமுறை வருகை உண்டாகாதோ, அந்த சச்சிதானந்த சம்பத்து பொருந்திய குருவின் உருவமுடைய தெற்கு நோக்கிய ஸ்ரீதக்ஷிணா மூர்த்திக்கு எனது வணக்கங்கள்.

பற்பல ஓட்டைகளோடு கூடிய குடத்தின் உள்ளே இருக்கின்ற விளக்கின் ஒளி அந்த ஒட்டைகள் மூலம் கசிவது போல் எந்த ஆத்மாவினுடைய அறிவு, கண் முதலிய புலன்கள் வழியாக வெளியில் செல்லுகிறதோ, நான் அறிகிறேன் என்று விளங்குகிற அந்த ஆத்மாவான யாதொன்றையே இந்த எல்லாமான உலகமும் பின்பற்றி விளங்குகிறதோ அந்த சச்சிதானந்த சம்பத்து பொருந்திய குருவின் உருவமுடைய தெற்கு நோக்கிய ஸ்ரீதக்ஷிணா மூர்த்திக்கு எனது வணக்கங்கள்.

உடலையும், உயிர் மூச்சையும் புலன்களையும் கணத்திற்கோர்முறை மாறுகின்ற புத்தியையும் ஒன்றுமில்லாத சூன்ய நிலையையும் ‘தான்’ என்று தத்வவாதிகள், பெண்கள், குழந்தைகள், அறிவற்றவர்கள் இவர்களுக்கு ஒப்பாக மிகவும் ஏமாந்தவர்களாக அறிந்தார்கள். இவ்வாறு மாயா சக்தியின் விலாசங்களால் உண்டாக்கப்பட பெரும் மயக்கத்தை அகற்றும் அந்த சச்சிதானந்த சம்பத்து பொருந்திய குருவின் உருவமுடைய தெற்கு நோக்கிய ஸ்ரீதக்ஷிணா மூர்த்திக்கு எனது வணக்கங்கள்.

எந்த ஆத்மா தூக்கத்தில் மாயையினால் மூடப்பட்டிருப்பதால் ராகு மறைத்த சூர்ய சந்திரர்களுக்கு ஒப்பாக ஸத் (இருத்தல்) ரூபமாக மட்டும் இருந்து கொண்டு இந்திரியங்களை செயலற்றவனாக அடக்கி இருந்தானோ, எந்த ஆத்மா விழித்துக்கொண்ட சமயத்தில் முன்பு இதுவரையில் தூங்கினேன் என்று நினைக்கப்படுகின்றானோ அந்த சச்சிதானந்த சம்பத்து பொருந்திய குருவின் உருவமுடைய தெற்கு நோக்கிய ஸ்ரீதக்ஷிணா மூர்த்திக்கு எனது வணக்கங்கள்.

குழந்தைப் பருவம், இளமை, முதுமை முதலானதும் அப்படியே ஜாக்ரத்- விழிப்பு, கனவு, தூக்கம் முதலானதுமான வேறுபட்ட எல்ல அவஸ்தைகளிலும் வேறுபடாமல் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதும், எப்பொழுதும் நான் என்று உள்ளே விளங்குவதுமான தன்னைக் காட்டிலும் வேற்றுமை இல்லாத பரமாத்மாவை, தன்னை சேவிப்பவர்களுக்கு எந்த தக்ஷிணாமூர்த்தி மங்களமான சின் முத்திரையினால் பிரத்யட்சமாகக் காண்பிக்கிறாரோ அந்த சச்சிதானந்த சம்பத்து பொருந்திய குருவின் உருவமுடைய தெற்கு நோக்கிய ஸ்ரீதக்ஷிணா மூர்த்திக்கு எனது வணக்கங்கள்.

தூக்கத்திலோ, விழிப்பிலோ எந்தஒரு ஆத்மா மாயையினால் பற்பல மருளை அடைவிக்கப்பட்டவராக இந்த உலகை காரிய காரணத்தன்மையோடும், தான்- தன் தலைவன் என்ற உறவோடும், சீடன்- ஆசான் என்ற தன்மையோடும், அப்படியே தகப்பன் மகன் என்றும் பற்பல வேற்றுமையை உடையதாகப் பார்க்கிறாரோ அந்த சச்சிதானந்த சம்பத்து பொருந்திய குருவின் உருவமுடைய தெற்கு நோக்கிய ஸ்ரீதக்ஷிணா மூர்த்திக்கு எனது வணக்கங்கள்.

எந்த பரமேஸ்வரனுக்கே பூமி, ஜலம், அக்னி, காற்று, சூரியன், சந்திரன், உயிர் என்று இவ்விதம் இந்த அசைகின்றதும் அசையாததுமான எட்டு உருவம் பிரகாசிக்கின்றதோ, உலகத்தின் உண்மையை சோதிக்கின்றவர்களுக்கு எங்கும் நிறைந்த எந்த பரமாத்மாவைக் காட்டிலும் வேறு ஒன்றும் இல்லையோ அந்த சச்சிதானந்த சம்பத்து பொருந்திய குருவின் உருவமுடைய தெற்கு நோக்கிய ஸ்ரீதக்ஷிணா மூர்த்திக்கு எனது வணக்கங்கள்.

இந்த துதியில் எல்லாம் ஒரே ஆத்மரூபம் என்ற தத்துவம் எவ்வாறு விளக்கப் பெற்றிருக்கிறதோ அவ்வாறு அறிவதால், இந்த துதியை கேட்டாலும், இதன் பொருளை மனதால் சிந்திப்பதாலும், தியானம் செய்வதாலும் பிறருக்கு நன்றாகச் சொல்வதாலும் எல்லாமும் ஒரே ஆத்மாவாக இருக்கும் நிலையாகிய பெரிய ஐச்வர்யத்தோடு கூடிய பரமாத்ம தன்மை ஏற்படும். மேலும் எட்டாக வகுக்கப்பட்ட அணிமாதி சித்திகளான ஐச்வர்யம் தானாக கைகூடும்.

22.“குரு - தட்சிணாமூர்த்தி வணக்கம்”-வியாழன்

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கு முதல் கற்ற கல்வி
வல்லலார்கள் நால்வர்க்கும் வாக்கிறைந்த புரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்துதானே சொல்லாமல் 
சொன்னவனோ நினையாமல் நினைந்துபவ தொடக்கை வெல்வோம்

குருப்பிரம்ஹா குரு விஷ்ணு
குருதேவோ மஹேஸ்வர
குரு சாக்ஷாது பரப்ரம்ஹா
தஸ்மை ஸ்ரீ குருவே நம!

மந்த்ர மூலம் குரோர் வாக்யம்
பூஜா மூலம் குரோர் பதம்
த்யான மூலம் குரோர் மூர்த்தி
மோஷமூலம் குரோர் க்ருபா

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்துஸ்ச சகா த்வமேவ
த்வமேவ வித்யாம் த்ரபிணம் த்வமேவ
த்வமேவ சர்வம் மம தேவதேவ

23.“ஸ்ரீகும்பேஸ்வரர் துதி”-கிரக தோஷங்கள் நீங்கி வேண்டிய வளம்பெற- மாசி மகத்தன்று. 
எல்லா லக்னங்களுக்கும் அதிபதிகளான நவகிரகங்களுக்குத் தலைவராக இருப்பவரே, கும்பேஸ்வரா உன்னை வணங்குகின்றேன். நவகிரகங்களால் பூஜிக்கப்படுபவரே, எண்ணிய தெல்லாம்தரும் காமதேனு மற்றும் அனைத்து தேவர்களாலும் வணங்கப்படுபவரே, கும்பேஸ்வரனே உனக்கு எனது வணக்கங்கள். ஐந்து முகங்களையுடைவரே, பிரளய காலத்தில் மிதந்து வந்த அமிர்த கலயத்தை உடைத்து எல்லோருக்கும் எல்லா வளமும் வழங்கிய கும்பேஸ்வரா உன்னை வணங்குகின்றேன். எனக்கு அருள் புரிவாய்!
24.“காலபைரவ அஷ்டகம்” -மனப்பயங்கள் விலக, ஆரோக்கிய வாழ்வுக்கு- தினமும்-நேரம் கிடைக்கும் போதெல்லாம்-ஆதிசங்கரர் அருளியது.

போகம், முக்தி இவைகளை அளிப்பவரும், பிரசித்திபெற்ற அழகிய வடிவினரும், அடியார்களிடம் அன்பு கொண்டவரும், காத்தல் கடவுளாக இருப்பவரும், எல்லா உலகையும் தன் வடிவில் கொண்டவரும், நன்கு ஒலிப்பதும் மனதைக் கவருவதாகிய சலங்கையால் பிரகாசிக்கும் இடையை உடையவரே, காசியம்பதியின் தலவரே உங்களுக்கு நமஸ்காரம். எனக்கு அருள் புரிவாய் ஐயனே!

25.“பைரவ அஷ்டகம்” -செல்வசேமிப்பு, தடைகள் தகர்க்க, ஆரோக்கிய வாழ்வுக்கு- தினமும்- நேரம் கிடைக்கும் போது.

க்ஷேத்ரபாலர்:- செந்நிறமான ஜ்வாலைகளையுடைய ஜடாமகுடம் தரித்திருப்பவரும், சிவப்பு நிறமுடையவரும், வெண்ணிலவை முடியில் அணிந்திருப்பவரும், தேஜோமயமானவரும் உடுக்கை, சூலம், கபாலம், பாசக்கயிறு ஆகியவற்றைக் கைகளில் வைத்திருப்பவரும், உலகத்தைக் காவல் காப்பவரும், பாதகர்களுக்கு பயங்கரமானவரும், நிர்வாணமேனியரும், நாயை வாகனமாக உடையவரும், முக்கண்ணரும், எப்போதும் குதூகலமாக இருப்பவரும், பூத கணங்கள் பேய் பிசாசுக்களுக்குத் தலைவரும், க்ஷேத்ர பாலர் என்ற பெயரை உடையவருமான பைரவரை வணங்குகிறேன்...

அஸிதாங்க பைரவர்:- முக்கண்ணரும், கோரிய வரங்களைத் தானே முன் வந்து அளிப்பவரும், சாந்த சொரூபியும், கபாலமாலை தரித்தவரும், கதை, கபாலம், பாணபாத்ரம், கட்கம், ஜபமாலை, கமண்டலம் ஆகியவற்றைத் தாங்கியவரும் திகம்பரனாகவும், இளமையாகவும் இருப்பவரும், நாகத்தைப் பூனூலாக அணிந்தவரும், அலங்கார சொரூபரும், ப்ராஹ்மணி என்ற சக்தியை அருகே வைத்திருப்பவரும், அன்னப் பட்சியை வாகனமாக உடையவரும், அழகுள்ளவரும், சுந்தரரும், கேட்டதைக் கொடுக்க வல்லவருமான அஸிதாங்க பைரவரை வணங்கி தியானிக்கிறேன்..

க்ரோத பைரவர்:- முக்கண்ணரும் கதை, சங்கு, சக்கரம், பாசம், பாத்ரம் இவற்றை கைகளில் ஏந்திக் கொண்டிருப்பவரும், வேண்டிய வரங்களைக் கொடுப்பவரும், இளைஞராகவும் திகம்பரராகவும் இருப்பவரும், அமைதியான சுபாவமுடையவராக இருப்பவரும், இடது பக்கத்தில் திருவான சக்தியை கருடவானத்தில் அமர்த்திக் கொண்டிருப்பவரும், நீல நிறமான மேனியைக் கொண்டவருமான க்ரோத பைரவரை வணங்கி தியானிக்கிறேன்...

உன்மத்த பைரவர்:- முக்கண்ணரும், சாந்த ஸ்வரூபியும், இளைஞராகவும், திகம்பரராகவும் திகழ்பவரும், பொன் வண்ணரும், அன்ன வாகனத்தில் அமர்ந்திருப்பவரும், கத்தி, கபாலம், உலக்கை, கேடயம் ஆகியவற்றைக் கைகளில் தாங்கி இருப்பவரும், வாராஹி என்ற சக்தியுடன் காட்சியளிப் பவருமான உன்மத்த பைரவரை வணங்குகிறேன்..

குரு பைரவர்:- மூன்று கண்களையுடையவராகவும், வேண்டிய வரங்களை எல்லாம் கொடுப்பவராகவும், சாந்த ஸ்வரூபம், இளமையானத் தோற்றத்தை உடையவராகவும், திகம்பரராகத் திகழ்பவரும், டங்கம், புள்ளிமான் என்ற கிருஷ்ணம்ருகம் ஆகியவற்றை வைத்துக் கொண்டிருப்பவரும், பான பாத்திரம், கத்தி இவற்றை வைத்துக் கொண்டிருப்பவரும், காளை வாகனத்தைக் கொண்டவரும், புன் சிரிப்பான முகமுடையவரும், வெண்மையான சுத்த ஸ்படிகம் போன்ற மேனியைக் கொண்டவருமான குரு பைரவ ஸ்வாமியை வணங்கி தியானம் செய்கிறேன்..

கபால பைரவர்:- மூன்று கண்களையுடையவராகவும், பக்தர்கள் வேண்டிய வரங்களை எல்லாம் கொடுப்பவராகவும், சாந்த ஸ்வரூபம், இளமையானத் தோற்றத்தை உடையவராகவும், திகம்பரராகத் திகழ்பவரும், கையில் பாசக்கயிறு, வஜ்ராயுதம், கத்தி, பானபத்திரம் ஆகியவற்றை ஏந்திக் கொண்டிருப்பவரும், இந்திராணி என்ற தேவியுடன் காட்சியளிப்பவரும், பத்ராகம் போன்ற ஒளிமயமான மேனியுடையவருமான கபால பைரவரை வணங்கி தியானம் செய்கிறேன்..
சண்ட பைரவர்:- மூன்று கண்களையுடையவராகவும், வேண்டிய வரங்களை எல்லாம் கொடுப்பவராகவும், சாந்த ஸ்வரூபம், இளமையானத் தோற்றத்தை உடையவராகவும், திகம்பரராகத் திகழ்பவரும், கையில் வில், கத்தி, பானபத்திரம் ஆகியவற்றை ஏந்திக் கொண்டிருப்பவரும், கௌரி என்ற தேவியை சக்தியாகக் கொண்டிருப்பவரும், மயிலை வாகனமாகக் கொண்டு வெண்மையான நிறத்தை உடையவருமான சண்ட பைரவரை தியானிக்கிறேன்..

பீஷ்ண பைரவர்:- மூன்று கண்களையுடையவராகவும், வேண்டிய வரங்களை எல்லாம் கொடுப்பவராகவும், சாந்த ஸ்வரூபம், இளமையானத் தோற்றத்தை உடையவராகவும், திகம்பரராகத் திகழ்பவரும், கையில் கத்தி, சூலம், கபாலம், உலக்கை ஆகியவற்றை ஏந்திக் கொண்டிருப்பவரும், சாமுண்டி தேவியுடன் இனைந்து காட்சி தருபவரும், பிரேத வாஹனம் எனப்படும் இறந்த பூத உடல் மீது அமர்ந்திருப்பவரும், சிவந்த நிறத்தையுடையவருமான பீஷணபைரவரை துதித்து வணங்குகிறேன்..

சம்ஹார பைரவர்:- பத்துக் கைகளோடு முக்கண்ணனாக இருப்பவர், சர்ப்பத்தை பூனூலாக அணிந்தவர், கோரைப் பற்களுடன் பயங்கர முகத்தோற்றத்தை உடையவர், பக்தர்களுக்கு எட்டு விதமான ஐஸ்வர்யங்களைக் கொடுப்பவர், இளமையான தோற்றம் கொண்ட இவர், திகம்பரராகவும் இருப்பவர். ஸிம்ஹத்தை வாகனமாகக் கொண்டவர். தம் கைகளில் சூலம், கட்கம், டமருகம், சங்கு, சக்ரம், கதை, பானபத்திரம், கட்வாங்கம், பாசம், அங்குசம் ஆகியவற்றைக் கொண்டவர், அசுரர்களின் மண்டையோடுகளைக் கோத்து பெரிய மாலையாக அணிந்திருப்பவர், பருமனான் உடலையும், மத்தமான பயங்கர உருத்தோற்றத்தையும் கொண்டவரான, சம்ஹார பைரவரை,எப்போதும் எனக்காகவேண்டி தியானிக்கிறேன்..

ஓம் ஏம் க்லாம் கிலிம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரும்
சகவம் ஆப துத்தாரணாய அஜாமல பக்தாய
லோகேஸ்வராய சுவர்ணாகர்ஷண பைரவாய
மம தாரித்ரிய வித்வேஷ்ணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ.

26.“ஸ்வர்ணாகர்ஷண பைரவர்” அஷ்டகம்- துர்கைச் சித்தர்- தினமும்
தனந்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்திடும்
மனந்திறந்தவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள் வந்திடும்

சினந்தவிர்த தன்னையின் சின்மயப் புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கிலையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.
வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான் வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான்

காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்

தனக்கிலையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.

முழுநில வதனில் முறையொடு பூஜைகள் முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதப்பான் உடமைகள் காப்பான் உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கிலையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.

நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்ந்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைந்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான் வாழ்ந்திட வாழ்த்திடுவான்
தனக்கிலையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.

பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான் பூரணங்கள் நான் என்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கிலையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.

பொழில்கள் மணப்பான் பூசைகள் ஏற்பான் பொன்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணி கனகாய் இருந்திடுவான்
நிழல்தருன் கற்பகம் நினைத்திட பொழிந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கிலையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.

சதுர்முகன் ஆணவத் தலையினைக் கொய்தான் சத்தொடு சித்தனானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம் செய்யென்றான்
புதரினைக் குவித்து செம்பினை எரித்தான் பசும்பொன் இதுசென்றான்
தனக்கிலையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.

ஜெய ஜெய வருக நாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய க்ஷேத்திர பாலனே சரணம் ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம்புகழ் தேவா செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கிலையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.

27.“மகா சாஸ்தா துதி”- பகை, பயம் நீங்க, பிணிகள், கவலைவிலக, செல்வங்கள் கைகூடும்- சிவ+ விஷ்னு- ப்ருஹதீச்வரர்- கார்த்திகை மாதம் காலை/மாலை.

நீல வண்ணக் குதிரையை வாகனமாகக் கொண்டு பயணிப்பவரும், தன்னை அடைக்கலமடையும் அடியவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுபவரும், சாதுக்களுக்கு எப்போழுதும் நன்மை செய்கின்றவரும், மகாஞானம் உள்ளவரும் ஈஸ்வரனுக்குத் தலைவருமான ஐயப்பனைச் சரணமடைகிறேன்!

சிவவிஷ்னு மைந்தனும், பரிபூரணமானவரும், தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மனிதர்கள் போன்றோர்களால் வணங்கப்படுபவரும், சிறந்ததும், வெண்மையானதும் மதங் கொண்டதுமான யானையை வாகனமாகக் கொண்டவரும், ஈஸ்வரர்களுக்குத் தலைவருமான ஐயப்பனைச் சரணமடைகிறேன்!

கொடிய வணவிலங்குகளை, எப்பொழுதும் வேட்டை ஆடுகின்றவரும், அசுரக் கூட்டங்களின் அழிவுக்கு காரணமானவரும், குந்தம் என்ற ஆயுதத்தை உயர தூக்கி வைத்துக் கொண்டிருப்பவரும், ஸவர்ணம் ரத்னம் இவைகளாலான பலவித ஆபரணங்களை உடையவரும், பிரசித்தவரும், ஈஸ்வரர்களுக்குத் தலைவருமான ஸ்ரீ ஐயப்பனைச் சரணமடைகிறேன்!

குளிர்கால நிலவினைப் போல குளுமையான முகத்தையுடையவரும், சூரியன், சந்திரன், அக்னி ஆகியோரை மூன்று கண்களாக உடையவரும், பாரிஜாத மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேகத்தை உடையவரும், ஈசுவரர்களுக்குத் தலைவருமான ஐயப்பனைச் சரணமடைகிறேன்!

வனத்தில் தவம் புரிந்த சனகாதி முனிவர்களால் துதிக்கப்படுபவரும், உயர்வான குணமுடைய மனிதர்களால் எப்போதும் பூஜிக்கப்படுபவரும், ஜனன, மரண, பயத்தை போக்குகின்றவரும் ஈஸ்வரர்களுக்கு எல்லாம் தலைவருமான ஐயப்பனைச் சரணமடைகிறேன்!

ப்ரணவ மந்திரத்தின் வடிவான மரத்தில் பறவை போல் விளங்கும் முக்கியத் தெய்வமாய் இருப்பவரும், பிறப்பு இறப்புகளாகிய இருண்ட காட்டினை அழிக்கும் பெரிய அக்னியாக இருப்பவரும், கணபதியாலும் முருகனாலும் துதிக்கப்பட்ட மகிமையை உடையவரும், ஈஸ்வரர்களுக்கு எல்லாம் தலைவருமான ஐயப்பனைச் சரணமடைகிறேன்!

மும்மூர்த்திகளாலும் தேவாதி தேவர்களாலும் தேவர்களின் தலைவனான இந்திரனாலும் வணங்கப்படும் பாத கமலத்தை உடையவரும், நல்ல ஞானிகளுக்கும், குருவுக்கொல்லாம் குருவாகா இருப்பவரும், சுத்தமான மனமுள்ளவரும், பக்தர்களின் மனமாகிய குகை எனப்படும் சபரிமலையிலுள்ள குகையில் அமர்ந்திருப்பவரும், ஈஸ்வரர்களுக்கு எல்லாம் தலைவருமான ஐயப்பனைச் சரணமடைகிறேன்!

சிவ, விஷ்னு குமரருடைய இந்த துதியை அவருடைய உருவத்தை நன்மனத்திலிருத்தி எவர் படிக்கின்றாரோ. அவர் ஈஸ்வரர்களுக்கு எல்லாம் தலைவருமான ஐயப்பன் அருளால் பசுக்கள், புத்திரகள், ஐஸ்வர்யங்கள் என யாவும் பெற்று ஆனந்த வாழ்வு வாழ்வார் என்பது நிச்சயம்! ஐயப்பா உன்னைச் சரணமடைகிறேன்!

28.“மகாசாஸ்தா அஷ்டகம்”- அருள், பொருள், ஆரோக்யம் பெற -கார்த்திகை மாதம் காலை/ மாலை.

நீலவர்ணமான குதிரையின் மேல் அமர்ந்து பவனி வருபவரும், அடியார்களின் குறைகளைத் தீர்ப்பதிலேயே கருத்துள்ளவரும் சாதுக்களுக்கு எப்போதும் நன்மை செய்கின்றவரும், மகானும், ஈஸ்வரினின் மகனுமான ஐயப்பனை நான் சரணடைகின்றேன்.

ஹரிஹர சுதனும் தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மனிதர்கள் ஆகியவர்களால் வணங்கப்படுபவரும், சிறந்த கம்பீரமான வெள்ளை யானையை வாகனமாகக் கொண்டவரும், ஈஸ்வரர்களுக்குத் தலைவருமான ஐயப்பனை வணங்குகின்றேன்

அநீதி நிறைந்த காட்டில் எப்பொழுதும் வேட்டையாடுகின்றவரும், அசுர குலத்துக்கே முடிவு கட்டுபவரும், உயரத்தூக்கிய கையில் குந்தம் என்ற ஆயுதத்தை உடையவரும், பொன் மற்றும் ரத்னங்களாலான ஆபரணங்களை அணிந்தவரும், பிரசித்தவரும், ஈஸ்வரர்களுக்கெல்லாம் பெரியவருமான ஐயப்பனை துதிக்கிறேன்.

அந்திப் பொழுதில் தோன்றும் பூரண நிலவைப் பொன்ற முகத்தை உடையவரும், சூரியன், சந்திரன், அக்னி ஆகியோரைத் தன் கண்களாக உடையவரும், பாரிஜாத மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சரீரத்தை உடையவரும், ஈஸ்வரர்களுக்கெல்லாம் தலைவருமான ஐயப்பனை சரணடைந்து வணங்குகின்றேன்.

காட்டில் சனகர் முதலிய யோகிளால் நமஸ்கரிக்கப்படுபவரும், உத்தமமான மனிதர்களால் எப்பொதும் பூஜிக்கப்படுபவரும், பிறப்பு இறப்பு ஆகிய பயங்களைப் போக்குகின்றவரும் ஈஸ்வரர்களுக்குத் தலைவருமான ஐயப்பனைப் பணிகின்றேன்.

ப்ரணவமாகிய மரத்தில் பறவை போல்விளங்கும் முக்யதேவனாய் இருப்பவரும், முக்குணங்களால் உண்டான பிறப்பு, இறப்பு என்ற காட்டை அழிக்கக்கூடிய அக்கினியாக இருப்பவரும், கணபதி மற்றும் முருகனால் துதிக்கப்படுபவரும், சிறந்த மகிமை உடையவரும், ஈஸ்வரர்களுக்குகெல்லாம் பெரியவருமான ஐயப்பனைப் பணிகின்றேன்.

தேவாதி தேவர்களால் நமஸ்கரிக்கப்பட்ட பாத கமலங்களை உடையவரும், எல்லா ஞானிகளுக்கும் குருவாக இருப்பவரும், சுத்த மனமுள்ளவரும், சபரிமலையின் குகையில் அமர்ந்திருப்பவரும் ஈஸ்வரர்களின் தலைவருமான பிரகதீஸ்வரரை வணங்குகின்றேன்.

கர்ப்பவாசமில்லாதவரும், தேவநாயகனும், மிகச் சிறந்தவரும், சிங்கத்தின் வடிவிலான ரத்ன மயமான ஆசனத்தில் அமர்ந்துள்ளவரும், மன்மதனையே தன்னழகால் வென்றவரும், உத்தமானவரும், ஈஸ்வரர்களுக்கு எல்லாம் தலைவருமான ஐயப்பனைச் சரணமடைகிறேன்.

நிகரற்ற சிவகுமாரனாகிய ஐயப்பனின் இந்த துதியை, யாரொருவர் முழுமனதாக ஐயப்பனை நினைத்துக் கொண்டு சொல்கின்றாரோ, அவர் ஐயப்பனுடைய கருணையால் பசுக்கள், புத்ரர்கள், அஷ்ட ஐஸ்வர்யங்களௌம் பெற்று ஆரோக்யமான ஆனந்த வாழ்வு பெறுவர், அவர்தம் இல்லத்தில் என்றும் நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் நிறையும்.
29. “சரபாஷ்டகம்” - துக்கங்கள், தோஷங்கள், நோய் நீங்க -ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில்.

துக்கங்களைப் போக்குகின்றவரும், தீயவர்களுக்கு பயங்கரமானவரும், திருமாலிடம் அன்பு பூண்டவரும், மங்களமான வடிவம் கொண்டவரும், சுகங்களை தருபவரும், மூன்று கண்களை உடையவருமான சரபமூர்த்தியே, தங்களை வனங்குகின்றேன். என் இன்னல்களை நீக்கி நிம்மதிப் பெருவாழ்வு அருளுங்கள்.

30.சிவபுராணம்-தினமும்/வேண்டும்பொழுது   

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமனிதன் தாள் வாழ்க!
ஆகமாகி நின்ற அன்னிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க!

 

வேகம் கொடுத்தாண்ட வேந்தனடி வெல்க!
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பொய்கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க!
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க!
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சிரோன் கழல்வெல்க!

 

ஈசனடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசனடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி!
சீரார் பெருந்துறை நம்தேவன் அடிபோற்றி!

 

ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி!
சிவன் அவன் சிந்தையுள் நின்ற அதனால்
அவனருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணந் தன்னை
முந்தை வினைமுழுவதும் ஓய உரைப்பன்யான்.

 

கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறைந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா என்றறியேன்

 

புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய் தேவராய்ச்
செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்

 

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன்பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே

 

வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலா
பொய்யாயினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே!
எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே!
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே!

 

ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய்! காப்பாய்! அழிப்பாய்! அருள் தருவாய்!
போக்குவாய்! என்னைப் புகுவிப்பாய்! நின் தொழும்பில்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நாணியனே
மாற்றம் மனம்கழிய நின்ற மறையோனே

 

கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தைனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை

 

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்
புறந்தோல் போர்த்தெங்கும் புழுஅழுக்கு மூடி
மலம் சோரும் ஒன்பது வயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய

 

விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்துள் உருகும்
நலந்தான் இலாத சிறியோர்க்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

 

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே!
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே!
தேசனே தேனார் அமுதே சிவபுரானே!
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே!
நேச அருள் புரிந்து நெஞ்சிள் வஞ்சங்கெடப்

 

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே!
ஆரா அமுதே! அளவிலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!

 

அன்பருக்கு அன்பனே! யாவையுமாய் எல்லையுமாய்
சோதியனே! துன்னிருளே! தோன்றாப் பெருமையனே!
ஆதியனே! அந்தம் நடுவாகி அல்லானே!
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே!
கூர்த்த மெய்ஞ் ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின்

 

நோக்கரிய நோக்கே! நுணுக்கரிய நுண்ணுணர்வே!
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே!
காக்கும் எம் காவலனே! காண்பரிய பேரொளியே!
ஆற்றின்ப வெள்ளமே! அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய் சொல்லாத நுண்ணுணர்வாய்

 

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தையுள்
உற்றான் உண்ணார் அமுதே! உடையானே!
வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப
ஆற்றேனெம் ஐயா அரனே ஐயா என்றென்று

 

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டிங்குவந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே!
நள்ளிருளில் நட்டம் பயின்றிடும் நாதனே!
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே!

 

அல்லல் பிறவி அறுப்பானே ஓவென்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக் கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து!

திருச்சிற்றம்பலம்!

 

“ஸ்ரீமங்களாஷ்டகம்”:--

 

மங்களங்கள் பெருக- மனக் குறைவின்றி- பாவங்களிலிருந்து விலகி- நீண்ட ஆயுள்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.

 

பிரம்மனே! மஹாவிஷ்னுவே! பரமேஸ்வரனே! இந்திரனே! அக்னியே! யமனே! நிருதியே! வருணனே! வாயுவே! குபேரனே! முருகனே! கணபதியே! சூரியனே! சந்திரனே! ருத்திரர்களே! விச்வ தேவர்களே! ஆதித்யர்களே! அச்வினி தேவர்களே! சாத்தியர்களே! வஸுக்களே! பித்ருக்களே! சித்தர்களே! வித்யாதரர்களே! யஷர்களே! கந்தர்வர்களே! கின்னரர்களே! மருத்துக்களே! மற்றும் ஆகயத்தில் சஞ்சரிக்கும் அனைத்து தேவர்களே! உங்கள் அனைவரையும் வணங்குகின்றேன். எனக்கு என்றும் மங்களம் அருளுங்கள்.

 

சரஸ்வதி, மகாலட்சுமி, பூமிதேவி, பார்வதி, சண்டிகை, பத்ரகாளி, பிராஹ்மி முதலிய மாத்ரு கணங்கள், தட்சனின் மகள்களான அதிதி, திதி, சதி, முதலியோர், சாவித்ரி, கங்கை, யமுனை, அருந்ததி, தேவர்களின் மனைவிகள், இந்திராணி முதலிய தேவலோகப் பெண்களும் விண்ணில் சஞ்சரிக்கும் தேவமாந்தரும் எனக்கு நீங்காத மங்களத்தை அளிக்கட்டும்.

 

மத்ஸ்யமூர்த்தி, கூர்மமூர்த்தி, வராஹமூர்த்தி, நரசிம்மப் பெருமாள், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், கபிலர், நரநாராயண மூர்த்தி, தத்தாத்ரேயர், பிருகு மற்றும் நரகாசுரனை வதம் செய்த மகா விஷ்ணுவின் மற்ற எல்ல அவதாரங்களும், சுதர்ஸ்ன சக்கரம் முதலிய ஆயுதங்களும், அவதாரம் செய்த மூர்த்திகளின் மனைவிகளும், அவர்களின் புத்திரர்களும், விஷ்னுவின் எல்ல அம்சா அவதாரங்களும் எனக்கு தீராத மங்களத்தை அளிக்கட்டும்.

 

விஸ்வாமித்திரர், வசிஷ்டர், அகஸ்தியர், உசத்யர், ஆங்கீரஸ், காச்யபர், வியாசர், கண்வர், மரீசு, கிரது, பிருகு, புலஹர், சௌனகர், அத்ரி, புலஸ்தியர் முதலான மஹரிஷிகளும் மற்றும் பல முனிவர்களும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கிரகங்களும், அஸ்வனி முதல் ரேவதி வரியிலான நட்சத்திரங்களும், நம் பிரஜாபதிகளும் நாகராஜன் முதலிய சர்ப்பக் கூட்டங்களும், மனுக்களும் எனக்கு வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.

 

மநு புத்ரிகளான ஆகூதி, தேவஹூதி, ப்ரஸீதி ஆகிய மூவரும், எல்லா முனிவர்களின் பத்தினிகளும், மனுக்களின் பத்தினிகளும், சீதை, குந்திதேவி, பாஞ்சாலி, நளன் மனைவி தமயந்தி, ருக்குமணி, சத்யபாமா, தேவகி மற்றுமுள்ள அரசர்களின் மனைவியர், கோபிகைகள், பதி விரதைகள், நற்குலப்பெண்மணிகள் யாவரும் எனக்கு எல்லாவித மங்களத்தையும் கொடுக்கட்டும்.

 

கருடன், அனந்தன், ஹனுமான், மஹாபலி, சனகர் முதலான யோகிகளும், சுகர், நாரதர், பிரகலாதன், பாண்டவர்கள், ந்ருகன், நளன், நஹூஷன், அரிச்சந்திரன், ருக்மாங்கதன் முதலிய விஷ்னு பக்தர்களும் மற்றும் சூரிய, சந்திர குலத்தில் உதித்த உத்தமர்களும், அரசர்களும் எனக்கு வளமான மங்கலத்தை உண்டாக்கட்டும்.

 

அந்தணர்கள், பசுக்கள், வேதங்கள், ஸ்ம்ருதிகள், துளசி, கங்கை, முதலி8ய சர்வ தீர்த்தங்கள், சகல வித்யைகள், பலவிதசாஸ்திரங்கள், இதிஹாசங்கள், சகல புராணங்கள், வர்ணங்கள், ஆச்ரமங்கள், சாங்கியம், யோகங்கள், யம நியமங்கள், எல்லா கர்மங்கள், காலங்கள், சத்யம் முதலான அனைத்து தர்மங்களும் எனக்கு போதிய மங்களத்தை அளிக்கட்டும்.

 

சகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான நன்மைதரும் எல்லாமரங்கள், எட்டு திக்கு யானைகள், மேகங்கள், சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள், பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள், ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள், செடிகள், கொடிகள் எனக்கு நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.

 

                                          ஓம்சிவாயநமக!

குருஸ்ரீ பகோராயின் சந்தோஷப்பூக்களின் இதழ்களில் சில......

oமறைத்த உண்மையும், தெரிந்த உண்மையும் எப்போதும் சுடும். அதை சொல்லியே தீருவேன் எனச் சொல்லி அனைவரையும் காயப்படுத்தக் கூடாது.

oஎந்த மனிதனும் கொள்கைகளுடனும், திறமைகளுடனும் எல்லாம் தெரிந்தும், புரிந்தும் பிறந்ததில்லை. வாழ்வில் போராடி, முயற்சி செய்து வெற்றிகொண்டதே அவர்களை வாழ்வில் பெரிய மனிதனாக்கியதாகும்.

oகாலங்களே நம் நண்பர்கள். காலங்களே நம் பகைவர்கள். காலங்கள் நமக்கு எல்லாம் தந்தும் பறித்தும் விடுகின்றன. அழவைக்கிற அதுவே சிரிப்பையும் தருகின்றது.

oஎதிரி என்று எவருமில்லை! அனைவரும் இவ்வுலக உயிர்களே! உலகில் வாழ தகுதி உள்ளவர்கள்! உரிமையுள்ளவர்கள்! அவர்கள் வாழ்வதற்காக எடுக்கும் முறைகளை செயல்படுத்துதலால் வேறுபடுகின்றனர். வாழ எடுக்கும் முறைகளை நெறிப்படுத்தினால் அனைவரும் பேரன்பு உள்ளவர்கள் ஆவார். மனிதநேயம் மிக்கவர்களாகி விடுவார்கள்.

o‘உன் நாவிலிருந்து எழும் சொற்களின் மீது கட்டுப்பாடு வைத்துக் கொண்டால் போதும், அது உன் வெற்றிக்கு வழிவகுக்கும்’

o“இல்லறத்தின் கடமைதனைச் செய், மனதை இறைவனிடம் வை. தண்ணீரில் இருக்கும் ஆமை கரையில் இருக்கும் மணல்மீது மனத்தை வைத்திருப்பது போல்.”
              “சந்தோஷப்பூக்களை நுகர்ந்து வாழ்வியல் பயன் பெறுங்கள்”

செவ்வாய்க்கிழமை, 13 August 2013 00:00

விநாயகர்

                                         ஓம்விக்னேஸ்வராய நமக! 

விநாயகர்-- வி + நாயகர் -- சிறந்த தலைவர் 
கணபதி -- 18 கணங்களுக்கும் பதி. கணபதியை பரம்பொருளாக வழிபடும்முறை கணாபத்யம் எனப்படும். க- என்பது மனோவாக்குகள், ண- அவற்றைக் கடந்த நிலை, ஈசன்- இறைவன், கணேசன்= கண+ ஈசன். 51 வகை கணபதி உண்டு. சந்தான, சுவர்ண, நவநீத, ஹரித்ரா, மகா, உச்சிஷ்ட ஆகிய அறுவரும் பிரதானமானவர்கள். கணபதி அறிவையும் பயனையும் தருவதால் சித்தி, புத்தி என்ற இரு தேவிகளும், க்ஷேமம், லாபம் என்ற இரு புத்திரர்களும் உண்டு. கணாபத்திய வழிபாடுமுறை மறைந்து விட்டாலும் கணபதியே முதல் வழிபாட்டிற்கு உரியவர். இடையூறு என்ற விக்னத்தை போக்குபவர். 

வேறு பெயர்கள் -- கஜானன்- யானைமுகம். (கஜம் என்றால் யானை. ஆனனம் என்றால் முகம்.) லம்போதரன்- வயிறு பெருத்து இருப்பதால். ஏகதந்தன்- ஒரு தந்தம் ஒடிந்திருப்பதால். விக்கினஹரன்- விக்னேஸ்வரன்- விக்கினங்களைப் போக்குவதால். குகராஜஸ- முறம்போன்ற காதுகள். கணநாதர்- கணங்களுக்குத் தலைவர்.

செவ்வாய்க்கிழமை -- மாசிமாத செவ்வாய்க்கிழமை பூக்களால் அர்ச்சனை செய்து பூஜை வழிபாடு- நினைத்த நல்லகாரியம் வெற்றி பெரும்.

வெள்ளிக்கிழமை -- எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் விரதம் இருந்து பூஜை வழிபாடு சிறப்பு. சூரியன் இடப ராசியில் இருக்கும். வைகாசிமாத வளர்பிறை வெள்ளி விரதம் இருக்க விசேஷமான நாள். அன்று வழிபட்டு பயனடைந்தவர்கள் அத்திரி மகரிஷி- சூரிய சந்திரர்களை பிள்ளைகளாகப் பெற்றார். குபேரன் சங்க நிதி, பதும நிதிகளைப் பெற்றார்
சனிக்கிழமை -- கிரக தோஷங்கள் உள்ளோர் சனிக்கிழமையன்று பூஜை செய்து வழிபாடு நன்மை.
ஏற்ற திதி -- வளர்பிறை சதுர்த்தி. ஆவணி வளார்பிறை சதுர்த்தி சாலச் சிறந்தது. இது பிள்ளையார் சதுர்த்தி ஆகும். அன்று விரதம் இருந்து துதிகளைப் படித்து வந்தால் நல்ல பலன்கள் கிட்டும். அன்று இரவு சந்திரனை தரிசித்தால் வழிபாட்டின் பூரண பலன் கிட்டும், நினைத்த நல்ல காரியங்கள் ஜெயம். ஒவ்வொரு நாளும் அந்தந்த திதிகளின்படி வெவ்வேறு வடிவினை வணங்குவது கூடுதல் பலனைத் தரும். கணபதியின் உருவங்கள் வேண்டிய வடிவில் இல்லையென்றால் அந்த பெயரை ஒன்பதுமுறை இருக்கும் கணபதிமுன் சொல்லி வேண்டவும். அமாவாசை- நிருத்த கணபதி, பிரதமை- பாலகணபதி, துவிதை- தருண கணபதி, த்ரிதியை- பக்தி கணபதி, சதுர்த்தி- வீர கணபதி, பஞ்சமி- சக்தி கணபதி, சஷ்டி- துவிஜ கணபதி, சப்தமி- சித்தி கணபதி, அஷ்டமி- உச்சிஷ்ட கணபதி, நவமி- விக்ன கணபதி, தசமி- க்ஷிப்ர கணபதி, ஏகாதசி- ஹேரம்ப கணபதி, துவாதசி- லக்ஷ்மி கணபதி, த்ரையோதசி- மகா கணபதி, சதுர்த்தசி- விஜய கணபதி, பௌர்ணமி- நித்ய கணபதி,

வணங்கும்முறை - எந்நாளும் எப்போதும் விநாயகரை வணங்கலாம். அரசமரத்தடி விநாயகர் அருகில் நீர் நிலைகள் இருந்தால் நீரால் அபிசேகம் செய்யவும். வெள்ளெருக்கு. அருகம்புல் ஆகியவைகளைச் சார்த்தவும். தெரிந்த துதிகளை விநாயகப் பெருமானை மனத்தில் நினைத்து சொல்லவும். தீப ஆரதனைக் காட்டி வணங்கவும். இரு கை விரல்களை மடக்கி நெற்றிப் பொட்டில் இடம் வலம் மாறி லேசான அழுத்தம் கொடுத்து தடவிக் கொள்ளவும். காதுகளை ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரலால் இடம் வலம் மாற்றிப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடவும். பின் கணபதியை இடம் வலம் சுற்றி வந்து வணங்கவும்.
கோவில்களில் வெள்ளெருக்கு. அருகம்புல் ஆகியவைகளைச் அர்ச்சகரிடம் தரவும். அவர் தீப ஆரதனைக் காட்ட கண்களை மூடாமல் இறைவனைப் பார்த்து வணங்கவும். இரு கை விரல்களை மடக்கி நெற்றிப் பொட்டில் இடம் வலம் மாறி லேசான அழுத்தம் கொடுத்து தடவிக் கொள்ளவும். காதுகளை ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரலால் இடம் வலம் மாற்றிப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போட்டு வணங்கவும்.
இறைவனுக்கு நெய்வேத்தியம் என்பது சர்வ வல்லமை படைத்த இறைவனுக்குச் சொந்தமானதை அவருக்குத்தந்து அதையே நாம் அவரின் அருளாசியுடன் பிரசாதமாக பெற்று புனித உணர்வுடன் உட்கொள்கிறோம் என்பதாகும். வசதியுள்ளவர்கள் தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு உடன் படையலுக்கு பொங்கல். சுண்டல் தந்து பூஜை முடிந்ததும் அருகில் உள்ள எல்லோருக்கும் பிரசாதம் வழங்கவும்.
எந்த இடமாயிருந்தாலும் அவரைத் தொட்டு வணங்கக்கூடாது. அவர் உடல் பூதகணம். பாதம் தொட்டு வணங்க வேண்டும். அவரின் கால் தேவபாதம். தேவபாதங்களைத் தொட்டு வணங்கினால் நினைத்த காரியம் கை கூடும். ஒற்றைக் கொம்பன், இரு செவியன், முக்கண்ணன், சதுர்புஜன், ஐங்கரன், ஆறாதாரத்துள்ளான் அவனை வணங்கின் ஏழுபிறவி நீங்கி, எண்திசை போற்ற, நவமணிகளும் சம்பத்தும் பெற்று வாழ்வர்.

வன்னி: பொதுவாக  அரசு+வேம்பு மரத்தடியில் இருக்கும் விநாயகர் வன்னி மரத்தடியிலும் இருப்பதுண்டு. அவுரவர், சுமேதை தம்பதியினரின் மகள் சமீக்கும் மந்தாரனுக்கும் மணம் முடிந்து வரும் வழியில் துதிக்கை வேண்டிப்பெற்ற புருசுண்டி முனிவரின் வித்தியாசமான வடிவைப் பார்த்து சிரிக்க சாபம். விநாயகரிடம் விமோசனம் கேட்க சமீ ஆகிய வன்னி மரத்தின்கீழ் தான் கோவில் கொள்வதாகவும், மந்தார(ன்) மரத்தின் பூ பத்திரங்களை உகந்ததாக ஏற்றுக் கொளவதாகவும் அருள். அன்று முதல் வன்னி மரத்தடியும் விநாயகரின் இருப்பிடங்களில் ஒன்றானது. வன்னி வெற்றியின் அடையாளம். துர்க்கை தவக்கோலத்தில் இருக்குமிடம். அக்னியின் அம்சம் நிறைந்தது. சனிபகவானுக்குரியது வன்னி பத்ரம்.

உகந்த மலர்கள்: செம்பருத்தி, ரோஜா, தும்பை, மந்தாரை, அருகம்புல்

அருகம்புல்: எமனின் மகன் அமலாசுரன். எமனின் மகன் என்ற கர்வத்தில் அனைவரையும் துன்புறுத்துவதுபோல் விநாயகரிடமும்வர விநாயகர் அவனை விழுங்கி விட்டார். அதனால் அவருக்கு வயிற்றில் கடும் எரிச்சல் ஏற்பட்டது. இதுகண்ட அகத்தியர் 21 அருகம் புற்களை விநாயகர் வயிற்றில் வைத்து பூஜை செய்ய எரிச்சல் மறைந்தது. அன்று முதல் விநாயகருக்கு அருகம்புல் சமர்பிப்பது வழக்கமானது.

தோப்புக்கரணம்: மகாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தை விளையாட்டாக விழுங்கிவிட்டார். அது வயிற்றைக் கிழித்து விடுமோ என அனைவரும் நினைக்க பெருமாள் தன் காதுகளை கையால் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்து கொள்வதைப் பார்த்த விநாயகர் வயிறு குலுங்கச் சிரிக்க விஷ்ணு சக்கரம் வெளிவந்தது. அன்று முதல் தோப்புக் கரணம் பழக்கமானது. தோர்ப்பி-கைகள். கர்ணம்-காது. தோர்ப்பிகர்ணம் மருவி தோப்புக்கரணம் ஆனது.

 

உள்ளே.....

1.“விநாயகர் துதிகள்”-தினமும் /வேண்டும்போது.

2.“விநாயகா போற்றி”

3.“விநாயகா போற்றி போற்றி”

4.“108 போற்றி” 

5.“108 போற்றி” 

6.“ஜய ஜய கணபதி” 

7.“பிள்ளையார் துதி”

8.“விநாயகர் சதுர்த்தி” அன்று / தினமும் எல்லாச் செயல்களும் வெற்றிபெற.

9.“விநாயகர் கவசம்”-தடைகள் தகரும், எண்ணம் ஈடேறும், நலம்பெற- காசிப முனிவர்-மூன்று      காலமும்.

10.“ருணஹர விநாயகா தோத்ரம்”-கடன் நீங்கி-அனைத்து வளங்களும் பெற- தினமும் 1/2முறை. 

11.“விநாயகர் அகவல்” - ஒளவையார் அருளியது

12.“டுண்டி கணபதி துதி”- தடைகள் தகரும், எண்ணம் ஈடேறும், நலம்பெற-ஆதிசங்கரர் பாடியது-தினமும்.

13.“ஸ்ரீகணேச புஜங்கம்” -ஆதிசங்கரர்-அருள் பெற.

14.“ஸ்ரீகற்பக விநாயகர்”

15.“ஸ்ரீகணேச சரணம்” 

1.விநாயகர் துதிகள்-தினமும் /வேண்டும்போது.

வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள்நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!

 

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை 
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ
எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!

 

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!

 

விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!

 

பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை 
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!

 

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!

 

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!

 

அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்ததொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!

 

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே! 
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே! 
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

 

யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!

 

ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை 
முக்கட் கடாயானை முன்!

 

களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!

 

மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!

 

மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்த எண்ணுகின்ற எறும்பன்றே அவரை 
வருத்த எண்ணுகின்ற மலம்!

 

நாரணன் முன் பணிந்தேத்த நின்று எல்லை நடாவிய அத்
தோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே, 
காரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா, 
ஆரண நுண்பொருளே, என்பவர்க்கில்லை அல்லல்களே! 

 

திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும் 
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்!

 

மங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா!
பொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே!
சங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!

 

அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி
ஒப்பிலா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து
எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென
அப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே!

 

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

 

இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து

என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!

 

வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க
கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம்
தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க 
வளரொளி விநாயகனே வா!

 

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

 

அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட
வரமழை உதவி செவ்வந்து யானையின்
திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்.

 

முக்கண் ஒருத்தன் மற்றென்னுள வாரி முயங்குதலான்
மிக்க வெண்கோடொன்று மேசிதையா நிற்கும் வெள்ளறிவை
உக்க கருமத மேகரு மாசை ஒழிக்கும் அருள்
புக்கம் செம்மேனி மனஞ் செம்மையாகப் புணர்த்திடுமே.

 

தலைவாரி கடுக்கைமாலைத் தனிமுதல் சடையிற் சூடும்
குழவி வெண்திங்கள் இற்றகோட்டது குறையென்றெண்ணிப்
புழைநெடுங்கரத்தாற் பற்றிப் பொற்புற இனைந்து நோக்கும்
மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்.

 

வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும்!
வெற்றி முகத்து விநாயகனைத் தொழ புத்தி மிகுந்துவரும்!
வெள்ளைக்கொம்பன் விநாயகனைத்தொழ துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே!
அப்பமும் பழம் அமுதும் செய்தருளிய தொப்பையப்பனை தொழ வினையறுமே!

 

தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்!
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும் 
கணபதி என்றிடக் கருமமாதலால்
கணபதி என்றிடக் கருமமில்லையே!

 

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுகட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.


அகரமென அறிவாகி உலகம் எங்கும்
அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்
பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப்
போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும்
நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!

 

வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத்
திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொல்லுநால்
வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை
யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி
வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.

                                                                                                                                                                                                                                                                              பண்ணியம்,ஏந்தும் கரந்தனைக்காக்கிப்
பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச
வியன்கரம் தந்தைதாய்காக்கி 
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக்
கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச்
சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                நீடாழிஉலகத்து மறை நாலொடைந்தென்று நிலை நிற்கவே
வாடாத தலவாய்மை முனிராசன் மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக் மாமேரு வெற்பாக வங்கூர் எழுந்தாணிதன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ.
முருகார் மலர்த்தாம் முடியானை அடியார் முயற்சித்திறம்
திருகாமல் விளைவிக்கும் மதயானைவதனச் செழுங்குன்றினைப்
பருகூதன் முதலாய்ப் முப்பத்து முக்கோடி புத்தேளிரும்
ஒருகோடி பூதே வருங்கை தொழுங்கோவை உற உன்னுவாம்.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                          ஆணிலேஅன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே
அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங்
கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல்
என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே
விளங்கு சித்தி விநாயக வள்ளலே.

2.“விநாயகா போற்றி”

ஓம் அகரமாய் எழுந்தாய் போற்றி

ஓம் அறிவாக மலர்ந்தாய் போற்றி
ஓம் அகிலத்தின் புகலே போற்றி
ஓம் அறுகினை உவப்பாய் போற்றி

ஓம் அறுமுகன் அண்ணா போற்றி
ஓம் அமுதமே அனையாய் போற்றி

ஓம் அரசடி அமர்வாய் போற்றி
ஓம் அன்பர்கள் அகத்தாய் போற்றி

ஓம் அரன் முதன்மகனே போற்றி
ஓம் ஆனைமா முகனே போற்றி
ஓம் ஆதாரப் பொருளே போற்றி
ஓம் ஆனந்த வடிவே போற்றி

ஓம் ஆருயிர்த் துணையே போற்றி
ஓம் ஆறணி சடையாய் போற்றி
ஓம் ஆக்கமே தருவாய் போற்றி
ஓம் ஆரண முதலே போற்றி

ஓம் ஆதியாம் தேவே போற்றி
ஓம் ஆகம முடியே போற்றி
ஓம் இந்தொழிற் சடையாய் போற்றி
ஓம் இலங்குமோர் கொம்பாய் போற்றி

ஓம் இருள்கடி சுடரே போற்றி
ஓம் இதயத்துள் இனிப்பாய் போற்றி
ஓம் இடரெல்லாம் களைவாய் போற்றி
ஓம் இளயானை முகத்தாய் போற்றி

ஓம் இச்சைகள் அளிப்பாய் போற்றி 
ஓம் இன்னல்கள் ஒழிப்பாய் போற்றி 
ஓம் இமயவர் தலைவா போற்றி 
ஓம் ஈசனார் மகனே போற்றி

ஓம் ஈடிலாக் களிறே போற்றி 
ஓம் ஈண்டுவார் நிழலே போற்றி 
ஓம் ஈசானத் திறையே போற்றி 
ஓம் ஈறிலா முதலோய் போற்றி

ஓம் ஈந்திடும் கரத்தாய் போற்றி 
ஓம் ஈசன்தன் குமரா போற்றி 
ஓம் ஈசையாள் மகனே போற்றி 
ஓம் ஈரநெஞ்சுடையாய் போற்றி

ஓம் உம்பர்கோனே போற்றி 
ஓம் உலகினர் புகலே போற்றி 
ஓம் உமைதிரு மகனே போற்றி 
ஓம் உருவினில் மலையே போற்றி

ஓம் உளம் அருட் கனியே போற்றி 
ஓம் உயர்ந்தவர் துணையே போற்றி 
ஓம் உளவளம் தருவாய் போற்றி 
ஓம் உதிரச் செந்நிறத்தாய் போற்றி

ஓம் உன்னிய முடிப்பாய் போற்றி 
ஓம் ஊரெல்லாம் உறைவாய் போற்றி 
ஓம் ஊழ்த்தெழும் உணர்வே போற்றி 
ஓம் ஊனங்கள் நிறைப்பாய் போற்றி

ஓம் ஊக்கங்கள் நிறைப்பாய் போற்றி
ஓம் ஊர்க்குளக் கரையாய் போற்றி 
ஓம் ஊங்கார நாதா போற்றி 
ஓம் ஊழிகள் கடந்தாய் போற்றி

ஓம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி 
ஓம் ஊர்மதிச் சடையாய் போற்றி 
ஓம் எருக்கினை அணிவாய் போற்றி 
ஓம் எங்கனும் இருப்பாய் போற்றி

ஓம் எல்லாமும் ஆனாய் போற்றி 
ஓம் எல்லோர்க்கும் தலைவா போற்றி 
ஓம் எண்குண வடிவே போற்றி
ஓம் எல்லையில்லா அருளே போற்றி

ஓம் எழில்நுதற் கண்ணாய் போற்றி 
ஓம் என்றுமே உள்ளாய் போற்றி
ஓம் எம்பரா போற்றி போற்றி 
ஓம் ஏவல்கள் களைவாய் போற்றி

ஓம் ஏந்தொழிற் கொம்பா போற்றி
ஓம் ஏக்கங்கள் தவிர்ப்பாய் போற்றி
ஓம் ஏதங்கள் கடிவாய் போற்றி
ஓம் ஏர்முனைத் தேவே போற்றி

ஓம் ஏகம்பர் மகனே போற்றி
ஓம் ஏதிலார் துணையே போற்றி
ஓம் ஏரானை முகத்தாய் போற்றி
ஓம் ஏந்தலே போற்றி போற்றி

ஓம் ஐங்காரச் செல்வா போற்றி
ஓம் ஐம்பூத முதலே போற்றி
ஓம் ஐமுக அய்யா போற்றி
ஓம் ஐயம் ஒழி கணேசா போற்றி

ஓம் ஐந்நிலத் தேவே போற்றி
ஓம் ஐம்புலன் கடிவாய் போற்றி
ஓம் ஐவனம் தருவாய் போற்றி
ஓம் ஐயைதன் மகனே போற்றி

ஓம் ஐயனே போற்றி போற்றி
ஓம் ஒப்பிலா ஒருவ போற்றி
ஓம் ஒள்ளிய வடிவே போற்றி
ஓம் ஒற்றைவெண் கொம்பாய் போற்றி

ஓம் ஒளிநுதற் கண்ணாய் போற்றி
ஓம் ஓட்பங்கள் தருவாய் போற்றி
ஓம் ஒலியெலாம் ஆவாய் போற்றி
ஓம் ஒழுகுமும் மதத்தாய் போற்றி

ஓம் ஒண்பதக் கழலாய் போற்றி
ஓம் ஒளிர்ஞானக் களிறே போற்றி போற்றி
ஓம் ஓங்கார வடிவே போற்றி
ஓம் ஓதுவார் மனத்தாய் போற்றி

ஓம் ஓங்குமோர் எழிலாய் போற்றி
ஓம் ஓங்குபேர் அருளாய் போற்றி
ஓம் ஓமெனும் பொருளே போற்றி
ஓம் ஓடோடி வருவாய் போற்றி

ஓம் ஓதாதே உணர்ந்தாய் போற்றி
ஓம் ஓய்விலாத் தேவே போற்றி
ஓம் ஓங்கார முதல்வா போற்றி 
ஓம் கணபதித் தேவா போற்றி

ஓம் கதிதரும் இறையே போற்றி
ஓம் கங்காளன் மகனே போற்றி
ஓம் கன்னியாள் சுதனே போற்றி
ஓம் கடுக்கையந் தாராய் போற்றி

ஓம் கணேசனே காப்பாய் போற்றி
ஓம் கவலைகள் தீர்ப்பாய் போற்றி
ஓம் கங்கையாள் புதல்வா போற்றி
ஓம் கணநாதா போற்றி போற்றி

ஓம் மூவுலகாளும் முதல்வா போற்றி!
ஓம் முக்குணங்கடந்த நாதா போற்றி!
ஓம் கற்பகக் களிரே குருவே போற்றி!
ஓம் நாலிறு புயத்தாய் நாயகா போற்றி!

ஓம் நாற்றிசை போற்றும் தலைவா போற்றி!
ஓம் நானற்றவிடமே நிற்பாய் போற்றி!
ஓம் அல்லல் களையும் அருளே போற்றி!
ஓம் எல்லாம் வல்ல இறைவா போற்றி!

தேவர் தொழுங் கருணைச் செல்வனே போற்றி!
சிறந்தொளிரும் மங்கள சொரூபனே போற்றி!
ஓவறு சித்திகளனைத்தும் உதவுவோய் போற்றி!
ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்

மேவியொளிர் சரணே போற்றி! 
மததாரை விரவியதிண் கபோலனே போற்றி!
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!

3.“விநாயகா போற்றி போற்றி”

ஓம் எனும் பொருளாய் உள்ளாய் போற்றி!

பூமெனும் பொருள் தொறும் பொலிவாய் போற்றி
அகரம் முதலென ஆனாய் போற்றி!
அகர உகர ஆதி போற்றி! 

மகரமாய் நின்ற வானவ போற்றி!
பகர்முன்னவாம் பரமே போற்றி! போற்றி!

மண்ணாய் விண்ணாய் மலர்ந்தாய் போற்றி!
கண்ணுள் மணியாய்க் கலந்தாய் போற்றி!

நீர்தீக் காற்றாய் நின்றாய் போற்றி! 
கார் குளிராகக் கணிந்தாய் போற்றி!
பகலவன் நிலவாய்ப் பரந்தாய் போற்றி!
நிகர்மீன் கணமாய் நிலைத்தாய் போற்றி! போற்றி!

மழைபொழி இமயவல்லி சேய் போற்றி!

தழைசெவி எண்தோள் தலைவ போற்றி!
திங்கட் சடையோன் செல்வ போற்றி!
எங்கட்கு அருளும் இறைவா போற்றி!

ஆறுமுகச் செவ்வேட்கு அண்ணா போற்றி!
சிறுகண் களிற்றுத் திருமுக போற்றி! போற்றி!

செம்பொன் மேனிச் செம்மால் போற்றி!
உம்பர் போற்றும் உம்பல் போற்றி!

பண்ணியம் ஏந்துகைப் பண்ணவ போற்றி!
எண்ணிய எண்ணியாங் கிசைப்பாய் போற்றி!
அப்பமும் அவலும் கப்புவாய் போற்றி!
முப்புரி நூல் மார்பு அப்பா போற்றி! போற்றி!

எள்ளுருண்டை பொரி ஏற்போய் போற்றி
தள்ளுறு தெவிட்டாத் தேனே போற்றி!
மூவர் மொழியிடம் மொழிந்தாய் போற்றி
தேவர்க்கு அரிய தேவா போற்றி!

மாலுக்கு அருளிய மதகரி போற்றி!
பாலனெக் கடல்நீர் பருகினாய் போற்றி! போற்றி!

பாரதம் எழுதிய பரூஉக்கர போற்றி!
மாரதம் அச்சொடி மதவலி போற்றி!

மாங்கனி அரன்பால் வாங்கினோய் போற்றி!
ஈங்கினி எம்பால் எழுந்தருள் போற்றி!
கரும்பாயிரங்கொள் கள்வா போற்றி!
அரும்பொருளே எம் ஐயா போற்றி! போற்றி!

திணைபால் கடந்த தேவே போற்றி!

புனையாய் இடர்க்கடல் போக்குவோய் போற்றி!
பேழை வயிற்றுப் பெம்மன் போற்றி!
ஏழைக்கிரங்கும் எம்மிறை போற்றி!

அடியவர் உள்ளம் அமர்ந்தாய் போற்றி!
அடிமலர் எம்தலை அணிவாய் போற்றி! போற்றி!

திருநீற்றொளிசேர் செம்மால் போற்றி!
இருவேறுருவ ஈசா போற்றி!

உள்ளத்திருளை ஒழிப்பாய் போற்றி!
கள்ளப் புலனைக் கரைப்பாய் போற்றி!
நம்பியாண்டார்க்கருள் நல்லாய் போற்றி!
எம்பிரானாக இசைந்தாய் போற்றி! போற்றி!

உருகுவோருள்ளத் தொளியே போற்றி!
பெருமருள் சுரக்கும் பெருமான் போற்றி!
தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி!
உம்பர்கட்கரசே ஒருவ போற்றி!

பிள்ளையார்ப் பெயர்கொண்டுள்ளாய் போற்றி!
வள்ளலாய் நலங்கள் வழங்குவாய் போற்றி! போற்றி!

மூவாச் சாவா முத்தா போற்றி!
ஆவா எங்களுக்கு அருள்வாய் போற்றி!

தமிழ்ச்சுவைச்சார் திருச்செவியாய் போற்றி!
அமிழ்தாய் எம் அகத்தானாய் போற்றி!
மழவிளங்களிறே மணியே போற்றி!
குழவியாய்ச் சிவன் மடி குலவுவோய் போற்றி! போற்றி!

பெருச்சாளியூரும் பிரானே போற்றி!

நரிச்செயலார் பால் நண்ணாய் போற்றி!
செந்தாமரைத்தாள் தேவா போற்றி!
நந்தா மணியே நாயக போற்றி!

இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி! 
கரிமுகத்தெந்தாய் காப்போய் போற்றி! போற்றி!

ஆங்காரம்முளை அறுப்பாய் போற்றி!
பாங்கார் இன்பப் பராபர போற்றி!

கற்றவர் விழுங்கும் கனியே போற்றி!
மற்றவர் காணாமலையே போற்றி!
சொல்லொடு பொருளின் தொடர்பே போற்றி!

கல்லும் கரைக்க வல்லோய் போற்றி! போற்றி!
தொந்தி வயிற்றுத் தந்தி போற்றி!
முந்திய பொருட்கும் முந்தியோய் போற்றி!

ஐந்துகையுடைய ஐய போற்றி!

ஐந்தொழில் ஆற்றும் அமர போற்றி!

அருளாய் அருள்வாய் ஆண்டவ போற்றி!
தருவாய் மணமலர்த் தாராய் போற்றி! போற்றி!

கயமுக அசுரனைக் காய்ந்தாய் போற்றி!
மயலறும் இன்ப வாழ்வே போற்றி!

ஆனையாய்ப் புழுவாய் ஆனாய் போற்றி!
பானை வயிற்றுப் பரமே போற்றி!
கடம்பொழி யானைக் கன்றே போற்றி!
மடம் ஒழி அறிவின்வளவனே போற்றி! போற்றி!
பாலொடு தேனும் பருகுவோய் போற்றி!
மேலொடு கீழாய் மிளிர்வாய் போற்றி!
எய்ப்பில் வைப்பாய் இருந்தோய் போற்றி!
மெய்ப்பொருள் வேழமுகத்தாய் போற்றி!

நால்லார்க் கெட்டும் நாதா போற்றி!
பொல்லா மணியே புராதன போற்றி! போற்றி!

அறிவின் வரம்பை அகன்றாய் போற்றி!
குறிகுணங் கடந்த குன்றே போற்றி!

எட்டு வான் குணத்தெந்தாய் போற்றி!
கட்டறு களிற்று முகத்தோய் போற்றி!
மலரில் மணமாய் வளர்ந்தாய் போற்றி!
அலர் கதிர் ஒளியின் அமர்வோய் போற்றி!போற்றி!

ஓங்கார முகத்தொருத்தல் போற்றி!    
ஏங்கா துயிர்க்கருள் இயற்கை போற்றி!
எண்ணும் எழுத்துமாய் இசைந்தாய் போற்றி!
பண்ணூம் எழுத்துமாய் பரந்தாய் போற்றி!

அருவே உருவே அருவுருவே போற்றி!
பொருளே பொருளின் புணர்ப்பே போற்றி! போற்றி!

புகர்முகக் களிற்றுப் புண்ணிய போற்றி!
அகலிடம் நிறைய அமர்ந்தோய் போற்றி!

செல்வம் அருள்க தேவா போற்றி!
நல்லன எமக்கருள் நாயக போற்றி!
ஆக்கமும் ஊக்கமும் அருள்வாய் போற்றி
காக்க எங்களை உன் கழலிணை போற்றி! போற்றியே!

4.“108 போற்றி”

ஓம் அங்குச தாரா போற்றி!

ஓம் அரவ நாணோய் போற்றி!
ஓம் அர்க்க விநாயக போற்றி!
ஓம் அன்பு கணபதி போற்றி!

ஓம் ஆகு வாகனா போற்றி!
ஓம் ஆனை மாமுகனே போற்றி!
ஓம் இளம் பிறை அணிந்தோய் போற்றி!
ஓம் ஈசன் மைந்தனே போற்றி!

ஓம் உச்சிப் பிள்ளையே போற்றி!
ஓம் உடுண்டி விநாயகா போற்றி!
ஓம் ஊர்த்தவ கணபதியே போற்றி!
ஓம் எண்கர விநாயகா போற்றி!

ஓம் ஏக தந்த விநாயகா போற்றி!
ஓம் ஐங்கர விநாயகா போற்றி!
ஓம் கண நாயகா போற்றி!
ஓம் கணபதியே போற்றி!

ஓம் கரிமுக விநாயகா போற்றி!
ஓம் கருணை விநாயகா போற்றி!
ஓம் கணேசா போற்றி!
ஓம் கண்டா கணபதி போற்றி!

ஓம் கமல விநாயகா போற்றி!
ஓம் கஜ கன்ன விநாயகா போற்றி!
ஓம் குருந்தாள் விநாயகா போற்றி!
ஓம் கூத்தாடும் பிள்ளையே போற்றி!

ஓம் கௌரி மைந்தா போற்றி!
ஓம் சக்தி விநாயகா போற்றி!
ஓம் சங்கரன் மைந்தா போற்றி!
ஓம் சங்கரி மைந்தா போற்றி!

ஓம் சங்குபாணி விநாயகா போற்றி!
ஓம் சதுர் முக கணபதியே போற்றி!
ஓம் சந்தான விநாயகா போற்றி!
ஓம் சித்தி விநாயகா போற்றி!

ஓம் சித்தி புத்தி விநாயகா போற்றி!
ஓம் சிந்தாமணி விநாயகா போற்றி! 
ஓம் சிந்தூர விநாயகா போற்றி!
ஓம் சிவசக்தி விநாயகா போற்றி!

ஓம் சுந்திர விநாயகா போற்றி!
ஓம் சுமுக விநாயகா போற்றி!
ஓம் சுமங்கல விநாயகா போற்றி!
ஓம் செல்வ விநாயகா போற்றி!

ஓம் ஞான விநாயகா போற்றி!
ஓம் தந்திமுக விநாயகா போற்றி!
ஓம் தத்துவ விநாயகா போற்றி!
ஓம் தருண கணபதியே போற்றி!

ஓம் திரிமுக விநாயகா போற்றி!
ஓம் துங்கக் கரிமுகனே போற்றி!
ஓம் துண்டி விநாயகா போற்றி!
ஓம் துன்முக விநாயகா போற்றி!

ஓம் தும்பிக்கை நாதா போற்றி!
ஓம் துளைக்கர விநாயகா போற்றி!
ஓம் தேசிய விநாயகா போற்றி!
ஓம் தொப்பக் கணபதியே போற்றி!

ஓம் நர்த்தன விநாயகா போற்றி!
ஓம் நவசக்தி விநாயகா போற்றி!
ஓம் நித்திய கணபதியே போற்றி!
ஓம் பஞ்சமுக விநாயகா போற்றி!

ஓம் பக்தி விநாயகா போற்றி!
ஓம் பஞ்சபூத விநாயகா போற்றி!
ஓம் பாகீரத விநாயகா போற்றி!
ஓம் பாசாங்குச விநாயகா போற்றி!

ஓம் பாதாள விநாயகா போற்றி!
ஓம் பார்வதி மைந்தா போற்றி!
ஓம் பாலசந்திர விநாயகா போற்றி!
ஓம் பால விநாயகா போற்றி!

ஓம் பிரசன்ன விநாயகா போற்றி!
ஓம் பிரணவப் பொருளே போற்றி!
ஓம் பிள்ளையாரே போற்றி!
ஓம் பிறையெயிற்றோனே போற்றி!

ஓம் புண்ணியநாதா போற்றி!
ஓம் பூத விநாயகா போற்றி!
ஓம் பெருச்சாளி வாகனா போற்றி!
ஓம் பொல்லாப் பிள்ளையே போற்றி!

ஓம் மகா கணபதி போற்றி!
ஓம் மங்கள கணபதி போற்றி!
ஓம் மந்திர விநாயகா போற்றி!
ஓம் மணக்குள விநாயகா போற்றி!

ஓம் மயூர விநாயகா போற்றி!
ஓம் முக்கண் விநாயகா போற்றி!
ஓம் முக்குருணி விநாயகா போற்றி!
ஓம் முச்சந்தி விநாயகா போற்றி!

ஓம் முத்து கணபதியே போற்றி!
ஓம் முழுமுதற் கோமானே போற்றி!
ஓம் மூலப் பொருளே போற்றி!
ஓம் மூஷிக வாகனா போற்றி!

ஓம் மோதக விநாயகா போற்றி!
ஓம் யாணை முகத்தனே போற்றி!
ஓம் ரத்தின விநாயகா போற்றி!
ஓம் ராஜகணபதியே போற்றி!

ஓம் லம்போதர கணபதியேபோற்றி!
ஓம் வல்லபை விநாயகா போற்றி!
ஓம் வரசக்தி விநாயகா போற்றி!
ஓம் வன்னி விநாயகா போற்றி!

ஓம் வக்கிர துண்ட விநாயகா போற்றி!
ஓம் வாதாபி கணபதியே போற்றி!
ஓம் விகட கணபதியே போற்றி!
ஓம் விக்கின விநாயகா போற்றி!

ஓம் விக்னேஸ்வரா போற்றி!
ஓம் வினை தீர்க்கும் விநாயகா போற்றி!
ஓம் விஷ்னு விநாயகா போற்றி!
ஓம் வீம விநாயகா போற்றி!

ஓம் வெற்றி விநாயகா போற்றி!
ஓம் வேத விநாயகா போற்றி!
ஓம் வீர கணபதியே போற்றி!
ஓம் வைர விநாயகா போற்றி!

ஓம் வரத விநாயகா போற்றி!
ஓம் ஜோதி விநாயகா போற்றி!
ஓம் விஜய விநாயகா போற்றி!
ஓம் வினைதீர் விநாயகா போற்றி!

5.“108 போற்றி”

ஓம் ஓம் எனும் பொருளே ஒப்பிலாப் போற்றி!

ஓம் உயர்வற உயர்நலப் புகலே போற்றி!
ஓம் எண்தோனவனின் செல்வா போற்றி!
ஓம் இமயச் செல்விமகனே போற்றி!

ஓம் காங்கேயன் மகிழ் தமையா போற்றி!
ஓம் கற்பக மூர்த்தியாம் கடவுளே போற்றி!

ஓம் வேழமுகத்துக் கடவுளே போற்றி!
ஓம் பேழைபெரு வயிறுடையாய் போற்றி!

ஓம் இருகையுடைய எந்தாய் போற்றி!
ஓம் ஒருகை லிங்கம் எந்தினாய் போற்றி!
ஓம் மணம்விரி மலர்த்தொடை சூடினாய் போற்றி!
ஓம் மாமதச் சிந்தூரக் களபமே போற்றி!

ஓம் மதிப்பவர் மனத்துறு மணியே போற்றி!

ஓம் நெடும்பொறிற் சரணம் அடைந்தோம் போற்றி!
ஓம் நெஞ்சத்து ஒடுங்கும் நீரினாய் போற்றி!
ஓம் ஆரண நுண்பொருள் ஆனாய் போற்றி!

ஓம் ஆட்கொண்டருளும் அரனே போற்றி!
ஓம் பக்தர் சித்தத்தை அறியுமானாய் போற்றி!

ஓம் பரில சேடம் அளிப்பாய் போற்றி!
ஓம் எண்ணிய எண்ணியாங்கு ஈவாய் போற்றி!

ஓம் தண்கடமாமுகத் தலைவா போற்றி!
ஓம் முக்கட் செம்மேனியெனே போற்றி!
ஓம் முக்கட் பரமாம் முதல்வா போற்றி!

ஓம் வரம் எல்லாம் தரு வள்ளல் போற்றி!
ஓம் பரமன் ஆகிய கணேசா போற்றி!
ஓம் பாரதம் எழுதி பரூஉக்கர போற்றி!

ஓம் மாரத அச்சொடி மதவலி போற்றி!

ஓம் சித்தி யானை தன் பொற்பதம் போற்றி!

ஓம் சச்சிதானந்த போகமே போற்றி!
ஓம் காரணனே எம் கணபதி போற்றி!

ஓம் கருணை முதிர் இளங்கன்றே போற்றி!
ஓம் கரகம் கவிழ்த்த கரியே போற்றி!

ஓம் கயமா முகனைக் கடிந்தாய் போற்றி!
ஓம் விக்ன விநாயகா விமலா போற்றி!
ஓம் எனை நினைந்தடிமை கொள்வாய் போற்றி!
ஓம் உனை நான் நினைய அருள்வாய் போற்றி!

ஓம் அடியார் உள்ளக் கோயிலாய் போற்றி!

ஓம் அறக் கருணை புரி அழகா போற்றி!
ஓம் பொருள் நான்கினையும் தருவாய் போற்றி!
ஓம் புகுந்தென் உள்ளம் பிரியாய் போற்றி!

ஓம் மண்ணின் ஐங்குணம் ஆனாய் போற்றி!
ஓம் நீரிடை நான்காய் நின்றாய் போற்றி!

ஓம் தீயின் மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி!
ஓம் வளியின் இரண்டாய் வதிந்தாய் போற்றி!

ஓம் வெளியின் ஒன்றாய் விளங்கினாய் போற்றி!
ஓம் உலகனைத்துமாய் ஒளிர்வாய் போற்றி!
ஓம் உவந்தன் சரணம் அடைந்தோம் போற்றி!
ஓம் செய்வினை முதலும் நீயே போற்றி!

ஓம் செயப்படு பொருளும் நீயே போற்றி!
ஓம் சொந்தாமரைப் பூம்பாதம் போற்றி!
ஓம் அற்புதக் கற்பகக் களிறே போற்றி!
ஓம் முப்பழம் நுகரும் அப்பனே போற்றி!

ஓம் இப்பொழுது என்னை ஆட்கொள் போற்றி!
ஓம் தாயாய் எனக்கும் எழுந்தருள் போற்றி!

ஓம் பொருந்தவே வந்தேன் உளம்புகு போற்றி!
ஓம் குருவடிவாகி ஆட்கொள் போற்றி!

ஓம் திருவடி வைத்தே அருள்வாய் போற்றி!
ஓம் வாடா வகைதான் வழங்குக போற்றி!
ஓம் கோடயுதத்தால் வினைதீர் போற்றி!
ஓம் உவட்டா உபதேசம் புகட்டுக போற்றி!

ஓம் தெவிட்டாத ஞானத்தெளி அருள் போற்றி!

ஓம் இன்புறு கருணையின் இனிதருள் போற்றி!
ஓம் இருவினை தம்மை அறுப்பாய் போற்றி!
ஓம் இருள் கடிந்தென்னை ஏந்துக போற்றி!

ஓம் நலம் ஒரு நான்கும் தந்தருள் போற்றி!
ஓம் மலம் ஒரு மூன்றின் மயக்கறு போற்றி!

ஓம் எண் முகமாம் இனிதருள் போற்றி!
ஓம் இருத்தி முத்தி இனிதருள் போற்றி!

ஓம் என்னை அறிவித்து எனக்கருள் போற்றி!
ஓம் முன்னை வினையின் முதல்களைப் போற்றி!
ஓம் அருள்தரும் ஆனந்தத்துள் அழுத்துக போற்றி!

ஓம் அல்லல் களையும் அரசே போற்றி!
ஓம் அருள்வழி காட்டி ஆட்கொள் போற்றி!
ஓம் தத்துவ நிலையைத் தருவாய் போற்றி!

ஓம் வித்தக விநாயக விரை கழல் போற்றி!

ஓம் பால்நிலா மருப்புக் கரத்தானே போற்றி!

ஓம் பாசாங்குசப் படை தாங்குவாய் போற்றி!
ஓம் கரிசினேற் இரண்டு கரத்தனே போற்றி!

ஓம் காப்பாய் மூலப்பொருளே போற்றி!

ஓம் பிறர்க்கெலாம் புகலிடம் ஆளாய் போற்றி!
ஓம் புகல்தனக்குஇல்லா பொருளே போற்றி!
ஓம் வித்தைகள் பிறக்கும் இடமே போற்றி!

ஓம் விக்கின சமர்த்த விநாயகர் போற்றி!

ஓம் தம்பி தனக்காக வனத்தணைந்தாய் போற்றி!

ஓம் தாதை வலத்தால் அருள் கைக் கனியோய் போற்றி!
ஓம் அன்பர் தமக்கான நிலைப் பொருளே போற்றி!
ஓம் ஐந்துகரத்தனை முகப்பெருமாள் போற்றி!
ஓம் நம்பியாண்டார்க்கு அருள் நலமே போற்றி!

ஓம் கற்பகமே என் கருத்தே போற்றி!
ஓம் கடைகண் அருள் நீ தருவாய் போற்றி!

ஓம் தடையிலாது என் செயல் முடிப்பாய் போற்றி!
ஓம் எம்மை தஞ்சமாய் ஏற்பாய் போற்றி!

ஓம் எம்பால் அன்பே இனிதருள் போற்றி!
ஓம் ஏழை எமக்கு அருள் ஈவாய் போற்றி!
ஓம் எய்ப்பினில் வைப்பாய் இருப்பாய் போற்றி!
ஓம் விழையும் நலங்கள் தருவாய் போற்றி!

ஓம் தழையும் நல் இன்பங்கள் தருவாய் போற்றி!
ஓம் தனக்கு ஒப்பில்லாத தலைவா போற்றி!
ஓம் எனக்கு அருள் தருவாய் இனியா போற்றி!
ஓம் நூறு வயதும் தருவாய் போற்றி!

ஓம் நவக்கிரக தோஷங்கள் நீக்குவாய் போற்றி!
ஓம் பேறுகள் யாவும் தருவாய் போற்றி!

ஓம் விண்மழை தந்து களிப்பாய் போற்றி!
ஓம் கண்ணிய நலமே காப்பாய்போற்றி!

ஓம் ஞாலத் துயர்கள் தீர்ப்பாய் போற்றி!
ஓம் கோல நல் வாழ்வே குறிப்பாய் போற்றி!
ஓம் ஆற்றல் நல்ல வழி அருள்வாய் போற்றி!
ஓம் போற்றி! போற்றி! உன் அடைக்கலம் போற்றி!

6.“ஜய ஜய கணபதி”

சிந்தித்தவர்கருள் கணபதி ஜயஜய

சீரிய ஆனைக்கன்றே ஜயஜய

அன்புடை அமரர்கள் காப்பாய் ஜயஜய

ஆவித் துணையே கணபதி ஜயஜய

இண்டைச் சடைமுடி இறைவா ஜயஜய

ஈசன் தந்தருள் மகனே ஜயஜய
உன்னிய கருமம் முடிப்பாய் ஜயஜய
ஊர்த்துவ சக்தி உகந்தாய் ஜயஜய

எம்பெருமானே இறைவா ஜயஜய
ஏழுலகுந்தொழ நின்றாய் ஜயஜய
ஐயா கணபதி நம்பியே ஜயஜய
ஒற்றை மருப்புடை வித்தகா ஜயஜய

ஓங்கிய ஆனைக் கன்றே ஜயஜய
ஒளவிய மில்லா அருளே ஜயஜய
அக்கரவஸ்த்து ஆனவா ஜயஜய

கணபதி என்வினை களைவாய் ஜயஜய

ஙப்போல் மழுவொன்றேந்தியோய் ஜயஜய
சங்கரன் மகனே சதுரா ஜயஜய
ஞய நம்பினர்பாலாடியே ஜயஜய
இடம்படு விக்கின விநாயகா ஜயஜய

இணங்கிய பிள்ளைகள் தலைவா ஜயஜய

தத்துவ மறைதெரி வித்தகா ஜயஜய
நன்னெறி விக்கின விநாயக ஜயஜய 
பள்ளியிலுறைதரும் பிள்ளாய் ஜயஜய

மன்றுளாடும் மணியே ஜயஜய

இயங்கிய ஞானக் குன்றே ஜயஜய
அரவக் கிண்கிணி ஆர்ப்பாய் ஜயஜய
இலகக் கொம்பொன்றேந்தினோய் ஜயஜய

வஞ்சனை பலவும் தீர்ப்பாய் ஜயஜய
அழகிய ஆனைக்கன்றே ஜயஜய

இளமத யாணை முகத்தாய் ஜயஜய
இரகுபதி விக்கின விநாயகா ஜயஜய
அனந்தலோடாதியில் அடிதொழ அருளே!

7.“பிள்ளையார் துதி”

பிள்ளையார்! பிள்ளையார்! பெரிய தொந்தி பிள்ளையார்!

பையப்பைய நடந்துவந்து பழம்பறித்த பிள்ளையார்!
செல்வம் தரும் பிள்ளையார்! சிவல்புரியின் பிள்ளையார்!
சங்கரனின் மூத்தமகன் சாமிநாதப் பிள்ளையார்!

வேலவனை வழியனுப்பி வெற்றிதரும் பிள்ளையார்!
வீடுவந்தவுடன் விருந்து வைக்கும் பிள்ளையார்!
குள்ளகுள்ள பிள்ளையார்! குண்டுவயத்து பிள்ளையார்!
குட்டிகட்டி உக்கிபோட்டு கும்பிடலாம் பிள்ளையார்!

கருணையுள்ளபிள்ளையார்! கண்மாய்க்கரை பிள்ளையார்!
காலமெல்லாம் காத்திருந்து கணக்கெழுதும் பிள்ளையார்!
ஆற்றங்கரைப் பிள்ளையார்! ஐந்துகர பிள்ளையார்!
அன்னையைப்போல் பெண்பார்க்கும் ஆணைமுக பிள்ளையார்!

சித்திதரும் பிள்ளையார்! முக்திதரும் பிள்ளையார்!

செந்தில் வடிவேலனுக்கு முந்திவந்த பிள்ளையார்!
பரம் பொருளாம் பிள்ளையார்! பரமன் மகன் பிள்ளையார்!
பழநி சென்று வந்தபேர்க்கு பலன் கொடுக்கும் பிள்ளையார்!

பிள்ளையார்பிள்ளையார்! பெருமைவாய்ந்த பிள்ளையார்!
பிள்ளையார்! பிள்ளையார்! அருளைத்தரும் பிள்ளையார்!
ஆற்றங்கரை ஓரத்திலே அரசமரத்து நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார்! வினைகள் தீர்க்கும் பிள்ளையார்!
ஆறுமுக வேலனின் அண்ணனான பிள்ளையார்!
நேருதுன்பம் யாவையும் தீர்த்துவைக்கும் பிள்ளையார்!
மஞ்சளிலே செய்திடினும் மண்ணினாலே செய்திடினும்
அஞ்செழுத்து மந்திரத்தை நெஞ்சில் காட்டும் பிள்ளையார்!

அவல்பொரி கடலையும் அரிசி கொழுக்கட்டையும்
கவலையின்றி உண்ணுவார்! கண்ணைமூடித் தூங்குவார்
கலியுகத்தின் விந்தையைக் காணவேண்டி அனுதினம்
எலிமீதேறி இஷ்டம் போல சுற்றும் பிள்ளையார்!

8.“விநாயகர் சதுர்த்தி” அன்று / தினமும்-- எல்லாச் செயல்களிலும் வெற்றிபெற.

ஓம் எனும் மூல மந்திரத்திற்கு அதிபதியான கணபதியை வணங்குகின்றேன். பூத கணங்களுக்குத் தலைவனாக விளங்குபவரே, இடையூறுகளை இல்லாது செய்பவரே, அழகான நீண்ட துதிக்கை உடையவரே, யானையின் முகங்கொண்டவரே, கங்கா, கௌரி என்ற இரண்டு தாய்களைக் கொண்டவரே, பக்தர்களுக்கு என்றும் குறைவில்லா அருள் பொழிபவரே, ஒரு தந்தம் கொண்டவரே, அழகிய பெரிய யானையின் காதுகளைக் கொண்டவரே, உலக மக்களைக் காக்கும் முதல் கடவுளே, பரமன்-உமாவின் புத்திரரே, உனக்கு எனது வணக்கங்கள். எனது பிரச்சனைகளையெல்லாம் விலக்கி நிம்மதிப் பெருவாழ்வு வாழ வழி காண்பிப்பீராக!  

9.“விநாயகர் கவசம்”-தடைகள் தகரும், எண்ணம் ஈடேறும், நலம்பெற- காசிப முனிவர் பாடியது- மூன்று காலமும்

வளர் சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க! 

வாய்ந்தசென்னி அளவுபடா அதிக சவுந்தர தேகம்

மதோத்கடர்தாம் அமர்ந்து காக்க! விளரற

நெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்க!

புருவந் தம்மைத் தளர்வில் மகோதரர் காக்க!

தடவிழிகள் பாலசந்திரனார் காக்க!

கவின்வளர் அதரம் கசமுகர் காக்க!

தாலங் கணக்கீரிடர் காக்க!

நவில்சிபுகம் கிரிசை சுதர் காக்க!

நனி வாக்கை விநாயகர்தாம் காக்க!
அவிர்நகை துன்முகர் காக்க!
அள் எழிற் செஞ்செவி பாச பாணி காக்க!

தவிர்தலுறாது இளங்கொடிபோல் வளர்மணி 
நாசியைக் சித்திதார்த்தர் காக்க! காமருபூ 
முகந்தன்னைக் குணேசர் நனி காக்க!
களம் கணேசர் காக்க!

வாமமுறும் இருதோளும் வயங்கு கந்தபூர்வசர் 
தாம் மகிழ்ந்து காக்க! ஏமமுறு மணிமுலை 
விக்கின விநாசர் காக்க! இதயந் தன்னைத் 
தோமகலுங் கணநாதர் காக்க!

அகட்டினைத் துலங்கு ஏரம்பர் காக்க!
பக்கம் இரண்டையும் தராதரர் காக்க! 
பிருட்டத்தைப் பாவம் நீக்கும் விக்கினகரன் காக்க!

விளங்கிலிங்கம் வியாளபூடணர்தாம் காக்க!

தக்க குய்யந்தன்னை வக்கிரதுண்டர் காக்க! 
சகனத்தை அல்லல் உக்க கணபன் காக்க! 
ஊருவை மங்களமூர்த்தி உவந்து காக்க!
தாழ்முழந்தாள் மகாபுத்தி காக்க!

இருபதம் ஏக தந்தர் காக்க! வாழ்கரம் 
க்ஷிப்பிரப் பிரசாதனர் காக்க! முன்கையை 
வணங்குவார் நோய் ஆழ்தரச்செய் ஆசாபுரகர் காக்க!

கேழ்கிளறும் நகங்கள் விநாயகர் காக்க!

கிழக்கினிற் புத்தீசர் காக்க!
அக்கினியிற் சித்தீசர் காக்க! 
உமாபுத்திரர் தென் திசை காக்க! 
மிக்க நிருதியிற் கணேசுரர் காக்க!

விக்கினவர்த்தனர் மேற்கென்னுந் திக்கதனிற் காக்க!
வாயுவிற் கசகன்னர் காக்க! 
திகழ்வு தீசி தக்க நிதிபன் காக்க! 
வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க!

ஏகதந்தர்பகல் முழுதுங் காக்க! இரவினும் சந்தி
இரண்டன் மாட்டும் ஒகையின் விக்கினகிருது காக்க!
இராக்கதர் பூதம் உறு வேதாளம் மோகினி பேய்
இவையாதி உயிர்த்திறத்தால் வருந்துயரும் 
முடிவிலாத வேகமுறு பிணிபலவும் விலக்கு 
பாசாங்குசர்தாம் விரைந்து காக்க!

மதி,ஞானம், தவம், தானம், மானம், ஒளி, புகழ்,

குலம், வண்சரீரம், முற்றும் பதிவான தனம்,

தானியம், கிருகம், மனைவி, மைந்தர், பயில்

நட்பாதிக் கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்க!

காமர் பவுத்திரர் முன்னான விதியாரும்

சுற்றமெலாம் மயூரேசர் எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க!

வென்றி,சீவிதம் கபிலர் காக்க!

கரியாதியெலாம் விகடர் காக்க!

என்றிவ்வாறிது தனை முக்காலுமும் ஓதிடின்,

நும்பால் இடையூறென்றும் ஒன்றுறா, முனிவரர்காள்,

அறிமின்கள், யாரொருவர் ஓதினாலும் மன்ற ஆங்கவர்

தேகம் பிணியற வச்சிர தேகமாகி மின்னும்!

10.“ருணஹர விநாயகா தோத்ரம்.”- பதினைந்து எழுத்துக்களை பீஜாட்சர மந்திரமாகக் கொண்ட கணபதியின் இந்த துதி, மகா மந்திரம் போல் சக்தி வாய்ந்தது, தேவகுருவான ஞான பிரகஸ்பதியைப் போல ஞானம் பெறலாம். குபேரனைப்போல தனத்தைப் பெறலாம். பூதபிரேத பிசாசுகளினால் ஏற்படும் பயங்கள் நீங்கும். இது வேதத்திற்கு சமமான துதியாகும். கடன் நீங்கி-அனைத்து வளங்களும் பெற- தினமும் 1முறை/2முறை

செந்தழல் நிறத்தில் உள்ளவரும், இரு கரங்களை உடையவரும், தாமரை மலரிலமர்ந்து அருள்பவரும், பருத்த வயிறையுடையவரும், பிரம்மாதி தேவர்களால் எப்போதும் துதிக்கப்படுபவரும், சித்தர்களால் சூழப்பட்டவருமான சித்தி விநாயகரை துதிக்கின்றேன்.

ஆதியில் பிரும்மாவால் தனது சிருஷ்டித் தொழில் நன்கு நடைபெற கிரமத்துடன் பூஜை செய்யப்பட்ட தெய்வமான பார்வதி புத்ரன், எனது கடன்களிலிருந்து நிவாரணமளிக்கட்டும்.

திரிபுராந்தக வதத்திற்குமுன் தந்தை சம்புவால் முறைப்படி பூஜிக்கப்பட்ட உமாசுதன் என் கடன்களை நசிக்கச் செய்யட்டும்.

மஹிஷாசுர வதத்திற்கு முன்னால் தேவியால் பூஜிக்கப்பட்ட உமாபாலனான கணநாதன் எனது கடன்களை நிவர்த்தி செய்து என்னைக் காப்பாற்றட்டும்.

இரண்யகசிபு போன்ற அசுரர்களை வதம் செய்வதற்கு ஏதுவாக விஷ்ணுவால் அர்ச்சிக்கப்பட்ட தெய்வமான பார்வதி குமரன், எனது கடன் தொல்லையைப் போக்கி என்னைக் காப்பாற்றட்டும்.

தாரகாசுரனை வதம் செய்வதற்காக குமரக் கடவுளால் பூஜிக்கப்பட்ட பெருமைக்குரிய கடவுளான அம்பிகை பாலன் எனது கடன் சுமையை நாசம் செய்யட்டும்.

ஆதியில் காரிய சித்திக்காக சூரிய பகவானால் பூஜை செய்யப்பட்ட தேவனான பார்வதி மைந்தன் என் கடன் தொல்லையைப் போக்கட்டும்.

சந்திரன், ஒளி குன்றாமலிருக்க வேண்டி பூஜித்த இறைவனான உமா மைந்தன் எனக்கு ருணநாசம் செய்து அருளட்டும்.

வேள்விகளைக் காப்பதற்காக விஸ்வாமித்திரரால் பூஜிக்கப்பட்ட பார்வதி குமாரனாகிய தெய்வம், கடன் எனும் இக்கட்டில் இருந்து என்னை விடுதலை செய்யட்டும்.

11.“விநாயகர் அகவல்”- ஒளவையார் அருளியது

சீதக் களபச் செந்தாமரைப்பூம்

பாதச் சிலம்பு பல இசை பாடப்
பொன் அரை ஞானும் பூந்துகில்ஆடையும் 
வண்ண மருங்கில் வளர்ந்து அழகு எறிப்ப

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழமுகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீலமேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்ட முப்புரிநூல் திகழ் ஒளி மார்பும்

சொற்பதம் கடந்த திரிய மெய்ஞான

அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே!
முப்பழம் நுகரும் மூஷிக வாகனனே!
இப்பொழுது என்னை ஆட்கொள்ள வேண்டித்

தாயாய்எனக்குத் தான் எழுந்து அருளி 
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே 
திருத்திய முதல் ஐந்து எழுத்தும் தெளிவாய்
பொருந்தவே வந்து என் உளம்தனில் புகுந்து

குரு வடிவாகிக் குவலயம் தன்னில்

திருவடி வைத்துத் திறம் இது பொருள் என
வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளிக்
கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டாஉபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிது எனக்கு அருளிக்

கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து 

இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து
தலம் ஒரு நான்கும் தந்து எனக்கு அருளி
மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பதுவாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறாதாரத்து அங்கிசை நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே

இடை பிங்கலையின் எழுத்து அறிவித்துக்

கடையில் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்று எழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி அதனில் கூடிய அசைபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலதாரத்தின் மூண்டு எழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல் சக்கரத்தின் உறுப்பையுங் காட்டிச்

சண்முகதூலமும் சதுர்முக சூக்மமும்
எண்முகம் ஆக இனிது எனக்கு அருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியட்டு நிலையும் தெரிசனப்படுத்திக்

கருத்தினில் கபால வாயில் காட்டி 

இருத்தி முத்தி இனிது எனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டிற்கும் ஒன்று இடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில்

எல்லையில்லா ஆனந்தம் அளித்து

அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்கு அனுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலை அறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்து எனை ஆண்ட 
வித்தக விநாயகன் விரைகழல் சரணே!

12.“டுண்டி கணபதி துதி”- தடைகள் தகரும், எண்ணம் ஈடேறும், நலம்பெற- ஆதிசங்கரர் பாடியது- தினமும்.

களித்தோர் கையில் மோதகம், நினைத்தோர் முக்தி சாதகம்,

வளைத்து மின்னும் சந்திரன் களித்து வாழும் மத்தகம்,
களத்தவர்க்கே அருள்மழை தழைதுதிக்கை வித்தகன்,
முளைத்தெழும் கயாசூரன் உயிர் குடித்த தற்பரன்,

திளைத்தெழும் தயைக்கடல் முளைத்துதித்த மூத்தவன்,
கிளைத்தெழுந்த இன்னல்கள் துகைத்தெறிந்த தாளவன்,
இளைத்தவர் களைத்தவர்கருள் பொழிந்த காவலன்,
களிப்பளிக்கும் நாயகம் விநாயகன் கழல் சரன்.

வணக்கமற்ற மூடர்கள் பயப்படும் பலத்தவன்,
கணக்கிலாத கதிர்விரி ககன சோதியொத்தவன்
இணக்கமுற்ற உப்பரின் இன்னல் தீர் நலத்தவன்
சுணக்கமுற்ற நல்லவர் விபத்தனுக்கும் வித்தகன்

கணேசுரன் கயேசுரன் தனேசுரன் சுரேசுரன்
பணேசுரன் விளங்குதொந்தி பஞ்சமுக விக்னேஸ்வரன்
கணம்கணம் துயர்மலை பொடிப்பொடிசெய் காவலன்
அணங்கு வல்லபை மகிழ் கணங்கள் நாதன் கழல் சரண்.

அனைத்துயிர்க்கும் நல்லவன், அரக்கரை வெல்லவல்லவன்,
கனைக்கும் யானை முகத்தவன், பருத்த நல்ல வயிற்றவன்,
நினைத்தவர்க்கும் வெற்றிநல்கு பனிப்பிறைத் தலைவன்,
மனதில் எண்ணும் ஆசைகள் முடித்து வைக்கும் தூயவன்,

தனத்தனத் தனாவெனா நடிக்கும் விக்னவிநாயகன்,
சினத்தைவென்ற சீகரன் சயத்தை நல்கு சேகரன்,
வனப்புமிழ் திறத்தவன் நெருப்புமிழ் நிறத்தவன்,
குணக்கடல் தயைக்கடல் இசைக்கடல் கழல் சரண்.

மிடிமை போக்கும் இறையவன், மடமை நீக்கும் மறையவன்,
குடிமை நல்கும் ஆண்டவன், குழந்தை தூய தாண்டவன்,
நடம் இடும் பரன் மகன், நலம் இலார் கொல் ஆண்மகன்,
அடங்கல் அண்ட அடுக்குகள், அடங்கித் தீய்ந்து வேகையில்,

அடங்கொணாமல் ஆடுவான், கடக் கொணாத சோதியான்,
தடக்கை வில் தனஞ்சயன், குடங்கைப் பூசை கொள்ளுவான்
தடங்கடம் மதம் சொரி, தந்தியுன் முகத்தவன்,
தடம் கை ஐங்கரன் பரன், தொடங்கு பூங் கழல் சரண்.

இலங்கு வெள்ளி வெண்பிறை விளங்கு கொம்பு வீரன்,
துலங்கு வெள்ளி மாமலை விளங்கரன் சிவன் மகன்,
கலங்கு மன்பர் கண்மழை கணம் விலக்கு தீரமன்
நலங்கொள் நல்லவர் மனம் தினம் விளங்கு தீபப்பொன்

சலங்கு தண்டை கிண்கிணி சரச ரத்ன பாடகம் 
குலங்கு பொற் சிலம்புகள் விளங்கு கால் விநாயகன்
சலங்கொள் மாது கங்கையும் அக்கங்கையாளின் தங்கையும்
மனங்களிக்கும் யானைமன் கனிந்த செங்கழல் சரண்.

மகாகணேச பஞ்ச ரத்னம் அன்புடன் படிப்பவர்
மகா விநாயகன் கழல் நினைந்து பக்தி செய்பவர்
மகா மலர் வளர்மகள் மலைமகள் கலைமகள்
மகா மகேசுரன் அருள் கடைக்கண் பெற்றுப் பூவிலே

சுகாம்ருதம் உடல்நலம் இலக்கியம் செய் வல்லமை
சயாதி நன்மை புத்திரர் சகத்தில் வாழ்வு சொல்வளம்
சிவாநுபூதிச் செல்வராய்ச் சிறந்த ஞானம் உற்று நல்
மகா கணேசர் பாதமே அடைந்து வாழ்வர் மானிடர்.

13.“ஸ்ரீகணேச புஜங்கம்” - அருள் பெற -ஆதிசங்கரர்

கணகணவென ஒலிசெய்மணி இசையினில்

கவினுறு கற்பகக் கணபதி களிப்பவர் 
மனநிறை மதகரி இருசெவி முறமென
மகிழ்வுறு தாண்டவம் ஏற்புற நடிப்பவர் 
பெருவயி றதனிடை அரவினை அணியென
பெருமையில் உரிமையில் அருமையா யணிபவர்
அரனது கணநிரை அதனது தலைமையர்
அருமையர் அரன்மகன் அவரையே துதிக்கின்றேன்.

ஒலியில்வலிபெறும் தெளிவுறு வீணையின்
ஒலியினை ஒடுக்கிய மலர்முகம் உடையவர்
நவமுடன் சிறிதசை துதிக்கையின் நுனியில்
உளநிறை மாதுளங் கனியினை உடையவர்
புழை செவி வழிகிற மதமழை நறுமணம்
புணர்மகிழ் வண்டினப் பெருந்தொகை உடையவர்
அரனது கணநிரை அதனது தலைமையர்
அருமையர் அரன்மகன் அவரையே துதிக்கின்றேன்.

இளங்கதிர் செம்மலர் இனைவுறு செம்மணி
துலங்கிய பூந்தளிர் அனைய நல் ஒளியினர்
விளங்கிய ஒருதனி தானெனத் தனித்தவர்
இலங்கிடு பெருவயிறொருபுடை சாய்ந்துபின்
வரம்தரத் தொங்கிட வளை துதிக்கையொடு
திறம்பெறு ஒருகோடுடையவர் கணபதி 
அரனது கணநிரை அதனது தலைமையர்
அருமையர் அரன்மகன் அவரையே துதிக்கின்றேன்.

பலபல ஒளிபெறு மணிநிறை புனைவுறு
வளமுடை மகுடமும் வளமுடன் அணிபவர்
நலமுடை மௌலியில் மதியதன் கலையினை
அழகென அணியென அழகினுக் கழகெனத்
துலங்கியே பிறவித் தொடர்பினை அழித்திட
விளங்கிய காரண விளைவெனவானவர்
அரனது கணநிரை அதனது தலைமையர்
அருமையர் அரன்மகன் அவரையே துதிக்கின்றேன்.

உயர்வுறத் தூக்கிய கொடியெனத் திகழ்வுறு
ஒளிர்துதிக் கையதன் ஆதியில் இலகுறும் 
அயர்வறு புருவ அசைவினில் அழகிய
மகிர்வருள் இணைவிழி மல்கிய பெருமையர்
துயரறு தேவதைத் தோகையர் சாமரம்
துணைகொடு வழிபடும் தூயநற் கணபதி
அரனது கணநிரை அதனது தலைமையர்
அருமையர் அரன்மகன் அவரையே துதிக்கின்றேன்.

பலமுறைதுடிதுடித் தசைவுறும் கண்ணினை
வலமுற சிவந்திடும் வடிவழகுடையவர்
நலமுறு தயைமுதல் மென்மையும் பெருங்குணம்
இலகிய பலவிதப் பிறவிகள் உடையவர்
உறவென அறமென உரியபல்லீலைகள்
புரிபவர் யோகியர் துதி செய்யும் கணபதி
ஓமெனும் ஓங்காரத் துட்பொருள் ஆனவர்
ஏமமாம் சிவகணத் தலைவரைத் துதிக்கின்றேன்.

ஓங்காரவடிவமே தானெனும் தூயவர்
மாறுபாடற்றவர் முக்குணம்
நீங்கிய ஆனந்த வடிவமே தன்னுரு
நேர்ந்து வேறோரு வற்றவர் யாவரும்
ஏங்கியே அடைந்திடும் சிறப்பிடம் இதுவென
எண்ணிலா வேதமும் தோற்றிய காரணர்
பாங்குடன் தொன்மையும் திறமையும் கொண்டவர்
பண்பாளார் போற்றிடும் அவரையே துதிக்கின்றேன்.

பேரறிவானந்த அமைதியும் உடையவ!
பேசறு அரன்மகன் ஆன எம் இறைவா!
வீறுகொள் லீலைகள் அளவில புரிபவா!
வேறிலை தானென விளங்கிடும் அரியவ!
நீறென உலகழித் தளித்திடும் கருணையே!
நேர்ந்த இவ்வுலகிதன் ஆணியாம் பெரியவ!
மாறிலா மனதுடன் மதகளி உன்றனை
மனமொழி மெய்கொடு வணங்கினேன்!அருளுக!

எங்கனும் நிறைந்தவர் ஈசனின் மகனிவர்
பொங்கிய கருணையர் புகழ்விழை விதனையே
மங்களக் கதிரொளி பரவிடு காலையில்
மனமொழி மெய்களால் துதிப்பவர் எவர்க்கும்
பொங்கிடும் புனலென வாக்கது வாய்க்கும்
புரிந்திடும் வினைவலம் பொலிந்திடும் உண்மை
தங்கியே அருள் தரக் கணபது இருக்கத்
தரணியில் பெறமுடியாததும் உண்டோ!

14.“ஸ்ரீகற்பக விநாயகர்”

அற்புதக் கீர்த்தி வேண்டினேன்! 

ஆனந்த வாழ்க்கை வேண்டினேன்!
நற்பொருள் குவிதல் வேண்டினேன்! 
நலமெலாம்பெருக வேண்டினேன்!

கற்பகமூர்த்தி தெய்வக் களஞ்சியத் 
திருக்கை சென்று பொற்பதம் 
பணிந்து பார்த்தேன்பொய்யில்லை! 

கண்ட உண்மையது!

பிள்ளையார்பட்டி என்னும் 
பேரருள் சுரங்கத்தின் கண்
உள்ளவன் மலையில் பூத்த
உருவத்தின் இயற்கைத் தோன்றல்
தெள்ளிய மனத்தார்க்கு எல்லாம்
திருவருள் வழங்கும் தெய்வம்
கள்ளமில்லா பக்தர் தந்தை
கற்பக மூர்த்தி யன்றோ!

மூலமுதல் ஆனவனே கற்பகமூர்த்தி நீ
முன்வந்து காத்தருள்வாய் கற்பகமூர்த்தி
காலமிது காலமிது கற்பகமூர்த்தி- என்
கவலைகளை தீர்த்தருள்வாய் கற்பகமூர்த்தி

நல்ல நல்ல சேதிவரும் கற்பகமூர்த்தி-மனம்
நாடியது தேடிவரும் கற்பகமூர்த்தி
வல்லமைகள் பொங்கி வர கற்பகமூர்த்தி
வணங்கினேன் வெற்றி தரும் கற்பகமூர்த்தி

வெற்றிதர வருவாயே கற்பகமூர்த்தி-நான் 
வேண்டும் வரம் தந்தருளவாய் கற்பகமூர்த்தி
உற்றதுணை தெய்வமே கற்பகமூர்த்தி-உன்னை
ஓதுவதும் செய்தவமே கற்பகமூர்த்தி.

மங்களம்அனைத்தையும் தந்தருளும் அப்பனே!
மகிமை மிகும் என் ஐயனே!
வாசித்து நேசித்து பூசித்து வருவோரை
வாழ்வித்துவரும் ஈசனே!

சங்கர,சதாசிவ,சடாதரன் மைந்தனே!
சக்தி சிவகாமி மகனே!
தன்னடி பணிந்தாரைத் தலைமேற் சுமந்தருளும்
தயவுடைய மகராசனே!

இங்குயாம் உன்னையே துணையாக நம்பினோம்
எமது குறை யாவும் களைவாய்!
இப்போதும் எப்போதும் தப்பேதும் வாராமல்
எம்மை நீ காத்து வருவாய்!

பங்கய வயல் சூழும் பிள்ளையார் பட்டி வளர்
பரம கருணாமூர்த்தியே!
பதினாறு பேறுகளும் அடியார்கள் பெறுமாறு 
பாலித்தருள் வாழ்த்தியே!

கைத்தல நிறைகணி அப்பமொடு அவல்பொரி
கப்பிய கரிமுகனடி பேணிக்
கற்றிடு அடியவர் புத்தியுலுறைபவ
கற்பகம் என வினை கடிதேகும்

மத்தமும் மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறானை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே!

முத்தமிழ்ழடை வினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவனுறை ரதம்
அச்சது பொடி செய்த அதிதீரா!

அத்துயரது கொடு சுப்ரமணி படும்
அப்புன மதனிடை யிபமாகி
அக்குறமகளுடன் சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமானே!

15.“ஸ்ரீகணேச சரணம்”

வித்தகனே விநாயகனே சரணம்!

வேழமுக நாயகனே சரணம்!
தத்துவமே தமிழ் கடவுளே சரணம்!
தாயகத்தின் முழுமுதலே சரணம்!

சத்தியத்தின் சந்நிதியே சரணம்!

தர்மம் காக்கும் சங்கொலியே சரணம்!
உத்தமனே ஓம் உருவே சரணம்!
உலகம் காக்கும் திருவுருவே சரணம்!

கல்லில் வந்த கற்பகமே சரணம்!
காணும் இன்பம் அற்புதமே சரணம்!
வெள்ளைக் கொம்பின் ஒளிமுகமே சரணம்!
வெற்றிதரும் விழிமுகமே சரணம்!

ஞாலம்போற்றும் அருள் நிதியே சரணம்!

நம்பிக்கையின் அதிபதியே சரணம்!
சீலம் மிகு சிலம்பொலியே சரணம்!
செல்வம் தரும் வலம்புரியே சரணம்!

ஆலமரஅகல் விளக்கே சரணம்!
ஆற்றங்கரைப் புகழ் விளக்கே சரணம்!
கோலமிகு குணநிதியே சரணம்!
கும்பிடுவோம் கணபதியே சரணம்!

பாதம் சரணம் சரணம் கணேசா!

பக்தர்கள் தலைவா பார்வதி புதல்வா!
பணிவுடன் வணங்குகின்றோம்
பூஜைக்கு வந்து அருள் புரிவாய் கணேசா!

கற்பகக் கடவுளே கணநாதா!
கதிரவன் நியே புவநேசா!
முத்தமிழ்க் காவலா மும்மூர்த்தி தலைவா!
மூஷிக வாகனப் பெருமானே!

கடலின்அலையும் நீயாவாய்!

கலைகள் திருமகள் நீயாவாய்!
சக்தியும் நீயே! சிவனும் நீயே!
முக்தி விநாயகப் பெருமானே!

ஆயிரத்தெட்டு அண்டங்கட்க்கும்
அடியாக் கெல்லாம் அடியார்க்கும்
அருள்வழுகாட்டி திருவருள் புரிந்து
ஆட்கொள்ளும் அய்யா ஆனைமுகா!

                       ******
சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம்
பிரசன்னவதனம் த்யாயேத்
சர்வ விக்நோப சாந்தயே!

 

மூஷிக வாகன மோதக ஹஸ்த.
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்கின விநாயக! பாத நமஸ்தே!

“அரசமர துதி”:--

அரசு:- பிரம்மா, விஷ்னு, சிவன் ஆகியோரின் அம்சம்- தெளிவும், புத்துணர்ச்சியும், முழுமையான சுவாசத்திற்கும் காலை/ மாலை சுற்றும் போது. பிரமஹத்தியால் பீடிக்கப்பட்டவனும், குருவைக் கொன்ற தோஷமுள்ளவனும், பரம தரித்திரனும், தீராப்பிணி உள்ளவனும், இந்த துதியினை தொடர்ந்து ஜபித்து தோஷம் நீங்கி சகல சுகத்தையும் பெற!

விருட்ச ராஜனே! ஆயுள், பலம், கீர்த்தி, காந்தி, குழந்தைகள், பசுக்கள், பொருட்கள், வேதம், புத்தி, மேதமை ஆகிய அனைத்தையும் நீ எனக்கு தந்தருளவேண்டும்.

வருண பகவான் தங்களை நாலா திசையிலும் ரட்சிக்க வேண்டும். தாங்கள் வளர்ந்துள்ள இடத்தில் எப்போதும் மழையிருக்க வேண்டும், தங்களைச் சுற்றி பசுமையான புற்கள் படர்ந்து இருக்க வேண்டும். தங்களுக்கு சுகமுண்டாகட்டும்.

எங்களின் பார்வைக் குறைபாடு, கை நடுக்கம், கெட்ட கனவு, வீண் கவலை, எதிரி பயம் ஆகியவற்றை தாங்கள் தான் போக்க வேண்டும்.

மிகமிக உயர்வானவனும், எல்லாவிதமான பாக்கியங்களையும் அளிக்கின்றவனும், கெட்ட கனவுகளைத் தடுப்பவனும், நல்ல கனவுகளின் பயனை அளிக்கின்றவனுமான அஸ்வத்தமே, பேரரசே தங்களுக்கு என் நமஸ்காரங்கள்.

அடிபாகம் பிரமனின் அம்சமாகவும், நடுவில் விஷ்னுவின் சொரூபமாகவும், நுனியில் சிவனின் வடிவமாகவும், மரங்களின் அரசனாக உள்ளவனுக்கு என் வணக்கங்கள்.

அரசமரமே! பல நூற்றாண்டுகளில் என்னால் சம்பாதிக்கப்பட்ட பாவமூட்டைகளை நீதான் அழிக்க வேண்டும். மரங்களுக்குள் ராஜாவானதாலேயே அரசமரம் என்றழைக்கப் படுபவரே அஸ்வத்தமே! எல்லாச் செல்வங்களையும் எனக்கு அருள வேண்டும்.

எந்த அரசைப் பார்த்தாலே வியாதிகள் போகுமோ, தொட்டால் பாவங்கள் விலகுமோ, எதை நாடினால் வெகுகாலம் வாழலாமோ, அப்படிப்பட்ட அரச மரத்தை வணங்குகின்றேன்.

நல்ல பாக்யசாலியும் பேரழகும் கொண்ட அரச மரமே! நான் வேண்டிடும் அனைத்து நன்மைகளையும் கொடுத்தருள வேண்டுகிறேன், எதிரிகளை வெல்லும் ஆற்றலையும் அருள வேண்டும்.

ஆயுள், மக்கட்செல்வம், பொருள், தானியம், அழகு, சகல செல்வங்கள் யாவற்றையும் கொடுக்க வேண்டும். தேவ சொருபமான அரச மரமே உம்மைச் சரணடைகின்றேன்.

ருக் யஜுர், சாம, அதர்வன வேதங்களின் மொத்த உருவமாகவும், சர்வரூபியாகவும், வேதத்திற்கு காரணமாயும் உள்ள அரச மரமே- நீ எப்பொழுதும் மகரிஷிகளால் போற்றப்படுகின்றாய். உனக்கு என் நமஸ்காரங்கள்.      

                                     ஓம்விக்னேஸ்வராய நமக! 

குருஸ்ரீ பகோரா - சந்தோஷப்பூக்களின் இதழ்களில் சில......

o‘நீ உலகின் அழகை தரிசிக்கும்போது நலமுடன் திகழ்கிறாய்’

oஎல்லா உயிர்க்கும் சந்தோஷத்தை அடைய, அதைத் தேட உரிமை உண்டு. வாழ்வின்       இரகசியம் அல்லவா! அது அற்புத இலக்கணம்.

oசந்தோஷம் போதும் இனி எந்த சந்தோஷமும் வேண்டாம் எனக்கூறக்கூடிய நிலையில் எந்த   ஒரு உயிரும் இயங்குவதாக இல்லை.

oஉலகின் எந்த ஒரு விஷயமும் காரணமின்றி நடைபெறுவதில்லை!

oமனிதனால் முடியாதது அவனது கடந்த இழந்தகாலத்தை மீண்டும் பெறுவது. இன்றைய நிகழ் நாளைய கடந்த காலம்.

oஉனது வாழ்நாள் ஒவ்வொருநாளாக குறைந்து கொண்டிருக்கின்றது. இறந்தவனையும், நடந்தவைகளையும் பற்றி சிந்தித்து என்ன பயன்! இருக்கும் காலத்தில் நீ உன் ஆன்மாவின் மேன்மைக்காக சிந்தி.

oஉண்மை என்னவென்றால் தவறு செய்தவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும் இடம் இந்த புவிதான்

oஒரு உயிருக்கு அழுகிய ஒன்று மற்றொன்றுக்கு ஜீவாதாரம்.

o‘அகில உலக உயிர்களும் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும்’ என்பதே அறத்தின் முத்திரையான வாக்கியம்.

“சந்தோஷப்பூக்களை நுகர்ந்து வாழ்வியல் பயன் பெறுங்கள்”

வெள்ளிக்கிழமை, 05 July 2013 00:00

கோயில்கள்

தமிழ் மாநில கோயில்கள்

பிற மாநில கோயில்கள்


வெளி நாட்டு கோயில்கள்

புதன்கிழமை, 20 February 2013 00:00

மூலிகை காற்று வனம்

ஓம் சிவாயநமக!

பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது

வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்

கடிகணபதி வர அருளினன் மிகு கொடை

வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!

                                                               0=0=0=0=0=0

மூலிகைக்காற்றுவனம்

இது அடியேனின் நினைவில், கனவில் தோன்றித் தோன்றி மலர்ந்தது, இவ்வுலக மக்கள்பால் கொண்ட அன்பிற்காக இந்த மூலிகைக் காற்று வனத்தை உறுவாக்கி நிர்மாணித்திடல் வேண்டும் என்ற அவா என்னுள் நீங்காது நிலை பெற்றுள்ளது. மக்களின் ஆன்மா இடம் கொண்ட உடல், ஆன்மாவை நீக்கும் வரை ஆரோக்கியமாக இருக்க உதவியாக இருக்கும் இந்த மூலிகைக் காற்று வனத்தை ஏற்படுத்த கனவுகளையும் எண்ணங்களையும் ஏற்படுத்திய எல்லாமாகவும் இருக்கும் இறைவன் அருள் கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கையில் செயல்படும் அடியேன் - குருஸ்ரீ பகோரா.

மனிதகுலத்தினர் நல்லத்தூய இயற்கையான, உடலுக்கு ஒத்த பரிசுத்தமான காற்றினைப் பெற்றிடவேண்டி அதற்கான வழிமுறைகளை மேற்கொண்டு அமைய இருப்பதே இந்தக் காற்று வனமாகும். இது எந்தஒரு ஆளுகைக்கும் கட்டுப்படாத அன்பான தன்னாட்சி அமைப்பாகும். இது உடலுக்கும் ஜீவாத்மாவிற்கும் ஒரு புத்துணர்ச்சியூட்டும் உன்னதமான முயற்சியின் அடையாளமாகச் செயல்படும்.

மிகவும் பீடித்த நோயாளிகளுக்கு இங்கு இடமில்லை. நோய்களுக்கான மருத்துவமணை அல்ல. மனம் சோர்ந்த ஜீவாத்மாக்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க நடக்கும் ஒரு சிறிய முயற்சிக்காண இடம். மீதி இருக்கும் எதிர்காலத்தை ஆனந்த ஆரோக்கியத்துடன் எதிர்பார்த்து நம்பிக்கையுடன் செயல்பட உதவும் அமைப்பாகும்.

ஒரு ஆத்மாவின் உடல் அதைப் பெற்றிட தான் உடுத்திய உடையுடன் இங்கு வரவேண்டும். நிர்வாகம் அளிக்கும் உடைகளையே அணிந்து கொள்ளவேண்டும். ஒருவருக்கு இரு ஆடைகள் இந்த வாசத்தில் சேரும் தினம் அளிக்கப்படும். தினமும் காலையில் குளித்தவுடன் உங்கள் அறை அருகில் இருக்கும் பொறுப்பாளரிடம் கொடுத்து விட்டு பதிவு ஏட்டில் கையொப்பம் இடவேண்டும். இரண்டு நாளுக்குமேல் மூன்றாவது நாளில் அடுத்த உடைகள் பொறுப்பாளர் மூலம் தரப்படும்.

வெளியுகத் தொடர்புகளைத் தொடரும் அலைபேசி கருவிகளை கொண்டுவரக்கூடாது. நிர்வாகம் அனுமதிக்காத பொருள்கள் எதேனும் கொண்டுவந்தால் நிர்வாகம் தரும் வைப்பு பெட்டியில் வைத்து பூட்டி சாவியை நிர்வகத்திடம் கொடுத்துவிடவேண்டும். நீங்கள் இங்கிருந்து திரும்பிச் செல்லும்போது அவைகள் உங்கள் வசம் ஒப்படைக்கப்படும்.

இங்கு தரப்படும் இயற்கையோடு ஒன்றிய ஆரோக்கிய சுகாதார உணவுகளையே உண்ணவேண்டும். காலை, முன்பகல், மதியம், பிற்பகல், இரவு என கால உணவு அட்டவணை உங்கள் பொருப்பாளரிடம் இருக்கும். அதைப் பார்த்துக் கொள்ளலாம். நாவின் சுவைக்கு அடிமையானவர்களுக்கு முதல்நாள் கொஞ்சம் சிறமமாக இருக்கும். இரண்டாவது நாளிலிருந்து சரியாகிவிடும்.

இங்கு தங்கவிருக்கும் ஒரு நபருக்கு அதிக பட்சமாக மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஐந்து நாட்கள்தான் அனுமதி உண்டு. அந்த ஐந்து நாட்களின் செலவிற்குரிய பணத்தை நிர்வாகம் முடிவு செய்தபடி முன்னதாகச் செலுத்தி இரசீது பெற்றுக் கொண்டால்தான் உங்களுக்காக அறைகள் பதிவு செய்து ஒதுக்கமுடியும். அறைகள் காலியாக இருக்கின்றனவா என நிர்வாக பொருப்பாளரிடம் பேசி முடிவு அறிந்தபின் பணம் செலுத்தவும். அறைகள் காலி இல்லா நிலைக்கு நிர்வாகம் பொறுப்பாகி அறை பதிவு செய்வதற்காக எந்த உத்திரவாதமும் நிர்வாகம் தராது. அறை ஒருவருக்கு ஒதுக்கப்பட்டபின் எந்த ஒரு காரணத்திற்காகவும் ஒதுக்கப்பட்ட அறையின் தேதியை மாற்றித் தள்ளி வைத்தலோ, ரத்து செய்தலோ கண்டிப்பாய் முடியாது. அறை ஒருவருக்கு ஐந்து நாட்கள் ஒதுக்கப்பட்டால் அந்த குறித்த நாளில் வந்து சேரவேண்டும். அடுத்தநாள் வந்தால் அவருக்கு அடுத்த நான்கு நாட்கள்தான் ஒதுக்க முடியும். ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் அவர் வரவில்லையென்றால் அந்த அறை காலியாக இருக்கும். இது பற்றி உங்களுடன் வீண் வாக்குவாதம் செய்ய நிர்வாகப் பொருப்பாளர் தயாரில்லை. முன் வருபவருக்கு முன் உரிமை என்ற அடிப்படையில் அறைகள் ஒதுக்கப்படும்.

நீங்கள் இருக்கும் அறை மற்றும் உபயோகிக்கும் கழிவு அறைகளை சுத்தமாக வைத்திருங்கள். எங்களுடன் ஒத்துழைப்புத் தாருங்கள்.

ஆண்கள் பகுதி வேறு. பெண்கள் பகுதிவேறு. ஒரு பகுதியிலிருந்து அவர்கள் கணவன் மனைவியாக இருந்தாலும் அடுத்த பகுதிக்குப் போக அனுமதிக்கப் படமாட்டார்கள். அவர்களை சந்திக்க வேண்டும் என்றால் உணவுக் கூடம் அல்லது பிரார்த்தனைக் கூடத்தில் பிரார்த்தனை முடிந்தபின் பார்க்கலாம். அனுமதிக்கப்பட்ட இடங்களிலே அனுமதிக்கப்பட்ட நேரம்தான் சந்திக்கமுடியும்.

உங்களுக்கு உங்கள் சொந்தங்களிடமிருந்து ஏதாவது முக்கிய தகவல் இருந்தால் அவர்கள் நிர்வாகத்திடம்தான் தகவல் கொடுக்க முடியும். அந்த தகவல் முக்கியமானதாக இருந்தால் மட்டும் உங்களுக்குத் தெரியப் படுத்தப்படும்.

அறைகளில் தங்கியிருக்கும்போது உங்கள் நலன் கருதி அட்டவனையில் குறிப்பிட்ட செயல்களைத் தவறாமல் செய்து வாருங்கள். ஒய்வு நேரத்தில் அமைதியாக ஓய்வெடுங்கள். அடுத்த அறை சென்று அந்த அன்பரை தொந்தரவு செய்ய வேண்டாம். அரசியல் பேசவேண்டாம். எந்த ஒரு விசயமானாலும் விவாதத்தில் ஈடுபடவேண்டாம். பொறுமை காக்கவும். உங்களை இங்கிருப்பதாலோ சுயமாக சில வேலைகளைச் செய்வதாலோ யாரும் மட்டமாகவோ தரக்குறைவாகவோ நினைக்கவில்லை. உங்களுக்காக உங்கள் தேவைகளுக்காக நீங்கள் செயல் படுகின்றீர்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளவும். நீங்கள் ஓர் உயிரின் ஜீவாத்மா. மனித நேயத்துடன் பழகும் அன்பானவர். உதவியாளர், பொருப்பாளரிடம் அன்புடன் நடந்து கொள்ளுங்கள். இங்கு நீங்கள் சந்திக்கும் உங்களின் பிரச்சனைகளுக்கு உங்கள் பொறுப்பளர்களை அனுகவும்.

நீங்கள் எங்களது பாதுகாப்பில் இருக்கும்வரை எங்களின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடந்து கொள்ளவேண்டும். ஒருவர் காலையிலிருந்து என்ன செய்ய வேண்டும் என்பதை நிர்வாகம் பட்டியலிட்டு வைத்துள்ளனர். நீங்கள் தங்கும் அறையின் பொறுப்பாளரிடம் அவை இருக்கும். அவர் உங்களுக்கு விளக்கமாகச் சொல்லுவார். அவரிடம் ஒத்துழைப்புடன் செயல் படுங்கள்.

இந்த இரண்டு முதல் ஐந்து நாட்களும் ஒரு ஆத்மா அமைதியுடன் ஆனந்தம் அடைந்து ஆரோக்கியமாக இருக்க நாங்கள் செய்யும் சேவைக்கு ஒத்துழைப்பு அளித்து உங்கள் பங்களிப்பாக உங்கள் ஆத்மாவின் உடல் மேலும் வளம்பெற எங்களின் முறைகளை நீங்கள் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு பூவுலகில் உலவும் வரை ஆரோக்கியமாக வாழ்ந்திட முயலுங்கள்.

எங்களின் குறிக்கோள்களின் அளவுகளைப் புரிந்து நடந்து கொள்ள அன்பு உள்ளங்கள் அனைத்தையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தினமும் அதிகாலை- பிரம்ம நேரம்.

0400-0600— எளிய பயிற்சிகள், யோகாசனம், தியானம், முத்திரைகள் உடல் நலத்திற்குப் பெரிதும் உதவும். அவைகள் காலை நேரத்தில் உடல் நிலையைப் பொருத்து சொல்லித் தரப்படும். – பொதுவாக எல்லோருக்கும் உகந்தது. விரும்புவர்களுக்கு மட்டும் உடல் தகுதிக்கேற்ப சிறப்பு பயிற்சிகள் சொல்லித் தரப்படும்...

0600-0615- மிதமானசூடான பானம்.

0615-0730- நடை பயிற்சி. இது உங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மூலிகை வனத்தின் ஒருபகுதி. இங்கு ஏற்படுத்தப்பட்ட நடைபாதயில் உங்களால் முடிந்த அளவிற்கு செயலாக்கம் கொண்ட நடைதனை நடந்து பயிற்சி மேற்கொள்ளுங்கள். நடக்கும்போது சேர்வு ஏற்பட்டால் அமதியாக காலை நீட்டி அமர்ந்து கொள்ளவும். இங்குள்ள மரங்கள் எல்லாம் உங்களின் இராசிக்கு ஒத்த மரங்கள். இவற்றின் நிழலில் காற்றில் இருப்பது உங்களின் ராசிப்படி உங்களுக்கு ஆரோக்கியமானது. அனைத்து மரங்களுமே உங்களின் நண்பர்கள். மருத்துவர்கள். உங்களுக்கு ஆரோக்கியம் அளிக்கும் உத்தமர்கள். எனவே அன்புடன் நோக்குங்கள். ஏதாவது ஒருவரை உங்களின் உற்ற நண்பராக ஏற்றுக் கொண்டு நடைபயிற்சி வரும்போது அவரை அன்புடன் பார்த்து நலம் விசாரியுங்கள்.

முதன் முதலில் நீங்கள் நண்பராக ஏற்றுக் கொண்டவரை முடிந்தவரை கட்டியனைத்தபடி கீழ்கண்டவற்றை மனதில் சொல்லுங்கள்.

“இயற்கையே! நான் இயற்கையான உன்னின் பிறப்பு. என்னுள் இருப்பதெல்லாம் உன்னுடையது. ஆகவே நாம் சகோதர்கள். உற்ற நண்பர்கள். உன் ஆரோக்கியம் என் ஆரோக்கியம். என்னை வளமாக்க உன்னில் உள்ள சக்திகளை நண்பணாகிய எனக்குக் கொடு. நான் சுவாசிக்க தூய காற்றினைத் தருவாய். நலம் பல தருவாய் நண்பனே” பின் மீண்டும் நடைபயிற்சியைத் தொடரவும். உங்களால் முடிந்த அளவிற்கு சுற்றிவரவும். உங்கள் ராசிக்காரர், பக்கத்து அறைக்காரர் அந்த பகுதில் நடை பயிற்சி மேற்கொள்ளலாம். வீணாக பேசி உங்களின் பிராண சக்தியை குறைத்துக் கொள்ளாதீர்கள். பேச்சைத் தவிர்க்கவும்.

0730-0800- குளியல். குளிர்ந்த நீரே உடலுக்கு நல்லது. இருப்பினும் குளிர்ந்த நீரில் குளித்து பழக்கமில்லாதவர்களுக்கு வெண்ணீர் முன்கூட்டி சொல்லியிருந்தால் உங்கள் பொருப்பாளர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வார். எப்படியிருப்பினும் அதிக சூடான நீரில் குளிக்காதீர்கள். தோல் பகுதியிலிருக்கும் ஜீவ அணுக்களை சூடாக்கி அதன் செயல்திறனை குறைக்காதீர்கள். குளித்ததும் ஆடைகளை அணிந்துகொண்டு தயாராகி தியானபூஜைக் கூடத்திற்கு வரவும்.

0800-0900- நீங்கள் இங்கே குருஸ்ரீ பகோராயுடன் சேர்ந்து பூசை காரியங்களில் கலந்து கொண்டு தியானம் செய்யலாம்.

0900-0930- தியானம் பூஜை முடிந்ததும் காலை உணவு. கொடுக்கப்படும் உணவு வகைகளில் உங்களுக்கு தேவையானவற்றை மீண்டும் நீங்கள் கேட்டு வாங்கலாம். ஆனால் ஒருவிசயத்தை நினைவு கொள்ளவேண்டும். உங்கள் உடல் உங்களுக்குப் போதுமானது என்றால் முதலில் ஒரு எண்ணம் தோன்றும் அதற்கு மேல் என்னவாக இருந்தாலும் அருந்தாதீர்கள். நன்றாக இருக்கின்றது என்பதற்காக கொஞ்சம் சாப்பிடலாம் அது என்ன செய்யப்போகின்றது என்று எண்ணவேண்டாம். அடுத்த வேளைக்கு நன்றாக பசியெடுத்துபின் சாப்பிடவேண்டும். அதுதான் ஆரோக்கியத்தின் முதல் படி. எனவே அளவாக உணவருந்தி வளமாக வாழ முயற்சியுங்கள்.

0930-1200- சோம்பலில்லாமல் இருக்க நீங்கள் விரும்பினால் நிர்வாக அலுவலகத்தின் கீழ் உள்ள பணிகளில் உங்களுக்கு தெரிந்த விருப்பமான வேலைகளை அனுமதி பெற்று செய்யலாம் மற்றவர்கள் நிர்வாக நூலகத்தில் சென்று பத்திரிகைகள், நூல்களைப் படிக்கவும்.

1200-1230- காய்கறிகள் / தக்களி சூப்

1230-0130- மதிய பூசை. தியானம்.

0130-1400- உணவு. குருஸ்ரீ பகோரா உங்களுடன் உணவு அருந்துவார்.

1400-1600- ஒய்வு. பொருப்பாளாருடன் கலந்து உரையாடலாம். தொலைக்காட்சி பாருங்கள். புத்தகங்கள் படியுங்கள். தூங்கவேண்டாம். ஓய்வில் இருங்கள்.

1600-1630- மிதமானசூடான பானம்

1630-1730- நடைபயிற்சி. உங்கள் நண்பனை பார்க்கச் செல்லுங்கள். அவரிடம் சிறிது நேரம் மனம்விட்டு மவுனமாக உரையாடுங்கள். கட்டித்தழுவுங்கள். பின் பயிற்சியை தொடங்குங்கள்.

1730-1830- ஒய்வு. சில முத்திரைகள் உடல் நலத்திற்குப் பெரிதும் உதவும். அவைகள் காலை நேரத்தில் சொல்லித்தரப்படும். அவகளை நினைவு கூர்ந்து இப்போது செய்து பார்க்கவும்.

1830-1930- பூசை. தியானம்.

1930-2030- இரவு உணவு.

2100-0400- நிம்மதியான உறக்கம். படுத்த சிறிது நேரத்தில் உறங்க வேண்டும். அப்படி உறக்கம் வராதவர்கள் நிர்வாகத்திடம் தெரிவித்து அதற்கான செய்முறை பயிற்சிகளை தெரிந்து செயல்பட்டால் விரைவில் உறக்கம் வரும். ஆழ்ந்த உறக்கத்திலிருப்பீர்கள்.

ஐந்தாவது நாள் மூலிகை எண்ணெய் தேய்த்து குளியல். அன்று காலை நிகழ்ச்சி சிறிது மாறும். பொதுவாக மாற்றம் இருக்காது. பொருப்பாளர் அட்டவணையில் ஏற்படும் மாற்றங்களை அவ்வப்போது உங்களுக்குத் விபரமாகத் தெரிவிப்பார்.

 

காற்றுவனம் நிர்மானம்: இந்த தூய காற்றுவனம் ஒரு பெரிய பயனுள்ள திட்டம். இதைச் செயலாக்க சுமார் 250-300 ஏக்கர் நிலம் தேவைப்படும். ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு மரத்தின் குணவகையைச் சார்ந்தது. அந்தந்த நட்சத்திரக்காரர்களுக்கு அந்தந்த மரத்தின் சூழல் மிகவும் ஒத்துக் கொண்டு நல்ல ஆரோக்கிய பலன்தரும். ஒரு நாளைக்கு 24மணி நேரத்தில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு அவர்களின் ராசிக்குரிய மரத்தின் பாதுகாப்பில் இருப்பது மிகுந்த பயன் தரும். எனவே ஒரு ராசிக்கு 2 ஏக்கர் பரப்பளவில் மரவகைகளும் நடுவில் தங்கியிருக்க வசதிக்காக அறைகள் ஏற்படுத்த ஒரு ராசிக்கு 1/2 ஏக்கர் என ஆண்/பெண்  இருபாலருக்கும் சேர்த்து மொத்தம் 150 ஏக்கர், நடுவில் பூசை, தியானம் நிர்வாக கூடம், குருஸ்ரீ பகோரா மற்றும் நிர்வாக அலுவலர்கள் தங்கும் பகுதி, உணவுக்கூடம், புத்தகச்சாலை, பாதுகாப்பு பெட்டகம், வரவேற்பு கூடம், இவைகளுக்கு 30 ஏக்கர் எனவும், இதைச் சுற்றி மூலிகைவனம் ஏற்படுத்த குறைந்தது 20 ஏக்கர், நந்தவனம், காய்கறிகள் ஏற்படுத்த 50 ஏக்கர் எனவும் தேவைப்படும். ஒலி, ஒளிக்கூடம் ஆன்மீக நிகழ்வுகளை மக்களின் மனதிற்கு இதமூட்டும்வகையில் காண்பித்து உற்சாகமூட்ட, பூசைக்கூடம் ஆகமமுறைப்படியும், தியானக்கூடம் அறுபத்திநாலு கலைகளின் பிரதிபலிப்பாகவும் அங்கே அமர்ந்தால் ஒர் அதிர்வு அலைகள் ஏற்பட்டு தியானம் செய்வோருக்கு பயனளிக்கும் வகையில் அமைய வேண்டும். அப்போதுதான் இந்த திட்டம் சிறப்பாக செயலாகும். மனிதர்குல ஆன்மாக்கள் நன்மை பெறமுடியும்.

கோவில் கட்டுவது என்பது பிரபஞ்ச உலகத்தில் மாபெரும் புண்ணியமாகும்.

புனித மூலிகைவன கோவில் நிர்மானம்- முதல்பகுதி- சிவநாராயனார் கோவில்- நான்கு மாடி அமைப்பு.

தரைப்பகுதி:- விநாயகர்சபை, பூமாதேவி +64 யோனிகள், அனுமானிஷ்ய பகுதி, ஆகமமுறைப்படியான பூசைக்கூடம், சிவனின் முடிகாணும் நிகழ்வு பகுதி, சூரியன் சபை

முதல்தளம்:- துர்கா சபை, பிரம்மா-சரஸ்வதி ஆகமமுறைப்படியான பூசைக்கூடம், ஆயகலைகள் 64-ன் கலைக்கூடம், சேத்ரபாலர்-அஷ்டபைரவர் சபை,

இரண்டாம்தளம்:- ஆதிலட்சுமி+ அஷ்டலட்சுமி சபை, நாரயணர், லட்சுமி, ஆகமமுறைப்படியான பூசைக்கூடம், 108 திவ்விய தேசங்கள், பெருமாளின் 24 திருஉருவங்கள், நாரயணர் தியானக்கூடம், சின்ன, பெரிய திருவடிகள்

மூன்றாம்தளம்:- ஆதிபராசக்தி சபை, சிவனின் 64(சிவலீலைகள்) திருமுக உருவங்கள், மூலிகைவனநாதர்- தரைப் பகுதியிலிருந்து மூன்று தளம் வரை எழும்பியிருக்கும் சிறப்பான 64 பட்டைகளுடன் கூடிய சகுசஷ்டி- சிவலீலா சம்த்த லிங்கம், ஆகமமுறைப்படியான பூசைக்கூடம், 64 தத்துவங்கள் நிறைந்த அதிர்வுகளுடன் கூடிய சிவனாரின் தியானக்கூடம், சிவனின் அடிகாணும் நிகழ்வு பகுதி, ஞானபண்டிதன் சபை, அமையப்பெற்ற சிறப்பான கலையம்சமிக்க மார்பிள் கோவில்.

நான்காம் தளம்:- கோவில் நிர்வாக அலுவலகம்- ஒலி, ஒளி, காணொலி அமைப்பு. மற்றும் சோலார் அமைப்பு, மூலவர்- கருவறை மற்றும் தியான பூஜை கூடங்களின் கோபுரங்கள்.

இரண்டாம்பகுதி- கோவிலைச் சுற்றிலும் மூலிகைச் செடிகள் மூலம் காற்றைத் தூய்மையக்கும் பகுதி. ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு மரத்தின் குணவகையைச் சார்ந்தது. அந்தந்த நட்சத்திரக்காரர்களுக்கு அந்தந்த மரத்தின் சூழல் மிகவும் ஒத்துக் கொண்டு நல்ல ஆரோக்கிய பலன்தரும். ஒரு நாளைக்கு 24மணி நேரத்தில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு அவர்களின் ராசிக்குரிய மரத்தின் பாதுகாப்பில் இருப்பது மிகுந்த பயன் தரும். எனவே அந்தந்த நட்சத்திரத்திற்குரிய மரக்கூட்டத்தின் நடுவில் அந்த நட்சத்திரக்காரர்களை நான்கு நாட்கள் தங்கவைத்து வெளி உலக தொடர்பில்லாமல் முற்றிலும் இயற்கையுடன் இருந்து புத்துணர்வு அளிக்கும் திட்டப்பகுதி. 27நட்சத்திரத்திற்கும் உரிய மரங்கள் அதனிடையே நடைபாதைகள். ஒவ்வொரு பகுதியின் நடுவில் அந்த நட்சத்திரத்திற்குரிய சுமார் 25பேர் தங்கும் வகையில் யோக, தியானம் பயிற்சிகள் கற்றுக்கொடுக்க கூடம் அமைப்புடன் கூடிய குடில்கள், ஆரோக்கியம் தரும் இயற்கையான உணவு வகைகள். நடைப்பயிற்சி, ஹீலிங் முறையில் வைத்தியம், மூலிகை குளியல். அடங்கியது. இதே போன்று பெண்களுக்கென்று 27 நட்சத்திரத்திற்குரிய தனிப் பகுதி.

மூன்றாம்பகுதி- குருஸ்ரீ பகோரா மற்றும் நிர்வாக அலுவலர்கள் தங்கும்பகுதி, சித்த மருத்துவ வசதி, உணவுக்கூடம், புத்தகச்சாலை, பாதுகாப்பு பெட்டகம், வரவேற்பு கூடம், நிர்வாக அலுவலகம் அடங்கியது.

நான்காம்பகுதி- கோவிலைச் சுற்றியும் முன்னும் பின்னும் அழகிய நந்தவனம்(இறைவனுக்கு பூக்கள்), உணவுக்கான காய்கறித்தோட்டங்கள், பூங்காக்கள், ஆன்மீக நிகழ்வுகள் வழங்கும் ஒலி, ஒளிக்கூடங்கள், குழைந்தைகள் விளையாடி மகிழ இடம், நீரூற்றுகள், மீன்களுடன் கூடிய குளம், வாகனங்கள் நிறுத்தும் பகுதி.
சிவநாரயனர், மூலிகைக் காற்றுவனம் நிர்மானம் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பெரிய பயனுள்ள திட்டம். இதைச் செயலாக்க சுமார் 250-300 ஏக்கருக்கு நிலம் மற்றும் பொருளாதாரம் தேவைப்படும்.

இவ்வளவு பெரிய திட்டத்திற்கு இடம் மற்றும் பொருள் வசதிகள் எங்கிருந்து எப்படி யாரால் ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்பது இறையின் முடிவில். என் ஜீவாத்மா பிரிவதற்குள் இதை ஏற்படுத்தி எதிர்கால மக்களின் பயன் பாட்டிற்கு உதவ அமையவேண்டும் என தினமும் உள்ளார்ந்த நினைவுகளுடன் இறையிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

நீங்களும் இந்த பொது எதிர்கால மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் திட்டத்திற்கு உங்களால் முடிந்த உதவிகளை நினைவால், எண்ணத்தால், பொருளால், உடலால், பணத்தால் அளிக்க முடிந்த உதவிகளை அளிக்க முன்வாருங்கள். தொடர்பு கொள்ளுங்கள். உறுதுணையான ஆலோசனைகள் மற்றும் திட்டங்களை ஆண்மீக நண்பர்களுடன் பகிர்ந்து இப்புனிதச் செயலுக்கு ஆதரவு அளியுங்கள். ஆன்மாவிற்கு புண்ணியம் சேருங்கள்! அன்புடன்-குருஸ்ரீ பகோரா

 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:-

குருஸ்ரீ பகோரா கையிலைமணி கோவிந்தராஜன்.

32, டெலிபோன்நகர், மூளப்பாளையம்

ஈரோடு-638 002.

Ph: 0424 228 0142, Cell: 94428 36536

E-Mail: peegora @ gmail.com

Pl.visit.naavaapalanigotrust.com

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27104413
All
27104413
Your IP: 18.191.189.85
2024-04-28 13:35

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg